Sunday, January 5, 2014

பாமாலை 184 - ஆ இயேசுவே (Dies Dominica)

பாமாலை 184 – ஆ இயேசுவே உம்மாலே
(O Jesu Meine Wonne)
Tune : Dies Dominica


John Bacchus Dykes
இப்பாடலின் இசையை இயற்றியவர் அருள்திரு. ஜான் டைக்ஸ் (John Bacchus Dykes).  1823ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த ஜான் தன் சிறு வயதில் பியானோ மற்றும் வயலின் வகுப்புகளுக்கு சென்று இசை பயின்று தனது பத்தாவது வயதில் St. Johns ஆலயத்தில் ஆர்கனிஸ்ட்’ஆக தன் இசைப்பணியைத் துவக்கினார். இங்கிலாந்தின் St. Catherine College’ல் தனது பட்டப்படிப்பை முடித்து, 1847ம் ஆண்டு குருத்துவப் படிப்பையும் முடித்தார்.  தொடர்ந்து 1849ல் Durham Cathedral’ல் Choir Director’ஆக அமர்த்தப்பட்ட இவர், கவனமான பாடல் பயிற்சி, இசை விழாக்கள் என்று பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை பாடகர் குழுவில் கொண்டு வந்தார். தன் வாழ்வில் முந்நூறுக்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்த இவரின் பாடல்கள் 1857ம் ஆண்டு “Congregational Hymn and Tune Book” என்ற புத்தகத்தில் முதன்முதலில் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து “Ancient and Modern” புத்தகத்திலும் இவரது பாடல்கள் பதிப்பிக்கப்பட்டன.  ஜான் 1876ம் ஆண்டு மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1.            ஆ இயேசுவே உம்மாலே
நான் மீட்கப்பட்டவன்
உம் திவ்விய ரத்தத்தாலே
நான் சுத்தமானவன்
மிகுந்த கஸ்தியாலே
என் தோஷத்தைத் தீர்த்தீர்
உமது சாவினாலே
நீர் என்னை ரட்சித்தீர்.

2.    நான் உம்மால் என்றும் வாழ,
இப்பந்தியில் நீரே
என் ஆவிக்கேற்றதான
அமிர்தம் தந்தீரே
உம் ஆசீர்வாதம் ஈந்து
என் பாவம் மன்னியும்
அன்போடு என்னைச் சேர்த்து
தயாளம் காண்பியும்.

3.    நீர் இன்னும் என்னில் காணும்
பொல்லாங்கு யாவையும்
அகற்றிப்போட வாரும்
என் நெஞ்சில் தங்கிடும்
நான் உம்மைப் பற்றிக்கொள்ள
கருணை புரியும்;
மிகுந்த தாழ்மையுள்ள
சித்தம் கடாக்ஷியும்.

4.    நல் மீட்பரே, உம்மோடு
நான் ஐக்கியமாகவும்
நாடோறும் வாஞ்சையோடு
உம்மில் நிலைக்கவும்
மிகுந்த அன்பினாலே
துணை செய்தருளும்
தெய்வீக அப்பத்தாலே
நீர் என்னைப் போஷியும்.

Post Comment

2 comments:

  1. Something amiss in the "bass with soprano" playback?

    ReplyDelete
    Replies
    1. The tracks have been replaced. Please check. Thanks for the feedback.

      Delete