SATB
Soprano
Alto
Alto with Soprano
TenorTenor with Soprano
Bass
Bass with Soprano
1. நள்ளிரவில் மா தெளிவாய்
மாண் பூர்வ கீதமே
விண் தூதர் வந்தே பாடினார்
பொன் வீணை மீட்டியே
“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்
ஸ்வாமி அருளாலே”
அமர்ந்தே பூமி கேட்டதாம்
விண் தூதர் கீதமே.
2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்
தம் செட்டை விரித்தே
துன்புற்ற லோகம் எங்குமே
இசைப்பார் கீதமே;
பூலோகக் கஷ்டம் தாழ்விலும்
பாடுவார் பறந்தே
பாபேல் கோஷ்டத்தை அடக்கும்
விண் தூதர் கீதமே.
3. விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்
ஈராயிரம் ஆண்டும்,
மண்ணோரின் பாவம் பகை போர்
பூலோகத்தை இன்றும்
வருந்தும் ; மாந்தர் கோஷ்டத்தில்
கேளார் அக்கானமே
போர் ஓய்ந்தமர்ந்து கேட்டிடும்
விண் தூதர் கீதமே.
4. பார் வாழ்க்கையின் மா பாரத்தால்
நைந்து தவிப்போரே,
சோர்ந்தே போய்ப் பாதை நகர்ந்து
தள்ளாடிடுவோரே,
நோக்கும், இதோ உதித்ததே
மா நற் பொற் காலமே
நோவை மறந்து கேட்டிடும்
விண் தூதர் கீதமே.
5. தோன்றிடும் இதோ சீக்கிரம்
பேரின்ப காலமே
சான்றோராம் தீர்க்கர் ஆண்டாண்டும்
உரைத்த காலமே!
போர் ஓய்ந்து பூமி செழிக்கும்
பூர்வ மாண்போடுமே
பாரெங்கும் பரந்தொலிக்கும்
விண் தூதர் கீதமே.
No comments:
Post a Comment