பாமாலை 375 – நீரோடையை
மான் வாஞ்சித்து
(As pants the
hart for cooling streams)
Tune : Martyrdom
Metrical Psalter |
கிறிஸ்தவ
ஆலய ஆராதனைகளில் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலும் திருமறையிலுள்ள சங்கீதங்களையே பாடல்களாகப்
பாடிவந்தனர். இப்போதும் பல சபைகளில் சங்கீதங்கள் ராகத்துடன் பாடல்களாகவே பாடப்படுகின்றன. அக்காலத்திலும் பக்தர்களால் சில பாடல்கள் எழுதப்பட்டிருந்தாலும்
அவை வெகுவாக ஆலய ஆராதனைகளில் பாடப்படவில்லை.
பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில், பல சங்கீதங்கள் ஞானப்பாடல் வடிவில் அமைக்கப்பட்டு
(Metrical Psalms) அவற்றிற்கேற்ற ராகங்களுடன் பாடப்பட்டன. இக்காலத்திலும், சங்கீதங்களை மாறி மாறி வாசிப்பதற்குப்
பதிலாக, ஸ்காட்லாண்ட் சபை முதலிய பல சபைகளில் சங்கீதப் பாடல்களையே பாடிவருகின்றனர். பின்னர் 1542ம் ஆண்டு மார்ட்டின் லூதர் இப்பாடல்களைப்
புத்தக வடிவில் வெளியிட்டார். சில ஆண்டுகளுக்குப்பின், 1562ல் ஜெனீவன் சங்கீதப்பாடல்கள்
(Genevan Psalter) என்னும் பெயரால் ஒரு பாட்டுப் புத்தகம்
வெளியிடப்பட்டது. இதிலுள்ள பாடல்களே கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளிலும் மற்றும் வழிபாடுகளிலும்
பாடப்பட்டுவரும் பாடல்களின் ஆரம்பமாகும்.
1562ம்
ஆண்டு வேதாகமத்தில் உள்ள 150 சங்கீதங்களையும் இப்படி Metrical Version’ல் அமைத்து வெளியிடப்பட்ட புத்தகமே இங்கிலாந்து
தேவாலயங்களின் முதல் பாடல் புத்தகமாகும் (Hymn
book). “The Whole Booke of Psalmes, collected into English metre” என்று தலைப்பிடப்பட்ட இப்புத்தகத்தினை Thomas Sternhold மற்றும் John Hopkins என்பவர்கள் தொகுத்தனர். வெளியிடப்பட்டு
கிட்டத்தட்ட 134 வருடங்கள் இங்கிலாந்து திருச்சபைகளில் இப்புத்தகம் உபயோகப்படுத்தப்பட்டு
வந்தாலும், தற்காலத்தில் இப்புத்தகத்தின் ஒரு பாடல் கூட பாடப்படுவதில்லை.
1696ம்
ஆண்டு இப்புத்தகம் Nahum
Tate மற்றும் Nicholas Brady ஆகியோரால் மறுஆய்வுக்குட்படுத்தப்பட்டு
வெளியிடப்பட்டது. “Tate
& Brady” அல்லது “New Version” என்று அழைக்கப்பட்ட இப்பதிப்பில் உள்ள
பாடலே நம் பாமாலைப் புத்தகத்தில் உள்ள 375வது பாடலான “நீரோடையை மான் வாஞ்சித்து” என்ற
பாடலாகும். ’வாழ்நாளில் யாது நேரிட்டும்” (பாமாலை 327 – Through all the changing scenes
of life) மற்றும் “ராக்காலம்
பெத்லேம் மேய்ப்பர்கள்” (பாமாலை 72 – While
Shepherds watched their flocks)
போன்ற பாடல்களும் இந்த “Tate
& Brady” பதிப்பிலேயே முதல்முறையாக
இடம்பெற்றன.
”மானானது
நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது”
என்று துவங்கும் 42ம் சங்கீதத்தின் அடிப்படையில் இப்பாமாலை அமைக்கப்பட்டுள்ளது.
’நீரோடையை
மான் வாஞ்சித்து’ எனும் இப்பாடலானது முதன்முதலில் 12 சரணங்களுடன் உருவாக்கப்பட்டது.
பின்னர் பாடலின் முதலாம், இரண்டாம், பனிரெண்டாம் சரணங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு,
Doxology என்றழைக்கப்படும் தோத்திரப்பாடல் நான்காம்
சரணமாக இணைக்கப்பட்டது. தற்போதைய பாடல் புத்தகங்களில்
இந்த 4 சரணங்களே பாடலாகப் பாடப்பட்டு வருகிறது.
Nahum Tate |
இப்பாடல்களைத்
தொகுத்த “Tate” மற்றும் ”Brady”
இருவரும் ஐயர்லாந்து வம்சாவளியைச் சேர்ந்தவர்களாவர். Tate, ஐயர்லாந்தின் Dublin நகரைச் சேர்ந்த ஊழியக்காரர் ஒருவரின் மகனாவார். Dublin நகரிலுள்ள Trinity College’ல் தன் பட்டப்படிப்பை முடித்து, இங்கிலாந்துக்கு
வந்து, பாடல்கள் தொகுப்பதிலும் மற்றும் பல இலக்கியம் சார்ந்த பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட
Tate, தனது வாழ்வின் பிற்பகுதியில் குடிப்பழக்கத்துக்கு
அடிமையாகி மரித்தார்.
Brady’யும் Dublin Trinity College’ல் பயின்று மூன்றாம் ஹென்றி அரசரின் அவையில் அவரது Chaplainஆகப் பணிபுரிந்தார்.
உலகம்
முழுவதும் “Matyrdom” என்னும் ராகத்தில் பாடப்படும் இப்பாடலின்
இசையை Hugh Wilson
(1766-1824) என்பவர் எழுதினார். செருப்புகள் தைத்து உருவாக்கும் வேலையைச் செய்துவந்த
Hugh Wilson, இசை, கணிதம் மற்றும் பல்வேறு துறைகளில் தேர்ச்சி
பெற்று அருகிலிருக்கும் கிராமப்புறங்களிள் உள்ள மக்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியைச்
செய்துவந்தார். பாடல்களுக்கான இசையை இயற்றுவதை ஒரு பொழுதுபோக்காகச் செய்துவந்த Wilson தாம் இறந்தபின்னர் தாம் எழுதியிருந்த அனைத்து
இசைக்குறிப்புகளையும் அழித்துவிடவேண்டுமென்று கூறியதன் காரணமாக அவர் இயற்றிய ராகங்களில்
வெகு சில மட்டுமே எஞ்சியுள்ளன என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
UnisonSoprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. நீரோடையை மான் வாஞ்சித்து
கதறும் வண்ணமாய்
என் ஆண்டவா என் ஆத்துமம்
தவிக்கும் உமக்காய்.
2. தயாள கர்த்தா, உமக்காய்
என் உள்ளம் ஏங்காதோ?
உம் மாட்சியுள்ள முகத்தை
எப்போது காண்பேனோ?
3. என் உள்ளமே, விசாரம் ஏன்?
நம்பிக்கை கொண்டு நீ
சதா உன் ஜீவ ஊற்றேயாம்
கர்த்தாவை ஸ்தோத்திரி
4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா
குமாரன், ஆவிக்கும்
ஆதிமுதலென்றென்றுமே
துதி உண்டாகவும்.
பதிவு தகவல்கள் : The Daily Telegraph Book of Hymns
by Ian Bradley and hymnary.org
Meaningful song
ReplyDeleteIndeed
Delete