Monday, July 23, 2012

பாமாலை 210 - திருச்சபை காத்திருக்க (Everton)

பாமாலை 210 – திருச்சபை காத்திருக்க
(Lord, her watch Thy Church is keeping)
Tune: Everton

திருச்சபை காத்திருக்க’ எனும் இப்பாடல், நம் பாமாலைப் புத்தகத்தில் ‘சுவிசேஷப் பிரபல்லியம்’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலை எழுதிய ஹென்றி டௌன்டன் (Henry Downton), 1818ம் ஆண்டு இங்கிலாந்தின் ஷ்ராப்ஷெயர் (Pulverbatch, Shropshire) பகுதியில் பிறந்தார். Cambridge Trinity College’ல் BA மற்றும் MA பயின்ற இவர், 1857ம் ஆண்டு ஜெனிவாவிற்கு Chaplainஆகப் பணிபுரியச் சென்றார். தம் வாழ்நாளில் ஏராளமான பிரஞ்சு மொழி பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியில் ஈடுபட்ட இவர், "Another year, another year" "For Thy mercy, and Thy grace", " Harp awake, tell out the story" உள்ளிட்ட ஏராளமான பாடல்களை எழுதினார். Lord, her watch Thy Church is keepingஎனும் இப்பாடலை ‘Church Missionary Society”யின் ஒரு வருடாந்திர கூடுகைக்காக 1866ம் ஆண்டு எழுதினார். Ancient & Modern பாடல் புத்தகத்தின் முதலாம் பதிப்பு வெளிவந்த சில நாட்களுக்குப் பின்னர் இந்தப் பாடலை ஹென்றி பதிப்பித்தபடியால், Ancient & Modern புத்தகத்தின் முதல் பதிப்பில் இடம்பெற இயலாமல் போயிற்று. இருப்பினும் 1875ம் ஆண்டு வெளிவந்த இதன் இரண்டாம் பதிப்பில் இப்பாடல் இடம்பெற்று, இன்றளவும் உலகமெங்கும் பாடப்படுகிறது. ஹென்றி 1885ம் ஆண்டு மறுமைக்குட்பட்டார்.


Henry Thomas Smart
இப்பாடலுக்கான Everton எனும் இந்த ராகத்தை இயற்றியவர் Henry Thomas Smart.  1813ம் ஆண்டு பிறந்த இவர் தம் காலத்தின் மிகப் பிரபலமான Composer மற்றும் Organistஆக விளங்கினார்.  1879ம் ஆண்டுவரை வாழ்ந்த இவர் தம் வாழ்நாளின் கடைசி 15 வருடங்களில் பார்வைத் திறனை இழந்தார். அத்தகைய கடினமான காலகட்டத்திலும் தம் மகளிடம் இவர் இசைக்குறிப்புகளைச் சொல்ல, மகள் எழுத, இவ்வாறாகப் பாடல்களுக்கான இசையை எழுதினார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1.  திருச்சபை காத்திருக்க
எந்நாள், நாதா, வருவீர்?
எந்நாள் துக்க ரா முடிய
பகல் விடியச் செய்வீர்?
நெல் விளைந்து வாடிப்போக
அறுப்போரும் குறைந்தார்;
சாத்தான் கொள்ளை வைத்துக் கொள்ள
கிறிஸ்து வீணாயோ மாண்டார்?

2.  சிஷ்டிக்கெல்லாம் உற்ற செய்தி
கோடாகோடி கேளாரே
யார்தான் கேட்பார் சொல்வார் இன்றி?
நாதா, வார்த்தை ஈயுமே;
வார்த்தை ஈயும் சுவிசேஷ
தொனி எங்கும் ஒலித்தும்,
எல்லாத் தேசத்தாரும் திவ்விய
மீட்பைக் கேட்க செய்திடும்

3.  நீர் தெரிந்தோர் ஈறுகாலம்
ஒன்றாய் சேர்க்கப்படுவார்;
சாத்தான் கட்டப்பட்டுப் பாவம்
மாய, கிறிஸ்து ஆளுவார்;
பசி தாகம் நோவு சாவும்
கண்ணீர் யாவும் நீங்கவே
திருச்சபை காத்திருக்கும்
இயேசு ஸ்வாமி, வாருமே.

Post Comment

No comments:

Post a Comment