Friday, April 5, 2019

போற்றுவேன் என் மீட்பர் அன்பை

போற்றுவேன் என் மீட்பர் அன்பை
(I will sing of my Redeemer)

இப்பாடலை எழுதிய Philip Paul Bliss (9 July 1838 – 29 December 1876) அமெரிக்காவின் தலைசிறந்த பாடலாசிரியர்களுள் ஒருவராவார். பாடல்கள் எழுதுவது மட்டுமின்றி இசையமைப்பாளர், Music Conductor, பாடகர் என்று பல்வேறு முகங்களும் இவருக்கு உண்டு.  “Almost Persuaded”, “Hallelujah What a Saviour!” போன்ற பல்வேறு பாடல்கள் இவர் எழுதியவையே.

29 டிசம்பர் 1876 அன்று அமெரிக்காவின் பசிஃபிக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஃபிலிப்பும் அவரது மனைவியும் பயணித்தனர். ஓகியோ (Ohio) மாகாணத்தின் அஷ்தாபுலா (Ashtabula) நகரை அவர்கள் ரயில் நெருங்கியபோது, ஒரு பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் ரயில் கவிழ்ந்தது. ரயிலின் அத்தனை பெட்டிகளும் பாலத்தின் மேலிருந்து சரிந்து கீழே விழுந்தன. ரயிலில் பயணம் செய்த 159 பயணிகளும் இவ்விபத்தில் மாண்டுபோயினர். அந்த விபத்தில் ஃபிலிப் கொண்டு சென்ற அவரது பெட்டியிலிருந்து ‘I Will Sing of My Redeemer” என்ற பாடலை அவர் எழுதியிருந்த காகிதம் கண்டெடுக்கப்பட்டது.


அவ்விபத்து நிகழ்ந்து சில நாட்களுக்குப் பின்னர், அப்பாடல் ஜேம்ஸ் மெக்ரெனான் (James McGranahan) என்ற இசை வல்லுநரால் இசை வடிவம் பெற்றது. ஜேம்ஸ் பென்ஸில்வேனியா மாகாணத்தில் 1840ம் ஆண்டு பிறந்தார்.  தன் வாழ்நாளில் 25க்கும் அதிகமான பாடல்களுக்கான இசையை இவர் இயற்றியுள்ளார். இப்பாடலுக்காக ஜேம்ஸ் எழுதிய இந்த ராகத்தில், "O My Father" என்ற ஆங்கிலப்பாடலும் பாடப்படுகிறது.  ஜேம்ஸ் 1907ம் ஆண்டு தன் இல்லத்தில் இருந்தபோது மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1. போற்றுவேன் என் மீட்பர் அன்பை
ப்ராணன் தந்து ரட்சித்தார்.
பாடுபட்டு ரத்தம் சிந்தி
பாவம், சாபம் நீக்கினார்

போற்றும்! போற்றும்! அல்லேலூயா
பூரண மீட்புண்டாக்கினார்!
தூய வல்ல ரத்தம் சிந்தி
தீய பாவம் நீக்கினார்.

2. நீசப் பாவியாம் என் பேரில்
நேசம் வைத்துக் காட்டினார்
மீட்கும் பொருளாகத் தம்மை
முற்றும் தந்தீடேற்றினார்.

3. போற்றுவேன் சம்பூர்ண மீட்பை
ப்ராணநாதர் காக்கிறார்
வாணாள் எல்லாம் பாவப்போரில்
வெற்றி காணச் செய்கிறார்.

4. போற்றுவேன் ஆனந்தமாக
பாடி, நன்றி சொல்லுவேன்
என்னை மீட்ட இயேசுவோடே
என்றும் தங்கி, சேவிப்பேன்.

Post Comment

No comments:

Post a Comment