Monday, May 27, 2019

பாமாலை 105 - என்னுடைய சாவின் சாவே

பாமாலை 105 – என்னுடைய சாவின் சாவே
(Jesu, meines Lebens Leben)
Christ, the Life of all the Living

ஜெர்மனியில் உள்ள லுத்ரன் திருச்சபையைச் சேர்ந்த எர்னஸ்ட் ஹோம்பர்க் (Ernst Christoph Homburg) என்ற 17ம் நூற்றாண்டுக் கவிஞர் இப்பாடலை இயற்றினார். ஜெர்மனியின் Mihla நகரில் 1605ம் ஆண்டு பிறந்த இவர், தான் வாழ்ந்த காலத்தில் தன் சக கவிஞர்களுள் முதன்மையானவராய் அறியப்படுகிறார்.  எர்னஸ்ட்டின் ஆரம்பகால கவிதைகள், காதல் மற்றும் மதுவைக் குறித்தனவாக இருந்தன.  அவர் வாழ்விலும், அவர்தம் மனைவியின் வாழ்விலும் நேர்ந்த எண்ணற்ற துன்பங்களிலிருந்து ஆண்டவர் தந்த விடுதலை, அவரை இறைவனை நோக்கித் திருப்பியது. தொடர்ந்து ஜெர்மன் மொழியில் அநேகம் பாடல்களை எர்னஸ்ட் எழுதினார்.


Catherine Winkworth, 1827–1878
ஜெர்மன் மொழியில் இயற்றப்பட்ட ஏராளமான பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கேத்தரின் அம்மையார் (Catherine Winkworth, 1827–1878) இப்பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் (Christ, the Life of all the Living).  இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டரில் (Manchester, England) தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த கேத்தரின் அம்மையார், ஜெர்மனியின் ட்ரெஸ்டன் (Dresden) நகரில் சில காலம் தங்கியிருக்க நேரிட்டது. 1854ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் உள்ள பாடல்களினால் கவரப்பட்டு, Lyra Germanica என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை கேத்ரின் அம்மையார் வெளியிட்டார். 1858ம் ஆண்டு இதே போன்றதொரு ஜெர்மன் மொழி பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை மீண்டும் ஒரு புத்தகமாக வெளியிட்டார். 1863ம் ஆண்டு The Chorale Book for England மற்றும் 1869ம் ஆண்டு Christian Singers of Germany ஆகிய புத்தகங்கள் இவர் முயற்சியினால் வெளியாயின.  ஜெர்மன் இசைப் பாரம்பரியத்தில் வெளிவந்த அநேக பாடல்கள் இவரது அயராத உழைப்பினால் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலச் சபைகளுக்குள் வந்து சேர்ந்தது.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1. என்னுடைய சாவின் சாவே,
என் உயிரின் ஜீவனே,
என்னை மீட்க நீர், கர்த்தாவே,
தெய்வ கோபத் தீயிலே
பாய்ந்து, மா அவஸ்தையாக
பட்ட கன வாதைக்காக
உமக்காயிரம் தரம்
இயேசுவே, சங்கீர்த்தனம்.

2. கேட்டின் சங்கிலிகளுக்கு
என்னை நீங்கலாக்கவே,
உம்மைத் தீயோர் துஷ்டத்துக்கு
நீரே, தெய்வமைந்தனே,
சூறையிட்டு, கள்ளனாக
கட்டப்பட்ட நிந்தைக்காக
உமக்காயிரம் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

3. நான் சுகிக்க நீர் இக்கட்டு,
துன்பம், வாதை, நோவிடர்,
குட்டறை பொல்லாப்பும்பட்டு,
வாரடியும் பட்டவர்,
ஆசீர்வாதமே உண்டாக
சாபமானீர் எனக்காக;
உமக்காயிரம் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

4. ஜீவ கிரீடம் நான் தரித்து,
வாழவும் உயரவும்
தூஷண மெல்லாம் சகித்து,
நிந்தை துப்புதலையும்
ஏற்றுக்கொண்டு எண்ணமற்ற
முள் முடியால் சூட்டப்பட்ட
உமக்காயிரம் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

5. நான், நான் ஆக்கினைப்படாமல்
பூரிப்பாய் மகிழவே,
சுய தேகத்தைப் பாராமல்,
வாதிப்பாரின் இச்சைக்கே
அதைவிட்டு, கள்ளர்கிட்ட
தூக்கப்பட்டோராய்த் தவித்த
உமக்காயிரம் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

6. என் அநியாயத்தைக் கழித்து,
என்னை மீட்டுவிடவே
நோவு யாவும் உத்தரித்து,
நல்ல மனதுடனே
ரத்தம் சிந்தி மா நிர்ப்பந்த
சிலுவையிலே இறந்த
உமக்காயிரம் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

7. உம்முடைய பணிவாலே
என் இடும்பின் ஆக்கினை,
உம்முடைய நிந்தையாலே
என்னுடைய சிறுமை
தீரும்; உம்முடைய சாவு
சாவில் எனக்கான தாவு.
உமக்காயிரம் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.

8. இயேசுவே, நீர் சாந்தமாக
உள்ளேயும் புறம்பேயும்
ஜீவன் போகுமளவாக
பட்ட பாடனைத்துக்கும்
என்ன சொல்வேன்! எனக்காகப்
பட்டீரென்று தாழ்மையாக
உம்மை நான் வணங்குவேன்,
என்றென்றைக்கும் போற்றுவேன்.

Post Comment

No comments:

Post a Comment