Thursday, April 30, 2020

பாமாலை 215 - ஆண் பெண்ணையும் (Old Hundredth)

பாமாலை 215 – ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து

Unison
Soprano
Alto
Alto with Soprano 
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1. ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து
விவாகத்துக்கு நேமித்து
ஆசீர்வதித்த ஆண்டவர்
இஸ்தோத்திரிக்கப்பட்டவர்

2. கர்த்தாவே, இங்கே உம்மண்டை
நிற்கும் இம்மண மக்களை
கண்ணோக்கி இவர்களுக்கும்
மெய்ப் பாக்கியத்தை அருளும்.

3. இருவரும் சிநேகமாய்
இணைக்கப்பட்டு, பக்தியாய்
உம்மில் நிலைத்து வாழவே
துணை புரியும் கர்த்தரே.

4. ஓர் சமயம் நீர் சிலுவை
அனுப்பினாலும், கிருபை
புரிந்தவர்கள் நன்மைக்கே
பலிக்கப்பண்ணும், நேசரே.

5. ஒன்றாய்ச் சேர்ந்தும்மை நம்புவோம்,
மன்றாடிப் போற்றித் தொழுவோம்;
கர்த்தாவே, இன்றும் என்றைக்கும்
அடியாரை விடாதேயும்.

Post Comment

Monday, April 27, 2020

பாமாலை 275 - காற்று திசை நான்கிலும் (Buckland)

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano







































1. காற்றுத் திசை நான்கிலும்
நின்றுலர்ந்த எலும்பும்
ஜீவன் பெறச் செய்யுமே
வல்ல தெய்வ ஆவியே

2. ஈரமற்ற நெஞ்சத்தில்
பனிபோல் இந்நேரத்தில்
இறங்கும், நல்லாவியே
புது ஜீவன் தாருமே

3. சத்துவத்தின் ஆவியே
பேயை நித்தம் வெல்லவே
துணை செய்து வாருமேன்
போந்த சக்தி தாருமேன்

4. ஞானம் பெலன் உணர்வும்
அறிவும் விவேகமும்
தெய்வ பக்தி பயமும்
ஏழும் தந்து தேற்றிடும்

5. தந்தை மைந்தன் ஆவியே
எங்கள் பாவம் நீங்கவே
கிருபை கடாட்சியும்
சுத்தமாக்கியருளும்

Post Comment

பாமாலை 262 - என் மேய்ப்பர் (Dominus Regit Me)

பாமாலை 262 – என் மேய்ப்பர் இயேசுகிறிஸ்துதான்
(The King of Love my Shepherd is)

‘கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்’. சங்கீதம் 23: 1

கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளில் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலும் திருமறையிலுள்ள சங்கீதங்களையே பாடல்களாகப் பாடிவந்தனர். இப்போதும் பல சபைகளில் சங்கீதங்கள் ராகத்துடன் பாடல்களாகவே பாடப்படுகின்றன.  அக்காலத்திலும் சில பக்தர்களால் சில பாடல்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவை வெகுவாக ஆலய ஆராதனைகளில் பாடப்படவில்லை.  பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில், பல சங்கீதங்கள் ஞானப்பாடல் ரூபத்தில் அமைக்கப்பட்டு (Metrical Psalms) அவற்றிற்கேற்ற ராகங்களுடன் பாடப்பட்டன.  இக்காலத்திலும், சங்கீதங்களை மாறி மாறி வாசிப்பதற்குப் பதிலாக, ஸ்காட்லாண்ட் சபை முதலிய பல சபைகளில் சங்கீதப் பாடல்களையே பாடிவருகின்றனர்.  பின்னர் 1542ம் ஆண்டு மார்ட்டின் லூதர் இப்பாடல்களைப் புத்தக வடிவில் வெளியிட்டார். சில ஆண்டுகளுக்குப்பின், 1562ல் ஜெனீவன் சங்கீதப்பாடல்கள் (Genevan Psalter) என்னும் பெயரால் ஒரு பாட்டுப் புத்தகம் வெளியிடப்பட்டது. இதிலுள்ள பாடல்களே கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளிலும் மற்றும் வழிபாடுகளிலும் பாடப்பட்டுவரும் பாடல்களின் ஆரம்பமாகும்.

தற்காலத்திலும் சங்கீதங்களையே அடிப்படையாகக் கொண்ட பல பாடல்கள் நமது பாட்டுப்புத்தகங்களிலுண்டு. இதற்கு உதாரணங்கள்:

v  பாமாலை 9 – பூலோகத்தாரே யாவரும் (சங்கீதம் 100)
v  பாமாலை 253 – கர்த்தாவே யுகயுகமாய் (சங்கீதம் 90)
v  பாமாலை 254 – களிப்புடன் கூடுவோம் (சங்கீதம் 136)
v  பாமாலை 212 – பகலோன் கதிர் போலுமே (சங்கீதம் 72)
v  பாமாலை 327 – வாழ்நாளில் யாது நேரிட்டும் (சங்கீதம் 34)
v  பாமாலை 375 – நீரோடையை மான் வாஞ்சித்து (சங்கீதம் 42)

‘என் மேய்ப்பர் இயேசுகிறிஸ்துதான்’ என்னும் இப்பாடல் 23ம் சங்கீதத்தைத் தழுவி எழுதப்பட்டது.

Sir Henry Williams Baker
ஆங்கிலத் திருச்சபைகளில் உபயோகப்பட்டுவரும், ‘Hymns Ancient and Modern’ என்னும் பாட்டுப்புத்தகம் தொகுக்கப்படும்போது, அதின் தொகுப்பாளராக, ஸர் ஹென்றி பேக்கர் (Sir Henry Williams Baker) நியமிக்கப்பட்டார்.  அவர் அப்புத்தகத்தில் பல சங்கீதப் பாடல்களைச் சேர்க்க விரும்பி, பல பாடல்களைச் சேகரித்தார்.  23ம் சங்கீதத்தைத் தழுவிய சில பாடல்களும் கிடைத்தன.  ஆனால் அவை ஒன்றும் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை.  ஆகவே இச்சங்கீதத்தைத் தழுவிய பாடல் ஒன்றைத் தாமே எழுதத் தீர்மானித்து, ‘என் மேய்ப்பர் இயேசுகிறிஸ்துதான்’ என்ற பாடலை 1859ல் ஆங்கிலத்தில் எழுதினார்.  அவரால் எழுதப்பட்ட ஏராளமான பாடல்களில், இப்பாடலே மிகச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

ஸர் வில்லியம் ஹென்றி பேக்கர் 1821ம் ஆண்டு லண்டன் மாநகரில் பிறந்தார்.  அவரது தந்தை ஆங்கிலக் கப்பற்படையில் தளபதியாக (Admiral) பணியாற்றியவர்.  ஹென்றி பேக்கர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திரித்துவக் கல்லூரியில் பயின்று, 1844ல் பி.ஏ. பட்டமும், 1847ல் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.  1846ல் அவர் குரு அபிஷேகமும் பெற்று, தமது திருப்பணியை ஆரம்பித்தார்.  1851ம் ஆண்டு ஹெரிபோர்ட்ஷயர் மாகாணத்தில் மங்க்லண்ட் நகரின் பிரதம குருவாக நியமனம் பெற்றார்.  இச்சபையில் அவர் இருபத்தாறு ஆண்டுகள் பணியாற்றி, தன் வாழ்க்கையின் மிகுதியான பாகத்தை பாடல்கள் எழுதுவதிலும், பாட்டுப் புத்தகங்கள் இயற்றுவதிலும் செலவிட்டார்.  கிறிஸ்தவ உலகத்திற்கு அவர் செய்த அரிய சேவை, அவர் இயற்றிய, ‘Hymns Ancient and Modern’ என்னும் பாட்டுப்புத்தகமாகும்.  இதில் அவரே எழுதிய 37 பாடல்கள் உண்டு.  அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை:

v  பாமாலை 177 – நாதன் வேதம் என்றும்
v  பாமாலை 221 – கர்த்தா நீர் வசிக்கும்
v  பாமாலை 407 – விண்வாசஸ்தலமாம் பேரின்ப வீடுண்டே

ஸர் ஹென்றி பேக்கர், 1877ம் ஆண்டு, தமது 56ம் வயதில் காலமானார்.  தமது மரணப் படுக்கையில் அவர் கடைசியாகப் பேசிய வார்த்தைகள் இப்பாடலின் மூன்றாவது கவியாகும்.  அது கீழ்க்கண்டவாறு ஆங்கிலத்தில் அழகாக அமைந்துள்ளது:

‘Perverse and foolish oft I strayed,
But yet in love He sought me,
And on His shoulder gently laid
And home, rejoicing, brought me’.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
Descant
Descant with Unison






































1.    என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான்,
நான் தாழ்ச்சியடையேனே;
ஆட்கொண்டோர் சொந்தமான நான்
குறையடைகிலேனே.

2.    ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால்
என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்;
மெய் மன்னாவாம் தம் வார்த்தையால்
நல் மேய்ச்சல் எனக்கீவார்.

3.    நான் பாதை விட்டு ஓடுங்கால்
அன்பாகத் தேடிப் பார்ப்பார்;
தோள்மீதில் ஏற்றிக் காப்பதால்
மகா சந்தோஷங்கொள்வார்.

4.    சா நிழல் பள்ளத்தாக்கிலே
நான் போக நேரிட்டாலும்,
உன் அன்பின் கோலைப் பற்றவே,
அதே என் வழி காட்டும்.

5.    இவ்வேழைக்கும் ஓர் பந்தியை
பகைஞர்க்கெதிர் வைத்தீர்;
உம்மாவியால் என் சிரசை
தைலாபிஷேகம் செய்வீர்.

6.    என் ஆயுள் எல்லாம் என் பாத்திரம்
நிரம்பி வழிந்தோடும்;
ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம்
நிறைந்து பொங்கிப் பாயும்.

7.    என் ஜீவ காலம் முற்றிலும்
கடாட்சம் பெற்று வாழ்வேன்;
கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும்
நான் தங்கிப் பூரிப்பாவேன்.

Post Comment

Sunday, April 26, 2020

பாமாலை 204 - எழும்பெழும்பு நவமாக

பாமாலை 204 – எழும்பெழும்பு நவமாக
(Wach auf, du Geist der ersten Zeugen)
Words: Carl Heinrich von Bogatzky
Meter : 9, 10, 9, 10, 10, 10
Bavarian 40


Karl Heinrich von Bogatzky

‘கிறிஸ்து சபை பாமாலை’ புத்தகத்தின் 204ம் பாடலான ‘எழும்பெழும்பு நவமாக” எனும் இப்பாடல், ‘திருச்சபை’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.  ‘Wach auf, du Geist der ersten Zeugen’ எனும் இப்பாடலின் ஜெர்மானிய மூல வடிவத்தை எழுதியவர் கார்ல் போகஸ்கி (Carl Heinrich von Bogatzky). இவரது காலம் 1690-1774. தன் வாலிப வயதில் சட்டம் மற்றும் வேதாகமக் கல்வியைப் பயின்ற கார்ல், உடல்நிலை நலிவுற்று வேதாகமக் கல்வியை நிறைவு செய்ய முடியாத காரணத்தால், திருச்சபையில் போதகராக பணிபுரியும் வாய்ப்பை இழந்தார். இதனால் சுயாதீனத் திருச்சபைகளில் தமது அருளுரைகளை வழங்கத் துவங்கிய கார்ல், சிலகாலம் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி அங்கேயே பணிபுரிந்தார்.  இங்கே தங்கியிருந்த காலத்தில், கார்ல் பல்வேறு வேதாகமத் தெளிவுரைகளை எழுதி பதிப்பிக்கத் துவங்கினார்.  1718ம் ஆண்டு பாடல்களும் எழுதத் துவங்கிய இவர், தம் வாழ்நாளில் 411 பாடல்களை எழுதியுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano





1. எழும்பெழும்பு நவமாக,
பூர்வீக சாட்சிகளின் ஆவியே;
அநேகர் சாமக்காரராக
மதிலில் நின்றோயாமல் கூப்பிட்டே,
பேயை எதித்தெஜ் ஜாதியாரையும்
அழைத்து சுவிசேஷம் கூறவும்.

2. , உமதக்கினி எரிந்து,
எத்தேசமும் பரம்பச் செய்யுமேன்.
கர்த்தாவே, கிருபை புரிந்து,
நல் வேலையாட்களை அனுப்புமேன்.
இதோ, உமதறுப்பு, கர்த்தரே,
விஸ்தாரமாம், அறுப்போர் கொஞ்சமே.

3. உமது மைந்தனே தெளிவாக
இவ்வேண்டுதலைச் செய்யச் சொன்னாரே.
அத்தாலே எங்கும் தாழ்மையாக
உமது பிள்ளைகள் உம்மிடமே
சேர்ந்தும்மைக் கருத்தாக நித்தமும்
மன்றாடிக் கேட்பதைத் தந்தருளும்.

4. உமது மைந்தனே கற்பித்த
இவ்விண்ணப்பத்தைத் தள்ளப் போவீரோ,
உம்முட ஆவி போதிப்பித்த
மன்றாட்டும்மாலே கேட்கப்படாதோ,
ஏன், நாங்கள் செய்யும் இந்த ஜெபமே
உமது ஆவியால் உண்டானதே.

5. அநேக சாட்சிகளைத் தந்து,
நற்செய்தி எங்கும் கூறப் பண்ணுமேன்
சகாயராய் விரைந்து வந்து,
பிசாசின் ராஜியத்தைத் தாக்குமேன்.
நீர் மகிமைப்பட, எத்தேசமும்
உமது ராஜியம் பரம்பவும்.

6. உமது சுவிசேஷம் ஓடி,
பரம்பி எங்கும் ஒளி வீசவே
புறமதஸ்தர் கோடாகோடி
அத்தாலே தீவிரித்தும்மிடமே
வரக்கடாட்சித் திஸ்ரவேலையும்
உமது மந்தையில் சேர்ந்தருளும்.

7. நமதிருதயத்துக் கேற்ற
நல் மேய்ப்பரை அனுப்புவோம் என்றீர்.
உமது வாக்கை நிறைவேற்ற
மகா உட்கருத்தாயிருக்கிறீர்.
எங்கள் மன்றாட்டு நிறைவேறிப்போம்.
என்றையமின்றி ஆமேன் என்கிறோம்.



Post Comment

Sunday, April 19, 2020

பாமாலை 195 - நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்

பாமாலை 195 – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்
(Als Jesus Christus in der Nacht)
Words: Johann Heermann
Meter : 8,7,8,7
Bavarian 84

‘கிறிஸ்து சபை பாமாலை’ புத்தகத்தின் 195ம் பாடலான ‘நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்” எனும் இப்பாடல், ‘பரிசுத்த நற்கருணை’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.  ‘Als Jesus Christus’ எனும் இப்பாடலின் ஜெர்மானிய மூல வடிவத்தை எழுதியவர் ஜோஹன் ஹீர்மன் (Johhann Heermann). இவரது காலம் 1585-1647.

சிறுவன் ஜோஹனின் இளவயதில் ஒருமுறை அவர் நோயுற்றிருந்தபோது, அவரது தாயார் செய்த பொருத்தனையின் விளைவாய், ஜோஹன் இறைப்பணிக்கென்று தம்மை அர்ப்பணித்தார்.  குருப்பட்டம் பெற்ற பின்பு ஜோஹன் 1611ம் ஆண்டு Koben எனும் இடத்தில் உள்ள லுத்ரன் திருச்சபையில் ஆயராகத் தமது பணியைத் துவக்கினார்.  1634ம் ஆண்டு தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்றின் காரணமாக இவரால் அருளுரைகள் வழங்கும் பணியைத் தொடர இயலவில்லை.   1638ம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர், தமது வாழ்நாளில் அநேகம் பாடல்களை எழுதியுள்ளார்.  அக்காலகட்டத்தில் இவரது பாடல்கள் பல்வேறு தொகுப்புகளாக வெளிவந்து திருச்சபைகளில் பயன்படுத்தப்பட்டன.  அவற்றுள் ‘நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்’ பாடலும் ஒன்றாகும்.

தென்னிந்தியத் திருச்சபையின் ‘கிறிஸ்து சபை பாமாலை’ புத்தகத்தில் 8 சரணங்களுடனும், லுத்ரன் திருச்சபை பாடல் புத்தகத்தில் 9 சரணங்களுடனும் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.  லுத்ரன் திருச்சபை புத்தகத்தில்,

**முன்னாள் பலி எல்லாம் நிழல்
நானே கடனைத் தீர்ப்பர்
எம் ரத்தத்தால் ரட்சிக்குதல்
உண்டாகும் நானே மீட்பர்

எனும் சரணம் ஏழாவது சரணமாக இடம்பெற்றுள்ளது.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano






































1. நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்
மரிக்க வந்து, சாவில்
கிடந்த நம்மைத் தயவாய்
நினைக்கும் அன்றிராவில்;

2. அன்புள்ள கையில் அப்பத்தை
எடுத்து ஸ்தோத்தரித்து,
அதற்குப் பிறகே அதை
சீஷர்களுக்குப் பிட்டு;

3. "வாங்கிப் புசியுங்கள், இது
உங்களுக்காய்ப் படைத்து
கொடுக்கப்பட்ட எனது
சரீரம்" என்றுரைத்து;

4. பிற்பாடு பாத்திரத்தையும்
எடுத்துத் தந்தன்பாக
உரைத்தது: "அனைவரும்
இதில் குடிப்பீராக;

5. இதாக்கினைக்குள்ளாகிய
அனைவர் ரட்சிப்புக்கும்
சிந்துண்டுபோகும் என்னுட
இரத்தமாயிருக்கும்;

6. புது உடன்படிக்கைக்கு,
இதோ, என் சொந்த ரத்தம்
இறைக்கப்பட்டுப் போகுது,
வேறே பலி அபத்தம்;

7. இதுங்கள் அக்கிரமங்களை
குலைக்கிற ஏற்பாடே;
இதற்குச் சேர்ந்தென் பட்சத்தை
நினையுங்கள்" என்றாரே.

8. , ஸ்வாமீ, உமக்கென்றைக்கும்
துதி உண்டாவதாக;
இப்பந்தியால் அடியேனும்
பிழைத்துக்கொள்வேனாக.

**முன்னாள் பலி எல்லாம் நிழல்
நானே கடனைத் தீர்ப்பர்
எம் ரத்தத்தால் ரட்சிக்குதல்
உண்டாகும் நானே மீட்பர்

**(7th Stanza in Lutheran Hymnal)

Post Comment

Tuesday, April 14, 2020

பாமாலை 178 - இயேசு சுவாமி உம்மண்டை

பாமாலை 178 – இயேசு ஸ்வாமி, உம்மண்டை
(Liebster Jesu wir sind hief deinem)
Words: Benjamin Schmolck
Meter : 7,8,7,8,8,8
Bavarian 106

Benjamin Schmolck
நம் ‘கிறிஸ்து சபை பாமாலை’ புத்தகத்தின் 178ம் பாடலான ‘இயேசு ஸ்வாமி உம்மண்டை” எனும் இப்பாடல், ‘ஞானஸ்நானம்” என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள மூன்று பாடல்களுள் முதலாவது பாடலாகும்.  இப்பாடலை எழுதிய, பெஞ்சமின் ஷ்மாஹ் (Benjamin Schmolck) என்பவர் லுத்தரன் திருச்சபையின் போதகர் ஆவார். இவர் 1672ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி போலந்து தேசத்தின் Brauchitschdorf என்னும் இடத்தில் பிறந்தார்.  Leipzig பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பை முடித்த பெஞ்சமின், தொடர்ந்து தமது ஆயர் படிப்பையும் முடித்த இவர் 1701ம் ஆண்டு குருவானவராக அபிஷேகம் செய்யப்பட்டு தமது ஆயர் பணியைத் துவக்கினார்.  ஜெர்மன் மொழியில் பாடல்கள் எழுதுவதில் தேர்ச்சி பெற்றிருந்த பெஞ்சமின், அவரது காலத்தில் மிகச்சிறந்த பாடலாசிரியராகவும் அறியப்பட்டிருந்தார்.

பெஞ்சமின் எழுதிய ‘இயேசு ஸ்வாமி உம்மண்டை” எனும் இப்பாடலின் ஜெர்மானிய மூல வடிவத்தில் 7 சரணங்கள் இடம்பெற்றன. நமது ’கிறிஸ்து சபை பாமாலை’ புத்தகத்தில் இப்பாடலின் 6 சரணங்கள் தரப்பட்டுள்ளன.  இப்பாடலின் 7ம் சரணமாகக் கருதப்படும்,

”தெய்வ நாமங் கூடிய
இம்முழுக்கின் பலத்தாலே
பேயின் விஷமாகிய
பாவ ரோகமும் அத்தாலே
வந்த சாவும் நீங்கலாக
இது குணமாவதாக”.

எனும் சரணம் நம் லுத்ரன் திருச்சபை பாடல் புத்தகத்தின் (சுவிசேஷ லுத்தரன் ஞானப்பாட்டுகள், Fabricus Hymnal & Worship Book, Tamil Evangelical Lutheran Church, Tranquebar House, Tiruchirappalli வெளியீடு) 20வது பதிப்பில், 116ம் பாடலாக இடம்பெற்றுள்ளது.  இப்புத்தகத்தில் இந்த மேற்கண்ட சரணம், ஐந்தாவது சரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.


இப்பாடலின் 17ம் நூற்றாண்டின் Composer’ஆன Johann Rudolf Ahle இயற்றிய ராகத்தில் பாடப்படுகிறது.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1. இயேசு ஸ்வாமி, உம்மண்டை
சிறு பிள்ளைகளும் வர
வேண்டுமென்றீர், மோட்சத்தை
இச்சிறியருக்கும் தர
சித்தமானதால், இப்பிள்ளை
தாமதிக்க நியாயம் இல்லை.

2. நீர்தாம்; மீண்டும் ஒருவன்
தண்ணீராலும் ஆவியாலும்
பிறவாவிட்டால், அவன்
மோட்சத்தில் எவ்விதத்தாலும்
உட்பிரவேசிக்கக் கூடாது
என்றுரைத்தது தப்பாது.

3. ஆகையாலே உமது
கட்டளைக்குக் கீழடங்கி
வந்தோம், இந்தப் பிள்ளைக்கு
தயவைக் காண்பித்திரங்கி,
நாம் உன்நேசரென்று சொல்லும்
இதை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்.

4. ஜென்ம பாவியாகிய
இதைக் கழுவி மன்னியும்;
நீர் இதற்குப் புதிய
வஸ்திரத்தைத் தரிப்பியும்;
கர்த்தரே, நீர் இதை முற்றும்
நன்றாய் உமக்குட்படுத்தும்.

5. கூட்டிக்கொள்ளும், சிரசே;
மேய்ப்பரே, இவ்வாட்டைச்சேரும்;
உயிர்ப்பியும், ஜீவனே;
ஸ்வாமி, பேயின் நாற்றைப்பேரும்;
நேசரே, நற்கொடியாக
இதும்மில் தரிப்பதாக.

6. எங்கள் அன்பின் வேண்டலை,
 ஸ்வாமி, அன்பாய்க் கேட்பீராக;
 நாங்கள் வேண்டிக்கொள்வதை
 இப்பிள்ளைக்குச் செய்வீராக;
 நீரே இதின் நாமத்தையும்
 மீட்புக்கென்றெழுதி வையும்.

**7. தெய்வ நாமங் கூடிய
இம்முழுக்கின் பலத்தாலே
பேயின் விஷமாகிய
பாவ ரோகமும் அத்தாலே
வந்த சாவும் நீங்கலாக
இது குணமாவதாக.

**(5th Stanza in Lutheran Hymnal)

Post Comment

Friday, April 10, 2020

பாமாலை 173 - பராபரனைப் பணிவோம் (Vi Love Dig)

பாமாலை 173 – பராபரனைப் பணிவோம்
(We worship Thee Almighty Lord)
Words: Johan Olof Wallin
Tune : Vi Love Dig

Johan Olof Wallin
இப்பாடலை எழுதியுள்ள அருள்திரு. ஜோஹன் வாலின் (Johan Olof Wallin) ஸ்வீடன் தேசத்தின் Stora Tuna என்ற நகரத்தில் 1779ம் ஆண்டு பிறந்தார்.  ஜோஹன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தும், சிறுவயதிலேயே மிகவும் பிரகாசமான மாணவர் என்பதால் அவர் 1799ல் உப்சாலா பல்கலைக்கழகத்தில் University of Uppsala சேர்ந்து பட்டப்படிப்பையும், முதுகலைப் படிப்பையும் முடித்தார்.  மிகுந்த எழுத்துத் திறமை வாய்ந்த ஜோஹனின் முதல் கவிதை, 1802ம் ஆண்டு வெளியானது.  தொடர்ந்து பல கவிதைகளை எழுதிய ஜோஹன், பாடல்களை மொழிபெயர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு ஆயர் பட்டமும் பெற்ற இவர், ஸ்வீடனின் சோல்னா (Solna) பகுதியில் உள்ள ஆலயத்தில் ஊழியத்தைத் துவக்கி, தமது வியத்தகு போதகத் திறமையால் 1815ம் ஆண்டு ஸ்டாக்ஹோம் (Stockholm) தேவாலயத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு, தொடர்ந்து 1818ம் ஆண்டு வெஸ்டரஸ் (Westeras) தேவாலயத்தின் Dean’ஆகப் பணியமர்த்தப்பட்டார். 


வெஸ்டரஸ் தேவாலயத்தில் அவர் Dean ஆகப் பணிபுரிந்தபோது, ஸ்வீடன் தேசத்தின் தேவாலயங்கள் முழுவதிலும் உபயோகிக்க ஏதுவான ஒரு பாடல் புத்தகத்தைத் தொகுத்து உருவாக்கும் பணி அவருக்கு நியமிக்கப்பட்டது. 1819ம் ஆண்டு இப்பணியினை நிறைவு செய்த ஜோஹன் “Den Swenska Psalmboken, af Konungen gillad och stadfästad (The Swedish hymn-book, approved and confirmed by the King) என்ற பாடல் தொகுப்பை அச்சிட்டு வெளியிட்டார்.  இப்புத்தகம் இன்றளவும் ஸ்வீடன் தேசம் முழுதும் உள்ள தேவாலயங்களின் ஆராதனைகளில் பயன்படுத்தப்படுகிறது. இப்புத்தகத்தில் ஜோஹான் மொழிபெயர்த்த, திருத்தி இடம்பெறச்செய்த பாடல்கள் தவிர்த்து, அவரே சுயமாக எழுதிய 150க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம்பெற்றன. இவற்றுள் “பராபரனைப் பணிவோம்” பாடலும் ஒன்றாகும்.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. பராபரனைப் பணிவோம்,
பரத்தினின்றும் வார்த்தையாம்,
பார் எங்குமே பரவ ஏற்றுவோம்.
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.

2. உயர்ந்த மலை மீதிலும்
உம் நாம வன்மை சார்ந்துமே,
உம் சபையே உயரும் என்றென்றும்.
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.

3. உம் நாம மேன்மை லோகத்தார்
உம் சபை சேர்ந்து கூறுவார்;
உள் மகிழ்வாய் உந்தன் மெய்த் தொண்டராய்
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.

4. பார் மாந்தர் உந்தன் நாமமே
பாடுவார் ஜெய கீதமே;
கேரூப் சேராப் சேர்ந்திசைப்பார் ஒன்றாய்;
தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.

Post Comment