பாமாலை 77 – பூர்வ பிரமாணத்தை
(The ancient law departs)
William Crotch |
‘பூர்வ பிரமாணத்தை’ என்னும்
இப்பாமாலை 1700களில் லத்தீன் மொழியில் இயற்றப்பட்டு 1736ம் ஆண்டு செபாஸ்டியன் பெஸ்நால்
(Sebastien Besnault) என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 1551ம் ஆண்டு Louis
Bourgeois என்பவர் இயற்றிய St. Michael எனும் ராகத்தில் இப்பாடல் பாடப்பட்டு வருகிறது.
William Crotch என்பவர் 1836ம் ஆண்டு தனது Psalm Tunes’ல் இந்த இசையை ’பூர்வ பிரமாணத்தை’
பாடலுக்கு அறிமுகம்செய்தார்.
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. பூர்வ பிரமாணத்தை
அகற்றி, நாதனார்
சிறந்த புது ஏற்பாட்டை
பக்தர்க்கு ஈகிறார்.
2. ஜோதியில் ஜோதியாம்
மாசற்ற பாலனார்,
பூலோகப் பாவத்தால் உண்டாம்
நிந்தை சுமக்கிறார்.
3. தம் பாலிய மாம்சத்தில்
கூர் நோவுணர்கிறார்;
தாம் பலியென்று ரத்தத்தில்
முத்திரை பெறுகிறார்.
4. தெய்வீக பாலனே,
இயேசு என்றுமே நீர்
மெய் மீட்பராய் இந்நாளிலே
சீர் நாமம் ஏற்கிறீர்.
5. அநாதி மைந்தனாய்,
விண் மாட்சிமையில் நீர்
பிதா நல்லாவியோடொன்றாய்
புகழ்ச்சி பெறுவீர்.
Nice songs
ReplyDelete