Thursday, January 30, 2014

பாமாலை 147 - உன் வாசல் திற (Northrop)

உன் வாசல் திற சீயோனே 
O Sion open wide thy gates
Tune : Northrop

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  உன் வாசல் திற, சீயோனே
மெய்ப் பொருளானவர்
தாமே ஆசாரி பலியாய்
உன்னிடம் வந்தனர்.
 
2.  கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்?
பிதாவின் மைந்தனார்
தம் பீடமீது பாவத்தின்
நிவாரணம் ஆனார்.
 
3.  தன் பாலன் ஸ்வாமி என்றோர்ந்தே
தூய தாய் மரியாள்
ஓர் ஜோடு புறாக் குஞ்சுகள்தான்
காணிக்கையாய் வைத்தாள்.
 
4.  தாம் எதிர்பார்த்த கர்த்தரை
அன்னாள் சிமியோனும்
கண்ணுற்ற சாட்சி கூறினார்
ஆனந்தமாகவும்.
 
5.  சௌபாக்யவதி மாதாவோ
தன் நெஞ்சில் யாவையும்
வைத்தெண்ணியே வணங்கினாள்
மா மௌனமாகவும்.
 
6.  பிதா, குமாரன், ஆவிக்கும்
நீடுழி காலமே
எல்லாக் கனம், மகிமையும்
மேன்மேலும் ஓங்குமே.

Post Comment

Wednesday, January 29, 2014

பாமாலை 236 - வாழ்க எம் தேசமே (Moscow)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. வாழ்க எம் தேசமே
ஊழியாய் ஓங்கியே
வாழ்ந்திடுவாய்
பூர்வீக தேசமே
கூறொண்ணா கீர்த்தியே
பார் போற்றும் மேன்மையே
நீ பெறுவாய்.

2. உன் வயல் வெளிகள்
உன்னத காட்சிகள்
ஒப்பற்றதே
வான் எட்டும் பர்வதம்
கான்யாறு காற்றுகள்
போன்றே மா மாட்சியாய்
நீ ஓங்குவாய்.

3. கர்த்தாவின் கரமே
நித்தியம் எம் தேசமே
உன் மேலுமே
உன் நாதர் கிறிஸ்துவே
உன் அன்பர் வாக்கையே
அன்போடு பற்றியே 
நீ ஓங்குவாய்.

Post Comment

Monday, January 27, 2014

பாமாலை 375 - நீரோடையை மான் (Martyrdom)

பாமாலை 375 – நீரோடையை மான் வாஞ்சித்து
(As pants the hart for cooling streams)
Tune : Martyrdom

Metrical Psalter
கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளில் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலும் திருமறையிலுள்ள சங்கீதங்களையே பாடல்களாகப் பாடிவந்தனர். இப்போதும் பல சபைகளில் சங்கீதங்கள் ராகத்துடன் பாடல்களாகவே பாடப்படுகின்றன.  அக்காலத்திலும் பக்தர்களால் சில பாடல்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவை வெகுவாக ஆலய ஆராதனைகளில் பாடப்படவில்லை.  பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில், பல சங்கீதங்கள் ஞானப்பாடல் வடிவில் அமைக்கப்பட்டு (Metrical Psalms) அவற்றிற்கேற்ற ராகங்களுடன் பாடப்பட்டன.  இக்காலத்திலும், சங்கீதங்களை மாறி மாறி வாசிப்பதற்குப் பதிலாக, ஸ்காட்லாண்ட் சபை முதலிய பல சபைகளில் சங்கீதப் பாடல்களையே பாடிவருகின்றனர்.  பின்னர் 1542ம் ஆண்டு மார்ட்டின் லூதர் இப்பாடல்களைப் புத்தக வடிவில் வெளியிட்டார். சில ஆண்டுகளுக்குப்பின், 1562ல் ஜெனீவன் சங்கீதப்பாடல்கள் (Genevan Psalter) என்னும் பெயரால் ஒரு பாட்டுப் புத்தகம் வெளியிடப்பட்டது. இதிலுள்ள பாடல்களே கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளிலும் மற்றும் வழிபாடுகளிலும் பாடப்பட்டுவரும் பாடல்களின் ஆரம்பமாகும்.

1562ம் ஆண்டு வேதாகமத்தில் உள்ள 150 சங்கீதங்களையும் இப்படி Metrical Version’ல் அமைத்து வெளியிடப்பட்ட புத்தகமே இங்கிலாந்து தேவாலயங்களின் முதல் பாடல் புத்தகமாகும் (Hymn book).  “The Whole Booke of Psalmes, collected into English metre” என்று தலைப்பிடப்பட்ட இப்புத்தகத்தினை Thomas Sternhold மற்றும் John Hopkins என்பவர்கள் தொகுத்தனர். வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 134 வருடங்கள் இங்கிலாந்து திருச்சபைகளில் இப்புத்தகம் உபயோகப்படுத்தப்பட்டு வந்தாலும், தற்காலத்தில் இப்புத்தகத்தின் ஒரு பாடல் கூட பாடப்படுவதில்லை.

1696ம் ஆண்டு இப்புத்தகம் Nahum Tate மற்றும் Nicholas Brady ஆகியோரால் மறுஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. “Tate & Brady” அல்லது “New Version” என்று அழைக்கப்பட்ட இப்பதிப்பில் உள்ள பாடலே நம் பாமாலைப் புத்தகத்தில் உள்ள 375வது பாடலான “நீரோடையை மான் வாஞ்சித்து” என்ற பாடலாகும். ’வாழ்நாளில் யாது நேரிட்டும்” (பாமாலை 327 – Through all the changing scenes of life) மற்றும் “ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்” (பாமாலை 72 – While Shepherds watched their flocks) போன்ற பாடல்களும் இந்த “Tate & Brady” பதிப்பிலேயே முதல்முறையாக இடம்பெற்றன.

”மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” என்று துவங்கும் 42ம் சங்கீதத்தின் அடிப்படையில் இப்பாமாலை அமைக்கப்பட்டுள்ளது.

’நீரோடையை மான் வாஞ்சித்து’ எனும் இப்பாடலானது முதன்முதலில் 12 சரணங்களுடன் உருவாக்கப்பட்டது. பின்னர் பாடலின் முதலாம், இரண்டாம், பனிரெண்டாம் சரணங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு, Doxology என்றழைக்கப்படும் தோத்திரப்பாடல் நான்காம் சரணமாக இணைக்கப்பட்டது.  தற்போதைய பாடல் புத்தகங்களில் இந்த 4 சரணங்களே பாடலாகப் பாடப்பட்டு வருகிறது.

Nahum Tate
இப்பாடல்களைத் தொகுத்த “Tate” மற்றும் ”Brady” இருவரும் ஐயர்லாந்து வம்சாவளியைச் சேர்ந்தவர்களாவர்.  Tate, ஐயர்லாந்தின் Dublin நகரைச் சேர்ந்த ஊழியக்காரர் ஒருவரின் மகனாவார்.  Dublin நகரிலுள்ள Trinity College’ல் தன் பட்டப்படிப்பை முடித்து, இங்கிலாந்துக்கு வந்து, பாடல்கள் தொகுப்பதிலும் மற்றும் பல இலக்கியம் சார்ந்த பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட Tate, தனது வாழ்வின் பிற்பகுதியில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி மரித்தார்.

Brady’யும் Dublin Trinity College’ல் பயின்று மூன்றாம் ஹென்றி அரசரின் அவையில் அவரது Chaplainஆகப் பணிபுரிந்தார்.


உலகம் முழுவதும் “Matyrdom” என்னும் ராகத்தில் பாடப்படும் இப்பாடலின் இசையை Hugh Wilson (1766-1824) என்பவர் எழுதினார்.  செருப்புகள் தைத்து உருவாக்கும் வேலையைச் செய்துவந்த Hugh Wilson, இசை, கணிதம் மற்றும் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்று அருகிலிருக்கும் கிராமப்புறங்களிள் உள்ள மக்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியைச் செய்துவந்தார். பாடல்களுக்கான இசையை இயற்றுவதை ஒரு பொழுதுபோக்காகச் செய்துவந்த Wilson தாம் இறந்தபின்னர் தாம் எழுதியிருந்த அனைத்து இசைக்குறிப்புகளையும் அழித்துவிடவேண்டுமென்று கூறியதன் காரணமாக அவர் இயற்றிய ராகங்களில் வெகு சில மட்டுமே எஞ்சியுள்ளன என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



























1.    நீரோடையை மான் வாஞ்சித்து
கதறும் வண்ணமாய்
என் ஆண்டவா என் ஆத்துமம்
தவிக்கும் உமக்காய்.

2.    தயாள கர்த்தா, உமக்காய்
என் உள்ளம் ஏங்காதோ?
உம் மாட்சியுள்ள முகத்தை
எப்போது காண்பேனோ?

3.    என் உள்ளமே, விசாரம் ஏன்?
நம்பிக்கை கொண்டு நீ
சதா உன் ஜீவ ஊற்றேயாம்
கர்த்தாவை ஸ்தோத்திரி

4.    நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா
குமாரன், ஆவிக்கும்
ஆதிமுதலென்றென்றுமே
துதி உண்டாகவும்.



பதிவு தகவல்கள் : The Daily Telegraph Book of Hymns by Ian Bradley and hymnary.org

Post Comment

பாமாலை 3 - உன்னதம் ஆழம் (Tune : Richmond)

பாமாலை 3 - உன்னதம் ஆழம் 
Praise to the Holiest in the height
Tune : Richmond


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்;
அவரின் வார்த்தை, செய்கைகள்
மிகுந்த அற்புதம்.

2. பாவம் நிறைந்த பூமிக்கு
இரண்டாம் ஆதாமே
போரில் சகாயராய் வந்தார்
ஆ, தேச ஞானமே!

3. முதல் ஆதாமின் பாவத்தால்
விழுந்த மாந்தர்தாம்
ஜெயிக்கத் துணையாயினார்
ஆ ஞான அன்பிதாம்

4. மானிடர் சுபாவம் மாறவே
அருளைப் பார்க்கிலும்
சிறந்த ஏது தாம் என்றே
ஈந்தாரே தம்மையும்

5. மானிடனாய் மானிடர்க்காய்
சாத்தானை வென்றாரே
மானிடனாய் எக்கஸ்தியும்
பட்டார் பேரன்பிதே

6. கெத்செமெனேயில், குருசிலும்
வேதனை சகித்தார்
நாம் அவர்போன்றே சகித்து
மரிக்கக் கற்பித்தார்

7. உன்னதம், ஆழம், எங்கேயும்
தூயர்க்கு ஸ்தோத்திரம்
அவரின் வார்த்தை; செய்கைகள்
மிகுந்த அற்புதம்.

Post Comment

Sunday, January 26, 2014

பாமாலை 235 - தனி மாந்தன் (Hyfridol)

பாமாலை 235 – தனி மாந்தன், தேசத்தாரும்
(Once to every man and nation)

’யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்’. யோசுவா 24:15

ஆபிரகாமின் காலமுதல் அவன் சந்ததியாரைக் கடவுள் பராமரித்து, அவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்து, மோசே, யோசுவா முதலிய சிறந்த தலைவர்கள் மூலம் அவர்களை எகிப்து நாட்டிலிருந்து பாலைவனத்தின் வழியாக நாற்பது ஆண்டுகளாக வழிநடத்திக் கடைசியில் கானான் நாட்டில் குடியேறச் செய்தார்.  ஆயினும் காலாகாலங்களில் இஸ்ரவேல் புத்திரர் எகோவாவை மறந்து, அந்நிய தேவர்களைச் சேவித்தனர்.  அவர்களுக்கு அடிக்கடி எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தும், அவர்களில் பலர் அந்நிய தேவர்களையே சேவித்துக்கொண்டிருந்தனர். ஆகையால் யோசுவா இஸ்ரவேலரின் எல்லாக் கோத்திரத்தாரையும் சீகேமிலே கூடிவரச் செய்து, (யோசுவா 24:1) கடவுள் இதுகாரும் அவர்களுக்குச் செய்த எல்லா நன்மைகளையும் அவர்களுக்குக் காட்டின எல்லா இரக்கங்களையும் விவரித்துச் சொல்லி ‘யாரை சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்’ எனக் கூறினார்.

மானிட வாழ்க்கையில், எதைத் தெரிந்து கொள்ளுவோம் என்று தீர்மானிக்கும் ஒரு சந்தர்ப்பம் எல்லா மனிதருக்கும் ஏற்படுவது நிச்சயம்.  உண்மையையா பொய்யையா; நீதியையா அநீதியையா; தாழ்மையையா மேட்டிமையையா – எதைத் தெரிந்துகொள்ளலாம் என அடிக்கடித் தீர்மானிக்கவேண்டிவருகிறது.  இதைப்போலவே, உலகத்திலுள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் அரசியல் காரியங்களில் இப்படிப்பட்ட ஒரு தீர்மானம் செய்யவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது.  யுத்தமா சமாதானமா; பிறநாட்டுப்பகுதிகளை ஆக்ரமிப்பதா அல்லது தனக்குள்ள பகுதிகளில் திருப்தியாயிருப்பதா, முதலிய பல பிரச்சனைகள் ஏற்படும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இப்படிப்பட்ட பல பிரச்சனைகள் ஏற்பட்டன.  1845ம் ஆண்டில் அமெரிக்கச் சட்டசபையில், அருகிலிருந்த மெக்ஸிகோ நாட்டுடன் போர் தொடுக்கவேண்டுமென ஒரு தீர்மானம் விவாதிக்கப்பட்டது.  இது அடிமைகள் வைத்திருந்த தென்பகுதியினர் தங்கள் பகுதியை விரிவாக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது.  இத்தீர்மானத்தை அச்சமயம் சட்டசபை அங்கத்தினராயிருந்த ஆபிரகாம் லிங்கன் கடுமையாக எதிர்த்தார்.  மேலும், அடிமைகள் வைக்கலாமா கூடாதா என்ற பிரச்சனையும், அடிமைகள் வைத்திருந்த தென் பகுதியினர் தனி நாடாகப் பிரிந்துவிடவேண்டும் என்ற அபிப்பிராயமும் அமெரிக்க மக்களை வெகுவாகக் கலங்க வைத்தது. அச்சமயத்தில் அந்நாட்டிலிருந்த ஜேம்ஸ் லோயல் என்னும் கவிஞர் (James Russell Lowell) நாட்டில் உண்மையும், நீதியும், நேர்மையுமே மேலானவை என்பதை மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புகட்டுமாறு 1845ல், 90 வரிகளைக் கொண்ட ஒரு செய்யுள் எழுதினார்.  இதில் எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் வந்தாலும், நீதியும் உண்மையுமே மேலானது என்று சுட்டிக்காட்டினார்.  இச்செய்யுளின் முப்பத்திரண்டு வரிகள் மட்டும் நான்கு கவிகளுள்ள ஒரு பாடலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. இப்பாடலே, ‘தனிமாந்தன், தேசத்தாரும்’ என்னும் பாடலாகும். இப்பாடலுக்கு ‘Ton-y-botel’ என்னும் ராகம் அமைக்கப்பட்டது. இது வேல்ஸ் நாட்டின் கடற்கரையில் ஒதுங்கிய ஒரு கண்ணாடிப் புட்டியுனுள் எழுதிவைக்கப்பட்டிருந்த ராகம் எனக் கூறப்படுகிறது. ஆதலால் அதற்கு ‘Ton-y-botel’ (புட்டியுலுள்ள ராகம்) எனப் பெயர் வந்தது (இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ராகம் அல்ல. இப்பதிவில் “hyfrydol” எனும் ராகம் கொடுக்கப்பட்டிருகிறது).

James Russell Lowell
இப்பாடலை எழுதிய ஜேம்ஸ் ரஸ்ஸல் லோயல் என்பவர் 1819ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 22ம் தேதி, அமெரிக்காவில் மாசாசூசட்ஸ் மாகாணத்தில் கேம்ப்ரிட்ஜ் நகரில் பிறந்தார்.  1838ல் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார்.  அவர் ஒரு வழக்கறிஞராக வேண்டுமென்று அவரது பெற்றோர் விரும்பியதால், அவர் சட்டப்படிப்பும் முடித்து, 1840ல் வழக்கறிஞராகப் பயிற்சி ஆரம்பித்தார்.  இவ்வேலையை அவர் திறமையுடன் செய்ய இயலாததால், சில காலத்துக்குப்பின் அதை விட்டு இலக்கியத்துறையில் புகுந்து, அநேக செய்யுள்களும், கட்டுரைகளும் எழுதிப் பத்திரிகைகளில் வெளியிட்டார்.  1855ல் அவர் பல உபந்நியாசங்கள் செய்ததால், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நவீனமொழி மேற்பார்வையாளராக அமர்த்தப்பட்டார்.  1877 முதல் 1880 வரை ஸ்பெயின் நாட்டில் அமெரிக்க ஸ்தானாதிபதியாகவும், 1880 முதல் 1885 வரை இங்கிலாந்தில் ஸ்தானாதிபதியாகவும் பணியாற்றினார்.  அவரது இலக்கியத் திறமையைப் பாராட்டி ஹார்வர்ட், ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ், எடின்பெரோ பல்கலைக்கழகங்களில் அவருக்குக் கௌரவப் பண்டிதர் பட்டம் அளிக்கப்பட்டது.

ஜேம்ஸ் லோயல் 1891ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    தனி மாந்தன் தேசத்தாரும்,
நீதிப் போரில் சேர்ந்துமே
நன்மை நாட்ட தீமை ஓய்க்க
ஓர் தருணம் நேருமே;
ஸ்வாமி ஆட்சி, மேசியாவை
ஏற்று அன்றேல் தள்ளியே
தீமை நன்மை ஒன்றைத் தேர்ந்து
ஆயுள்காலம் ஓடுமே.

2.    சத்திய நெறி மா கடினம்
பயன் பேரும் அற்றதாம்
சித்தி எய்தாதாயினுமே
நீதியே மேலானதாம்
நீதி வீரன் நீதி பற்ற
கோழை நிற்பான் தூரமே
நீதி பற்றார் யாரும் ஓர்நாள்
நிற்பர் நீதி பற்றியே.

3.    வீர பக்தர் வாழ்க்கை நோக்கி
கர்த்தா, உம்மைப் பின்செல்வோம்
கோர நோவு நிந்தை சாவு
சிலுவையும் சகிப்போம்
காலந்தோறும் கிறிஸ்து வாழ்க்கை
புதிதாய் விளங்குமே
மேலும் முன்னும் ஏறவேண்டும்
சத்திய பாதை செல்வோரே.

4.    தீமை கிரீடம் சூடி வாழ்ந்தும்,
சத்தியம் நிலைத்தோங்கிடும்
வாய்மை வீரன் தூக்குமேடை
தீ வாள்வாய்ப் படுகினும்
வீரன் அவன், லோகம் ஆள்வான்
நீதி வாழ்க்கை வெல்லுமே
சாரும் பக்தனையே நாதர்
காப்பார் காணா நின்றுமே.


Once to every man and nation

Post Comment

Friday, January 24, 2014

பாமாலை 2 - உம்மைத் துதிக்கிறோம்

பாமாலை 2 – உம்மைத் துதிக்கிறோம்
Laudamus te
Lobe den Herren
14, 14, 4, 7, 8

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano







































1.    உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்,
வல்ல பிதாவே
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி
ராஜாதி ராஜாவே
உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.

2.    கிறிஸ்துவே, இரங்கும் சுதனே,
கடன் செலுத்தி
லோகத்தின் பாவத்தை நீக்கிடும்
தெய்வாட்டுக்குட்டி
எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்.

3.    நித்திய பிதாவின் மகிமையில்
இயேசுவே நீரே
பரிசுத்தாவியோடேகமாய்
ஆளுகிறீரே
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்
உன்னத கர்த்தரே, ஆமேன்.

Post Comment

பாமாலை 4 - உன்னதரே நீர் மகிமை (Frankfort)

பாமாலை 4 - உன்னதரே நீர் மகிமை 
Gloria in Excelsis Deo
Tune : Frankfort

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. உன்னதரே நீர் மகிமை,
இந்நிலம் சமாதானத்தை
அடைய அன்பு ஓங்க
பராபரனார் கர்த்தாவே
பரம ராஜா பர்த்தாவே
வல்லமை தந்தாய், வாழ்க!
தாழ்ந்து வீழ்ந்து,
போற்றுவோமே புகழ்வோமே
தொழுவோமே
மாட்சி மேன்மைக்கென்றும் ஸ்தோத்ரம்.

2. பிதாவின் ஒரே மைந்தனே,
சுதாவே கர்த்தா ராஜரே,
தெய்வாட்டுக்குட்டி நீரே
பார் மாந்தர் பாவம் போக்கிடும்
மா தந்தை பக்கல் ஆண்டிடும்
மகத்துவ கிறிஸ்து நீரே;
கேட்பீர் ஏற்பீர்
ஏழை நீசர் எங்கள் ஜேபம்
தாழ்வாம் வேண்டல்
இரங்குவீர் தயவோடே.

3. நீர் தூயர் தூயர் தூயரே,
நீர் கர்த்தர் கர்த்தர் கர்த்தரே
என்றென்றும் ஆள்வீர் நீரே
பிதாவின் ஆசனத்திலே
மேதையாய் வீற்றுப் பாங்கினில்
கர்த்தாவாம் ஆவியோடே
இன்றும் என்றும்
ஏக மாண்பு ஏக மாட்சி
ஏக மேன்மை
தாங்கி ஆள்வீர் தேவரீரே.

Post Comment

Thursday, January 23, 2014

பாமாலை 19 - எவ்வண்ணமாக கர்த்தரே (Martyrdom)

பாமாலை 19 - எவ்வண்ணமாக 
Wherewith O God shall I draw near
Tune : Martyrdom

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1. எவ்வண்ணமாக கர்த்தரே
உம்மை வணங்குவேன்?
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென்ன தருவேன்?

2. அநேக காணிக்கைகளால்
உம் கோபம் மாறுமோ?
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பீரோ?

3. பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும், பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே.

4. நான் குற்றவாளி, ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அழிதல் நியாயமே.

5. ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.

6. இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார்
உம் திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார்.

7. இவ்வண்ணமாக கர்த்தரே
உம்மை வணங்குவேன்
என் நீதி இயேசுகிறிஸ்துவே
அவரைப் பற்றினேன்.

Post Comment

பாமாலை 258 - இயேசுவே உம்மை (St. Agnes)

பாமாலை 258 – இயேசுவே உம்மை தியானித்தால்
(Jesus, the very thought of Thee)


நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்’. சங்கீதம் 104:34

1125ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் க்ரீநோபிள் மலைப்பகுதியில், ‘லாகிராண்டி சாட்ரூஸ்என்னும் ஒரு கிறிஸ்தவத் துறவிகள் மடம் (Monastery) இருந்ததுஅந்த மடம் இருந்த இடம் இயற்கை அழகும், காட்சிகளும் நிறைந்ததுஅந்த மடத்திலிருந்த துறவிகளில் ஒருவர், பெர்னார்டு க்ளெர்வோ (Bernard of Clairvaux) என்பவர்அவர் மடத்துக்குச் செல்லும்போது ஓர் அழகிய குதிரையில் சவாரி செய்வது வழக்கம்ஆயினும் அவர் செல்லும் பாதையிலுள்ள இயற்கைக் காட்சிகளை அவர் கண்டு களிக்கவில்லைஏனெனில் அவர் மனதில் எப்போதும் ஆவிக்குரியவைகளே நிரம்பியிருந்தனஒருமுறை அவர் ஜெனீவா ஏரிக்கரை வழியாக சவாரி செய்து தனது இருப்பிடத்தைச் சேர்ந்தவுடன், நண்பர் ஒருவர், ‘ஏரியின் காட்சி எப்படியிருந்தது?’ என அவரைக் கேட்க, அவர், ‘எந்த ஏரியைப் பற்றிக் கேட்கிறீர்கள்? நான் ஏரி ஒன்றையும் காணவில்லையேஎனப் பதிலளித்தார்ஏனெனில் அவர் எப்போதும் பரலோக ராஜ்ஜியத்தைக் குறித்தே தியானம் செய்துகொண்டிருந்தார்இவ்விதமாக, அவர் ஆண்டவரின் அன்பைக் குறித்துத் தியானம் செய்துகொண்டிருக்கும்போது, ‘இயேசுவே உம்மைத் தியானித்தால்என்னும் பாடல் அவர் மனதில் உருவாயிற்றுசங்கீதம் 104:34ல் தாவீது பாடினதுபோல, ஆண்டவரைத் தியானிக்கும் தியானம் அவரது உள்ளத்திற்கு இனிதாயிருந்து அதைக் கனியச் செய்ததுஇப்பாடல் முதலில் லத்தீன் மொழியில் எழுதப்பட்டு, எட்வர்டு காஸ்வால் என்பவரால் 1850ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

Bernard of Clairvaux
இப்பாடலை எழுதிய பரி. பெர்னார்டு க்ளெர்வோ என்பவர் 1091ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில், பர்கண்டி மாகாணத்தில் பாண்டேயின் என்னும் கிராமத்தில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்தார்இருபத்திரண்டு வயதாயிருக்கையில், ‘லாகிராண்டி சாட்ரூஸ்என்னும் துறவி மடத்தைச் சேர்ந்து தமது திருப்பணியை ஆரம்பித்தார்அவர் மடத்தைச் சேர்ந்த மூன்றாண்டுகளுக்குள் அவரது ஊக்கமான உழைப்பினாலும், முன்மாதிரியான வாழ்க்கையினாலும், ஏராளமானபேர் மடத்தில் சேர்ந்து, மடம் மிக முன்னேற்றமடைந்ததுஅவருக்குப் பல உயர் பதவிகளும் பரிசுகளும் வழங்கப்பட்டனஆனால் அவற்றையெல்லாம் அவர் மறுத்து, தம் வாழ்க்கை முழுவதையும் ஆசிரமத்திலேயே கழித்தார்ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் நாட்டு மன்னர்களும், ரோமாபுரியிலுள்ள பாப்பரசரும் இவரது ஆலோசனையை அடிக்கடி நாடினர்பல நூற்றாண்டுகளுக்குப்பின் மார்ட்டின் லூத்தர் என்னும் சீர்திருத்தவாதி, பரி. பெர்னாடைக் குறித்துநான் கேட்டறிந்த கிறிஸ்தவ துறவிகள் எல்லாரையும் விட இவரே மிகச்சிறந்த பக்திமான்எனப்போற்றியுள்ளார்.

இயேசுவே உம்மை தியானித்தால்என்னும் பாடலைக் குறித்து, டேவிட் லிவிங்ஸ்டன் என்னும் புகழ்பெற்ற மிஷனெரி எழுதியதாவது. ‘பரி. பெர்னார்டு எழுதிய இப்பாடலானது ஆப்பிரிக்காவின் அகன்ற காடுகளில் நான் சுற்றித் திரியும்போது என் காதுகளில் தொனித்துக்கொண்டேயிருக்கிறதுநான் மிகப்பிரியமாகப் பாடும் பாடல்களில் இது ஒன்றாகும்’.

பரி. பெர்னர்டு எழுதிய பாடல்களில் முக்கியமானவை:

‘இரத்தம் காயம் குத்தும்’ – பாமாலை 102
‘ஜீவாதிபதி ஜோதியே’ – பாமாலை 263

பரி. பெர்னார்டு  1153ம் ஆண்டு, தமது 62ம் வயதில் மறுமைக்குட்பட்டார்.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




1.    இயேசுவே உம்மை தியானித்தால்
உள்ளம் கனியுமே
கண்ணார உம்மைக் காணுங்கால்
பரமானந்தமே.

2.    மானிட மீட்பர் இயேசுவின்
சீர் நாமம் போலவே
இன் கீத நாதம் ஆய்ந்திடின்
உண்டோ இப்பாரிலே?

3.    நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு
நம்பிக்கை ஆகுவீர்
நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு
சந்தோஷம் ஈகுவீர்.

4.    கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர்
ஈவீர் எந்நன்மையும்
கண்டடைந்தோரின் பாக்கியசீர்
யார் சொல்ல முடியும்?

5.    இயேசுவின் அன்பை உணர்ந்து
மெய் பக்தர் அறிவார்
அவ்வன்பின் ஆழம் அளந்து
மற்றோர் அறிந்திடார்

6.    இயேசுவே, எங்கள் முக்தியும்
பேரின்பமும் நீரே
இப்போதும் நித்திய காலமும்
நீர் எங்கள் மாட்சியே.


Post Comment