Praise the Lord O my soul..!
I’ve come across many Tamil choristers who, although eager to sing “four part harmony”, find it difficult to master the art, because of their inability to read music notations. This blog is my humble attempt to help such friends in Christ, to continue to sing four part harmony, even without being able to read notations. So here it is made easy for you… listen to the parts.. Practice.. and Sing unto the Lord.
பண்டிதர் பில்லி கிரஹாம்
(Billy Graham), இப்பாடலாசிரியரைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
‘என்னுடைய ஆரம்ப கால பிரசங்க
முறைகளை வழிநடத்திய நற்செய்தியாளர்களுள் போதகர் J.W. வான்டே வென்டர் (J.W Van De Venter)
ஒருவராவார். இவர் ‘ஒப்புவிக்கிறேன்’ என்ற அருமையான
பாடலை இயற்றிய பாடலாசிரியரும் கூட. 1936 முதல்
1939 வரையுள்ள ஆண்டுகளில் ஃப்ளோரிடா வேதாகமக் கல்லூரிக்கு (Florida Bible College)
அவர் அடிக்கடி வருவதுண்டு. மாணவர்களாகிய நாங்கள்
இந்த அன்பான, ஆவிக்குரிய அனுபவமிக்கவரை நேசித்து ஃப்ளோரிடாவின் தம்பா’வில் (Tampa,
Florida) உள்ள அவரது குளிர்கால இல்லத்திற்குச் சென்று, மாலை வேளைகளில் பாடல் பாடி ஐக்கியம்
கொள்வதுண்டு.
தாலந்து படைத்தவரான வான்டே
வென்டர் தன் வாலிப நாட்களில், இசை வல்லுநராவதா அல்லது நற்செய்திப் பணியின் சவாலை ஏற்பதா
என இரண்டு நினைவுகளால் 5 ஆண்டுகளாகத் தடுமாறிக்கொண்டிருந்தார். இது பற்றி அவர் கூறியதாவது:
“சில காலமாக எனது தாலந்துகளைக்
கலையுலகில் வளர்ப்பதா அல்லது முழுநேர நற்செய்திப் பணியில் ஈடுபடுவதா, என்ற மனப்போராட்டத்தில்
இருந்தேன். இறுதியில், என் வாழ்வின் முக்கிய
தீர்மானக் கட்டம் வந்தபோது, அனைத்தையும் ஆண்டவரிடம் ஒப்புவித்தேன். அப்போது என் வாழ்வின்
புதிய நாள் உதயமானது. நற்செய்திப் பணியாளரானேன்.
J.W Van De Venter
அப்போது, நான் அதுவரை அறிந்திராத
தாலந்து என் ஆத்துமாவின் உள்ளிந்திரியத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தேன். தேவன் என் உள்ளத்தில் ஒரு பாடலை மறைத்து வைத்து,
அவ்வேளையில் என்னில் மென்மையான உள்ளக்கிளர்ச்சியைத் தட்டி எழுப்பி, என்னைப் பாடச் செய்தார். பிற்காலத்தில், ஓகியோவின் கிழக்கு பாலஸ்தீனாவில்
நான் நற்செய்திக் கூட்டங்கள் நடத்திய நாள்களில், நான் தங்கியிருந்த ஜார்ஜ் செப்ரிங்கின்
இல்லத்தில் என்னை முழுமையாக ஆண்டவர் பணிக்கென நான் அர்ப்பணம் செய்த அந்நாளை நினைவு
கூர்ந்தேன். அப்போது இப்பாடல் என் உள்ளத்தில்
உருவானது”.
ஜட்சன் வான் டே வென்டர்
5.12.1855 அன்று மிச்சிகனின் டன்டியருகே உள்ள ஒரு பண்ணையில் பிறந்தார். ஹில்ஸ்டேல் கல்லூரியில் (Hillsdale College) பட்டம்
பெற்று, ஒரு கலை ஆசிரியரானார். பின்னர் பென்சில்வேனியாவின்
சாரோன் பொதுப்பள்ளிகளின் கலைக் கண்காணிப்பாளரானார். அங்கிருந்த மெதடிஸ்ட் எபிஸ்கோபல் சபையில் உற்சாகமாகத்
தன்னார்வ ஊழியம் செய்தார்.
அந்நாட்களில் அவரது திருச்சபையில்
நடந்த நற்செய்திக் கூட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றினார். கிறிஸ்தவ சேவையில் சிறந்து விளங்கிய அவரின் திறமையைக்
கண்ணுற்ற அவரது நண்பர்கள், ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, நற்செய்திப் பணியாளராக மாறும்படி
அவரை வற்புறுத்த ஆரம்பித்தனர். அடுத்த 5 ஆண்டுகளில்தான்,
மேற்கூறிய சம்பவங்கள் நடந்து, இறுதியில் அவரது அர்ப்பணத் தீர்மானத்துடன் முடிவு பெற்றன.
Winfield S. Weeden
கிறிஸ்துவுக்குத் தன்னை அர்ப்பணித்த
வான் டே வென்டர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகளெங்கும் சுற்றித் திரிந்து
நற்செய்திப் பணியாற்றினார். இப்பாடலுக்கு ராகம்
அமைத்த வின்ஃபீல்டு S வீடென் (Winfield S. Weeden), பல ஆண்டுகளாக இந்நற்செய்திப் பணியில் வென்டருக்கு உறுதுணையாயிருந்தார்.இவர் 29.3.1847 அன்று ஓகியோனின் மிடில்போர்ட்டில்
பிறந்தார். நற்செய்திப் பணியில் முழுமூச்சுடன் இறங்குமுன், வெவ்வேறு இடங்களிலிருந்த
இசைப்பள்ளிகளில் பல்லாண்டுகள் இசை ஆசிரியராகப் பணியாற்றினார்.அவர் ஒரு சிறந்த பாடல் குழுத்தலைவராகவும் தாலந்துமிக்க
பாடகராகவும் விளங்கினார்.
வீடென் 1908ம் ஆண்டு மறுமைக்குட்பட்டார். அவரது கல்லறையில் இப்பாடலின் தலைப்பான ‘ஒப்புவிக்கிறேன்’
என்ற பதம் பொறிக்கப்பட்டுள்ளது.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
யாவையும்
தாராளமாய்
என்றும்,
அவரோடு தங்கி
நம்பி நேசிப்பேன்
மெய்யாய்
ஒப்புவிக்கிறேன்!
ஒப்புவிக்கிறேன்!
நேச இரட்சகர்!
நான் யாவும் ஒப்புவிக்கிறேன்.
2.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
அவர் பாதம்
பணிந்தேன்
லோக இன்பம்
யாவும் விட்டேன்
இன்றே ஏற்றுக்
கொள்ளுமேன். - ஒப்புவிக்கிறேன்
3.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
முற்றும்
ஆட்கொண்டருளும்
நான் உம்
சொந்தம் நீர் என் சொந்தம்
சாட்சியாம்
தேவாவியும்.- ஒப்புவிக்கிறேன்
4.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
நாதா! அடியேனையும்
அன்பு பெலத்தால்
நிரப்பி
என்னை ஆசீர்வதியும்.
- ஒப்புவிக்கிறேன்
5.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
திவ்ய ஜ்வாலை
வீசுதே
பூர்ண ரட்சை
பேரானந்தம்
சதா ஸ்தோத்ரம்
அவர்க்கே- ஒப்புவிக்கிறேன்
பதிவு தகவல்கள் நன்றி : ’131 பாடல் பிறந்த
கதை’ அமைதி நேர ஊழிய வெளியீடு.
’சுவாசம்’ அல்லது ‘ஜீவசுவாசம்’
எனும் பதம் கிறிஸ்தவ வாழ்வில் எப்போதும் ஒரு முக்கிய அங்கம்வகித்து வந்திருக்கிறது.
ஆதியிலே “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன்
நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” என்று ஆதியாகமம் 2:7ல் நாம் வாசிக்கிறோம்.
தேவன் தம் படைப்பின் கிரியைகளில் விளங்கப்பண்ணினதில் மகா அதிசயமான ஒன்று இந்த ‘ஜீவசுவாசம்’.
‘ஜீவசுவாசம்’ அல்லது ‘சுவாசம்’
என்பது ’பரிசுத்த ஆவியானவரை’க் குறிக்கும் சொல்லாகவும் விளங்கிவந்திருக்கிறது. ”பரிசுத்த ஆவியானவர்” “சுவாசம்” எனும் இரு சொற்களையும்
குறிப்பிட, கிரேக்க மொழியில் ‘pneuma’என்ற ஒரே சொல்லும், லத்தீன்
மொழியில் ‘spiritus’
என்ற ஒரே சொல்லும் உபயோகிக்கப்படுகிறது.
Edwin Hatch
பரிசுத்த ஆவியானவரை தம் படைப்பாகிய
மனிதனுள் ஆண்டவர் ஜீவசுவாசமாக ஊதி உயிர்ப்பூட்டிய நிகழ்வின் அற்புதத்தை எட்வின் ஹேட்ச்
(Edwin Hatch - 1835-89) எனும் போதகர், ’ஊதும் தெய்வாவியை’ எனும்
இந்த அழகிய பாடலாக உருவாக்கினார். 1878’ம் ஆண்டு வெளியான
‘Between Doubt and Prayer’
எனும் ஒரு துண்டுப் பிரசுரத்தில் இப்பாடல் முதன்முதலில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
ஆண்டவரைப் பற்றி அறிந்திராத
பெற்றோருக்குப் பிறந்த எட்வின், தம் பள்ளிப்படிப்பை பர்மிங்ஹாமில் உள்ள எட்வர்ட் பள்ளியிலும்
(King Edward School,
Birmingham) தம் கல்லூரிப்
படிப்பை ஆக்ஸ்ஃபோர்டிலும் (Pembroke
College, Oxford) முடித்தார்.
கல்லூரிக் காலத்தில் எட்வினின்
நண்பர்கள் ஓவியம், கவிதைகள் என்று ஆர்வம் நிறைந்தவர்களாய் இருந்தபோது அவர்களுடன் எட்வினும்
நிறைய விமர்சனங்கள் (Reviews), நாளிதழ் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதில்
ஆர்வம் காட்டினார். கல்லூரிப் படிப்பு முடிந்து
அவருடைய நண்பர்கள் கலை மற்றும் இலக்கியத் துறையில் ஆர்வம்கொண்டு செல்ல, எட்வின் Church of England’ல் போதகராக அபிஷேகம் பெற்று, லண்டனின் கிழக்குப்
பகுதியில் இருந்த தேவாலயம் ஒன்றில் ஆயராகப் பணிபுரிந்தார்.
பின்னர் 1859 முதல் 1867வரை
கனடாவின் Trinity
College’ல் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர், 1867ல்
இங்கிலாந்துக்குத் திரும்பி, Oxford
St. Mary’s Hall’ன் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். மேலும்
Rector of Purleigh
in Essex, University Reader in Ecclesiastical History என்று கல்வித்துறையின் பல்வேறு உயர் பதவிகளைக்
கண்டார். இத்தனை பெரும்பதவிகள் வகித்தும், எட்வின், மிகவும் எளிமையான, பக்திநிறைந்த
ஒரு மனிதராகத் திகழ்ந்தார்.
‘ஊதும் தெய்வாவியை’ நம் திருச்சபைகளில்
மிக அரிதாகவே பாடப்படுகிறது. ‘Aylesbury’ போன்ற ராகத்தில் இப்பாமாலை பாடப்பட்டாலும்
‘Carlisle’ எனும் ராகம் எட்வின் எழுதியுள்ள வரிகளுக்கு
மிகப் பொருத்தமான ஒரு ராகமாகக் கருதப்படுகிறது.
இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள ‘Carlisle’ எனும் ராகத்தை இயற்றியவர் சார்ல்ஸ் லாக்கர்ட்
(Charles Lockhart
1745-1815) ஆவார்.
பதிவு தகவல்கள் : The Daily Telegraph Book of Hymns
by Ian Bradley
ஃபானி
கிராஸ்பி (Fanny
Crosby) அம்மையார் 8500க்கும்
மேற்பட்ட பாடல்களை இயற்றியவர். கிராஸ்பி எழுதி,
ஜாஸ் நாப் (Mrs. Jos F Knapp) இசையமைத்த அற்புதமான பல பாடல்களுள் ‘சின்ன ஒளிக்கதிர்
யார்’ பாடலும் ஒன்றாகும். 1980’களில் நம் தமிழ் திருச்சபைகளின் ஞாயிறு பள்ளிகளில் பாடப்பட்டு
வந்த இப்பாடல் இப்போது வெகு அரிதாகவே பாடப்படுவது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். மிகவும்
பொருள் நிறைந்த அற்புதமான இப்பாடலை அறியாதோர்க்கு கொண்டு சேர்ப்பதே இப்பதிவின் நோக்கமாகும். திருச்சபைகளின் ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் மிக எளிமையான ராகத்தில் அமையப்பெற்ற அழகிய இப்பாடலை பிள்ளைகளுக்கு கொண்டு சேருங்கள்.
ஃபானி
கிராஸ்பி (Fanny
Crosby) அம்மையார் ஆறுவாரக்
குழந்தையாயிருக்கும்போது, தவறான மருத்துவ சிகிச்சையால் கண்பார்வையை இழந்தார். ஐந்து வயதாயிருக்கையில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு
கண் வைத்திய நிபுணரிடம் கொண்டுபோகப்பட்டார்.
ஆனால் கண்பார்வையை சரிப்படுத்த மருத்துவரால் இயலவில்லை. மிகுந்த அனுதாபத்துடன் அவர் இளம்பெண்ணைப் பார்த்து
‘Poor little blind
girl!’ எனக்கூறினார். இவ்வார்த்தைகளைப்
ஃபானி கிராஸ்பி ஆயுள் முழுவதிலும் ஞாபகத்தில் வைத்திருந்து, கடவுளின் பார்வையில் தன்
நிலை என்ன என்று சிந்திக்கலானார். தன்னைச்
சுற்றியிருந்த மக்கள் அவ்வூரில் நடந்த பற்பல நிகழ்ச்சிகளிலும் அவரை ஒதுக்கி வைத்தனர். அதிக நேரம் தனிமையாக இருக்கவேண்டியிருந்ததால், தன்
மனதைக் கிறிஸ்தவச் செய்யுள்கள் எழுதுவதில் திருப்பினார்.
ஃபானி
கிராஸ்பி 1820ம் ஆண்டு, மார்ச் மாதம் 24ம் தேதி, அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கருகிலுள்ள
ஒரு கிராமத்தில் பிறந்தார். அவரது பெற்றோர்
மெதடிஸ்டு சபையைச் சேர்ந்தவர்கள். குழந்தை பிறந்து ஆறு வாரம் ஆனபோது, குழந்தைக்கு ஜலதோஷம்
உண்டானதால் அவ்வூரிலுள்ள மருத்துவரிடம் கொண்டுபோகவே, அவர் கடுகுக் களிம்பை இரு கண்களைச்
சுற்றிலும் பூசினார். இதனால் கண்கள் வெந்து
குருடாயிற்று. பெண் ஐந்து வயதாயிருக்கையில்
அதின் இனத்தவர் பலர் பணம் திரட்டி, நியூயார்க் நகரிலுள்ள ஒரு கண் வைத்திய நிபுணரிடம்
அனுப்பினார். ஆனால் கண்களைச் சரிப்படுத்த அவரால்
முடியவில்லை. எனவே பன்னிரண்டு வயதாயிருக்கையில்
நியூயார்க் நகரிலுள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அங்கு நன்றாகக் கற்றுத்தேறி, 1847 முதல் பதினொரு
ஆண்டுகளாக அப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். 1858’ல் இப்பள்ளியிலிருந்து விலகி,
தம்மைப் போலக் கண்பார்வையற்ற அலெக்ஸாண்டர் வான் ஆல்ஸ்டைன் என்னும் சங்கீத நிபுணரை மணந்தார்.
ஃபானி
கிராஸ்பி அம்மையார் இளவயதிலிருந்தே செய்யுள்கள் எழுதுவதில் அதிகத் திறமை காட்டினார். அவர் எட்டு வயதாய் இருக்கையில் தமது முதல் செய்யுளை
எழுதினார். சுவிசேஷப் பாடல்கள் எழுதுவதில்
அவரே முதல் இடத்தைப் பெற்றார். அவர் எழுதிய
நூற்றுக்கணக்கான பாடல்களை, ‘Sacred Songs and Solos’ என்னும் ஆங்கிலப் பாட்டுப் புத்தகத்தில்
காணலாம். ’சின்ன ஒளிக்கதிர் யார்’ பாடலை அவர் எழுதியதன் பின்னணி குறித்த விபரங்கள்
தெரியவில்லை. ஃபானி கிராஸ்பி அம்மையார் எழுதிய இதர பாடல்களில் நாம் பாடி வருபவை:
vபோற்றும்போற்றும், புண்ணியநாதரை (பாமாலை
267)
vஇயேசுவே
கல்வாரியில் என்னை (பாமாலை 333)
vஇயேசுவின்
கைகள் காக்க (பாமாலை 353)
vஇயேசுவின்
நற்செய்தி சொல்வீர்’ (S.S. 43)
vபாவி,
உன் மீட்பர் கரிசனையாய்’ (S.S. 396)
vமுயல்வோம்,
முயல்வோம் (S.S. 751)
vஇயேசுவை
நம்பிப் பற்றிகொண்டேன் (S.S. 873)
பானி
கிராஸ்பி அம்மையார் 1915ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 12ம் தேதி தமது 95வது வயதில் மறுமைக்குட்பட்டார்.
‘ஆண்டவரே எந்நிலையிலும் எப்படியாகிலும் எங்கள் வாழ்வில்
உம் சித்தம் மட்டுமே நிறைவேறச் செய்திடும்’
ஒரு வயதான மூதாட்டியார் ஓர்
இரவு ஜெபக்கூட்டத்தில் ஏறெடுத்த இந்த எளிமையான ஜெபமே, உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்தி,
இந்தப் பிரபல அர்ப்பணப் பாடல் எழுதப்பட மூலகாரணமாயிற்று. அன்று முதல் இந்நாள்வரை தனி நபர்கள் தங்கள் வாழ்வை
சீர்தூக்கிப்பார்த்து, கிறிஸ்துவின் ஆளுகைக்கு உட்பட இப்பாடல் உற்சாகப்படுத்தி வருகிறது.
Adelaide-A.-Pollard
இப்பாடலின் ஆசிரியர் சகோதரி
அடிலெய்ட் பொல்லார்ட் (Adelaide A. Pollard) (1862-1934) அமெரிக்காவின் லோவா
(Lowa) மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது
படிப்பை முடித்தவுடன் ஒரு பெண்கள் பள்ளியில் அவர் ஆசிரியையாகப் பணிபுரியத் துவங்கினார். கூடவே பல்வேறு இடங்களுக்குச் சென்று வேதாகம ஆராய்ச்சியிலும்
தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் துவங்கினார்.
ஆப்பிரிக்காவிற்கு ஓர் மிஷினெரியாகச்
சென்று ஊழியம் செய்யவேண்டும் என்ற ஆத்தும தாகம் அவருக்கு மிகுந்திருந்தது. இந்த ஆப்பிரிக்க பயணத்திற்காக அவர் பணம் திரட்டும்
பணியில் இருந்தபோது அவர் நினைத்த அளவு பணம் திரட்டமுடியாத காரணத்தால் மிகுந்த மனவேதனைக்குட்பட்டார்.
அப்படி ஒரு நாள் வேதனையின் மத்தியில் இரவு ஜெபக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தபோது,
முழங்காற்படியிட்டு "It really doesn't matter
what you do with us, Lord -- just have your way with our lives . . .." என்ற முதல் பத்தியில் உள்ள ஜெபத்தை ஏறெடுத்து,
வீட்டிற்குத் திரும்பியவுடன் ஒரு காகிதத்தை எடுத்து நாம் இன்று பாடும் “Have Thine own way Lord” பாடலை எழுதி முடித்தார். பொல்லார்ட், இப்பாடலை எழுதும்போது, எரேமியா 18ம்
அதிகாரத்தில் உள்ள நான்காம் வசனமாகிய ”தன் பார்வைக்குச்
சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்” என்பதன் அடிப்படையில்
சரணங்களை அமைத்தார்.
‘ஒரு சிறந்த பரிசுத்தப் பெண்மணி’
என்று பெயர்பெற்ற அடிலெய்டு அடிசன் பொல்லார்டு துறவறத்தை மேற்கொண்டவர். அவர் அயோவாவின் ப்ளூம்பீல்ட் என்ற இடத்தில்
27.11.1862 அன்று பிறந்தார். தனது பெற்றோரால்
சாராள் என்று பெயரிடப்பட்டார். ஆனால், அப்பெயரை
விரும்பாததால், பிற்காலத்தில் அடிலெய்டு என்ற பெயரைத் தனக்கெனத் தெரிந்துகொண்டார். பொல்லார்டு தன் வாழ்நாள் முழுவதும் பல பாடல்களை
இயற்றினார். ஆயினும் தனக்கெனப் பேரும் புகழும்
விரும்பாத இவர், இப்பாமாலைகளில் தன் பெயரை A.A.P எனச் சுருக்கமாகக் கையெழுத்திட்டார். எனவே இப்பாடல்களின் மொத்த எண்ணிக்கை விபரம் உலகிற்குத்
தெரிய வாய்ப்பில்லை. இவரது பாடல்களில், இப்பாடல்
ஒன்றே இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
George Coles Stebbins
1902ம் ஆண்டில் அடிலெய்ட்
இப்பாடலை எழுதிமுடித்த ஐந்து வருடங்கள் கழித்து, ஜார்ஜ் ஸ்டெப்பின்ஸ் (George
Stebbins) இப்பாடலுக்கு ”Adelaide” என்ற
ராகத்தை எழுதினார். அவரது பாடல் தொகுப்பான
‘Northfield Hymns” என்ற பாடல் புத்தகத்தில் 1907ம் ஆண்டு முதன்முறையாக இப்பாடல் அறிமுகமானது. ’தூய்மை பெற நாடு” போன்ற பல பாமாலைகளுக்கும் இசையமைத்த
பெருமை ஸ்டெப்பின்ஸையே சேரும்.