Wednesday, January 9, 2013

பாமாலை 14-அநாதியான கர்த்தரே

பாமாலை 14 – அநாதியான கர்த்தரே
Tune: Church Triumphant

J.W. Elliott
இப்பாடலுக்கான இசையை இயற்றியுள்ளவர் J.W. Elliott.  எலியட் 1833ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். சிறுவயதிலேயே ஆலய பாடகர் குழுவில் இணைந்து பாடல்கள் பாடத்துவங்கிய எலியட், ஆர்கன் இசைக்கவும் பயிற்சி எடுத்துக்கொண்டு அதிலும் தேர்ச்சி பெற்ரார்.  1870களில் எலியட் இசையமைத்த சிறுவர்களுக்கான Nursery Rhymes மிகப் பிரபலமாக விளங்கியது. சிறுவர் பாடல்களுடன் எலியட், அநேகம் Operetta, Anthem, Service Music, வாத்தியங்களுக்கான Instrumental work போன்றவற்றையும் இயற்றினார்.  பாடல்கள் இயற்றும் பணியுடன், பாடல்களைத் தொகுப்பதிலும் தம்மை ஈடுபடுத்திகொண்ட எலியட், 1915ம் ஆண்டு மறுமைக்குட்பட்டார்.  எலியட் இயற்றிய ‘Church Triumphant’ எனும் இந்த ராகத்தில் நம்முடைய பாமாலைப் புத்தகத்தின் 14ம் பாடலான ’அநாதியான கர்த்தரே’ எனும் பாடல் பாடப்படுகிறது.

குறிப்பாக இதன் நான்காம் பல்லவியில் ‘நீரோ உயர்ந்த வானத்தில்” எனும் வரியில் ஆண்டவரின் புயத்தையும், வல்லமையையும், மகத்துவத்தையும் குறிக்கும் வண்ணம் உச்சத்தில் இருக்கும் ராகம், அதன் அடுத்த வரியான ‘நாங்களோ தாழ்ந்த பூமியில்’ எனும் வரியில், பணிவையும், பக்தியையும், தாழ்மையையும், அர்ப்பணிப்பையும் உணர்த்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதை, இந்தப் பல்லவியைப் பாடும் ஒவ்வொரு முறையும் நான் உணர்ந்ததுண்டு.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano










































1.    அநாதியான கர்த்தரே,
தெய்வீக ஆசனத்திலே
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்.

2.    பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாகப் பணிவார்
‘நீர் தூய தூயர்’ என்னுவார்.

3.    அப்படியானால், தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம்?
எவ்விதமாய் ஆராதிப்போம்?

4.    நீரோ உயர்ந்த வானத்தில்,
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால், வணங்குவோம்,
மா பயத்தோடு சேருவோம்.

Post Comment

2 comments:

  1. Please would you let me know the English version of this hymn? Thanks

    ReplyDelete
    Replies
    1. The exact English version of this particular hymn is not available.

      Delete