பாமாலை 69 – மகிழ்ச்சி
பண்டிகை கண்டோம்
The happy Christmas comes once more
நிக்கோலாய் க்ரண்ட்விக் (Nikolai
Frederik Severin Grundtvig) என்பவரால் 1817’ல் Danish மொழியில் (Det kimer nu til julefest)
எழுதப்பட்டது இப்பாடல். க்ரண்ட்விக் 1783ம்
ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி, டென்மார்க் தேசத்தில் இருக்கும் உட்பி (Udby) என்ற இடத்தில்
பிறந்தார். க்ரண்ட்விக் தன்னுடைய இறையியல் பட்டப்படிப்பை கோபன்ஹாகன் (Copenwagen) பல்கலைக்கழகத்தில் முடித்தார். இருப்பினும்
இவரது குருத்துவ பணி அத்தனை சிறப்பாக அமையவில்லை.
1811ம் ஆண்டு ஆயர் பணிக்கென இவர் அபிஷேகம் செய்யப்பட்டபோதிலும், சர்ச்சைக்குரிய
இவரது இருவேறு பிரசங்கங்களால் இவர் ஆயர் பணியைத் துறக்க நேரிட்டது. இருந்தபோதிலும் இவரது பாடல்கள் எழுதும் வேட்கை சற்றும்
தணியவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை
எழுதினார். ‘மகிழ்ச்சி பண்டிகை கண்டோம்’ எனும் இப்பாடல் Danish மொழியில் “Nyeste Skilderie af Kjøbenhagen” எனும் பத்திரிக்கையில் 1817ம் ஆண்டு முதன்முதலில்
வெளியானது. சார்ல்ஸ் க்ராவ்த் (Charles
Porterfield Krauth) என்பவர்
இப்பாடலை 1867ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். டென்மார்க்கைச் சேர்ந்த Carl
Christian Nikolaj Balle என்ற போதகர் இப்பாடல் வரிகளுக்கான இசையை அமைத்தார் (இந்தப்பதிவில் உள்ள ராகம் அல்ல). சற்றேறக்குறைய
150 ஆண்டு பழமையான இந்த இனிமையான பாமாலை, கிறிஸ்மஸ் காலங்களில் தமிழ்திருச்சபைகளில்
மிக அரிதாகவே பாடப்படுகிறது. க்ரண்ட்விக் 1872ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ம் தேதி
காலமானார்.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. மகிழ்ச்சி பண்டிகை கண்டோம்,
அகத்தில் பாலனைப் பெற்றோம்;
விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர்,
விண் எட்டும் மகிழ் பெற்றனர்.
2. மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார்,
ஆ! வான மாட்சி துறந்தார்;
சிரசில் கிரீடம் காணோமே,
அரசின் செல்வம் யாதுமே.
3. பார் மாந்தர் தங்கம் மாட்சியும்
ஆ! மைந்தா இல்லை உம்மிலும்;
விண்ணோரின் வாழ்த்துப்பெற்ற
நீர்
புல்லணை கந்தை போர்த்தினீர்.
4. ஆ! இயேசு பாலன் கொட்டிலின்
மா தேசு விண் மண் தேக்கவே,
நள்ளிருள் நடுப் பகலாம்,
வள்ளல்முன் சூரியன் தோற்குமாம்.
5. ஆ! ஆதி பக்தர் தேட்டமே!
ஆ! ஜோதி வாழ்வின் விடிவே!
ஆ! ஈசன் திரு வார்த்தை நீர்!
தாவீதின் மைந்தன் கர்த்தன்
நீர்.
6. பண்டிகை இன்றே வருவீர்,
திண்ணமாய் நெஞ்சில் தங்குவீர்;
ஓய்ந்த எம் கானம் மீண்டிடும்,
ஓய்வின்றி பூரித்தார்த்திடும்.
No comments:
Post a Comment