Wednesday, May 22, 2019

பாமாலை 95 - மாட்சி போரை போரின் ஓய்வை

பாமாலை 95 – மாட்சி போரை போரின் ஓய்வை
(Sing my tongue the glorious battle)

பாடலின் மூலம் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தப்பாடலின் மூல வடிவத்தை, ஃபோர்துனாதஸ் [Venantius Honorius Fortunatus Clementianus (c.530-609)] என்ற பேராயர் எழுதினார். தனது இளவயதிலேயே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஃபோர்துனாதஸ், அச்சிறுவயதில் பார்வைத்திறன் குறைந்தவராய் இருந்தார். St Martin of Tours என்ற ஆலயத்திலுள்ள விளக்கிலிருந்த எண்ணெயை இவர் கண்களில் பூசியதன் மூலம் இவர் பார்வை தெளிவுபெற்றது’ என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஃபோர்துனாதஸ் இப்பாடலை 10 சரணங்கள் கொண்டதாக எழுதினார். அதன் முதல் 5 சரணங்கள் லெந்து காலத்திலும், அடுத்த 5 சரணங்கள் புனித வெள்ளி ஆராதனையிலும் பாடப்பட்டன என்று கருதப்படுகிறது.

6ம் நூற்றாண்டில் ஃபோர்துனாதஸ் எழுதிய இப்பாடல் 12ம் நூற்றாண்டில் தாமஸ் [Saint Thomas Aquinas (1225-1274)] என்ற போதகரால் ” “Pange Lingua Gloriosi Corporis Mysterium” என்ற கவிதை வடிவம் பெற்றது.  பின்னர் 19ம் நூற்றாண்டில் இப்பாடலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜான் (John Mason Neale) என்பவர் எழுதி வெளியானது.

Rev Fr John Mason Neale
ஜான் மேசன் நீல் பண்டிதர் 1818ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ம் தேதி லண்டன் மாநகரில் பிறந்தவர்.  அவரது தந்தை ஆங்கிலச் சபையைச் சேர்ந்த ஒரு போதகர்.  ஜான் மேசன் கல்லூரிப் படிப்பைக் கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியில் முடித்தார். இங்கு மாணவனாயிருக்கும்போது கிறிஸ்தவச் செய்யுள் எழுதும் போட்டிகளில் பதினொருமுறை பரிசுகள் பெற்றார்.  திருச்சபை மறையில் ‘ஆக்ஸ்வர்டு குழு’வை அவர் ஆதரித்ததால், ஆங்கிலச் சபையில் உயர்பதவிகள் அவருக்குக் கொடுக்கப்படவில்லை.  உடல்நிலை குன்றியதால், இரு ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் வசிக்கவேண்டிவந்தது.  அவர் ஒரு சிறந்த கல்விமான்.  ஆங்கிலம் உட்பட 20 மொழிகள் கற்றிருந்தார்.  திருச்சபை வரலாறு, ஆலயக் கட்டிடங்கள் முதலியவற்றைக் குறித்த பல நூல்கள் எழுதியிருந்தார்.  மேலும், பல பாடல்கள் எழுதியதுடன், கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து, ஏராளமான பாடல்களை மொழிபெயர்த்தார்.  அவரது சிறந்த அறிவையும், கிறிஸ்தவச் சேவையையும் பாராட்டி, அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் அவருக்குப் பண்டிதர் (Doctor of Divinity) பட்டம் அளித்தது.


ஜான் மேசன் நீல் பண்டிதர் 1866ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 6ம் தேதி ஈஸ்ட்டு கிரின்ஸ்டெட் என்னுமிடத்தில் தமது 48ம் வயதில் மறுமைக்குட்பட்டார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1.    மாட்சி போரை போரின் ஓய்வை
பாடு என்தன் உள்ளமே;
மாட்சி வெற்றி சின்னம் போற்றி
பாடு வெற்றி கீதமே;
மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர்
மாண்டு பெற்றார் வெற்றியே.

2.    காலம் நிறைவேற, வந்தார்
தந்தை வார்த்தை மைந்தனாய்;
ஞாலம் வந்தார், வானம் நீத்தே
கன்னித் தாயார் மைந்தனாய்;
வாழ்ந்தார் தெய்வ மாந்தனாக
இருள் நீக்கும் ஜோதியாய்.

3.    மூன்று பத்து ஆண்டின் ஈற்றில்
விட்டார் வீடு சேவைக்காய்!
தந்தை சித்தம் நிறைவேற்றி
வாழ்ந்தார்; தந்தை சித்தமாய்
சிலுவையில் தம்மை ஈந்தார்
தூய ஏக பலியாய்.

4.    வெற்றி சின்ன சிலுவையே,
இலை மலர் கனியில்
ஒப்புயர்வு அற்றாய் நீயே!
மேலாம் தரு பாரினில்!
மீட்பின் சின்னம் ஆனாய்; மீட்பர்
தொங்கி மாண்டனர் உன்னில்.

5.    பிதா சுதன் ஆவியான
தூயராம் திரியேகரே,
இன்றும் என்றும் சதாகாலம்
மாட்சி ஸ்தோத்ரம் ஏற்பீரே;
மாட்சி ஸ்தோத்ரம் நித்திய காலம்
உன்னதத்தில் உமக்கே.

Post Comment

No comments:

Post a Comment