பாமாலை 178 – இயேசு ஸ்வாமி,
உம்மண்டை
(Liebster Jesu
wir sind hief deinem)
Words: Benjamin Schmolck
Meter : 7,8,7,8,8,8
Bavarian 106
Benjamin Schmolck |
நம்
‘கிறிஸ்து சபை பாமாலை’ புத்தகத்தின் 178ம் பாடலான ‘இயேசு ஸ்வாமி உம்மண்டை” எனும் இப்பாடல்,
‘ஞானஸ்நானம்” என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள மூன்று பாடல்களுள் முதலாவது பாடலாகும். இப்பாடலை எழுதிய, பெஞ்சமின் ஷ்மாஹ் (Benjamin
Schmolck) என்பவர் லுத்தரன் திருச்சபையின் போதகர் ஆவார். இவர் 1672ம் ஆண்டு டிசம்பர்
மாதம் 21ம் தேதி போலந்து தேசத்தின் Brauchitschdorf என்னும் இடத்தில் பிறந்தார். Leipzig பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பை முடித்த
பெஞ்சமின், தொடர்ந்து தமது ஆயர் படிப்பையும் முடித்த இவர் 1701ம் ஆண்டு குருவானவராக
அபிஷேகம் செய்யப்பட்டு தமது ஆயர் பணியைத் துவக்கினார். ஜெர்மன் மொழியில் பாடல்கள் எழுதுவதில் தேர்ச்சி
பெற்றிருந்த பெஞ்சமின், அவரது காலத்தில் மிகச்சிறந்த பாடலாசிரியராகவும் அறியப்பட்டிருந்தார்.
பெஞ்சமின்
எழுதிய ‘இயேசு ஸ்வாமி உம்மண்டை” எனும் இப்பாடலின் ஜெர்மானிய மூல வடிவத்தில் 7 சரணங்கள்
இடம்பெற்றன. நமது ’கிறிஸ்து சபை பாமாலை’ புத்தகத்தில் இப்பாடலின் 6 சரணங்கள் தரப்பட்டுள்ளன. இப்பாடலின் 7ம் சரணமாகக் கருதப்படும்,
”தெய்வ நாமங் கூடிய
இம்முழுக்கின் பலத்தாலே
பேயின் விஷமாகிய
பாவ ரோகமும் அத்தாலே
வந்த சாவும் நீங்கலாக
இது குணமாவதாக”.
எனும்
சரணம் நம் லுத்ரன் திருச்சபை பாடல் புத்தகத்தின் (சுவிசேஷ லுத்தரன் ஞானப்பாட்டுகள்,
Fabricus Hymnal & Worship Book, Tamil Evangelical Lutheran Church,
Tranquebar House, Tiruchirappalli வெளியீடு) 20வது பதிப்பில், 116ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. இப்புத்தகத்தில் இந்த மேற்கண்ட சரணம், ஐந்தாவது
சரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பாடலின்
17ம் நூற்றாண்டின் Composer’ஆன Johann Rudolf Ahle இயற்றிய ராகத்தில் பாடப்படுகிறது.
UnisonSoprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. இயேசு ஸ்வாமி, உம்மண்டை
சிறு பிள்ளைகளும் வர
வேண்டுமென்றீர், மோட்சத்தை
இச்சிறியருக்கும் தர
சித்தமானதால், இப்பிள்ளை
தாமதிக்க நியாயம் இல்லை.
2. நீர்தாம்; மீண்டும் ஒருவன்
தண்ணீராலும் ஆவியாலும்
பிறவாவிட்டால், அவன்
மோட்சத்தில் எவ்விதத்தாலும்
உட்பிரவேசிக்கக் கூடாது
என்றுரைத்தது தப்பாது.
3. ஆகையாலே உமது
கட்டளைக்குக் கீழடங்கி
வந்தோம், இந்தப் பிள்ளைக்கு
தயவைக் காண்பித்திரங்கி,
நாம் உன்நேசரென்று சொல்லும்
இதை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்.
4. ஜென்ம பாவியாகிய
இதைக் கழுவி மன்னியும்;
நீர் இதற்குப் புதிய
வஸ்திரத்தைத் தரிப்பியும்;
கர்த்தரே, நீர் இதை முற்றும்
நன்றாய் உமக்குட்படுத்தும்.
5. கூட்டிக்கொள்ளும்,
சிரசே;
மேய்ப்பரே, இவ்வாட்டைச்சேரும்;
உயிர்ப்பியும், ஜீவனே;
ஸ்வாமி, பேயின் நாற்றைப்பேரும்;
நேசரே, நற்கொடியாக
இதும்மில் தரிப்பதாக.
6. எங்கள் அன்பின் வேண்டலை,
ஸ்வாமி,
அன்பாய்க் கேட்பீராக;
நாங்கள்
வேண்டிக்கொள்வதை
இப்பிள்ளைக்குச்
செய்வீராக;
நீரே
இதின் நாமத்தையும்
மீட்புக்கென்றெழுதி
வையும்.
**7. தெய்வ நாமங்
கூடிய
இம்முழுக்கின்
பலத்தாலே
பேயின்
விஷமாகிய
பாவ
ரோகமும்
அத்தாலே
வந்த
சாவும்
நீங்கலாக
இது
குணமாவதாக.
**(5th Stanza in Lutheran Hymnal)
No comments:
Post a Comment