Friday, April 28, 2017

பாமாலை 93 - சிலுவைக் கொடி முன்செல்ல (St. Cecelia)

பாமாலை 93 – சிலுவைக் கொடி முன்செல்ல
(The royal banners forward go)
Tune : St. Cecelia

John Mason Neale
இப்பாடல் முதலில் லத்தீன் மொழியில் எழுதப்பட்டது.  எழுதியவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. 1851ல் ஜான் மேசன் நீல் (John Mason Neale) என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் தமிழ் உட்பட ஏராளமான பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகமெங்கும் குருத்தோலை ஞாயிறன்று பாடப்பட்டு வருகிறது.  நம் தமிழ் திருச்சபைகளில் ’இஸ்திரீயின் வித்தவர்க்கு’ (பாமாலை 91), ஓசன்னா பாலர் பாடும்’ (பாமாலை 92), ‘தயாள இயேசு தேவரீர்” (பாமாலை 94), ஆகிய மூன்று பாமாலைகளும் குருத்தோலை ஞாயிறன்று பரவலாகப் பாடப்படும் நிலையில், ‘சிலுவைக்கொடி முன்செல்ல’ எனும் இப்பாடல், மிக அரிதாகவே பாடப்படுகிறது.  பாமாலை 93க்கென அநேக ராகங்கள் எழுதப்பட்டுள்ளன.  அவற்றுள் ஜான் ஹேம்ப்ட்டன் (John Hampton) எழுதிய ‘St. Cecilia’ எனும் ராகம் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    சிலுவைக் கொடி முன்செல்ல
செல்வார் நம் வேந்தர் போர் செய்ய;
நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்;
தம் சாவால் ஜீவன் தந்தனர்.

2.    மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார்,
நல் வாலிபத்தில் மரித்தார்;
நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே,
நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே.

3.    முன்னுரை நிறைவேறிற்றே;
மன்னர்தம் கொடி ஏற்றுமே;
பலக்கும் அன்பின் வல்லமை
சிலுவை வேந்தர் ஆளுகை.

4.    வென்றிடும் அன்பின் மரமே!
வெல் வேந்தர் செங்கோல் சின்னமே!
உன் நிந்தை மாட்சி ஆயிற்றே,
மன்னர் உம்மீது ஆண்டாரே.

5.    உன்னில் ஓர் நாளில் ஆண்டவர்
மன்னுயிர் சாபம் போக்கினர்;
ஒப்பற்ற செல்வம் தம்மையே
ஒப்பித்து மீட்டார் எம்மையே.

Post Comment

No comments:

Post a Comment