பாமாலை 49 – களிகூரு
சீயோனே
(Tochter Zion
freue dich)
17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கிலாந்தில் பிரபல இசையமைப்பாளர் ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஹான்டல் (George Frideric Handel) என்பவர் வசித்துவந்தார். இவர் பிறப்பால் ஒரு ஜெர்மானியராக இருந்தாலும் தன் வாழ்வின் பெரும்பகுதியை இங்கிலாந்திலேயே கழித்தார். மேற்கத்திய செவ்வியல் இசை வடிவங்களான Operas, Oratorios, Anthems, and Organ Concertos போன்ற பல்வேறு நுட்பமான வடிவங்களுக்கு இசையமைப்பதில் புகழ்பெற்று விளங்கிய இவர், Oratariums Josua என்ற இசைவடிவத்திற்கென ஒரு இசையை எழுதினார். இந்த இசையில் இருந்த 'Chor der Jünglinge' என்ற மூன்றாவது Movementற்கு (Western Classical இசையில் Symphony, Operas, Oratorios போன்ற வடிவங்களில் எழுதப்படும் இசைவடிவங்களில் சுருதி/தாள/வாத்திய மாற்றங்கள் Movement என்று அழைக்கப்படுகிறது) Friedrich Heinrich Ranke மற்றும் Johann Joachim Eschenburg ஆகிய கவிஞர்கள் ஜெர்மன் மொழியில் கிறிஸ்துவின் வருகைக்கென வரிகளை எழுதி, அதை வருகையின் காலங்களில் பாடப்படும் ”Tochter Zion freue dich” என்ற பாடலாக (Advent Carol) மாற்றினர் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இப்பாடல் வருகையின் காலங்களில் உலகெங்கும் பரவலாகப் பாடப்படும் பாடலாக விளங்குகிறது. ஆங்கிலத்தில் இப்பாடல் “See the Conquering Hero” என்ற வரிகளுடன் பாடப்படுகிறது. இந்த ராகத்தில் அமைந்த ஆங்கிலப்பாடலான “Thine Be the Glory” கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகையைக் குறிக்கும்வண்ணமாக ஒரு ”Easter Hymn”ஆகப் பாடப்படுகிறது.
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. களிகூரு சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!
சமாதான கர்த்தராம்
உன் ராஜா வருகிறார்.
களிகூரு சீயோனே,
ஓ மகிழ், எருசலேம்!
2. ஓசியன்னா! தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே!
உம்முடைய நித்திய
ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;
ஓசியன்னா! தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே!
3. ஓசியன்னா, ராஜாவே!
வாழ்க, தெய்வ மைந்தனே!
சாந்தமுள்ள உமது
செங்கோல் என்றும் ஆளவும்!
ஓசியன்னா, ராஜாவே
வாழ்க, தெய்வ மைந்தனே!
Meaningful song
ReplyDelete