Friday, September 20, 2019

பாமாலை 136 - வாஞ்சைப்பட்ட இயேசுவே (Ascension)

பாமாலை 136 – வாஞ்சைப்பட்ட இயேசுவே
(Hail the Day that sees Him Rise)

Charles Wesley
இப்பாடலை எழுதியவர், மெதடிஸ்டு சபையை ஸ்தாபித்த ஜான் வெஸ்லியின் சகோதரனான சார்ல்ஸ் வெஸ்லி (Charles Wesley) என்பவர். அவர், சாமுவேல் வெஸ்லி என்னும் ஆங்கிலச் சபைப் போதகருக்குப் பதினெட்டாவது குழந்தையாக 1707ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 18ம் தேதி, இங்கிலாந்தில் எப்வெர்த் என்னும் கிராமத்தில் பிறந்தார்.  இளவயதில் வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியிலும், பின்னர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்று பட்டம் பெற்றார்.  ஆக்ஸ்ஃபோர்டில் பயிலும்போது, அவர் மாணவரிடையே ஒரு கிறிஸ்தவக் குழுவை ஸ்தாபித்தார்.  இதைப் பலர் ஏளனமாக ‘ஆக்ஸ்ஃபோர்ட் மெதடிஸ்டுகள்” என அழைத்தனர்.  இக்குழுவே பின்னால் பிரசித்திபெற்ற, மெதடிஸ்ட் சபையாக துளிர்த்தது.

Charles Wesley எழுதிய இந்தப் “Hail the Day that sees Him Rise” எனும் இப்பாடல் பல்வேறு காலகட்டங்களில் பல பாடலாசிரியர்களால் மாற்றம் செய்யப்பட்டது. இப்பாடல் முதன்முதலில் 1739ம் ஆண்டு “Hymns and Sacred Poems” எனும் தொகுப்பில் வெளியிடப்பட்டது. ’கிறிஸ்துவின் பரமேறுதலைக் குறித்த ஒரு தெளிவான பார்வையுடன் இப்பாடலை வெஸ்லி எழுதினார். வெஸ்லி எழுதிய மூலப்பாடலில் மொத்தம் பத்து பல்லவிகள் இடம்பெற்றன.  1852ம் ஆண்டு பல்லவியின் ஒவ்வொரு வரிக்குப் பின்னரும் ‘அல்லேலூயா’ இணைக்கப்பட்டது.  பின்னர் ‘Ancient and Modern” பாமாலைப் புத்தகத்தின் 1861ம் ஆண்டு பதிப்பில் பாடலில் மேலும் சில மாறுதல்கள் செய்யப்பட்டது.

பல்வேறு ராகங்களில் இப்பாடல் பாடப்பட்டாலும், ‘Ascension” எனும் இந்த ராகமே மிகப் பிரபலமான ராகமாக விளங்குகிறது. இந்த ராகத்தை W.H. Monk (1823-89) 1861ம் ஆண்டு இயற்றினார்.

சார்ல்ஸ் வெஸ்லி, பாடல்கள் எழுதுவதையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருதி, மொத்தம் 6500க்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

தகவல்கள் : The Daily Telegraph ’Book of Hymns’ by Ian Bradley

Unison 
Unison with Descant
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Descant









































1. வாஞ்சைப்பட்ட இயேசுவே, அல்லேலூயா!
இந்தப் பூதலத்திலே அல்லேலூயா!
கொஞ்ச நாள்தான் தங்கினீர்; அல்லேலூயா!
பின்பு மோட்சம் ஏகினீர், அல்லேலூயா!

2. வான ஆசனத்திலே அல்லேலூயா!
வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா!
துதி பெறும் தேவரீர் அல்லேலூயா!
பூதலத்தை மறவீர், அல்லேலூயா!

3. திருக்கரம் குவித்து, அல்லேலூயா!
திருக்காயம் காண்பித்து, அல்லேலூயா!
திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா!
மாந்தர்க்காய் மன்றாடுவீர், அல்லேலூயா!

4. மண்ணைவிட்டுப் பிரிந்தும், அல்லேலூயா!
வான லோகம் போயினும், அல்லேலூயா!
எங்கள் ஜெபம் கேளுமே, அல்லேலூயா!
எங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா!

Post Comment

1 comment: