பாமாலை 104 – என் மனது
துடிக்குது
(O Traurigkeit, o Herzeleid)
O darkest woe!
Ye tears, forth flow!
Johann Rist |
"O Traurigkeit, o
Herzeleid" என்ற இப்பாடல் ஜெர்மானிய மொழியில் Johann Rist என்பவரால் எழுதப்பட்டது. எட்டு சரணங்கள் கொண்ட இப்பாடல், புனித வெள்ளி ஆராதனைகளில்
பாடப்படுவதற்கென்று ஜோஹன் இயற்றி, 1641ம் ஆண்டு முதன்முதலில் அச்சில் வெளியிடப்பட்டது.
ஜெர்மன் மொழியில் இயற்றப்பட்ட ‘சர்வத்தையும் அன்பாய்’ (பாமாலை
386) உள்ளிட்ட ஏராளமான பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கேத்தரின் அம்மையார்
(Catherine Winkworth, 1827–1878) இப்பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் (O
darkest woe! Ye tears, forth flow!).
Catherine Winkworth (1827–1878) |
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டரில்
(Manchester, England) தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த
கேத்தரின் அம்மையார், ஜெர்மனியின் ட்ரெஸ்டன் (Dresden)
நகரில் சில காலம் தங்கியிருக்க நேரிட்டது. 1854ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் உள்ள பாடல்களினால்
கவரப்பட்டு, Lyra Germanica என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை கேத்ரின்
அம்மையார் வெளியிட்டார். 1858ம் ஆண்டு இதே போன்றதொரு ஜெர்மன் மொழி பாடல்களின் ஆங்கில
மொழிபெயர்ப்பை மீண்டும் ஒரு புத்தகமாக வெளியிட்டார். 1863ம் ஆண்டு The Chorale Book
for England மற்றும்
1869ம் ஆண்டு Christian
Singers of Germany ஆகிய
புத்தகங்கள் இவர் முயற்சியினால் வெளியாயின.
ஜெர்மன் இசைப் பாரம்பரியத்தில் வெளிவந்த அநேக பாடல்கள் இவரது அயராத உழைப்பினால்
மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலச் சபைகளுக்குள் வந்து சேர்ந்தது.
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1.
என் மனது
துடிக்குது,
குலை
பதைத்து நோகும்;
தெய்வ
மைந்தனின் சவம்
கல்லறைக்குப்
போகும்.
2.
ஆ, அவரே,
மரத்திலே
அறையப்பட்டிறந்தார்;
கர்த்தர்
தாமே பாவியின்,
சாவத்தைச்
சுமந்தார்.
3.
என் பாவத்தால்,
என்
தீங்கினால்
இக்கேடுண்டாயிருக்கும்;
ஆகையால்
என்னுள்ளத்தில்
தத்தளிப்பெடுக்கும்.
4.
என் ஆண்டவர்,
என்
ரட்சகர்
வதைந்த
மேனியாக
ரத்தமாய்க்
கிடக்கிறார்
என்
ரட்சிப்புக்காக.
5.
வெட்டுண்டோரே,
ஆ,
உம்மையே
பணிந்தேன்
ஆவி பேணும்;
ஆகிலும்
என் நிமித்தம்,
நான்
புலம்பவேண்டும்.
6.
குற்றமற்ற
கர்த்தாவுட
அனலாம்
ரத்தம் ஊறும்;
மனஸ்தாபமின்றி
ஆர்
அதைப்
பார்க்கக்கூடும்.
7.
ஆ, இயேசுவே,
என்
ஜீவனே,
நீர்
கல்லறைக்குள்ளாக
வைக்கப்பட்டதைத்
தினம்
நான்
சிந்திப்பேனாக.
8.
நான் மிகவும்
எந்நேரமும்
என்
மரணநாள் மட்டும்,
என்
கதியாம் இயேசுவே,
உம்மை
வாஞ்சிக்கட்டும்.
Photos Credits - hymnary.org
No comments:
Post a Comment