பாமாலை 109 – மரிக்கும்
மீட்பர் ஆவியும்
(Die Seele Christi heil'ge mich)
Angelus Silesius |
இப்பாடலை இயற்றியவர் போதகர்
ஏஞ்ஜலஸ் (Angelus Silesius). இவரது இயற்பெயர் ஜோஹன் (Johann Scheffler). இவர் 1624ம் ஆண்டு
செலிஸியாவில் (Silesia) பிறந்தார். இவர் பெற்றோர், பாரம்பரியம் மிக்க லுத்ரன் திருச்சபையைச்
சேர்ந்தவர்கள். பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் (University
of Strassburg) மருத்துவத்தில் பட்டம் பெற்ற இவர், தொடர்ந்து ஆயர் பட்டம் பெற்று, 1653ம்
ஆண்டு, கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்து இறைப்பணியிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்.
ரோமப் பேரரசர் ஃப்ரெடினாட் (Ferdinand III) என்பவரின் அரசவையில் மருத்துவராகவும் இவர்
நியமிக்கப்பட்டுப் பணிபுரிந்தார். முன்னதாக அவர் பாடல்கள் எழுதுவதிலும் புலமை பெற்றிருந்தார்.
ஜெர்மன் மொழியில் ஏஞ்ஜலஸ் எழுதிய இருநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள், இன்றும் உலகமெங்கிலும்
பல்வேறு மொழிகளில் பாடப்படுகின்றன.
இறைப்பணிக்கென ஏஞ்சலஸ் தம்மை
அர்ப்பணித்தபிறகு மருத்துவத் தொழிலைக் கைவிட்டுப் பாடல்கள் எழுதுவதிலும், திருச்சபைப்
பணிகளிலும் கவனம் செலுத்தத் துவங்கினார். கத்தோலிக்கத்
திருச்சபையில் இணைந்தபிறகு, ப்ராட்டஸ்டண்ட் திருச்சபைகளைக் குறித்து இவர் எழுப்பிய
பல்வேறு விமர்சனங்கள் மிகுந்த சர்ச்சைக்குள்ளாயின. இதன் காரணமாக துவக்க காலங்களில்
இவருடைய பாடல்களை அச்சில் வெளியிடுவதற்காக அனுமதி கேட்டபோதும் திருச்சபையில் அதற்கான
அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் மிகுந்த போராட்டத்துக்குப் பின் அனுமதி வழங்கப்பட்டு,
ப்ராட்டஸ்டண்ட் திருச்சபைகளின் பாடல் புத்தகங்களில் இடம்பெற்றபோதும், ஏஞ்சலஸின் பெயரைக்
குறிப்பிடாமல் இப்பாடல்கள் அச்சிடப்பட்டன. சிலுவைப் பாடுகளைக் குறித்ததான இவரது பாடல்கள்
இன்றளவும் உலகமெங்குமுள்ள பல்வேறு திருச்சபைகளில் பாடப்படுகின்றன. ஏஞ்சலஸ் 9 ஜுலை
1677ம் ஆண்டு நோயுற்று இறந்தார். ஏஞ்ஜலஸின் மறைவிற்குப் பின்னர் அவரது உயிலின்படி,
அவரது சொத்துகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டன.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. மரிக்கும்
மீட்பர் ஆவியும்,
வதைக்கப்பட்ட
தேகமும்,
என் ஆவி
தேகம் உய்யவே
என்றைக்கும்
காக்கத்தக்கதே.
2. அவர்
விலாவில் சாலவும்
வடிந்த நீரும்
ரத்தமும்
என் ஸ்நானமாகி,
பாவத்தை
நிவிர்த்தி
செய்யத்தக்கதே.
3. அவர்
முகத்தின் வேர்வையும்
கண்ணீர்,
அவஸ்தை துக்கமும்,
நியாயத்தீர்ப்பு
நாளிலே
என் அடைக்கலம்
ஆகுமே.
4. அன்புள்ள
இயேசு கிறிஸ்துவே,
ஒதுக்கை
உம்மிடத்திலே
விரும்பித்
தேடும் எனக்கும்
நீர் தஞ்சம்
ஈந்து ரட்சியும்.
5. என் ஆவி
போகும் நேரத்தில்
அதை நீர்
பரதீசினில்
சேர்த்தென்றும்
உம்மைப் போற்றவே
அழைத்துக்கொள்ளும்,
கர்த்தரே.
No comments:
Post a Comment