Saturday, July 20, 2013

பாமாலை 19 - எவ்வண்ணமாக (Wiltshire)

பாமாலை 19 - எவ்வண்ணமாக 
Wherewith O God shall I draw near
Tune : Wiltshire


Unison

Soprano
 
Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  எவ்வண்ணமாக கர்த்தரே
உம்மை வணங்குவேன்?
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென்ன தருவேன்?
 
2.  அநேக காணிக்கைகளால்
உம் கோபம் மாறுமோ?
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பீரோ?
 
3.  பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும், பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே.
 
4.  நான் குற்றவாளி, ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அழிதல் நியாயமே.
 
5.  ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.
 
6.  இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார்
உம் திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார்.
 
7.  இவ்வண்ணமாக கர்த்தரே
உம்மை வணங்குவேன்
என் நீதி இயேசுகிறிஸ்துவே
அவரைப் பற்றினேன்.

Post Comment

No comments:

Post a Comment