Sunday, August 3, 2014

பாமாலை 396 - உயிர்த்தெழும் காலை (Mansfield)

பாமாலை 396 - உயிர்த்தெழும் காலை 
On the Resurrection morning
Tune : Mansfield

SATB 

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








1.       உயிர்த்தெழும் காலை தன்னில்
ஆவி தேகம் கூடவும்
துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்
நோவும் போம்

2.         ஆவி தேகம் சிறு போது
நீங்க, தேகம் ஓய்வுறும்
தூய அமைதியில் தங்கி
துயிலும்

3.         பாதம் உதயத்தை நோக்கி
சோர்ந்த தேகம் துயிலும்
உயிர்த்தெழும் மாட்சி நாளின்
வரைக்கும்

4.         ஆவியோ தியானம் மூழ்கி
ஆவலாய் செய் விண்ணப்பம்
கீதமாய் உயிர்க்கும் நாளில்
பாடிடும்

5.         சேர்ந்த ஆவி தேகமதை
அப்பால் பிரியாதென்றும்
கிறிஸ்து சாயல் தன்னில் கண்டு
பூரிக்கும்

6.         உயிர்த்தெழும் நாளின் மாட்சி
யாரால் சொல்லிமுடியும்?
நித்ய காலம் மா சந்தோஷம்
நிலைக்கும்

7.         ஆ அப்பாக்ய மாட்சி நாளில்
மாண்டோர் உயிர்த்தெழுவார்
பெற்றோர் பிள்ளை சுற்றத்தாரும்
கூடுவார்

8.         நின் சிலுவை பற்றும் எம்மை
சாவில் நியாயத் தீர்ப்பிலும்
காத்து மா அக்கூட்டம் சேரும்
இயேசுவே

Post Comment

No comments:

Post a Comment