Wednesday, March 25, 2020

பாமாலை 151 - ஆறுதலின் மகனாம் (Vienna)

பாமாலை 151 – ஆறுதலின் மகனாம்
(Brightly did the Light Divine)
Tune : Vienna
Words: Henry Alford

Henry Alford
இப்பாடலை எழுதிய ஹென்றி ஆல்ஃபொர்ட் (Henry Alford) என்பவர் 1810ம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஏழாம் தேதி, இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் பிறந்தார்.  ஆரம்பக்கல்வி முடிந்தவுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், திரித்துவக்கல்லூரியில் திறமையுடன் பயின்று, உயர்பட்டங்கள் பெற்றார்.  ஆங்கிலத்திருச்சபையில் பல இடங்களில் திருப்பணியாற்றியபின், 1857 முதல் 1871 வரை கன்டர்பரி பேராலயத்தின் பிரதமகுரு (Dean) ஆகப் பணியாற்றினார்.  இச்சமயத்தில்தான் அவர், ‘ஆறுதலின் மகனாம்’ முதலிய பல பாடல்கள் எழுதினார்.  மேலும், ஐம்பது கிறிஸ்தவ நூல்களும், கிரேக்கமொழியில் புதிய ஏற்பாட்டைக்குறித்த நான்கு நூல்களும் எழுதியுள்ளார்.  சிறந்த கவித்திறனும், சங்கீதத்திறனும் ஓவியத்திறனும் பெற்றவர்.  திருமறையின் ஆழ்ந்த கருத்துகளை நன்றாகப் புரிந்துகொள்ளுவதற்கான பல விளக்க நூல்களும் எழுதினார்.  அவரது கடுமையான உழைப்பின் விளைவாக, 1870ல் அவர் உடல்நிலை மிகக்குன்றி, 1871ம் ஆண்டு, ஜனவரி மாதம் 12ம் தேதி மறுமைக்குட்பட்டார்.

அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ‘நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை’ (பாமாலை 180) ‘மின்னும் வெண்ணங்கி பூண்டு (பாமாலை 406).

இப்பாடலின் ஆங்கில வார்த்தைகள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano









































1. 'ஆறுதலின் மகனாம்'
என்னும் நாமம் பெற்றோனாம்
பக்தன் செய்கை வாக்கிலே
திவ்விய ஒளி வீசிற்றே.

2. தெய்வ அருள் பெற்றவன்
மா சந்தோஷம் கொண்டனன்;
வார்த்தை கேட்டநேகரும்
சேர்ந்தார் கர்த்தர் அண்டையும்.

3. பவுல் பர்னபாவையும்
ஊழியத்திற்கழைத்தும்
வல்ல ஞான வரத்தை
ஈந்தீர், தூய ஆவியே.

4. கிறிஸ்து வலப் பக்கமாய்
நாங்களும் மாசற்றோராய்
நிற்க எங்கள் நெஞ்சையும்
தேவரீரே நிரப்பும்.

1. Brightly did the light divine
From his words and actions shine
From the Twelve, with love unblamed,
Son of consolation, named.

2. Full of peace and lively joy
Sped he on his high employ,
By his mild exhorting word
Adding many to the Lord.

3. Blessèd Spirit, who didst call
Barnabas and holy Paul,
And didst them with gifts endue,
Mighty words and wisdom true.

4. Grant us, Lord of life, to be
By their pattern full of Thee;
That beside them we may stand
In that day on Christ’s right hand.

Post Comment

No comments:

Post a Comment