பாமாலை 150 – காரிருள்
பாவம் இன்றியே
(There is only
one Way and only one)
Tune : St.
Philip and St. James L.M.
Words: Cecil
F. Alexander
Cecil Frances Alexander |
இப்பாடலை
இயற்றியவர் சிஸில் அலெக்ஸாண்டர் (Cecil Frances Alexander) அம்மையார். இவரது காலம்
1818-1895. தன் வாழ்நாளில் ஏராளமான பாடல்களை
எழுதிய இவர் ‘All
things Bright and Beautiful”, “There is a Green Hill Far Away” போன்ற பாடல்களை எழுதியவர். “Once in Royal David’s City” என்ற புகழ்பெற்ற கிறிஸ்மஸ்
பாடலையும் இவரே எழுதினார். சிஸில்
தமது சிறுவயது முதற்கொண்டே பாடல்களை எழுதத் துவங்கினார். தமது 22வது வயதிலேயே அயர்லாந்தில் இவர் மிகப் புகழ்பெற்ற
ஒரு கவிஞராக அறியப்பட்டு, அநேகம் பாடல் புத்தகங்களில் இவர் படைப்புகள் இடம்பெறத் துவங்கின. சிஸில் அம்மையார் 1848ம் ஆண்டு, சிறுவர்களுக்கென்று
Hymns
for Little Children
என்ற பாடல் தொகுப்பை வெளியிட்டார்.
பாடல்கள்
எழுதுவதன் மூலம், புத்தகங்கள் வெளியிடுவதன் மூலம் கிடைத்த பணத்தை சிஸில் நிறைய சமூகப்
பணிகளுக்கென செலவிட்டார். தனது முதலாவது பதிப்பிலிருந்து
கிடைத்த பணத்தைக் கொண்டு “Derry
and Raphoe Dioceson Institution for the Deaf and Dumb” என்ற அமைப்பைக் கட்டியெழுப்பி,
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.
எத்தனையோ
நற்காரியங்களுக்கென தமது வாழ்நாளை செலவிட்ட சிஸில் அம்மையார், அவர் எழுதிய ‘All Things
Bright and Beautiful”
பாடலின் மூன்றாவது சரணத்தில்,
The rich man in his castle,
The poor man at his gate,
God made them high and lowly,
And ordered their estate.
என்ற வரிகளை எழுதியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மனிதருள் ஏற்றதாழ்வுகளை கற்பிக்கிறது என்று கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த சரணம், பிந்தைய பதிப்புகளில் நீக்கப்பட்டு பாடல் வெளியிடப்பட்டது.
கிறிஸ்தவச் செய்யுள்களும், பாடல்களும் எழுதுவதில் அதிகத் திறமையுள்ள சிஸில், மொத்தத்தில் நானூற்றுக்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். இப்பாடல்களில் அதிகமானவை சிறுவர் பாடல்களே. அவர் எழுதிய இதர பாடல்களில் நமது பாமாலை புத்தகத்தில் இருப்பவை:
·
பாமாலை 73 – ராஜன் தாவீதூரிலுள்ள
·
பாமாலை 89 – என் நெஞ்சம் நொந்து காயத்தால்
·
பாமாலை 115 – கூர் ஆணி தேகம் பாய
·
பாமாலை 119 – அருவிகள்
ஆயிரமாய்
·
பாமாலை 114 - கொந்தளிக்கும் லோக வாழ்வில்
·
பாமாலை 153 – ஓர் முறை விட்டு மும்முறை
·
பாமாலை 155 – இளமை முதுமையிலும்
·
பாமாலை 202 – நான் மூவரான ஏகரை
· பாமாலை 243 - நேர்த்தியானதனைத்தும்
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. காரிருள் பாவம் இன்றியே
பகலோனாக ஸ்வாமிதாம்
பிரகாசம் வீசும் நாட்டிற்கே
ஒன்றான வழி கிறிஸ்துதாம்
2. ஒன்றான திவ்விய சத்தியத்தை
நம் மீட்பர் வந்து போதித்தார்
பக்தர்க்கொன்றான ஜீவனை
தம் ரத்தத்தால் சம்பாதித்தார்
3. முற்காலம் தூயோன் பிலிப்பு
காணாததை நாம் உணர்ந்தோம்
கிறிஸ்துவில் ஸ்வாமியைக் கண்டு
மேலான ஞானம் அடைந்தோம்
4. நற்செய்கையில் நிலைப்போர்க்கே
வாடாத கீரிடம் என்றுதான்
விஸ்வாசிகள் கைக்கொள்ளவே
யாக்கோபு பக்தன் கூறினான்
5. மெய் வழி, சத்தியம், ஜீவனும்
மாந்தர்க்காய் ஆன இயேசுவே
பிதாவின் முகம் நாங்களும்
கண்டென்றும் வாழச் செய்யுமே.
There is one way, and only one,
Out of our gloom, and sin, and care,
To that far land where shines no sun
Because the face of God is there.
There is one truth, the truth of
God,
That Christ came down from Heav’n to
show,
One life that His redeeming blood
Has won for all His saints below.
The lore from Philip once concealed,
We know its fullness now in Christ;
In Him the Father is revealed,
And all our longing is sufficed.
And still unwavering faith holds
sure
The words that James wrote sternly
down;
Except we labor and endure,
We cannot win the heavenly crown.
O way divine, through gloom and
strife,
Bring us Thy Father’s face to see;
O heav’nly truth, O precious life,
At last, at last, we rest in Thee.
No comments:
Post a Comment