பாமாலை 173 – பராபரனைப்
பணிவோம்
(We worship
Thee Almighty Lord)
Words: Johan Olof Wallin
Tune : Vi Love Dig
Johan Olof Wallin |
இப்பாடலை
எழுதியுள்ள அருள்திரு. ஜோஹன் வாலின் (Johan Olof Wallin) ஸ்வீடன் தேசத்தின் Stora
Tuna என்ற நகரத்தில் 1779ம் ஆண்டு பிறந்தார்.
ஜோஹன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தும், சிறுவயதிலேயே மிகவும் பிரகாசமான
மாணவர் என்பதால் அவர் 1799ல் உப்சாலா பல்கலைக்கழகத்தில் University of Uppsala சேர்ந்து
பட்டப்படிப்பையும், முதுகலைப் படிப்பையும் முடித்தார். மிகுந்த எழுத்துத் திறமை வாய்ந்த ஜோஹனின் முதல்
கவிதை, 1802ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து
பல கவிதைகளை எழுதிய ஜோஹன், பாடல்களை மொழிபெயர்ப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
கல்லூரிப்
படிப்பை முடித்த கையோடு ஆயர் பட்டமும் பெற்ற இவர், ஸ்வீடனின் சோல்னா (Solna) பகுதியில்
உள்ள ஆலயத்தில் ஊழியத்தைத் துவக்கி, தமது வியத்தகு போதகத் திறமையால் 1815ம் ஆண்டு ஸ்டாக்ஹோம்
(Stockholm) தேவாலயத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு, தொடர்ந்து 1818ம் ஆண்டு வெஸ்டரஸ்
(Westeras) தேவாலயத்தின் Dean’ஆகப் பணியமர்த்தப்பட்டார்.
வெஸ்டரஸ்
தேவாலயத்தில் அவர் Dean ஆகப் பணிபுரிந்தபோது, ஸ்வீடன் தேசத்தின் தேவாலயங்கள் முழுவதிலும்
உபயோகிக்க ஏதுவான ஒரு பாடல் புத்தகத்தைத் தொகுத்து உருவாக்கும் பணி அவருக்கு நியமிக்கப்பட்டது.
1819ம் ஆண்டு இப்பணியினை நிறைவு செய்த ஜோஹன் “Den Swenska Psalmboken, af Konungen
gillad och stadfästad (The Swedish hymn-book, approved and confirmed by the
King) என்ற பாடல் தொகுப்பை அச்சிட்டு வெளியிட்டார். இப்புத்தகம் இன்றளவும் ஸ்வீடன் தேசம் முழுதும் உள்ள
தேவாலயங்களின் ஆராதனைகளில் பயன்படுத்தப்படுகிறது. இப்புத்தகத்தில் ஜோஹான் மொழிபெயர்த்த,
திருத்தி இடம்பெறச்செய்த பாடல்கள் தவிர்த்து, அவரே சுயமாக எழுதிய 150க்கும் மேற்பட்ட
பாடல்கள் இடம்பெற்றன. இவற்றுள் “பராபரனைப் பணிவோம்” பாடலும் ஒன்றாகும்.
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. பராபரனைப் பணிவோம்,
பரத்தினின்றும் வார்த்தையாம்,
பார் எங்குமே பரவ ஏற்றுவோம்.
தூயர்! தூயர்! தூயர்! எம்
ஸ்வாமி நீர்.
2. உயர்ந்த மலை மீதிலும்
உம் நாம வன்மை சார்ந்துமே,
உம் சபையே உயரும் என்றென்றும்.
தூயர்! தூயர்! தூயர்! எம்
ஸ்வாமி நீர்.
3. உம் நாம மேன்மை லோகத்தார்
உம் சபை சேர்ந்து கூறுவார்;
உள் மகிழ்வாய் உந்தன் மெய்த் தொண்டராய்
தூயர்! தூயர்! தூயர்! எம்
ஸ்வாமி நீர்.
4. பார் மாந்தர் உந்தன் நாமமே
பாடுவார் ஜெய கீதமே;
கேரூப் சேராப் சேர்ந்திசைப்பார் ஒன்றாய்;
தூயர்! தூயர்! தூயர்! எம்
ஸ்வாமி நீர்.
No comments:
Post a Comment