பாமாலை 193 – தீராத தாகத்தால்
(I hunger and I Thirst)
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;
அவர்கள் திருப்தியடைவார்கள்.. மத்தேயு 5:6
John Samuel Bewley Monsell |
ஆண்டவருக்கென்ற
தாகத்துடன் நாம் அவருடைய பரிசுத்த சந்நிதியில் எப்போதும் வரவேண்டும் என்ற பொருளை உணர்த்தும்
இப்பாடல், ஜே.எஸ்.பி.மான்ஸல் (John
Samuel Bewley Monsell) என்பவரால்
எழுதப்பட்டது. 1811ம் ஆண்டு மார்ச் 2ம்தேதி, அயர்லாந்து தேசத்தின் லண்டன்டெர்ரியில்
பிறந்த இவர், 1834ம் ஆண்டு போதகராக அபிஷேகம் செய்யப்பட்டார். தன் வாழ்நாளில் ஏறக்குறைய
300 பாடல்கள் எழுதியிருக்கும் இவர் 1866ம் ஆண்டு ‘தீராத தாகத்தால்’ எனும் இப்பாடலை
எழுதினார்.
Bishop Henry Lascelles Jenner |
ஆண்டவரின் அருகில் நாம் வருவதற்கு அவர் மேல் அதிகமான தாகம் கொண்டிருக்கவேண்டும்
எனும் பொருள் பதிந்த இந்த அற்புதமான பாடல், நம் திருச்சபைகளில் நற்கருணை ஆராதனைகளில்
தவிர்க்க இயலாத பாடல்களுள் ஒன்றாகிவிட்டிருக்கிறது. பேராயர் ஜென்னர் (Bishop Henry Lascelles Jenner) என்பவர் இயற்றிய “Quam
Dilecta” எனும் ராகத்தில்
இப்பாடல் பெரும்பாலும் பாடப்படுகிறது.
UnisonSoprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. தீராத தாகத்தால்
என் உள்ளம் தொய்ந்ததே
ஆ, ஜீவ தண்ணீரால்
தேற்றும் நல் மீட்பரே.
2. விடாய்த்த பூமியில்
என் பசி ஆற்றுமே
நீர் போஷிக்காவிடில்,
திக்கற்றுச் சாவேனே.
3. தெய்வீக போஜனம்
மெய் மன்னா தேவரீர்
மண்ணோரின் அமிர்தம்
என் ஜீவ ஊற்று நீர்
4. உம் தூய ரத்தத்தால்
என் பாவம் போக்கினீர்
உம் திரு மாம்சத்தால்
ஆன்மாவைப் போஷிப்பீர்
5. மா திவ்விய ஐக்கியத்தை
இதால் உண்டாக்குவீர்
மேலான பாக்கியத்தை
ஏராளமாக்குவீர்.
6. இவ்வருள் பந்தியில்
பிரசன்னமாகுமே
என் ஏழை நெஞ்சத்தில்
எப்போதும் தங்குமே.
No comments:
Post a Comment