Saturday, August 25, 2018

Little beam of rosy Light (சின்ன ஒளிக்கதிர் யார்)

சின்ன ஒளிக்கதிர் யார்
(Little beam of rosy light)

ஃபானி கிராஸ்பி (Fanny Crosby) அம்மையார் 8500க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர்.  கிராஸ்பி எழுதி, ஜாஸ் நாப் (Mrs. Jos F Knapp) இசையமைத்த அற்புதமான பல பாடல்களுள் ‘சின்ன ஒளிக்கதிர் யார்’ பாடலும் ஒன்றாகும். 1980’களில் நம் தமிழ் திருச்சபைகளின் ஞாயிறு பள்ளிகளில் பாடப்பட்டு வந்த இப்பாடல் இப்போது வெகு அரிதாகவே பாடப்படுவது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். மிகவும் பொருள் நிறைந்த அற்புதமான இப்பாடலை அறியாதோர்க்கு கொண்டு சேர்ப்பதே இப்பதிவின் நோக்கமாகும்.  திருச்சபைகளின் ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள்  மிக எளிமையான ராகத்தில் அமையப்பெற்ற அழகிய இப்பாடலை பிள்ளைகளுக்கு கொண்டு சேருங்கள்.

ஃபானி கிராஸ்பி (Fanny Crosby) அம்மையார் ஆறுவாரக் குழந்தையாயிருக்கும்போது, தவறான மருத்துவ சிகிச்சையால் கண்பார்வையை இழந்தார்.  ஐந்து வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம் கொண்டுபோகப்பட்டார்.  ஆனால் கண்பார்வையை சரிப்படுத்த மருத்துவரால் இயலவில்லை.  மிகுந்த அனுதாபத்துடன் அவர் இளம்பெண்ணைப் பார்த்து ‘Poor little blind girl!’ எனக்கூறினார். இவ்வார்த்தைகளைப் ஃபானி கிராஸ்பி ஆயுள் முழுவதிலும் ஞாபகத்தில் வைத்திருந்து, கடவுளின் பார்வையில் தன் நிலை என்ன என்று சிந்திக்கலானார்.  தன்னைச் சுற்றியிருந்த மக்கள் அவ்வூரில் நடந்த பற்பல நிகழ்ச்சிகளிலும் அவரை ஒதுக்கி வைத்தனர்.  அதிக நேரம் தனிமையாக இருக்கவேண்டியிருந்ததால், தன் மனதைக் கிறிஸ்தவச் செய்யுள்கள் எழுதுவதில் திருப்பினார். 

ஃபானி கிராஸ்பி 1820ம் ஆண்டு, மார்ச் மாதம் 24ம் தேதி, அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.  அவரது பெற்றோர் மெதடிஸ்டு சபையைச் சேர்ந்தவர்கள். குழந்தை பிறந்து ஆறு வாரம் ஆனபோது, குழந்தைக்கு ஜலதோஷம் உண்டானதால் அவ்வூரிலுள்ள மருத்துவரிடம் கொண்டுபோகவே, அவர் கடுகுக் களிம்பை இரு கண்களைச் சுற்றிலும் பூசினார்.  இதனால் கண்கள் வெந்து குருடாயிற்று.  பெண் ஐந்து வயதாயிருக்கையில் அதின் இனத்தவர் பலர் பணம் திரட்டி, நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம் அனுப்பினார்.  ஆனால் கண்களைச் சரிப்படுத்த அவரால் முடியவில்லை.  எனவே பன்னிரண்டு வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.  அங்கு நன்றாகக் கற்றுத்தேறி, 1847 முதல் பதினொரு ஆண்டுகளாக அப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். 1858’ல் இப்பள்ளியிலிருந்து விலகி, தம்மைப் போலக் கண்பார்வையற்ற அலெக்ஸாண்டர் வான் ஆல்ஸ்டைன் என்னும் சங்கீத நிபுணரை மணந்தார்.

ஃபானி கிராஸ்பி அம்மையார் இளவயதிலிருந்தே செய்யுள்கள் எழுதுவதில் அதிகத் திறமை காட்டினார்.  அவர் எட்டு வயதாய் இருக்கையில் தமது முதல் செய்யுளை எழுதினார்.  சுவிசேஷப் பாடல்கள் எழுதுவதில் அவரே முதல் இடத்தைப் பெற்றார்.  அவர் எழுதிய நூற்றுக்கணக்கான பாடல்களை, ‘Sacred Songs and Solos’ என்னும் ஆங்கிலப் பாட்டுப் புத்தகத்தில் காணலாம். ’சின்ன ஒளிக்கதிர் யார்’ பாடலை அவர் எழுதியதன் பின்னணி குறித்த விபரங்கள் தெரியவில்லை. ஃபானி கிராஸ்பி அம்மையார் எழுதிய இதர பாடல்களில் நாம் பாடி வருபவை:

v  போற்றும் போற்றும், புண்ணிய நாதரை (பாமாலை 267)
v  இயேசுவே கல்வாரியில் என்னை (பாமாலை 333)
v  இயேசுவின் கைகள் காக்க (பாமாலை 353)
v  இயேசுவின் நற்செய்தி சொல்வீர்’ (S.S. 43)
v  பாவி, உன் மீட்பர் கரிசனையாய்’ (S.S. 396)
v  முயல்வோம், முயல்வோம் (S.S. 751)
v  இயேசுவை நம்பிப் பற்றிகொண்டேன் (S.S. 873)


பானி கிராஸ்பி அம்மையார் 1915ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 12ம் தேதி தமது 95வது வயதில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1. சின்ன ஒளிக்கதிர் யார்
உனக்கொளி கொடுத்தார்? – எங்கள் பிதா
தங்க நிறக்குருவி
எங்கு பாடக் கற்றாய் நீ? – பிதாவிடம்
எங்கள் பிதா தேவனே
எல்லாம் தந்தார் அன்பரே.

2. சின்ன இன்பப் பூவே யார்
உனக்கழகு தந்தார்? – எங்கள் பிதா
மலை நாட்டு ஓடையே
ஓடச் செய்ததார் சொல்லேன்? – எங்கள் பிதா

3. இன்ப முகப் பாலகா
பூரிப்புனக் கேதையா? – பிதா தந்தார்
பட்சி போல் எக்களிப்பாய்
எங்கு பாடப் படித்தாய்? - பிதாவிடம்








































Sheet Music in English Credits - Hymnary.Org


1. Little beam of rosy light,
Who has made you shine so bright?
" Tis our Father."
Little bird with golden wing,
Who has taught you how to sing?
" Tis our Father."

"Tis our Father, God above;
He has made us, He is Love."

2. Little blossom, sweet and rare,
Who has made you bloom so fair?
"Tis our Father."
Little streamlet in the dell,
Who has made you, can you tell?
"Tis our Father."

"Tis our Father, God above;
He has made us, He is Love."

3. Little child, with face so bright,
Who has made your heart so light ?
"Tis our Father."
Who has taught you how to sing
Like the merry bird of spring?
"Tis our Father."

"Tis our Father, God above;
He has made us, He is Love."

Post Comment

No comments:

Post a Comment