பாமாலை 149 – கிறிஸ்துவின்
சுவிசேஷகர்
Tune : St. Francis Xavier C.M.
John Stainer |
இப்பாடலின்
இசையை இயற்றியவர் ஜான் ஸ்டெய்னர் (John Stainer). இவர் 6 ஜூன்1840ல் ஆண்டு லண்டனில் பிறந்தார். இவர்
தந்தையார் வில்லியம் ஸ்டெய்னர் (William Stainer) தாயார் ஆன் ஸ்டெய்னர் (Ann Stainer). ஜான் சிறுவயதிலேயே தாமாகவே
பியானோ, புல்லாங்குழல், வயலின் ஆகிய இசைக்கருவிகளை இசைத்துப்பழகத் துவங்கினார். தன் இளவயதில் St. Paul’s Cathedral’ன் பாடகர் குழுவில் பாடிக்கொண்டிருந்த
இவர், St.
Michael’s
கல்லூரியில் தம் பதினாறாவது வயதில் ஆர்கனிஸ்ட் ஆக நியமிக்கப்பட்டு, சில வருடங்கள் கழித்து
தமது Paul’s
Cathedral
பேராலயத்திலேயே ஆர்கனிஸ்ட் ஆகப் பணிபுரியத் துவங்கினார். பார்வைக் குறைபாடு காரணமாக
தனது ஆர்கனிஸ்ட் பணியைத் துறந்த இவர் அதன்பின்னர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இசைப்
பேராசிரியராகப் பணிபுரியத் துவங்கினார்.
ஜான் ஸ்டெய்னர் 1901ம் ஆண்டு இத்தாலியில் சுற்றுலா
சென்றிருந்த இடத்தில் மறுமைக்குட்பட்டார்.
ஜான் இசையமைத்த பாடல்கள் அதிகம் பாடப்படுவதில்லை என்றாலும், இவரின் ஒரு சில
பாடல்கள் Anglican திருச்சபைகளில் இன்றும்
பாடப்படுகின்றன.
UnisonSoprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. கிறிஸ்துவின் சுவிசேஷகர்
நற்செய்தி கூறினார்
யாவர்க்கும் திவ்விய ரகசியம்
விளங்கக் காட்டினார்.
2. பூர்வீக ஞானர் மங்கலாய்
அறிந்த வாக்கையே
கார்மேகம் இல்லாப் பகல்போல்
இவர்கள் கண்டாரே.
3. மெய் மாந்தனான கர்த்தரின்
மகா செய்கை எல்லாம்
உரைக்கும் திவ்விய வசனம்
சாகாமை உள்ளதாம்.
4. நால் சுவிசேஷகரையும்
ஓர் ஆவி ஏவினார்
தம் வேதத்தாலே நம்மையும்
இப்போதழைக்கிறார்.
5. நீர் பரிசுத்த மார்க்குவால்
புகன்ற செய்திக்கே
அடியார் உம்மை இத்தினம்
துதிப்போம், கர்த்தரே.
No comments:
Post a Comment