Thursday, May 30, 2019

பாமாலை 109 - மரிக்கும் மீட்பர் ஆவியும்

பாமாலை 109 – மரிக்கும் மீட்பர் ஆவியும்
(Die Seele Christi heil'ge mich)

Angelus Silesius
இப்பாடலை இயற்றியவர் போதகர் ஏஞ்ஜலஸ் (Angelus Silesius). இவரது இயற்பெயர் ஜோஹன் (Johann Scheffler). இவர் 1624ம் ஆண்டு செலிஸியாவில் (Silesia) பிறந்தார். இவர் பெற்றோர், பாரம்பரியம் மிக்க லுத்ரன் திருச்சபையைச் சேர்ந்தவர்கள். பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் (University of Strassburg) மருத்துவத்தில் பட்டம் பெற்ற இவர், தொடர்ந்து ஆயர் பட்டம் பெற்று, 1653ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்து இறைப்பணியிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். ரோமப் பேரரசர் ஃப்ரெடினாட் (Ferdinand III) என்பவரின் அரசவையில் மருத்துவராகவும் இவர் நியமிக்கப்பட்டுப் பணிபுரிந்தார். முன்னதாக அவர் பாடல்கள் எழுதுவதிலும் புலமை பெற்றிருந்தார். ஜெர்மன் மொழியில் ஏஞ்ஜலஸ் எழுதிய இருநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள், இன்றும் உலகமெங்கிலும் பல்வேறு மொழிகளில் பாடப்படுகின்றன.

இறைப்பணிக்கென ஏஞ்சலஸ் தம்மை அர்ப்பணித்தபிறகு மருத்துவத் தொழிலைக் கைவிட்டுப் பாடல்கள் எழுதுவதிலும், திருச்சபைப் பணிகளிலும் கவனம் செலுத்தத் துவங்கினார்.  கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்தபிறகு, ப்ராட்டஸ்டண்ட் திருச்சபைகளைக் குறித்து இவர் எழுப்பிய பல்வேறு விமர்சனங்கள் மிகுந்த சர்ச்சைக்குள்ளாயின. இதன் காரணமாக துவக்க காலங்களில் இவருடைய பாடல்களை அச்சில் வெளியிடுவதற்காக அனுமதி கேட்டபோதும் திருச்சபையில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் மிகுந்த போராட்டத்துக்குப் பின் அனுமதி வழங்கப்பட்டு, ப்ராட்டஸ்டண்ட் திருச்சபைகளின் பாடல் புத்தகங்களில் இடம்பெற்றபோதும், ஏஞ்சலஸின் பெயரைக் குறிப்பிடாமல் இப்பாடல்கள் அச்சிடப்பட்டன. சிலுவைப் பாடுகளைக் குறித்ததான இவரது பாடல்கள் இன்றளவும் உலகமெங்குமுள்ள பல்வேறு திருச்சபைகளில் பாடப்படுகின்றன. ஏஞ்சலஸ் 9 ஜுலை 1677ம் ஆண்டு நோயுற்று இறந்தார். ஏஞ்ஜலஸின் மறைவிற்குப் பின்னர் அவரது உயிலின்படி, அவரது சொத்துகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டன.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1. மரிக்கும் மீட்பர் ஆவியும்,
வதைக்கப்பட்ட தேகமும்,
என் ஆவி தேகம் உய்யவே
என்றைக்கும் காக்கத்தக்கதே.

2. அவர் விலாவில் சாலவும்
வடிந்த நீரும் ரத்தமும்
என் ஸ்நானமாகி, பாவத்தை
நிவிர்த்தி செய்யத்தக்கதே.

3. அவர் முகத்தின் வேர்வையும்
கண்ணீர், அவஸ்தை துக்கமும்,
நியாயத்தீர்ப்பு நாளிலே
என் அடைக்கலம் ஆகுமே.

4. அன்புள்ள இயேசு கிறிஸ்துவே,
ஒதுக்கை உம்மிடத்திலே
விரும்பித் தேடும் எனக்கும்
நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும்.

5. என் ஆவி போகும் நேரத்தில்
அதை நீர் பரதீசினில்
சேர்த்தென்றும் உம்மைப் போற்றவே
அழைத்துக்கொள்ளும், கர்த்தரே.

Post Comment

Tuesday, May 28, 2019

பாமாலை 106 - கண்டீர்களோ சிலுவையில் (Windsor)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1. கண்டீர்களோ சிலுவையில்
மரிக்கும் இயேசுவை?
கண்டீர்களோ காயங்களில்
சொரியும் ரத்தத்தை?

2. “மன்னியும்என்ற வேண்டலை
கேட்டீர்களே, ஐயோ!
“ஏன் கைவிட்டீர்என்றார், அதை
மறக்கக்கூடுமோ?

3. கண்மூடி, தலை சாயவே,
“முடிந்ததுஎன்றார்:
இவ்வாறு லோக மீட்பையே
அன்பாய் உண்டாக்கினார்.

4. அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
ஈடேற்றம் வந்ததே;
ஆ! பாவி, இதை நோக்குங்கால்
உன் தோஷம் தீருமே.

5. சீர் கெட்டு மாண்டு போகையில்
பார்த்தேன் என் மீட்பரை;
கண்டேன், கண்டேன் சிலுவையில்
மரிக்கும் யேசுவை!

Post Comment

Monday, May 27, 2019

பாமாலை 105 - என்னுடைய சாவின் சாவே

பாமாலை 105 – என்னுடைய சாவின் சாவே
(Jesu, meines Lebens Leben)
Christ, the Life of all the Living

ஜெர்மனியில் உள்ள லுத்ரன் திருச்சபையைச் சேர்ந்த எர்னஸ்ட் ஹோம்பர்க் (Ernst Christoph Homburg) என்ற 17ம் நூற்றாண்டுக் கவிஞர் இப்பாடலை இயற்றினார். ஜெர்மனியின் Mihla நகரில் 1605ம் ஆண்டு பிறந்த இவர், தான் வாழ்ந்த காலத்தில் தன் சக கவிஞர்களுள் முதன்மையானவராய் அறியப்படுகிறார்.  எர்னஸ்ட்டின் ஆரம்பகால கவிதைகள், காதல் மற்றும் மதுவைக் குறித்தனவாக இருந்தன.  அவர் வாழ்விலும், அவர்தம் மனைவியின் வாழ்விலும் நேர்ந்த எண்ணற்ற துன்பங்களிலிருந்து ஆண்டவர் தந்த விடுதலை, அவரை இறைவனை நோக்கித் திருப்பியது. தொடர்ந்து ஜெர்மன் மொழியில் அநேகம் பாடல்களை எர்னஸ்ட் எழுதினார்.


Catherine Winkworth, 1827–1878
ஜெர்மன் மொழியில் இயற்றப்பட்ட ஏராளமான பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கேத்தரின் அம்மையார் (Catherine Winkworth, 1827–1878) இப்பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் (Christ, the Life of all the Living).  இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டரில் (Manchester, England) தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த கேத்தரின் அம்மையார், ஜெர்மனியின் ட்ரெஸ்டன் (Dresden) நகரில் சில காலம் தங்கியிருக்க நேரிட்டது. 1854ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் உள்ள பாடல்களினால் கவரப்பட்டு, Lyra Germanica என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை கேத்ரின் அம்மையார் வெளியிட்டார். 1858ம் ஆண்டு இதே போன்றதொரு ஜெர்மன் மொழி பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை மீண்டும் ஒரு புத்தகமாக வெளியிட்டார். 1863ம் ஆண்டு The Chorale Book for England மற்றும் 1869ம் ஆண்டு Christian Singers of Germany ஆகிய புத்தகங்கள் இவர் முயற்சியினால் வெளியாயின.  ஜெர்மன் இசைப் பாரம்பரியத்தில் வெளிவந்த அநேக பாடல்கள் இவரது அயராத உழைப்பினால் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலச் சபைகளுக்குள் வந்து சேர்ந்தது.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1. என்னுடைய சாவின் சாவே,
என் உயிரின் ஜீவனே,
என்னை மீட்க நீர், கர்த்தாவே,
தெய்வ கோபத் தீயிலே
பாய்ந்து, மா அவஸ்தையாக
பட்ட கன வாதைக்காக
உமக்காயிரம் தரம்
இயேசுவே, சங்கீர்த்தனம்.

2. கேட்டின் சங்கிலிகளுக்கு
என்னை நீங்கலாக்கவே,
உம்மைத் தீயோர் துஷ்டத்துக்கு
நீரே, தெய்வமைந்தனே,
சூறையிட்டு, கள்ளனாக
கட்டப்பட்ட நிந்தைக்காக
உமக்காயிரம் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

3. நான் சுகிக்க நீர் இக்கட்டு,
துன்பம், வாதை, நோவிடர்,
குட்டறை பொல்லாப்பும்பட்டு,
வாரடியும் பட்டவர்,
ஆசீர்வாதமே உண்டாக
சாபமானீர் எனக்காக;
உமக்காயிரம் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

4. ஜீவ கிரீடம் நான் தரித்து,
வாழவும் உயரவும்
தூஷண மெல்லாம் சகித்து,
நிந்தை துப்புதலையும்
ஏற்றுக்கொண்டு எண்ணமற்ற
முள் முடியால் சூட்டப்பட்ட
உமக்காயிரம் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

5. நான், நான் ஆக்கினைப்படாமல்
பூரிப்பாய் மகிழவே,
சுய தேகத்தைப் பாராமல்,
வாதிப்பாரின் இச்சைக்கே
அதைவிட்டு, கள்ளர்கிட்ட
தூக்கப்பட்டோராய்த் தவித்த
உமக்காயிரம் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

6. என் அநியாயத்தைக் கழித்து,
என்னை மீட்டுவிடவே
நோவு யாவும் உத்தரித்து,
நல்ல மனதுடனே
ரத்தம் சிந்தி மா நிர்ப்பந்த
சிலுவையிலே இறந்த
உமக்காயிரம் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

7. உம்முடைய பணிவாலே
என் இடும்பின் ஆக்கினை,
உம்முடைய நிந்தையாலே
என்னுடைய சிறுமை
தீரும்; உம்முடைய சாவு
சாவில் எனக்கான தாவு.
உமக்காயிரம் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

8. இயேசுவே, நீர் சாந்தமாக
உள்ளேயும் புறம்பேயும்
ஜீவன் போகுமளவாக
பட்ட பாடனைத்துக்கும்
என்ன சொல்வேன்! எனக்காகப்
பட்டீரென்று தாழ்மையாக
உம்மை நான் வணங்குவேன்,
என்றென்றைக்கும் போற்றுவேன்.

Post Comment

Saturday, May 25, 2019

பாமாலை 104 - என் மனது துடிக்குது

பாமாலை 104 – என் மனது துடிக்குது
(O Traurigkeit, o Herzeleid)
O darkest woe! Ye tears, forth flow!

Johann Rist
"O Traurigkeit, o Herzeleid" என்ற இப்பாடல் ஜெர்மானிய மொழியில் Johann Rist என்பவரால் எழுதப்பட்டது.  எட்டு சரணங்கள் கொண்ட இப்பாடல், புனித வெள்ளி ஆராதனைகளில் பாடப்படுவதற்கென்று ஜோஹன் இயற்றி, 1641ம் ஆண்டு முதன்முதலில் அச்சில் வெளியிடப்பட்டது. ஜெர்மன் மொழியில் இயற்றப்பட்ட ‘சர்வத்தையும் அன்பாய்’ (பாமாலை 386) உள்ளிட்ட ஏராளமான பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கேத்தரின் அம்மையார் (Catherine Winkworth, 1827–1878) இப்பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் (O darkest woe! Ye tears, forth flow!).

Catherine Winkworth (1827–1878)
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டரில் (Manchester, England) தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த கேத்தரின் அம்மையார், ஜெர்மனியின் ட்ரெஸ்டன் (Dresden) நகரில் சில காலம் தங்கியிருக்க நேரிட்டது. 1854ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் உள்ள பாடல்களினால் கவரப்பட்டு, Lyra Germanica என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை கேத்ரின் அம்மையார் வெளியிட்டார். 1858ம் ஆண்டு இதே போன்றதொரு ஜெர்மன் மொழி பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை மீண்டும் ஒரு புத்தகமாக வெளியிட்டார். 1863ம் ஆண்டு The Chorale Book for England மற்றும் 1869ம் ஆண்டு Christian Singers of Germany ஆகிய புத்தகங்கள் இவர் முயற்சியினால் வெளியாயின.  ஜெர்மன் இசைப் பாரம்பரியத்தில் வெளிவந்த அநேக பாடல்கள் இவரது அயராத உழைப்பினால் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலச் சபைகளுக்குள் வந்து சேர்ந்தது.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1. என் மனது
துடிக்குது,
குலை பதைத்து நோகும்;
தெய்வ மைந்தனின் சவம்
கல்லறைக்குப் போகும்.

2. ஆ, அவரே,
மரத்திலே
அறையப்பட்டிறந்தார்;
கர்த்தர் தாமே பாவியின்,
சாவத்தைச் சுமந்தார்.

3. என் பாவத்தால்,
என் தீங்கினால்
இக்கேடுண்டாயிருக்கும்;
ஆகையால் என்னுள்ளத்தில்
தத்தளிப்பெடுக்கும்.

4. என் ஆண்டவர்,
என் ரட்சகர்
வதைந்த மேனியாக
ரத்தமாய்க் கிடக்கிறார்
என் ரட்சிப்புக்காக.

5. வெட்டுண்டோரே,
ஆ, உம்மையே
பணிந்தேன் ஆவி பேணும்;
ஆகிலும் என் நிமித்தம்,
நான் புலம்பவேண்டும்.

6. குற்றமற்ற
கர்த்தாவுட
அனலாம் ரத்தம் ஊறும்;
மனஸ்தாபமின்றி ஆர்
அதைப் பார்க்கக்கூடும்.

7. ஆ, இயேசுவே,
என் ஜீவனே,
நீர் கல்லறைக்குள்ளாக
வைக்கப்பட்டதைத் தினம்
நான் சிந்திப்பேனாக.

8. நான் மிகவும்
எந்நேரமும்
என் மரணநாள் மட்டும்,
என் கதியாம் இயேசுவே,
உம்மை வாஞ்சிக்கட்டும்.


Photos Credits - hymnary.org

Post Comment

Wednesday, May 22, 2019

பாமாலை 95 - மாட்சி போரை போரின் ஓய்வை

பாமாலை 95 – மாட்சி போரை போரின் ஓய்வை
(Sing my tongue the glorious battle)

பாடலின் மூலம் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தப்பாடலின் மூல வடிவத்தை, ஃபோர்துனாதஸ் [Venantius Honorius Fortunatus Clementianus (c.530-609)] என்ற பேராயர் எழுதினார். தனது இளவயதிலேயே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஃபோர்துனாதஸ், அச்சிறுவயதில் பார்வைத்திறன் குறைந்தவராய் இருந்தார். St Martin of Tours என்ற ஆலயத்திலுள்ள விளக்கிலிருந்த எண்ணெயை இவர் கண்களில் பூசியதன் மூலம் இவர் பார்வை தெளிவுபெற்றது’ என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஃபோர்துனாதஸ் இப்பாடலை 10 சரணங்கள் கொண்டதாக எழுதினார். அதன் முதல் 5 சரணங்கள் லெந்து காலத்திலும், அடுத்த 5 சரணங்கள் புனித வெள்ளி ஆராதனையிலும் பாடப்பட்டன என்று கருதப்படுகிறது.

6ம் நூற்றாண்டில் ஃபோர்துனாதஸ் எழுதிய இப்பாடல் 12ம் நூற்றாண்டில் தாமஸ் [Saint Thomas Aquinas (1225-1274)] என்ற போதகரால் ” “Pange Lingua Gloriosi Corporis Mysterium” என்ற கவிதை வடிவம் பெற்றது.  பின்னர் 19ம் நூற்றாண்டில் இப்பாடலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜான் (John Mason Neale) என்பவர் எழுதி வெளியானது.

Rev Fr John Mason Neale
ஜான் மேசன் நீல் பண்டிதர் 1818ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தவர்.  அவரது தந்தை ஆங்கிலச் சபையைச் சேர்ந்த ஒரு போதகர்.  ஜான் மேசன் கல்லூரிப் படிப்பைக் கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியில் முடித்தார். இங்கு மாணவனாயிருக்கும்போது கிறிஸ்தவச் செய்யுள் எழுதும் போட்டிகளில் பதினொருமுறை பரிசுகள் பெற்றார்.  திருச்சபை மறையில் ‘ஆக்ஸ்வர்டு குழு’வை அவர் ஆதரித்ததால், ஆங்கிலச் சபையில் உயர்பதவிகள் அவருக்குக் கொடுக்கப்படவில்லை.  உடல்நிலை குன்றியதால், இரு ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் வசிக்கவேண்டிவந்தது.  அவர் ஒரு சிறந்த கல்விமான்.  ஆங்கிலம் உட்பட 20 மொழிகள் கற்றிருந்தார்.  திருச்சபை வரலாறு, ஆலயக் கட்டிடங்கள் முதலியவற்றைக் குறித்த பல நூல்கள் எழுதியிருந்தார்.  மேலும், பல பாடல்கள் எழுதியதுடன், கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து, ஏராளமான பாடல்களை மொழிபெயர்த்தார்.  அவரது சிறந்த அறிவையும், கிறிஸ்தவச் சேவையையும் பாராட்டி, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் அவருக்குப் பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.


ஜான் மேசன் நீல் பண்டிதர் 1866ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 6ம் தேதி ஈஸ்ட்டு கிரின்ஸ்டெட் என்னுமிடத்தில் தமது 48ம் வயதில் மறுமைக்குட்பட்டார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1.    மாட்சி போரை போரின் ஓய்வை
பாடு என்தன் உள்ளமே;
மாட்சி வெற்றி சின்னம் போற்றி
பாடு வெற்றி கீதமே;
மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர்
மாண்டு பெற்றார் வெற்றியே.

2.    காலம் நிறைவேற, வந்தார்
தந்தை வார்த்தை மைந்தனாய்;
ஞாலம் வந்தார், வானம் நீத்தே
கன்னித் தாயார் மைந்தனாய்;
வாழ்ந்தார் தெய்வ மாந்தனாக
இருள் நீக்கும் ஜோதியாய்.

3.    மூன்று பத்து ஆண்டின் ஈற்றில்
விட்டார் வீடு சேவைக்காய்!
தந்தை சித்தம் நிறைவேற்றி
வாழ்ந்தார்; தந்தை சித்தமாய்
சிலுவையில் தம்மை ஈந்தார்
தூய ஏக பலியாய்.

4.    வெற்றி சின்ன சிலுவையே,
இலை மலர் கனியில்
ஒப்புயர்வு அற்றாய் நீயே!
மேலாம் தரு பாரினில்!
மீட்பின் சின்னம் ஆனாய்; மீட்பர்
தொங்கி மாண்டனர் உன்னில்.

5.    பிதா சுதன் ஆவியான
தூயராம் திரியேகரே,
இன்றும் என்றும் சதாகாலம்
மாட்சி ஸ்தோத்ரம் ஏற்பீரே;
மாட்சி ஸ்தோத்ரம் நித்திய காலம்
உன்னதத்தில் உமக்கே.

Post Comment