Sunday, October 13, 2019

பாமாலை 141 - தெய்வன்புக்காக உன்னத

பாமாலை 141 – தெய்வன்புக்காக உன்னத
(Allein Gott in der Höh sei Ehr)

"Allein Gott in der Höh sei Ehr" (Alone to God in the Highest be glory) எனும் இப்பாடல் ஆரம்பகால லுத்தரன் பாடலாகும், நிக்கோலஸ் டெசியஸ் (Nikolaus Decius) எனும் ஜெர்மானியத் துறவி இப்பாடலை எழுதி அமைத்தார்.  ஜெர்மனியின் Leipzig நகரில் தன் பட்டப்படிப்பை முடித்த இவரது காலம் 16ம் நூற்றாண்டாகும்.  ஜெர்மனியின் Brunswick நகரின் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர், 1535ம் ஆண்டு அங்குள்ள St. Nicholas தேவாலயத்தின் ஆயராகப் பொறுப்பேற்று தம் ஊழியத்தைத் தொடர்ந்தார்.  தம் வாழ்நாளீல் நிக்கோலஸ் அநேக பாடல்களை எழுதியிருப்பினும் “Allein Gott in der Höh sei Ehr” எனும் இப்பாடல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றளவும் நம் திருச்சபைகளில் பாடப்பட்டு வருகிறது.

Catherine Winkworth
ஜெர்மன் மொழியில் இயற்றப்பட்ட ஏராளமான பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கேத்தரின் அம்மையார் (Catherine Winkworth, 1827–1878) இப்பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் (All glory be to God on high).  இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டரில் (Manchester, England) தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த கேத்தரின் அம்மையார், ஜெர்மனியின் ட்ரெஸ்டன் (Dresden) நகரில் சில காலம் தங்கியிருக்க நேரிட்டது. 1854ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் உள்ள பாடல்களினால் கவரப்பட்டு, Lyra Germanica என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை கேத்ரின் அம்மையார் வெளியிட்டார். 1858ம் ஆண்டு இதே போன்றதொரு ஜெர்மன் மொழி பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை மீண்டும் ஒரு புத்தகமாக வெளியிட்டார். 1863ம் ஆண்டு The Chorale Book for England மற்றும் 1869ம் ஆண்டு Christian Singers of Germany ஆகிய புத்தகங்கள் இவர் முயற்சியினால் வெளியாயின.  ஜெர்மன் இசைப் பாரம்பரியத்தில் வெளிவந்த அநேக பாடல்கள் இவரது அயராத உழைப்பினால் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலச் சபைகளுக்குள் வந்து சேர்ந்தது.

இப்பாடலுக்கான கேத்தரின் அம்மையாரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நான்கு பல்லவிகளுடன் இவ்வாறாக அமைந்திருக்கிறது.

1. All glory be to God on high,
Who hath our race befriended!
To us no harm shall now come nigh,
The strife at last is ended;
God showeth His goodwill to men,
And peace shall reign on earth again;
O thank Him for His goodness!

2. We praise, we worship Thee, we trust
And give Thee thanks forever,
O father, that Thy rule is just
And wise, and changes never;
Thy boundless grace o’er all things reigns,
Thou dost whate’er Thy will ordains;
’Tis well Thou art our Ruler!

3. O Jesus Christ, our God and Lord,
Begotten of the Father,
O Thou who hast our peace restored,
And the lost sheep dost gather,
Thou Lamb of God, enthroned on high
Behold our need and hear our cry;
Have mercy on us, Jesus!

4. O Holy Spirit, precious Gift,
Thou Comforter unfailing,
Do Thou our troubled souls uplift,
Against the foe prevailing;
Avert our woes and calm our dread:
For us the Savior’s blood was shed;

Do Thou in faith sustain us!
*********************************
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1.    தெய்வன்புக்காக உன்னத
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி;
என் பாவக்கேட்டை நீக்கின
அருள் மகா திரட்சி;
மெய்ச் சமாதானம், என்றைக்கும்
மானிடர்மேல் பிரியமும்
உண்டாம் இரக்கம் பெற்றோம்.

2.    மாறாமல் ஆண்டிருக்கிற
மகத்துவப் பிதாவே,
துதியோடும்மைக் கும்பிட
பணிகிறோம், கர்த்தாவே,
அளவில்லாப் பலமாய் நீர்
நினைத்த யாவும் செய்கிறீர்;
மா பாக்கியர் அடியார்.

3.    ஆ, இயேசு, தெய்வ மைந்தனே;
கடன்களைச் செலுத்தி
கெட்டோரை மீட்ட மீட்பரே,
மாசற்ற ஆட்டுக்குட்டி,
மா கர்த்தரே, தயாபரா,
அடியார் சத்தம் கேட்டெல்லா
சபைக்கும் நீர் இரங்கும்.

4.    மெய்யாகத் தேற்றும் உன்னத
தெய்வாவீ நீர் அன்பாக
இறங்கி, கிறிஸ்து தம்முட
சாவால் பிரியமாக
மீட்டோரைச் சாத்தான் கண்ணியில்
விழாதே காத்து, துன்பத்தில்
ஜெயிக்கப்பண்ணும், ஆமேன்.

 

Post Comment

No comments:

Post a Comment