Tuesday, October 8, 2013

பாமாலை 65 - நடுக்குளிர் காலம்

பாமாலை 65 - நடுக் குளிர் காலம்
(In the bleak mid winter)


Christina-Rossetti
ஆங்கிலக் கவிஞர் கிறிஸ்டினா [Christina Georgina Rossetti (5 December 1830 – 29 December 1894)] என்பவர் சிறுவர் கவிதைகள், பக்தி கவிதைகள் என்று பல்வேறு வகையான கவிதைகளை எழுதியவர். “Goblin Market”, “Remember” போன்ற புகழ்பெற்ற கவிதைகளை எழுதிய இவரே ‘In the bleak mid winter’ எனும் Christmas Carol’ஐ எழுதியவரும் ஆவார். ’In the bleak mid winter’ எனும் இப்பாடலை கிறிஸ்டினா ஒரு கவிதையாகவே எழுதினார். முதன்முதலில் 1872ம் ஆண்டு Scribner's Monthly எனும் பத்திரிகையின் ஜனவரி மாத இதழில் இக்கவிதை அச்சிட்டு வெளியிடப்பட்டது. 1906ம் ஆண்டு வெளிவந்த ‘English Hymnal’ புத்தகத்தில் இப்பாடல் இசையுடன் வெளியிடப்பட்டது.  Gustav Theodore Holst எனும் இங்கிலாந்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் இப்பாடலுக்கான இசையை எழுதினார்.

Gustav Theodore Holst
கிறிஸ்டினாவின் தந்தையார் Gabriele Rossetti என்பவர் லண்டன் கிங்க்ஸ் கல்லூரியில் இத்தாலி மொழி பேராசிரியராக பணிபுரிந்துவந்தார். கிறிஸ்டினாவின் சகோதரர்கள் இருவர் சிறந்த ஓவியர்கள். கிறிஸ்டினாவின் குடும்பம் ஓர் அழகிய கலைக்குடும்பமாகத் திகழ்ந்தது.  தனது பதினாறாவது வயதில் இருந்தே உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த கிறிஸ்டினா, மிகுந்த பக்தியுடைய ஒரு பெண்மணியாவார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது பள்ளிப்படிப்பைத் தன் தாயாரின் உதவியுடன் வீட்டிலிருந்தபடியே பயின்றார். தன் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த கிறிஸ்டினா, பாலியல் பெண் தொழிலாளர்களுக்கு இறைசெய்தியை அறிவித்து அவர்களை நல்வழிப்படுத்தும் ஊழியத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்.  

‘In the bleak mid winter’ போலவே கிறிஸ்டினா எழுதிய "Love Came Down at Christmas" என்ற கவிதையும் பாடல் வடிவம் பெற்றுப் பரவலாகப் பாடப்படுகிறது. 

’புல்லணையின் பரவசக்காட்சியையும், பாலன் பிறந்த இரவின் அழகையும், மாட்டுக்கொட்டிலின் ஆடு மாடுகளைப் பற்றியும், கேரூபின் சேராபின் அவருக்குப் பணிவதையும், முதல் நான்கு சரணங்களில் விவரிக்கும் கிறிஸ்டினா, ஐந்தாவது சரணத்தில், அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக அமைப்பினைப் பற்றி நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார் என்று 1936 ஆண்டு எலிசபெத் என்ற Hymn Writer இப்பாடலைப் பற்றிய தமது ஆய்வில் குறிப்பிடுகிறார். ‘கிறிஸ்டினா வாழ்ந்த 18ம் நூற்றாண்டின் இறுதியில் பெண்களுக்கு சமூகத்தில் மறுக்கப்பட்டு வந்த கல்வியைப் பற்றி அவர் எழுதியிருக்கலாம் என்று குறிப்பிடும் எலிசபெத், ‘மேய்ப்பர்களைப் போலவே கிறிஸ்டினாவும் பெரிய வேலையின்றி இருந்தார். பொன், வெள்ளி, தூபவர்க்கத்துடன் பாலனைத் தொழவந்த ஞானிகளைப் போலவே கிறிஸ்டினாவும் முறைப்படி படித்து பட்டம் ஏதும் பெற்றிறாத ஏதுமற்ற நிலையிலும் தன் உள்ளத்தையே இயேசு பாலனுக்கு அர்ப்பணிக்கும்விதமாக,

What can I give him,
   Poor as I am?
If I were a shepherd,
   I would bring a lamb;
If I were a wise man,
   I would do my part;
Yet what I can I give him;
   Give my heart.

ஏழை அடியேனும்
யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின்
மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம்
கொண்டு சேவிப்பேன்
யானோ எந்தன் நெஞ்சம்
படைப்பேன்.


என்று எழுதியிருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார். பாலன் பிறந்த இரவையும், கொட்டிலையும் விளக்குவதோடு நில்லாமல் இந்த அர்ப்பணிப்பின் சரணமானது இப்பாடலுக்கான அழகிய நிறைவாக அமைந்துள்ளது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1.    நடுக் குளிர் காலம்
கடும் வாடையாம்
பனிக்கட்டி போலும்
குளிரும் எல்லாம்,
மூடுபனி ராவில்
பெய்து மூடவே
நடுக் குளிர் காலம்
முன்னாளே.

2.    வான் புவியும் கொள்ளா
ஸ்வாமி ஆளவே,
அவர்முன் நில்லாது
அவை நீங்குமே
நடுக் குளிர் காலம்
தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில்
போதுமே.

3.    தூதர் பகல் ராவும்
தாழும் அவர்க்கு
மாதா பால் புல் தாவும்
போதுமானது
கேரூபின் சேராபின்
தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும்
போதுமே.

4.    தூதர் தலைத் தூதர்
விண்ணோர் திரளும்
தூய கேரூப் சேராப்
சூழத் தங்கினும்
பாக்கிய கன்னித் தாயே
நேச சிசு தாள்
முக்தி பக்தியோடு
தொழுதாள்.

5.    ஏழை அடியேனும்
யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின்
மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம்
கொண்டு சேவிப்பேன்
யானோ எந்தன் நெஞ்சம்
படைப்பேன்.
In the bleak mid-winter

Post Comment

No comments:

Post a Comment