Praise the Lord O my soul..!
I’ve come across many Tamil choristers who, although eager to sing “four part harmony”, find it difficult to master the art, because of their inability to read music notations. This blog is my humble attempt to help such friends in Christ, to continue to sing four part harmony, even without being able to read notations. So here it is made easy for you… listen to the parts.. Practice.. and Sing unto the Lord.
இப்பாடல் முதலில் லத்தீன்
மொழியில் எழுதப்பட்டது. எழுதியவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. 1851ல் ஜான் மேசன் நீல் (John Mason Neale) என்பவரால் ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் தமிழ் உட்பட ஏராளமான பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு,
உலகமெங்கும் குருத்தோலை ஞாயிறன்று பாடப்பட்டு வருகிறது.நம் தமிழ் திருச்சபைகளில் ’இஸ்திரீயின் வித்தவர்க்கு’
(பாமாலை 91), ஓசன்னா பாலர் பாடும்’ (பாமாலை 92), ‘தயாள இயேசு தேவரீர்” (பாமாலை
94), ஆகிய மூன்று பாமாலைகளும் குருத்தோலை ஞாயிறன்று பரவலாகப் பாடப்படும் நிலையில்,
‘சிலுவைக்கொடி முன்செல்ல’ எனும் இப்பாடல், மிக அரிதாகவே பாடப்படுகிறது.பாமாலை 93க்கென அநேக ராகங்கள் எழுதப்பட்டுள்ளன.அவற்றுள் ஜான் ஹேம்ப்ட்டன் (John Hampton) எழுதிய
‘St. Cecilia’ எனும் ராகம் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
”விடியற்காலத்து வெள்ளியே
தோன்றி” எனும் இப்பாடலை எழுதியவர் ரெஜினால்ட் ஹீபர் (Reginald Heber) என்னும் போதகராவார். ஹீபர் இப்பாடலை 1811ம் ஆண்டு Feast of Epiphany’க்காக எழுதினார். Christian Observer எனும்
பத்திரிக்கையில் இப்பாடல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. எனினும், ஹீபரின் இறப்புக்குப்
பின்னரே இப்பாடல் மற்ற பாடல் புத்தகங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
Reginald Heber (1783-1826)
இப்பாடலை எழுதிய ரெஜினால்டு
ஹீபர் 1783ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 21ம் தேதி இங்கிலாந்தில் செஷயர் மாகாணத்தில், மால்பாஸ்
(Malpas, Cheshire)என்னுமிடத்தில் பிறந்தார். அவரது ஏழாம் வயதுவரை அவரது தந்தையால் கல்வி கற்பிக்கப்பட்டு,
பதினேழு வயதுவரை அவரது ஊரிலேயே கிராமப்பள்ளியில் கல்வி கற்றார். பின்பு ஆக்ஸ்வர்டு பல்கலைக்கழகத்தில் பிரேஸ்னாஸ்
கல்லூரியில் (Brasenose
College)பட்டப்படிப்பு பெற்றார். இங்கு கல்வி கற்கையில், கவிகள் எழுதுவதிலும், கட்டுரைகள்
எழுதுவதிலும் சிறந்த திறமை காட்டியதால் அநேக பரிசுகள் பெற்றார். கல்லூரியை விட்டபின்னர், 1806, 1807ம் ஆண்டுகளில்
ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்தார். தாய்நாடு
திரும்பியதும் 1807ல் குருப்பட்டம்பெற்று, பதினாறு ஆண்டுகள் ஹாட்நெட் நகரில் திருப்பணியாற்றினார். இக்காலத்தில் அவர் அநேக பாடல்கள் எழுதினார். ‘தூய, தூய, தூயா’ என்ற பாடல் முன்கூறப்பட்ட சந்தர்ப்பத்தில்
1819ம் ஆண்டு எழுதப்பட்டது.
அவர் போதகராகப் பணியாற்றும்போது,
கிறிஸ்துவையறியாத அயல்நாடுகளைப்பற்றி அதிகமாகச் சிந்திப்பதுண்டு. இந்தியா தேசப்படத்தைக் கையில் வைத்து, சுவிசேஷத்தைப்
போதிப்பதற்காக இந்தியாவின் பல இடங்களுக்கும் சுற்றுப்பிரயாணம் செய்வதாகக் கனவு கண்டார். கடைசியாக 1823ம் ஆண்டு இந்தியாவில் கல்கத்தா அத்தியட்சராக
(Bishop of Calcutta) நியமனம்பெற்று, அவ்வாண்டு அக்டோபர் மாதம், 11ம் தேதி கல்கத்தாவில்
வந்திறங்கித் தமது பணியை ஆரம்பித்தார். அவர்
ஊழியத்தில் அதிகமாகப் பிரயாணம் செய்யவேண்டியிருந்தது. வடஇந்தியா முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்து, இலங்கைக்கும்
சென்று, 1825ல் கல்கத்தா திரும்பினார். மறு
ஆண்டு அவர் சென்னை மாகாணத்தில் பிரயாணம் செய்து, சென்னை, கடலூர், தஞ்சாவூர் சென்று,
கடைசியாகத் திருச்சிராப்பள்ளியை அடைந்தார்.
இங்கு பல சபைகளில் திடப்படுத்தல் ஆராதனைகள் நடத்தி, 1826ம் ஆண்டு ஏப்ரல் மாதம்
3ம் தேதி திருச்சிக்கோட்டையிலுள்ள ஆலயத்தில் திடப்படுத்தல் ஆராதனை முடித்து, பின்பு
குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும்போது, அதிகக் களைப்பினால் திடீரென மயக்கம் உண்டானதால்
தண்ணீர்த்தொட்டியில் விழுந்து காலமானார். அவர்
கடைசியாக நின்று பிரசங்கம் செய்த மேடையை, திருச்சி கோட்டை ஆலயத்திலுள்ள குருமனையில்
இன்றும் காணலாம். அவரது ஞாபகார்த்தமாக திருச்சியில்
ஒரு முதல்தரக் கல்லூரியும் (Bishop
Heber College), இரு உயர்நிலைப்
பள்ளிகளும் (Bishop
Heber School, Teppakulam Trichy & Bishop Heber School, Puthur Trichy), சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் ஒரு மாணவர்
இல்லமும் (Bishop
Heber Hall, Madras Christian College, Chennai) செயல்பட்டு வருகின்றன.
ஹீபர் அத்தியட்சர், அநேக பாடல்கள்
எழுதியுள்ளார். அவற்றில் பிரபலமான இதர பாடல்கள்:
‘பூர்வ பிரமாணத்தை’ என்னும்
இப்பாமாலை 1700களில் லத்தீன் மொழியில் இயற்றப்பட்டு 1736ம் ஆண்டு செபாஸ்டியன் பெஸ்நால்
(Sebastien Besnault) என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 1551ம் ஆண்டு Louis
Bourgeois என்பவர் இயற்றிய St. Michael எனும் ராகத்தில் இப்பாடல் பாடப்பட்டு வருகிறது.
William Crotch என்பவர் 1836ம் ஆண்டு தனது Psalm Tunes’ல் இந்த இசையை ’பூர்வ பிரமாணத்தை’
பாடலுக்கு அறிமுகம்செய்தார்.
இப்பாடலை எழுதிய
எலிஸபெத் க்லெஃபேன் (Elizabeth Cecilia Douglas Clephane) 1830ம் ஆண்டு ஸ்காட்லாந்தில்
பிறந்தார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சரீர
சுகவீனங்களோட கழித்த எலிஸபெத், தன் இயலாமையிலும் தான் வசித்த நகரத்தில் இருந்த ஏழைகளுக்கும்
வியாதியஸ்தர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
“Beneath the Cross
of Jesus” எனும் இப்பாடல்
1872ல் எலிஸபெத் மறைந்த மூன்றாண்டுகளுக்குப்பின்னரே அச்சிட்டு வெளியிடப்பட்டது. சிலுவை நிழல் தரும் ஆன்மீக அமைதியைக் குறித்தும்,
இளைப்பாறுதல் குறித்தும் எலிஸபெத், கேட்போர் வேதனைகளை நீக்கி, ஆறுதல் அளிக்கும் வகையில்
மிகவும் உணர்ச்சிபூர்வமாக இப்பாடலை எழுதியுள்ளார்.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. சிலுவை நிழலே
எனக்கென்றும் ஆனந்தம்
என் துன்பத்தில் மா மேருவின்
நிழல் நான் காண்கிறேன்
தனிமையில் மறைவிடம்,
வழியிலோர் நிழல்
கஷ்டங்கள் உறுத்தும்போதென்
சங்கேதம் அதுவே
2. என் இயேசுவின் சிலுவை
நான் நோக்கிப் பார்க்கையில்
எனக்காய் உயிர்விட்டதோர்
உருவைக் காண்கிறேன்
இழிஞன் எனை மீட்டிட
அவர் விலையானார்
அதுவே மகா அதிசயம்
என்றுணர்ந்தேன் உள்ளத்தில்
3. சிலுவை நிழலே என்
தஞ்சம் இப்பாரினில்
என் மீட்பர் முகம் மாத்திரம்
போதும் இப்பாவிக்கு
பூலோக நன்மைகள் ஒன்றும்
வேண்டாம் என் தேவனே
என் செய்கை யாவும் வெட்கமே,
என் மேன்மை சிலுவையே.
1
Beneath the cross of
Jesus
I fain would
take my stand,
The shadow of a mighty Rock
Within a weary land;
A home within the wilderness,
A rest upon the way,
From the burning of the noontide heat,
And the burden of the day.
2
Oh, safe and happy
shelter!
Oh, refuge tried and sweet!
Oh, trysting place where heaven’s love
And heaven’s justice meet.
As to the holy patriarch
That wondrous dream was given,
So is my Savior by the cross
A ladder up to heaven.
3
There lies beneath
its shadow,
But on the farther side,
The darkness of an awful grave
That gapes both deep and wide;
And there between us stands the cross,
Two arms outstretched to save,
Like a watchman set to guard the way
From that eternal grave.
4
Upon that cross of
Jesus
Mine eye at times can see
The very dying form of One,
Who suffered there for me;
And from my smitten heart, with tears,
Two wonders I confess,
The wonders of His glorious love,
And my own worthlessness.
5
I take, O cross, thy
shadow
For my abiding place;
I ask no other sunshine than
The sunshine of His face;
Content to let the world go by,
To know no gain nor loss,
My sinful self my only shame,
My glory all the cross.