Wednesday, December 21, 2016

Ring Bells Ring

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.         Ring, ring, bells ring!
Ring out upon the skies
The notes we love to hear;
Sweet sounds that tell of heav’n and love,
Such as were wafted from above,
When Christ the Lord came near.

            Good news, good news, good news, good news
            Good news, ‘tis Christmas morn!
            Emmanuel, Emmanuel, Emmanuel,
            True God is born.

2.         Blow, blow, winds, blow !
Waft tidings of great joy
To lands both near and far,
Good news which tells that God has blest
The waiting world with peace and rest,
Which naught of earth can mar.

3.         Sing, sing, Choirs, sing!
And carols raise today
Which Angles sang of yore;
Glad songs which echoed through the night,
When Christ’s sweet heralds winged their flight
From heaven’s eternal shore.

4.         Shout, shout, earth, shout!
Ten thousand voices raise
To greet the New born King!
Glad welcome to Emmanuel
Whose Name for ages men shall tell,

And Angels ever sing!

Post Comment

Sunday, December 11, 2016

We wish you a Merry Christmas

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


Post Comment

Sunday, October 30, 2016

பாமாலை 349 - நீர் தந்தீர் எனக்காய் (Tune 2)

பாமாலை 349 – நீர் தந்தீர் எனக்காய் உம் உயிர் ரத்தமும்
(Thy life was given for me)

‘கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தை செலுத்துவேன்?’

1858ம் ஆண்டு, ஜனவரி மாதம் 10ம் தேதி பிரான்ஸஸ் ரிட்லே ஹாவர்கல் அம்மையார் (Frances Ridley Havergal), ஜெர்மனி நாட்டில் டஸ்ஸெல்டார்ப் (Düs­sel­dorf, Ger­ma­ny) நகரில் ஒரு ஜெர்மன் போதகருடன் தங்க நேரிட்டது. ஒருநாள் வெளியிலிருந்து மிகக் களைப்புடன் போதகரின் அறைக்குள் அம்மையார் நுழைந்து, அங்கிருந்த ஒரு ஆசனத்தில் அமர்ந்தார். அவருக்கு எதிராக சுவரில் ஒரு படம் மாட்டப்பட்டிருந்தது. இது புகழ்பெற்ற ஓவியச் சிற்பியான ஸ்டென்பர்க் என்பவரால் தீட்டப்பட்டது (Stern­berg’s paint­ing Ec­ce Ho­mo). படத்தில், சிலுவையில் தொங்கும் ஆண்டவரும், அதின் கீழ், ‘உனக்காக இதைச் செய்தேன். நீ எனக்காகச் செய்தது என்ன?’ (“This have I done for thee; what has thou done for Me?”) என்னும் எழுத்துகளும் காணப்பட்டன. ஹாவர்கல் அம்மையார் படத்தை சிறிது நேரம் உற்று நோக்கும்போது இரட்சகரின் கண்பார்வை அவர்மேல் தங்குவதுபோலக் காணப்பட்டது.  உடனே உணர்ச்சிவசப்பட்டு, ‘I gave my life for thee’ என் ஆரம்பிக்கும் ஐந்து கவிகளடங்கிய ஒரு பாடலை எழுதினார்கள்.  பின்னர் அதைப் படித்துப் பார்க்கும்போது, பாடல் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை.  உடனே அதைக் கசக்கி, குளிர் காய்வதற்காக எரிந்துகொண்டிருந்த அனல் அடுப்பினுள் எறிந்தார். ஆனால் அது அடுப்பினுள் விழாமல் வெளியில் விழுந்தது. இது ஆண்டவருடைய சித்தம் என எண்ணி, அதை எடுத்துப் பத்திரமாக வைத்தார்.  சிறிது நேரத்துக்குப்பின் அவ்வூரிலிருந்த ஒரு தர்மசாலையில் வியாதியாய்ப் படுத்திருந்த ஒரு வயோதிப அம்மாளைப் பார்க்கச் சென்றார்.  இப்பாடலை அவருக்குப் படித்துக்காட்டவே, அவர் அதை வெகுவாகப் பாராட்டினார்.

     சில தினங்களுக்குப்பின், ஹாவர்கல் அம்மையார் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பியபின், இப்பாடலைத் தன் தந்தையான கனோன் ஹாவர்கலிடம் காட்டவே, அவர் அதை மிகவும் புகழ்ந்து, அதற்கேற்ற ‘Baca’ (S.S.621) என்னும் ஓர் ராகத்தையும் அமைத்து, ‘Good Words’ என்னும் சுவிசேஷப் பத்திரிக்கையில் வெளியிட்டார்.  இப்போது இது பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டங்களில் பாடப்பட்டு வருகிறது.

     ஹாவர்கல் அம்மையார் இப்பாடலை ஆண்டவர் நம்மிடத்தில் சொல்லுவதாக, “I gave my life for thee” என ஆரம்பித்து எழுதினார்.  ஆனால் பல புத்தகங்களில், நாம் கிறிஸ்துவிடம் சொல்லுவதாக, ‘Thy life was given for me’ என ஆரம்பித்து எழுதப்பட்டிருக்கிறது.  அம்மையார் இதை ஆட்சேபிக்காவிடினும், ஆண்டவர் நம்மிடம் பேசுவதுபோல, தாம் முதலில் எழுதிய வார்த்தைகளையே விரும்பினார்.

     பிரான்ஸஸ் ரிட்லே ஹாவர்கல் அம்மையார் 1836ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி இங்கிலாந்தில் ஆஸ்ட்லே என்னும் ஊரில் ஒரு பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தார்.  அவரது தந்தை ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு குருவானவர்.  நான்கு வயதாயிருக்கும்போதே, அம்மையார் வேத புத்தகத்தை வாசிக்கப் பழகியிருந்தார்.  பின்னர், புதிய ஏற்பாடு முழுவதையும், பழைய ஏற்பாட்டின் சில பகுதிகளையும் மனப்பாடம் பண்ணியிருந்தார்.  இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் கல்வி பயின்று ஆங்கிலம் தவிர ஐந்து பிறமொழிகள் கற்றார்.  சங்கீதத்தில் அதிகத் திறமை பெற்று, இனிமையாகப் பாடவும், ராகங்கள் எழுதவும், சங்கீதக் கருவிகள் வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.  மேலும், ஓய்வுநாட்பள்ளியில் போதிப்பதிலும், வாசிக்கத் தெரியாத மக்களுக்கு வேதத்தை வாசித்துக் கொடுப்பதிலும், ஏழை மக்களின் தேவைகளைக் கவனிப்பதிலும் அதிகமாக ஈடுபட்டிருந்தார்.  ஹாவர்கல் அம்மையார் தன் குறுகிய வாழ்க்கையில் அநேக பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய இதர பாடல்களில் சில:

·         ’நாதா உம் வார்த்தை கூறவே’ – பாமாலை 201.
·         ‘எந்தன் ஜீவன் இயேசுவே’ – பாமாலை 302
·         ‘அருள்நாதா நம்பி வந்தேன்’ – பாமாலை 329
·         தெய்வ சமாதான இன்ப நதியே’ – பாமாலை 357

அவர், 1879ம் ஆண்டு, ஜூன் மாதம், 3ம் தேதி வேல்ஸ் நாட்டில் சுவான்ஸீ (Swansea, Wales) என்னுமிடத்தில் தமது 42ம் வயதில் காலமானார்.

இப்பாடலின் பிறிதோர் ராகத்தை இங்கே காணலாம். இப்பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ராகத்தை (Philip P Bliss) பெரும்பாலும் ‘இரட்சண்ய சேனைத் திருச்சபையினர்’ தங்கள் ஆராதனைகளில் பாடி ஆண்டவரைத் துதிக்கின்றனர்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.    நீர் தந்தீர் எனக்காய்
உம் உயிர் ரத்தமும்
நான் மீட்கப்பட்டோனாய்
சாகாமல் வாழவும்
நீர் தந்தீர் எனக்காய்;
நான் யாது தந்திட்டேன்.

2.    பின்னிட்டீர் ஆண்டுகள்
வேதனை துக்கமும்;
நான் நித்திய நித்தியமாய்
பேரின்பம் பெறவும்
பின்னிட்டீர் எனக்காய்
நான் யாது பின்னிட்டேன்?

3.    பிதாவின் விண் வீடும்
ஆசனமும் விட்டீர்;
பார் இருள் காட்டிலும்
தனித்தே அலைந்தீர்
நீர் விட்டீர் எனக்காய்;
நான் யாதெது விட்டேன்?

4.    சொல்லொண்ணா வேதனை
அகோர கஸ்தியும்
சகித்தீர் எனக்காய்
நரகம் தப்பவும்
சகித்தீர் எனக்காய்;
நான் யாது சகித்தேன்?

5.    கொணர்ந்தீர் எனக்காய்
விண் வீட்டினின்று,
மீட்பு சமூலமாய்
மன்னிப்பு மா அன்பு
கொணர்ந்தீர் எனக்காய்;
நான் யாது கொணர்ந்தேன்.

6.    என் ஜீவன் தருவேன்
பற்றாசை ஒழித்து;
உமக்காய் ஜீவிப்பேன்
யாவுமே சகித்து
நீர் தந்தீர் உம்மையே
நான் தந்தேன் என்னையே.

I gave my life for my thee

Post Comment

Thursday, September 1, 2016

கிறிஸ்து ராஜா (Standing on the Promises)

கிறிஸ்துராஜா வாக்குத்தத்தத்தின் பேரில்
(Standing on the Promises)

எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே. 2 கொரிந்தியர் 1 : 20

Russell Kelso Carter
Standing on the Promises என்னும் இப்பாடலை எழுதிய ரஸ்ஸல் கெல்ஸோ கார்ட்டர் (Russell Kelso Carter) 1849ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி, அமெரிக்க தேசத்தின் பால்டிமோர் (Baltimore, Maryland) என்னுமிடத்தில் பிறந்தார்.  ரஸ்ஸல் கெல்ஸோ கார்ட்டர் அமெரிக்காவின் பென்னிஸில்வேனியா மாகாணத்தின் ஒரு ராணுவக் கல்விக்கழகத்தில் பயின்று வந்தார்.  மிகச்சிறந்த தடகள வீரராக இருந்த அவர், பிற்காலத்தில் தலைசிறந்த பயிற்சியாளராகவும் திகழ்ந்தார். இங்கிருக்கும்போதே மெத்தடிஸ்டு சபை ஒன்றிலும் குருவாகப் பணியாற்றிய அவர், பிற்காலத்தில் மருத்துவப்படிப்பும் முடித்து மருத்துவ சேவையும் ஆற்றி வந்தார்.  மேலும் இவர் பாடல்கள் எழுதுவதிலும், இசையமைப்பதிலும் சிறந்து விளங்கினார்.  1886ம் ஆண்டு ஜான் ஸ்வெனே (John Sweney) என்பவருடன் இணைந்து Songs of Perfect Love என்ற பாடல் புத்தகத்தை தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்புத்தகத்திலேயே ரஸ்ஸல் எழுதிய Standing on the promises என்ற புகழ்பெற்ற பாடலும் அச்சிடப்பட்டது.

பிறப்பால் ரஸ்ஸல் கெல்ஸோ கிறிஸ்தவராக இருந்தபோதிலும், கிறிஸ்தவ பாடல்களை நிறைய எழுதியிருந்தபோதிலும், அவர் வேதாகமத்தில் உள்ள வாக்குத்தத்தங்களின் வல்லமையை தமது வாழ்வின் பிற்பகுதியிலேயே புரிந்துகொள்ள நேர்ந்தது.  தமது முப்பதாவது வயதில் ரஸ்ஸல் கடுமையான சுகவீனத்திற்கு உள்ளானார்.  அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரும் அவரைக் கைவிட்ட நிலையில், ரஸ்ஸலின் பார்வை தேவனை நோக்கித் திரும்பியது.  கடவுளிடம் முழங்காலிட்டு ஜெபிக்கத் துவங்கிய அவர், ‘தேவனே இந்நோயால் நான் மரித்தாலும் அல்லது பிழைத்தாலும் என் மீதமுள்ள வாழ்வு உம்முடைய பணிக்கானதாக மட்டுமே இருக்கும்’ என்று பொருத்தனை செய்து ஊக்கமாய் ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டார்.  அந்த நொடிப்பொழுதிலிருந்து, ஆண்டவருடைய ஜீவ வசனம் அவருள் கிரியை செய்யத் துவங்கியது. அப்போதிருந்து தேவனுடைய குணமாக்கும் வாக்குத்தத்தங்களை நம்பி நிற்கத் துவங்கினார்.  ஒரு சில மாதங்களில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு, பூரண சுகம் பெற்றார்.

‘Standing on the Promises’ பாடலை அவர் இச்சம்பவத்திற்கு முன்னரே 2 கொரிந்தியர் 1:20ன் அடிப்படையில் எழுதிமுடித்திருந்தபோதிலும், ஆண்டவர் அவருக்கு அளித்த சுகத்திற்குப் பின்னரே அவரது வாழ்வில் இப்பாடல் அர்த்தமுள்ளதாகவும் அவருடைய மனதுக்கு மிகவும் பிரியமான பாடலாகவும் மாறிப்போனது. நோயுற்று, ஆண்டவரிடம் ஜெபித்து சுகம்பெற்ற பின்னர் ரஸ்ஸல் மேலும் 49 வருடங்கள் உயிர்வாழ்ந்து 1928ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி இவ்வுலக ஓட்டத்தை முடித்தார்.  ரஸ்ஸல் எத்தனையோ பாடல்கள் எழுதியிருந்தபோதிலும், ‘Standing on the Promises’ பாடல் அவருக்கு உலகப்புகழ் பெற்றுத்தந்து இன்றளவும் அநேகருக்கு நம்பிக்கை அளிக்கும் பாடலாகத் திகழ்கிறது.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    கிறிஸ்து ராஜா வாக்குத்தத்தத்தின் பேரில்
தொனியின் சத்தம் தொனிக்கும் என்றுமே,
ராஜனுக்குக் கனம் புகழ் ஓங்குக,
நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்

     நிற்பேன் நிற்பேன்,
     தேவ வாக்குத்தத்தங்களை நம்பியே நான்
     நிற்பேன் நிற்பேன்,
     நான் நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்.

2.    சந்தேகப் புயல் வீசிய போதிலும்,
கிறிஸ்து ராஜா வாக்குத்தத்தத்தின் பேரில்,
தேவ ஜீவ வார்த்தைகளினால் வாழ்வேன்,
நிலைநிற்பேன் வாக்குத்தத்தத்தில்.

3.    அவர் ரத்தத்தின் சுத்திகரிப்பினால்,
பரிபூர்ண விடுதலையைக் கண்டேன்,
நான் காணும் அந்நல் வாக்குத்தத்தங்களை,
நம்பி நிலை நிற்பேன் என்றுமே.

4.    மீட்பர் யேசுவின் நல் வாக்குத்தத்தத்தில்,
அவர் அன்பு பெலத்தில் நிலை நிற்பேன்,
ஆவியின் பட்டயத்தால் மேற்கொள்ளுவேன்,
நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்.

5.    வாக்குத்தத்தங்களினால் விழ மாட்டேன்
தூய ஆவியின் அழைப்பை நான் ஏற்பேன்
வல்ல மீட்பர் எனக்கு ஓய்வு ஈவார்

நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்.

Post Comment

Sunday, August 21, 2016

பாமாலை 349 - நீர் தந்தீர் எனக்காய்

பாமாலை 349 – நீர் தந்தீர் எனக்காய் உம் உயிர் ரத்தமும்
(Thy life was given for me)

‘கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தை செலுத்துவேன்?’

1858ம் ஆண்டு, ஜனவரி மாதம் 10ம் தேதி பிரான்ஸஸ் ரிட்லே ஹாவர்கல் அம்மையார் (Frances Ridley Havergal), ஜெர்மனி நாட்டில் டஸ்ஸெல்டார்ப் (Düs­sel­dorf, Ger­ma­ny) நகரில் ஒரு ஜெர்மன் போதகருடன் தங்க நேரிட்டது. ஒருநாள் வெளியிலிருந்து மிகக் களைப்புடன் போதகரின் அறைக்குள் அம்மையார் நுழைந்து, அங்கிருந்த ஒரு ஆசனத்தில் அமர்ந்தார். அவருக்கு எதிராக சுவரில் ஒரு படம் மாட்டப்பட்டிருந்தது. இது புகழ்பெற்ற ஓவியச் சிற்பியான ஸ்டென்பர்க் என்பவரால் தீட்டப்பட்டது (Stern­berg’s paint­ing Ec­ce Ho­mo). படத்தில், சிலுவையில் தொங்கும் ஆண்டவரும், அதின் கீழ், ‘உனக்காக இதைச் செய்தேன். நீ எனக்காகச் செய்தது என்ன?’ (“This have I done for thee; what has thou done for Me?”) என்னும் எழுத்துகளும் காணப்பட்டன. ஹாவர்கல் அம்மையார் படத்தை சிறிது நேரம் உற்று நோக்கும்போது இரட்சகரின் கண்பார்வை அவர்மேல் தங்குவதுபோலக் காணப்பட்டது.  உடனே உணர்ச்சிவசப்பட்டு, ‘I gave my life for thee’ என் ஆரம்பிக்கும் ஐந்து கவிகளடங்கிய ஒரு பாடலை எழுதினார்கள்.  பின்னர் அதைப் படித்துப் பார்க்கும்போது, பாடல் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை.  உடனே அதைக் கசக்கி, குளிர் காய்வதற்காக எரிந்துகொண்டிருந்த அனல் அடுப்பினுள் எறிந்தார். ஆனால் அது அடுப்பினுள் விழாமல் வெளியில் விழுந்தது. இது ஆண்டவருடைய சித்தம் என எண்ணி, அதை எடுத்துப் பத்திரமாக வைத்தார்.  சிறிது நேரத்துக்குப்பின் அவ்வூரிலிருந்த ஒரு தர்மசாலையில் வியாதியாய்ப் படுத்திருந்த ஒரு வயோதிப அம்மாளைப் பார்க்கச் சென்றார்.  இப்பாடலை அவருக்குப் படித்துக்காட்டவே, அவர் அதை வெகுவாகப் பாராட்டினார்.

     சில தினங்களுக்குப்பின், ஹாவர்கல் அம்மையார் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பியபின், இப்பாடலைத் தன் தந்தையான கனோன் ஹாவர்கலிடம் காட்டவே, அவர் அதை மிகவும் புகழ்ந்து, அதற்கேற்ற ‘Baca’ (S.S.621) என்னும் ஓர் ராகத்தையும் அமைத்து, ‘Good Words’ என்னும் சுவிசேஷப் பத்திரிக்கையில் வெளியிட்டார்.  இப்போது இது பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டங்களில் பாடப்பட்டு வருகிறது.

     ஹாவர்கல் அம்மையார் இப்பாடலை ஆண்டவர் நம்மிடத்தில் சொல்லுவதாக, “I gave my life for thee” என ஆரம்பித்து எழுதினார்.  ஆனால் பல புத்தகங்களில், நாம் கிறிஸ்துவிடம் சொல்லுவதாக, ‘Thy life was given for me’ என ஆரம்பித்து எழுதப்பட்டிருக்கிறது.  அம்மையார் இதை ஆட்சேபிக்காவிடினும், ஆண்டவர் நம்மிடம் பேசுவதுபோல, தாம் முதலில் எழுதிய வார்த்தைகளையே விரும்பினார்.

     பிரான்ஸஸ் ரிட்லே ஹாவர்கல் அம்மையார் 1836ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி இங்கிலாந்தில் ஆஸ்ட்லே என்னும் ஊரில் ஒரு பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தார்.  அவரது தந்தை ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு குருவானவர்.  நான்கு வயதாயிருக்கும்போதே, அம்மையார் வேத புத்தகத்தை வாசிக்கப் பழகியிருந்தார்.  பின்னர், புதிய ஏற்பாடு முழுவதையும், பழைய ஏற்பாட்டின் சில பகுதிகளையும் மனப்பாடம் பண்ணியிருந்தார்.  இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் கல்வி பயின்று ஆங்கிலம் தவிர ஐந்து பிறமொழிகள் கற்றார்.  சங்கீதத்தில் அதிகத் திறமை பெற்று, இனிமையாகப் பாடவும், ராகங்கள் எழுதவும், சங்கீதக் கருவிகள் வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.  மேலும், ஓய்வுநாட்பள்ளியில் போதிப்பதிலும், வாசிக்கத் தெரியாத மக்களுக்கு வேதத்தை வாசித்துக் கொடுப்பதிலும், ஏழை மக்களின் தேவைகளைக் கவனிப்பதிலும் அதிகமாக ஈடுபட்டிருந்தார்.  ஹாவர்கல் அம்மையார் தன் குறுகிய வாழ்க்கையில் அநேக பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய இதர பாடல்களில் சில:

·         ’நாதா உம் வார்த்தை கூறவே’ – பாமாலை 201.
·         ‘எந்தன் ஜீவன் இயேசுவே’ – பாமாலை 302
·         ‘அருள்நாதா நம்பி வந்தேன்’ – பாமாலை 329
·         தெய்வ சமாதான இன்ப நதியே’ – பாமாலை 357

அவர், 1879ம் ஆண்டு, ஜூன் மாதம், 3ம் தேதி வேல்ஸ் நாட்டில் சுவான்ஸீ (Swansea, Wales) என்னுமிடத்தில் தமது 42ம் வயதில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    நீர் தந்தீர் எனக்காய்
உம் உயிர் ரத்தமும்
நான் மீட்கப்பட்டோனாய்
சாகாமல் வாழவும்
நீர் தந்தீர் எனக்காய்;
நான் யாது தந்திட்டேன்.

2.    பின்னிட்டீர் ஆண்டுகள்
வேதனை துக்கமும்;
நான் நித்திய நித்தியமாய்
பேரின்பம் பெறவும்
பின்னிட்டீர் எனக்காய்
நான் யாது பின்னிட்டேன்?

3.    பிதாவின் விண் வீடும்
ஆசனமும் விட்டீர்;
பார் இருள் காட்டிலும்
தனித்தே அலைந்தீர்
நீர் விட்டீர் எனக்காய்;
நான் யாதெது விட்டேன்?

4.    சொல்லொண்ணா வேதனை
அகோர கஸ்தியும்
சகித்தீர் எனக்காய்
நரகம் தப்பவும்
சகித்தீர் எனக்காய்;
நான் யாது சகித்தேன்?

5.    கொணர்ந்தீர் எனக்காய்
விண் வீட்டினின்று,
மீட்பு சமூலமாய்
மன்னிப்பு மா அன்பு
கொணர்ந்தீர் எனக்காய்;
நான் யாது கொணர்ந்தேன்.

Post Comment

Thursday, August 4, 2016

பாமாலை 297 - ஆ இயேசுவே நான் பூமியில்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    ஆ இயேசுவே, நான் பூமியில்
உயர்த்தப்பட்டிருக்கையில்
எல்லாரையும் என் பக்கமே
இழுத்துக்கொள்வேன் என்றீரே

2.    அவ்வாறென்னை இழுக்கையில்
என் ஆசை கெட்ட லோகத்தில்
செல்லாமல்; பாவத்தை விடும்
அநந்த நன்மைக்குட்படும்.

3.    தராதலத்தில் உம்முடன்
உபத்திரவப்படாதவன்
உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்
சகிப்பவன் சந்தோஷிப்பான்

4.    பிதாவின் வீட்டில் தேவரீர்
ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்
அங்கே வசிக்கும் தூயவர்
இக்கட்டும் நோவும் அற்றவர்.

Post Comment

Sunday, July 31, 2016

பாமாலை 244 - பார் முன்னணை (Mueller)

பாமாலை 244 – பார் முன்னணை ஒன்றில்
(Away in a Manger)

அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். லூக்கா 2 : 7


James R Murray
இந்தப் பாடல் அமெரிக்க தேசத்தில் உருவானதாகக் கூறப்படுகிறது.  பாடலை இயற்றியவர் யார் என்ற குறிப்புகள் எங்கும் இல்லை. பாடலை இயற்றியவர் மார்ட்டின் லூத்தர் கிங் என்று ஒரு சில புத்தகங்களில் குறிப்புகள் உள்ளபோதும், அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் பல ஆய்வுகள் இக்கூற்றை மறுக்கின்றன. இப்பாடல் முதன்முதலில் 1885ம் ஆண்டு, வட அமெரிக்காவில் உள்ள Evangelical Lutheran ஆலயத்தின் வெளியீடான Little Children’s Book for Schools and Families என்ற பாடல் புத்தகத்தில் முதல் இரண்டு கவிகளை மாத்திரம் கொண்டு வெளியிடப்பட்டது.  இவ்விரு கவிகளையும் இயற்றியவர் யாரென்ற குறிப்பு அப்புத்தகத்திலும் இல்லை.  இருப்பினும், இப்பாடலின் மூன்றாவது கவியை John Thomas McFarland என்பவர் எழுதியுள்ளதாக பல்வேறு பாடல்புத்தகங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.  இப்பாடல் இரு வேறு ராகங்களில் பாடப்படுகின்றன.  இப்பதிவில் உள்ள ராகத்தை (Tune : Mueller) James R Murray (1841-1905) என்பவர் மெட்டமைத்தார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
காண மின்னிட்டதே வான்வெள்ளிகள் தாம்.

2.            மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
ஆயின் பாலன் இயேசு அழவே மாட்டார்;
நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,
தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.

3.            என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;
உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே
சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.

Away in a Manger (Tune : Mueller)

Post Comment

Sunday, July 24, 2016

பாமாலை 358 - மெய்ச் சமாதானமா (Pax Tecum)

பாமாலை 358 – மெய்ச் சமாதானமா துர் உலகில்?
(Peace perfect Peace)

‘நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்’. ஏசாயா 26:3

பெத்லகேமில் இயேசு பிறந்தபோது பரமசேனையின் திரள் தோன்றி, ‘பூமியிலே சமாதானம் உண்டாவதாக’ எனப்பாடினர்.  நமதாண்டவர் உயிரோடெழுந்தபின் சீஷருக்குத் தோன்றி ‘உங்களுக்கு சமாதானம்’ என்றார். வேதபுத்தகத்தில் எத்தனையோ இடங்களில், ‘சமாதானம்’ என்னும் பதம் சொல்லப்பட்டிருக்கிறது.  மலைப்பிரசங்கத்தில் ஆண்டவர், ‘சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்’ என்று கூறினார். உலகம் உண்டானது முதல் மனிதன் சமாதானத்தைத் தேடிக்கொண்டேயிருக்கிறான்.  யுத்தங்களின் முடிவில் சமாதான உடன்படிக்கைகள் செய்யப்படுகின்றன.  முதல் உலகமகா யுத்தம் முடிந்தவுடன் ஒரு சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது.  ஆனால் இந்த உடன்படிக்கையே இரண்டாம் உலகமகா யுத்தத்துக்குக் காரணமாயிருந்தது.  ஆகவே, உண்மையான சமாதானம் இதுவரை உலகத்தில் காணப்படவேயில்லை. ‘மெய்சமாதானமா துர் உலகில்’? என்னும் பாடலில், இயேசுவின் மூலமாகவே நாம் மெய்சமாதானம் அடைய முடியும் எனக்காண்கிறோம்.

Edward Henry Bickersteth, Jr.
(Pic Thanks : Cyberhymnal)
1875ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஹாம்ஸ்டெட் நகரிலுள்ள கிறிஸ்து ஆலயத்தின் போதகரான பிக்கர்ஸ்டெத் (Edward Henry Bickersteth, Jr.) என்பவர், ஹாரோகேட் (Harrogate, England) நகரில் தம் குடும்பத்தோடு ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருந்தார்.  ஓய்வுநாளில் ஆலய ஆராதனைக்குச் சென்றார். அவ்வாராதனையில் கிப்பன் என்னும் பிரதமகுரு (Canon Gibbon) ‘நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்’ ஏசா : 26:3 என்னும் வசனத்தில் பிரசங்கம் செய்தார். அதில், மூலமொழியான எபிரேய மொழியில் ‘சமாதானம் சமாதானம்’ என இருமுறை எழுதப்பட்டிருப்பதும், ஆங்கிலத்தில் ‘பூரணசமாதானம்’ என்னும் பொருள் கொண்ட ‘Perfect Peace’ என மொழிபெயர்க்கப்பட்டிருப்பதையும் விளக்கினார்.  இதை சிந்தித்துக்கொண்டே போதகர் வீடு வந்து சேர்ந்தார். அன்று மாலையில், மரணப்படுக்கையிலிருந்த தன் இனத்தவரான ஹில் போதகரைப் பார்க்கச் சென்றார். நோயாளி மனசமாதானமின்றி கலக்கமடைந்தவராக காணப்பட்டதால் அருகிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து, ‘மெய்சமாதானம் உலகில்” என்னும் பாடலை உடனே எழுதி, நோயாளிக்குப் படித்துக் காண்பிக்கவே, அவர் மிகுந்த ஆறுதல் பெற்றார். பின்பு வீட்டுக்குச் சென்று, மாலை உணவுக்கு அமர்ந்தார்.  ஓய்வுநாள் மாலை உணவின்போதும் அவர் வீட்டிலுள்ள ஒவ்வொருவரையும் ஒரு பாடல் மனப்பாடமாக ஒப்பிக்கச் செய்து, தானும் ஒரு பாடலை ஒப்பிப்பது வழக்கம். அன்று அவர், தான் புதிதாக எழுதிய ‘மெய்சமாதானமா துர் உலகில்?’ என்னும் பாடலையும் படித்துக்காட்டினார். சில தினங்களுக்குப்பின் அவரது சகோதரி, இப்பாடலில் சரீர வேதனையை குறித்த வரிகள் இல்லையே என சுட்டிக்காட்டினார். உடனே போதகர் அங்கு கிடந்த ஒரு காகிதக்கூட்டின் பின்புறம் அதைக்குறித்த ஒரு கவியை எழுதிக்காட்டினார். அது அப்பாடலுக்கு எட்டாவது கவியாகும்.  ஆனால் ஏதோ காரணத்தால் இப்பாடலில் அது சேர்க்கப்படவில்லை.  இப்பாடலின் ஒவ்வொரு கவியிலும் முதல் வரி ஒரு கேள்வியாகவும், இரண்டாம் வரி அதின் பதிலாகவும் அமைந்திருப்பதால் அதின் ராகமும் அதற்கேற்றதாகவே அமைந்திருக்க வேண்டுமெனப் போதகர் விரும்பினார். ஆனால் அத்தகைய ராகம் அமைக்கப்படவில்லை.

இப்பாடலை எழுதிய எட்வர்ட் ஹென்றி பிக்கர்ஸ்டெத் 1825ம் ஆண்டு, ஜனவரி மாதம் 25ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தார். அவரது முன்னோர்கள் பல்வேறு துறைகளில் புகழ் பெற்றவர்கள். அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திரித்துவக்கல்லூரியில் பயின்று, பி.ஏ., எம்.ஏ., பட்டங்களைப் பெற்றார். 1848ம் ஆண்உ குருத்துவ அபிஷேகம் பெற்று, பானிங்ஹம், நார்டோக், டன்ப்ரிட்ஜ்வெல்ஸ் முதலிய இடங்களில் உதவிக்குருவாக ஊழியம் செய்தார்.  பின்னர், ஹின்டன் மார்ட்டல், ஹாம்ஸ்டெட், கிளஸ்டர் என்னுமிடங்களில் தலைமைக்குருவாகப் (Vicar) பணியாற்றினார்.  1885 முதல் 1900 வரை எக்ஸிட்டர் மாகாணத்தின் அத்தியட்சராக ஊழியம் செய்து ஓய்வு பெற்றார்.  அவரது குருத்துவ வாழ்க்கையில் அவர், பிரசங்கங்கள், பாடல்கள், கிறிஸ்தவ செய்யுள்கள் அடங்கிய பன்னிரண்டு நூல்கள் எழுதியுள்ளார்.

அவர் 1906ம் ஆண்டு, மே மாதம், 16ம் தேதி தமது 81ம் வயதில் லண்டன் மாநகரில் காலமானார்.

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




1.            மெய்ச் சமாதானமா துர் உலகில்?
ஆம், இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில்

2.    மெய்ச் சமாதானமா பல் தொல்லையில்?
ஆம், இயேசு சித்தத்தை நாம் செய்கையில்.

3.    மெய்ச் சமாதானமா சூழ் துக்கத்தில்?
ஆம், இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில்.

4.    மெய்ச் சமாதானமா உற்றார் நீங்கில்?
ஆம், இயேசு கரம் நம்மைக் காக்கையில்.

5.    மெய்ச் சமாதானமா சிற்றறிவில்?
ஆம், இயேசு ராஜன் என்று அறிகில்.

6.    மெய்ச் சமாதானமா சா நிழலில்?
ஆம், இயேசு சாவை வென்றிருக்கையில்.

7.    பூலோக துன்பம் ஒழிந்த பின்னர்.
இயேசு மெய்ச் சமாதானம் அருள்வர்.

Post Comment

Wednesday, July 6, 2016

பாமாலை 359 - அன்பே விடாமல் சேர்த்து

பாமாலை 359 – அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
(O Love that will not let me go)

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும்,  அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்’. யோபு 13 : 15

பக்தன் யோபுவின் சரித்திரம் நமக்குப் புதிதானதல்ல. அவன் தன் வாழ்க்கையில் எத்தனையோ விதமான இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது. சாத்தான் அவனைப் பலவிதமான சோதனைகளுக்குட்படுத்தி, அவனுடைய விசுவாசத்தைப் பரீட்சை பார்த்தான்.  யோபுவின் வாழ்க்கையில் அவனுக்கு சந்தோஷத்தை உண்டாக்கின எல்லாவற்றையும் அவன் இழக்க நேரிட்டது.  அவனுடைய மனைவியும் சிநேகிதரும் அவனை கடவுளுடைய பாதையிலிருந்து விலகத்தூண்டினர்.  ஆயினும் யோபு மறுமொழியாகச் சொன்னது, ‘அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்’.  நமது வாழ்விலும், சந்தோஷம் காலங்களிலும் கடவுளிடம் அன்பும், நம்பிக்கையும் கொள்வது சிரமமல்ல.  ஆனால் இன்னல்களும் இடுக்கண்களும் நம்மை நெருக்கும்போது, ஆண்டவரின் அன்பை மறந்துவிடாமல், அவரும் நம்மோடு அனுதாபப்படுகிறார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்வோமாக.

George Matheson
Pic Thanks : Wiki
இப்பாடலை எழுதிய ஜார்ஜ் மாத்தீசன் (George Matheson) என்பவர் குருடனாயிருந்து, பல மன வேதனைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது இதை எழுதினார்.  அவர் ஒரு பெண்ணைக் காதலித்து, மணநாள் நெருங்கும்போது அவர் கண்பார்வையை இழந்ததால் அப்பெண் அவரை மணந்துகொள்ள மறுத்துவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட மனவேதனையால் அவர் இப்பாடலை எழுதினாரென்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இப்பாடலின் முதல் கவியும், மூன்றாவது கவியும் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால் சிலகாலத்திற்கு முன் அவரது தங்கையான குமாரி மாத்தீசனைக் கேட்டபோது, அவர் இளவயதிலேயே மங்கின பார்வையுடையவராயிருந்து, சுமார் பதினெட்டு வயதில் கண்பார்வை இழந்ததாகவும், அவர் நாற்பது வயதாயிருக்கையில்தான் இப்பாடல் எழுதப்பட்டது என்றும் கூறியுள்ளார்.  ஆதலால் மேற்கூறிய கதை வெறும் கட்டுக்கதை என்பது திண்ணம்.  எனினும் தனக்கு அருமையான ஒருவரது மரணத்தாலும், மற்றும் சில காரணங்களாலும், அதிகமான வேதனையடைந்து, அதை ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கையில், திடீரென இப்பாடல் அவர் மனதில் உருவானதாகவும், சில நிமிடங்களில் இதை எழுதி முடித்ததாகவும் அவரே கூறியுள்ளார்.

ஜியார்ஜ் மாத்தீசன் 1842ம் ஆண்டு, மார்ச் மாதம் 27ம் தேதி, ஸ்காட்லாண்டு நாட்டில், கிளாஸ்கோ (Glasgow, Scotland) நகரில் தனவந்தரான ஒரு வியாபாரியின் மகனாகப் பிறந்தார்.குழந்தைப் பருவத்திலிருந்தே மங்கின பார்வையுடையவராயிருப்பினும், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் (University of Glasgow) பயின்று, 1862ம் ஆண்டில், ‘எம்.ஏ’ பட்டம் பெற்றார். 1866ல் கிளாஸ்கோ நகரில் சாண்டிபோர்ட் ஆலயத்தில் உதவிகுருவாகத் தம் ஊழியத்தை ஆரம்பித்தார்.  இரு ஆண்டுகளுக்குப்பின், இன்னிலான் என்னும் ஊரில் ஒரு தனிச்சபைக் குருவாக நியமிக்கப்பட்டார். அவரது பிரசங்கத்திறமை பரவவே, 1886ல் எடின்பரோ நகரில் சுமார் இரண்டாயிரம் அங்கத்தினர் கொண்ட தூய பர்னார்டு ஆலயத்தின் (St. Bernard's Parish Church) குருவாக நியமனம் பெற்று, பதிமூன்று ஆண்டுகள் அங்கு ஊழியம் செய்தார். கண்பார்வை இல்லாததால் அவர் செய்ய ஆசித்த வேத ஆராய்ச்சிகளைச் செய்ய முடியவில்லை.  ஆயினும், வேதசாஸ்திர சம்பந்தமாக அவர் பதினேழு சிறந்த புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரது வேத சாஸ்திரத்திறமைக்காக பண்டிதர் (Doctor of Divinity) பட்டமும், வேறு பல பட்டங்களும் பெற்றார்.

Albert Lister Peace
‘அன்பே விடாமல் சேர்த்துக்கொண்டீர்’ என்ற பாடல் 1882ல் மேற்கூறிய சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டது.  இப்போது இது பல பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, சங்கீதப் பண்டிதர் டாக்டர். ஆல்பர்ட் பீஸ் (Albert Lister Peace) என்பவரால் எழுதப்பட்ட ‘St. Margaret’ என்னும் அழகிய இராகத்தில் பாடப்பட்டு வருகிறது.

அவர் 1906ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், 28ம் தேதி, தமது 64ம் வயதில், ஸ்காட்லாண்ட் நாட்டில் போர்த் நகரில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்,
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவாறாய்ப் பெருகும்.

2.            ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;
வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;
நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே;
பேர் ஒளிக் கதிரால் உள்ளம்
மேன்மேலும் ஸ்வாலிக்கும்.

3.            பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!
என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;
கார் மேகத்திலும் வான ஜோதி!
‘விடியுங்காலை களிப்பாம்!’
உம் வாக்கு மெய் மெய்யே.

4.            குருசே! என் வீரம் திடன் நீயே;
உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;
வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்;
விண் மேனியாய் நித்திய ஜீவன்
வளர்ந்து செழிக்கும்.

O Love that wilt not let me go

Post Comment