Friday, May 30, 2014

பாமாலை 276 - சுத்த ஆவி என்னில் (All Saints)

பாமாலை 276 – சுத்த ஆவி, என்னில் தங்கும்
Tune: All Saints
8, 7, 8, 7, 7,7.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1.            சுத்த ஆவி, என்னில் தங்கும்,
நானும் சுத்தன் ஆகவே;
பாவ அழுக்கெல்லாம் நீக்கும்;
உம் ஆலயமாகவே
என்னை நீர் சிங்காரியும்,
வாசம் பண்ணும் நித்தமும்.

2.    சத்திய ஆவி, என்னில் தங்கும்,
நானும் சத்தியன் ஆகவே!
தெய்வ பக்தி என்னில் முற்றும்
வளர்ந்தேறச் செய்யுமே;
நீர் என்னில் பிரவேசியும்,
ஆண்டுகொள்ளும் நித்தமும்.

3.    நேச ஆவி, என்னில் தங்கும்,
நானும் நேசன் ஆகவே!
துர்ச் சுபாவம் போகப்பண்ணும்;
அன்பில் நான் வேரூன்றவே
அன்பின் ஸ்வாலை எழுப்பும்,
மென்மேலும் வளர்த்திடும்.

4.    வல்ல ஆவி, என்னில் தங்கும்,
நானும் வல்லோன் ஆகவே!
சாத்தான் என்னைத் தூண்டிவிடும்
போது ஜெயங்கொள்ளவே
நீர் என் பக்கத்தில் இரும்,
என்னைப் பலப்படுத்தும்.

5.    நல்ல ஆவி, என்னில் தங்கும்,
நானும் நல்லோன் ஆகவே;
பகை, மேட்டிமை, விரோதம்,
மற்றும் தீமை யாவுமே
என்னை விட்டகற்றுமேன்
என்னைச் சீர்ப்படுத்துமேன்.

6.    தெய்வ ஆவி, என்னில் தங்கும்
நானும் உம்மில் தங்கவே,
மோட்ச பாதையில் நடத்தும்
இயேசுவின் முகத்தையே
தெளிவாகக் காண்பியும்
என்னை முற்றும் ரட்சியும்.

Post Comment

Thursday, May 29, 2014

பாமாலை 48 - கர்த்தருக்கு ஸ்தோத்திரம் (Monkland)

பாமாலை 48 - கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 
Tune : Monkland

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
மீட்போம் என்ற வாசகம்
தப்பில்லாமல் நாதனார்
மீட்பரை அனுப்பினார்.

2. முற்பிதாக்கள் யாவரும்
தீர்க்கதரிசிகளும்
சொல்லி ஆசைப்பட்டது 
வந்து நிறைவேறிற்று.

3. வாழ்க, என் வெளிச்சமே!
ஓசியன்னா, ஜீவனே!
என் இருதயத்திலும்
தயவாய் பிரவேசியும்.

4. உள்ளே வாரும், ராயரே
இது உம்முடையதே;
பாவமான யாவையும்
நீக்கி என்னை ரட்சியும்.

5. நீர் சாதுள்ள தயவாய்
வந்தீர்; அந்த வண்ணமாய்
இப்போதென்மேல் மெத்தவும்
நீண்ட சாந்தமாயிரும்.

6. சாத்தான் வெகு சர்ப்பனை
செய்துமே என் மனதை
நீர் எல்லா பயத்திலும்
ஆற்றித் தேற்றிக்கொண்டிரும்.

7. உம்மால் பலம் பெற்றிட
மீட்பினால் கெம்பீரிக்க
சர்ப்பத்தின் தலையை நீர்
வென்றுமே நசுக்குவீர்.

8. மீண்டும் நீர் வருகையில்
ஜீவாதிபதி, என்னில்
உந்தன் திவ்விய சாயலும்
காணக் கட்டளையிடும்.













 

Post Comment

பாமாலை 249 - நல் மீட்பர் பட்சம் (Morning Light)

பாமாலை 249 – நல் மீட்பர் பட்சம் நில்லும்
(Stand up, Stand up for Jesus)
Tune : Morning Light

‘விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்’. 1 கொரி 16:13

சுமார் நூறு ஆண்டுகளுக்குமுன், அமெரிக்க ஐக்கிய நாட்டில், பில்டெல்பியா நகரில், டட்லி டைங் (Rev. Dudley Tyng) என்னும் குருவானவர், பிரசன்னத் தேவாலயத்தில் (Church of the Epiphany) திருப்பணியாற்றி வந்தார்.  அக்காலத்தில், ஐக்கிய நாடுகளிலுள்ள தோட்ட முதலாளிகள் ஏராளமான அடிமைகளைப் பயன்படுத்தி, திரண்ட பணம் சம்பாதித்து வந்தனர். டைங் போதகர் இம்முறையை வெறுத்ததுமன்றி, அடிமைகள் வைப்பது பெரும் பாவமென்று தனது பிரசங்கங்களில் சுட்டிக்காட்டினார்.  சபையாரில் பலர் அடிமைகள் வைத்திருந்ததால், அவர்கள் போதகரைப் பகைத்தனர். இதன் விளைவாக, குருவானவர் அந்த ஆலயத்தைவிட்டு விலகவேண்டி வந்தது. ஆனால் அவரது கொள்கையை ஆதரித்த சில நண்பர்கள் அந்நகரிலேயே ஒரு பெரிய அறையை வாடகைக்கு அமர்த்தி, குருவானவர் தன் ஊழியத்தைத் தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்தனர்.

ஓர் ஓய்வுநாளில் அவர், ஐயாயிரம் பேருக்கதிகமான சபையாருக்கு, ‘புருஷராகிய நீங்கள் போய் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் (யாத் 10:11) என்னும் வசனத்தின் பேரில் ஓர் எழுப்புதலான அருளுரையாற்றினார்.  ஆராதனைக்குப்பின், சபையாரில் சுமார் ஆயிரம் பேர் மனமாறுதலடைந்து, தங்கள் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்குச் சேவைசெய்ய வாக்களித்தனர்.

மூன்று நாட்களுக்குப்பின், புதன்கிழமையன்று, டைங் போதகர் அந்நகரிலுள்ள ஒரு விவசாயப் பண்ணையைப் பார்க்கச் சென்றார்.  அங்கு ஓர் இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருந்த குதிரையைப் போதகர் தட்டிக்கொடுக்கும்போது அவரது சட்டையின் கை ஒரு சக்கரத்தால் இழுக்கப்பட்டுக் கை துண்டிக்கப்பட்டது.  மறு ஞாயிற்றுக்கிழமையன்று அவர் மரணத்தருவாயிலிருக்கும்போது, தமது சபையாருக்கு ஏதாவது செய்தி கொடுக்க விருப்பமுண்டா என்று அவரைக்கேட்டபோது, ‘கிறிஸ்துவுக்காக எழுந்து நிற்கச் சொல்லுங்கள்” (Tell them to stand up for Jesus) என்றார்.  இதுவே அவர் பேசிய கடைசி வார்த்தைகள்.  குருவானவரின் நண்பரான ஜியார்ஜ் டப்பீல்டு (George Duffield) பண்டிதர் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், உணர்ச்சிவசப்பட்டு, ‘நல்மீட்பர் பட்சம் நில்லும்’ என்னும் பாடலை எழுதினார்.  டைங் போதகரின் அடக்க ஆராதனையில், டப்பீல்டு பண்டிதர், தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளுதலைக் குறித்து (எபேசியர் 6:13) ஓர் எழுப்புதலான பிரசங்கம் செய்து, இறுதியில் தாம் எழுதிய, ‘நல்மீட்பர் பட்சம் நில்லும்’ என்னும் பாடலையும் வாசித்தார்.  பின்னர் இப்பாடல் வெப் (George J. Webb) என்பவரால் அமைக்கப்பட, ‘Morning Light’ என்னும் இராகத்துடன், வாலிபர் கூட்டங்களிலும், திடப்படுத்தல் ஆராதனைகளிலும், பற்பல மொழிகளில் பாடப்பட்டு வருகிறது.

இதை எழுதிய ஜியார்ஜ் டப்பீல்டு பண்டிதர் 1818ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 12ம் தேதி, அமெரிககவில் பென்சில்வேனியா மாகாணத்தில் கார்லைல் நகரில் பிறாந்தார்.  யேல் பல்கலைக்கழகத்திலும், பின்னர் வேதசாஸ்திரக் கல்லூரியிலும் பயின்று, 1840ம் ஆண்டு, நியூயார்க் நகரில் தமது குருத்துவ ஊழியத்தை ஆரம்பித்தார்.  அவரது முன்னோர்களில் பலர் குருத்துவ ஊழியம் செய்திருந்தனர்.  பின்னர் வேறு பல சபைகளில் தொடர்ந்து ஊழியம் செய்து, 1884ம் ஆண்டு ஓய்வு பெற்றுக்கொண்டார்.  அவரது சிறந்த வேத அறிவைப் பாராட்டி, நாக்ஸ் கல்லூரி அவருக்கு கௌரவ பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.  அவர் 1888ம் ஆண்டு ஜூலை மாதம், 6ம் தேதி, புளூம்பீல்டு நகரில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            நல் மீட்பர் பட்சம் நில்லும்!
ரட்சணிய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி
போராட்டம் செய்யுமே!
சேனாதிபதி இயேசு
மாற்றாரை மேற்கொள்வார்;
பின் வெற்றி கிரீடம் சூடி
செங்கோலும் ஓச்சுவார்.

2.    நல் மீட்பர் பட்சம் நில்லும்!
எக்காளம் ஊதுங்கால்,
போர்க்கோலத்தோடு சென்று
மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே
போராடி வாருமேன்!
பிசாசின் திரள்சேனை
நீர் வீழ்த்தி வெல்லுமேன்.

3.    நல் மீட்பர் பட்சம் நில்லும்!
எவ்வீர சூரமும்
நம்பாமல், திவ்விய சக்தி
பெற்றே பிரயோகியும்!
சர்வாயுதத்தை ஈயும்
கர்த்தாவை சாருவீர்;
எம்மோசமும் பாராமல்
முன் தண்டில் செல்லுவீர்.

4.    நல் மீட்பர் பட்சம் நில்லும்!
போராட்டம் ஓயுமே;
வெம்போரின் கோஷ்டம், வெற்றி
பாட்டாக மாறுமே!
மேற்கொள்ளும் வீரர் ஜீவ
பொற் கிரீடம் சூடுவார்;
விண் லோக நாதரோடே
வீற்றரசாளுவார்.

STAND UP STAND UP FOR JESUS

Post Comment

பாமாலை 245 - பாலரே ஓர் நேசர் (In Memoriam)

பாமாலை 245 - பாலரே ஓர் நேசர் 
There's a friend for Little Children
Tune : In Memoriam


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            பாலரே ஓர் நேசர் உண்டு
விண் மோட்ச வீட்டிலே
நீங்கா இந்நேசர் அன்பு
ஓர் நாளும் குன்றாதே;
உற்றாரின் நேசம் யாவும்
நாள் செல்ல மாறினும்,
இவ்வன்பர் திவ்விய நேசம்
மாறாமல் நிலைக்கும்.

2.    பாலரே, ஓர் வீடு உண்டு
விண் மோட்ச நாட்டிலே
பேர் வாழ்வுண்டாக இயேசு
அங்கரசாள்வாரே;
ஒப்பற்ற அந்த வீட்டை
நாம் நாட வேண்டாமோ?
அங்குள்ளோர் இன்ப வாழ்வில்
ஓர் தாழ்ச்சிதானுண்டோ?

3.    பாலரே ஓர் கிரீடம் உண்டு
விண் மோட்ச வீட்டில் நீர்
நல் மீட்பரின் பேரன்பால்
பொற் கிரீடம் அணிவீர்;
இப்போது மீட்பைப் பெற்று
மா நேசர் பின்சென்றார்,
இவ்வாடா ஜீவ கிரீடம்
அப்போது சூடுவார்.

4.    பாலரே, ஓர் கீதம் உண்டு
விண் மோட்ச வீட்டிலே;
மா ஜெய கீதம் பாட
ஓர் வீணையும் உண்டே;
அந்நாட்டின் இன்பம் எல்லாம்
நம் மீட்பர்க்குரிமை,
நீர் அவரிடம் வாரும்,
ஈவார் அவ்வின்பத்தை.


Post Comment

Wednesday, May 28, 2014

பாமாலை 238 - இயேசு எந்தன்

பாமாலை 238 – இயேசு எந்தன் நேசரே
(Jesus loves me this I know)

சிறுவர்களை இயேசுவின் அன்பை நோக்கி இழுத்த பாடல்களில் இப்பாடல் மிகவும் சிறப்புப் பெற்றது.  இப்பாடலை அன்னா பார்ட்லெட் வார்னர் (Anna Bartlett Warner) 1860ம் ஆண்டு, தன் 40வது வயதில் எழுதினார்.

Anna Bartlett Warner
அன்னாவின் சகோதரி சூசன் (Susan Warner) ஒரு சிறந்த எழுத்தாளர்.  அந்நாட்களில் மிகவும் புகழ்பெற்ற ‘சொல்லி முத்திரையிடு’ (Say and Seal) என்ற நாவல் புத்தகத்தை அவர் எழுதினார்.  அதின் கதாபாத்திரங்களான லிண்டன், மரணத்துடன் போராடும் சிறுவன் ஜானி பாக்ஸை ஆறுதல்படுத்த இப்பாடலைப் பாடுவதாக சூசன் எழுதி, அப்பாடலை இயற்றும் பொறுப்பைத் தன் சகோதரியிடம் கொடுத்தார்.  இவ்வாறு உருவான இப்பாடல், இன்றும் உலகின் பல்வேறு சிறுவர்களை உற்சாகப்படுத்தும் பாடலாக விளங்குகிறது.

கல்வியில் சிறந்த வார்னர் சகோதரிகள் பக்தி நிறைந்த வாழ்க்கை நடத்தி வந்தனர்.  சிறந்த வழக்கறிஞரான இவர்கள் தந்தையின் மரணத்திற்குப்பின், தங்களது இலக்கியப் பணிகளின் மூலம் சமூக சேவையையும் நற்செய்திப்பணியையும் செய்து வந்தனர்.  நியூயார்க்கின் ஹட்சன் நதிக்கரையில் இருந்த இவர்களின் இல்லத்துக்கருகில் அமைக்கப்பட்ட அமெரிக்க படை அதிகாரிகளின் பயிற்சிப்பள்ளியில் படிக்கும் வாலிப வீரர்களுக்குத் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஞாயிறு பள்ளி நடத்தி, அவர்களின் ஆவிக்குரிய தேவைகளை சந்தித்து வந்தார்கள்.

எளிமையான வார்த்தைகளுடன் இயேசுவின் அன்பைத் தெளிவாய் விளக்கும் இப்பாடலை, பல மிஷனரிகள் தங்கள் பணித்தளங்களின் புது விசுவாசிகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் முதல் பாடலாக உபயோகித்தனர்.  எனவே, இப்பாடல் உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

William Batchelder Bradbury
இப்பாடலுக்கு டாக்டர் வில்லியம் பிராட்பரி (William Batchelder Bradbury) இனிமையான ராகம் அமைத்து அதின் பல்லவியையும் (Chorus) (Yes, Jesus loves me, Yes, Jesus Loves me) 1861ம் ஆண்டு சேர்த்தார்.  பல பாடல் புத்தகங்களை வெளியிட்டுள்ள இவர், இப்பாடலை, 1862ம் ஆண்டு தனது ‘தங்க மழை’ என்ற பாடல் புத்தகத்தில் அறிமுகம் செய்தார்.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒரேவித சீருடை அணிந்து, இணைந்து அழகாகப் பாடும் இன்னிசை நிகழ்ச்சிகளை வருடந்தோறும் நடத்திய பெருமை இவரைச் சேரும்.

தகவல்கள் நன்றி: ’131 பாடல் பிறந்த கதை’, அமைதி நேர ஊழியங்கள், சென்னை 42.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            இயேசு எந்தன் நேசரே
கண்டேன் வேத நூலிலே
பாலர் அவர் சொந்தந்தான்,
தாங்க அவர் வல்லோர்தான்.

     இயேசு என் நேசர்,
     இயேசு என் நேசர்,
     இயேசு என் நேசர்,
     மெய் வேத வாக்கிதே.

2.    என்னை மீட்க மரித்தார்,
மோட்ச வாசல் திறந்தார்,
எந்தன் பாவம் நீக்குவார்,
பாலன் என்னை ரட்சிப்பார்.

3.    பலவீனம் நோவிலும்
என்றும் என்னை நேசிக்கும்
இயேசு தாங்கித் தேற்றுவார்,
பாதுகாக்க வருவார்.

4.    எந்தன் மீட்பர் இயேசுவே,
தங்குவார் என்னருகே;
நேசனாய் நான் மரித்தால்
மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.
Jesus Loves me this I know

Post Comment

Tuesday, May 27, 2014

பாமாலை 176 - சீர் ஆவியால் (Northop)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. சீர் ஆவியால் இரக்கமாய்
உண்டான வேதமே,
ஒப்பற்ற ஞானமுள்ளதாய்
நமக்குண்டாயிற்றே.

2. அதில் பிறக்கும் போதனை
விளக்கைப்போலவே,
நற்கதி சேரும் மார்க்கத்தை
விளக்கிக் காட்டுமே.

3. இருள் நிறைந்த பூமியில்
அதே என் வெளிச்சம்
பரத்தை நோக்கிப் போகையில்
அதே நட்சத்திரம்.

4. கர்த்தாவின் அருளால் அதே
மகா ஈவாயிற்று
அதைக்குறித்தென் நெஞ்சமே
சந்தோஷமாயிரு.

Post Comment

Monday, May 26, 2014

பாமாலை 288 - ஸ்வாமியே நான் (Heinlein)

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1.    ஸ்வாமியே, நான் எத்தனை
பாவ பாதகங்களை
செய்து வந்தேன் என்று நீர்
நன்றாய்த் தூண்டிக் காட்டுவீர்.

2.    ஐயோ! பாவ தோஷத்தால்
கெட்டுப்போனேன், ஆதலால்
நித்தம் வாடி நோகிறேன்,
துக்கத்தால் திகைக்கிறேன்.

3.    நெஞ்சு என்னைக் குத்தவும்,
துன்பம் துயர் மிஞ்சவும்,
ஆவியும் கலங்கிற்றே,
கண்ணீர் பாய்ந்து ஓடிற்றே.

4.    வெட்கம் கொண்ட அடியேன்
துக்கமுள்ளோனாய் வந்தேன்,
ஸ்வாமி, என்னைச் சாலவும்
தேற்றி மன்னித்தருளும்.

Post Comment

Sunday, May 25, 2014

பாமாலை 283 - பாவி கேள் உன் (St. Bees)

பாமாலை 283 - பாவி கேள் உன் 
Hark my soul it is the Lord
Tune : St. Bees

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. பாவி கேள்! உன் ஆண்டவர்,
அறையுண்ட ரக்ஷகர்,
கேட்கிறார், “என் மகனே,
அன்புண்டோ என் பேரிலே?” 

2. நீக்கினேன் உன் குற்றத்தை,
கட்டினேன் உன் காயத்தை,
தேடிப்பார்த்து ரக்ஷித்தேன்,
ஒளி வீசப்பண்ணினேன்.

3. தாயின் மிக்க பாசமும்
ஆபத்தாலே குன்றினும்,
குன்றமாட்டாதென்றுமே
ஒப்பில்லா என் நேசமே.

4. எனதன்பின் பெருக்கும்
ஆழம் நீளம் உயரமும்
சொல்லிமுடியாது, பார்!
என்னைப் போன்ற நேசனார்?

5. திவ்விய ரூபம் தரிப்பாய்,
என்னோடரசாளுவாய்!
ஆதலால் சொல், மகனே,
அன்புண்டோ என் பேரிலே?”

6. இயேசுவே, என் பக்தியும்
அன்பும் சொற்பமாயினும்,
உம்மையே நான் பற்றினேன்,
அன்பின் ஸ்வாலை ஏற்றுமேன்!













 


Post Comment

பாமாலை 264 - நல் மீட்பர் இயேசு (St. Peter)

பாமாலை 264 – நல் மீட்பர் இயேசு நாமமே
(How sweet the name of Jesus sounds)


’எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்’ பிலி 2:11

‘கர்த்தருடைய தூதன் … அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்’ (மத் 1:20,21). ‘இயேசு’ என்னும் பதத்திற்கு ‘இரட்சகர்’ என்பது பொருள்.  நாம் இயேசுவின் இனிய நாமத்தைக் குறித்த அநேக பாடல்களைப் பாடுகின்றோம். ‘தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்’, ‘இயேசுவின் நாமமே திருநாமம்’, ‘இயேசுவின் இன்ப நாமத்தை எல்லோரும் போற்றுங்கள்’, முதலிய பாடல்கள் இதற்கு உதாரணங்களாகும்.  இரட்சகர் முதலில் பூலோகத்தில் தோன்றியவுடன், தேவதூதன் ’அவருடைய நாமம், இயேசு என்னப்படும். ஏனெனில் அவர் தமது ஜனங்களைத் தங்கள் பாவங்களிலிருந்து இரட்சிப்பார்’ என்று அறிவித்தான்.  இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே அவரது இனிய நாமத்தை ருசிக்க முடியும். 

இப்பாடலை எழுதியவர், வாழ்க்கையில் பலவிதமான நிலைமைகளை அனுபவித்து, இறுதியில் இயேசுவைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர் நாமத்தின் இனிமையை ருசித்த ஒரு பக்தன்.

John Newton
இதை எழுதிய ஜான் நியூட்டன் போதகர் (John Newton) 1725ம் ஆண்டு, ஜூலை மாதம், 24ம் தேதி, லண்டன் மாநகரில் பிறந்தார்.  இவரது தாயார் கடவுள் பக்தி மிகுந்தவர்.  மகனை ஜெபத்தோடு பக்தி நெறியில் வளர்த்தார்.  ஆனால் அவர் ஏழு வயதாயிருக்கையில் தாயார் இறந்து போனார்கள்.  ஆயினும் தன் வாழ்க்கை முழுவதும் தன் தாயாரின் ஜெப வாழ்க்கையை அவர் மறந்து போகவில்லை.  அவரது தந்தை கப்பற்படையில் பணியாற்றி வந்ததால் பதினோரு வயதிலேயே மகனும் கப்பலில் கடைநிலை ஊழியனாக வேலையிலமர்த்தப்பட்டார்.  பின்பு, நடுநிலைக் கப்பலோட்டிப் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.  ஆனால், கீழ்ப்படியாமைக்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டு, அடிமை வியாபாரம் செய்த ஒருவரது கப்பலில் வேலையிலமர்ந்து, பின்னர் அடிமை வியாபாரமும் செய்து வந்தார்.  கப்பலில் பிரயாணம் செய்யும்போது, தற்செயலாக ‘Imitation of Christ’ என்ற பக்தி நூல் கிடைக்கவே, அதைப் படித்துக் கடவுளைப் பற்றி சிந்திக்கலானார்.  1748ல் ஓரிரவு அவர் வேலை செய்த கப்பல் பெரும்புயலில் அகப்பட்டு, முழுகும் தருவாயிலிருந்தது.  ஜான் நியூட்டன் முழங்காலில் நின்று மிகுந்த ஊக்கத்துடன், ’ஆண்டவரே, எங்களுக்கு இரங்கும்’ என்று ஜெபித்தார்.  சேதமின்றி கப்பல் கரை சேர்ந்தது.  அப்போதுதான் கடவுளின் வல்லமையையும் அன்பையும் உணர்ந்து, இளவயதில் அவரது தாயார் அவரை பக்தி நெறியில் வளர்த்ததையும், தமக்காக அவர்கள் முழங்காலில் நின்று ஜெபித்ததையும் சிந்திக்கலானார்.  தம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு ஆண்டவரின் மன்னிப்பைப் பெற்று, அதுமுதல் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார்.

அடிமை வியாபாரம் கிறிஸ்தவக் கொள்கைக்கு மாறானது என அவர் உணர்ந்து, கப்பல் வேலையை விட்டு, லிவர்பூல் நகரில் தமது மனைவியுடன் இல்லற வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார்.  பின்பு, கிரேக்க, லத்தீன், எபிரேய மொழிகளைக் கற்று, வேத சாஸ்திரமும் படித்து, 1764ம் ஆண்டு ஆயர் பட்டமும் பெற்று, தமது முப்பத்தொன்பதாம் வயதில் ஓல்னி என்னுமிடத்தில் ஒரு சபையில் குருவாகப் பணியாற்றலானார்.  இங்கு பணியாற்றும்போது, பிரபல எழுத்தாளரான வில்லியம் கூப்பர் (William Cowper) என்பவரோடு நட்பு கொண்டு, இருவரும் சேர்ந்து பாடல்கள் எழுத ஆரம்பித்தனர்.  அவர்கள் எழுதிய பாடல்களை, ‘ஓல்னி பாடல்கள்’ (Olney Hymns) என்னும் பெயருடன் புத்தக வடிவில் வெளியிட்டனர்.  இதிலுள்ள பாடல்களில் நியூட்டன் போதகர் இருநூற்று எண்பத்து மூன்று பாடல்கள் எழுதியுள்ளார். ‘நல் மீட்பர் இயேசு நாமமே’ என்னும் பாடல் இப்புத்தகத்துக்காக 1779ல் எழுதப்பட்டது.  இப்பாடலில் அவர் ஆண்டவரின் அன்பை உணர்ந்து, அவர் நாமத்தின் மகத்துவத்தை வர்ணிக்கிறார்.

அவர் ஒரு சிறந்த பக்திமானாயிருந்தபோதிலும், சில சமயங்களில் குறுகிய மனப்பான்மையுள்ளவராகக் காணப்பட்டார்.  உலகப் பிரசித்திபெற்ற ‘Handel’s Messiah’ என்னும் சங்கீதக் கோர்வையை (Oratorio) எதிர்த்து, அநேக பிரசங்கங்கள் லண்டன் மாநகரில் செய்தார்.  ஏனெனில், இச்சங்கீதம் ஒரு கலா நிகழ்ச்சி (entertainment) என்றும், இதற்கு வேதவசனங்களை அடிப்படையாகக் கொண்டது தவறு என்றும் அவர் அபிப்பிராயப்பட்டார்.  அவர் எழுதிய இதர பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.

நியூட்டன் போதகர் 1807ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 21ம் தேதி, தமது 82ம் வயதில் காலமானார்.  மரணத்துக்குச் சற்று நேரத்துக்கு முன் அவரைப் பார்க்கச் சென்ற நண்பர் ஒருவரிடம் அவர் கூறியது, ‘என் ஞாபக சக்தியை அநேகமாக இழந்துவிட்டேன்; ஆனால் இரண்டு காரியங்கள் மட்டும் எனக்கு ஞாபகமிருக்கின்றன; ஒன்று, நான் பாவி, இரண்டாவது, கிறிஸ்து என் இரட்சகர்’.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்.

2.    அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே;
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே.

3.    பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவைப் போலாகும்!
இளைத்துப் போன ஆவிக்கு
ஆரோக்கியம் தந்திடும்.

4.    என் ரட்சகா, என் கேடகம்,
என் கோட்டையும் நீரே!
நிறைந்த அருள் பொக்கிஷம்,
அனைத்தும் நீர்தாமே.

5.    மா நேசர், மேய்ப்பர், பர்த்தாவும்,
என் ஜீவனும் நீரே;
என் தீர்க்கரும், என் ராஜாவும்
ஆசாரியருமே.

6.    என் நெஞ்சின் ஊக்கம் அற்பந்தான்,
என் அன்பில் குளிர்ந்தேன்!
உன் முகம் பார்க்கும்போதோ, நான்
சீராகப் போற்றுவேன்.

7.    இம்மையில் ஆயுள் முழுதும்
உம் அன்பைக் கூறுவேன்;
உம் நாமத்தால் என் சாவிலும்
நான் ஆறித் தேறுவேன்.
How sweet the Name of Jesus sounds

Post Comment

பாமாலை 257 - இயேசு கிறிஸ்துவே (Seelenbräutigam)

பாமாலை 257 - இயேசு கிறிஸ்துவே 
Tune : Seelenbräutigam

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1. இயேசு கிறிஸ்துவே
உலகத்திலே
கெட்டுப்போனவருக்கான
ஒளியும் உயிருமான
ரட்சகர் நீரே
இயேசு கிறிஸ்துவே.

2. என்னை மீட்க நீர்
ஜீவனை விட்டீர்
குற்றத்தை எல்லாம் குலைக்க,
என்னைத் தீமைக்கு மறைக்க
எனக்காக நீர்
ஜீவனை விட்டீர்.

3. எங்கள் மீட்புக்கு
லோகத் தோற்றத்து
நாளின் முன்னே வார்த்தை தந்தீர்;
காலமாகையில் பிறந்தீர்
பாவிகளுக்கு
மீட்புண்டாயிற்று.

4. வெற்றி வேந்தரே,
பாவம் சாபம் பேய்
நரகத்தையும் ஜெயித்தீர்;
நாங்கள் வாழ நீர் மரித்தீர்;
உம்மால் துஷ்டப் பேய்
வெல்லப்பட்டதே.

5. மா இராஜாவே,
பணிவுடனே
தேவரீருக்குக் கீழ்ப்பட்டு,
உமது மொழியைக் கற்று,
அதை நெஞ்சிலே
வைப்பேன், இயேசுவே.


Post Comment

பாமாலை 256 - விண்ணோர்கள் போற்றும் (Westminster)

பாமாலை 256 - விண்ணோர்கள் போற்றும் 
My God how wonderful Thou art
Tune : Westminster

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா
உம் மேன்மை அற்புதம்;
பளிங்கு போலத் தோன்றுமே
உம் கிருபாசனம்!

2. நித்தியானந்த தயாபரா
அல்பா ஒமேகாவே
மா தூயர் போற்றும் ஆண்டவா,
ராஜாதி ராஜாவே!

3. உம் ஞானம் தூய்மை வல்லமை
அளவிறந்ததே!
நீர் தூயர் தூயர் உந்தனை
துதித்தல் இன்பமே!

4. அன்பின் சொரூபி தேவரீர்,
நான் பாவியாயினும்,
என் நீச நெஞ்சைக் கேட்கிறீர்
உம் சொந்தமாகவும்.

5. உம்மைப் போல் தயை மிகுந்த
ஓர் தந்தையும் உண்டோ?
உம்மைப்போல் அன்பு நிறைந்த
தாய்தானும் ஈண்டுண்டோ?

6. என் பாவமெல்லாம் மன்னித்தீர்
சுத்தாங்கம் நல்கினீர்;
என் குற்றமெல்லாம் தாங்கினீர்;
அன்பின் பிரவாகம் நீர்!

7. மேலோக நித்திய பாக்கியத்தை
நான் பெற்று வாழுவேன்;
உம் திவ்விய இன்ப முகத்தை
கண்ணுற்றுப் பூரிப்பேன்.


Post Comment

பாமாலை 181 - யோர்தான் விட்டேறி (Matyrdom)

பாமாலை 181 - யோர்தான் விட்டேறி 
The Son of Man from Jordan rose
Tune : Matyrdom


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            யோர்தான் விட்டேறி, மனுஷ
குமாரன் ஜெபித்தார்;
வானின்றப்போதிறங்கின
புறா உருக் கண்டார்.
 
2.            நல்லாவி அபிஷேகமாய்
அவர்மேல் தங்கினார்
என் நேச மைந்தன்என்பதாய்
பிதா விளம்பினார்.
 
3.            அவ்வாறு, ஸ்நானத்தால் புது
பிறப்பை அடைந்தார்
மெய்த் தெய்வ புத்திரர் என்று
விஸ்வாசத்தால் காண்பார்.
 
4.            கபடில்லாப் புறாத் தன்மை
தரிக்கப்படுவார்
நல்லாவி தங்கள் உள்ளத்தை
நடத்தப் பெறுவார்.
 
5.            உம் ரத்த ஊற்றால் பாவத்தை
நீக்கின கிறிஸ்துவே
தூய்மையோரான தாசரை
தற்காத்துக் கொள்ளுமே.
 
6.            சீர்கெட்ட, லோகம் மீட்டோரே,
பிதா, ஆவியையும்
உம்மோடு ஏகராகவே
என்றென்றும் துதிப்போம்.


Post Comment