Friday, August 1, 2014

பாமாலை 171 - சபை எக்காலும் நிற்குமே

பாமாலை 171 - சபை எக்காலும் நிற்குமே
Built on the Rock the Church doth stand

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    சபை எக்காலும் நிற்குமே
கன்மலை கிறிஸ்து மேல் நின்றும்,
ஆலயம் வீழ்ந்து போயுமே
அர்ச்சனை நிலைக்கும் என்றும்
இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே
துன்புற்ற மாந்தர் ஏங்கியே
அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே.

2.    கைவேலையான கோவிலில்
தங்கிடார் உன்னத ராஜர்
சபையாம் ஆலயத்தினில்
தங்குவார் உன்னத நாதர்;
வானமும் கொள்ள ஸ்வாமியே
பூமியில் வாழ்ந்தார் நம்மோடே
மானிடர் உள்ளமே வீடாம்.

3.    சபையே ஸ்வாமி ஆலயம்
ஜீவனுள் கற்களாம் நாமும்;
மெய் ஞானஸ்நான பாக்கியம்
பெற்றோமே ரட்சிப்பாம் ஈவும்
மா சொற்பப் பேரும் பாதத்தில்
பணிந்து வேண்டல் செய்கையில்
அருளும் தயவும் ஈவார்.

4.    தாழ்வான ஸ்தானம் யாதிலும்
ராஜாதி ராஜரைக் காண்போம்
அவர் மா மேலாம் ஈவையும்
ஏற்றியே போற்றியே தாழ்வோம்;
அருள்வார் வாக்கு தயவாம்
அதே நம் ஜீவன் ஆவியும்;
அவர் மா சத்தியம் கேட்போம்.

5.    பார் எங்குமே எம்மாந்தரும்
ஆலயம் பக்தியாய் நாட;
உம்மில் விஸ்வாசம் ஊன்றியும்
உம் திரு வார்த்தையைக் கேட்க
உம் அடியார் உம் சீஷரே;
நீரே எம் நாதர் யாவுமே
அருள்வீர் உந்தனின் சாந்தி.

Post Comment

No comments:

Post a Comment