Tuesday, May 5, 2020

பாமாலை 217 - பிதாவே மெய்விவாகத்தை (Erk)

பாமாலை 217 – பிதாவே மெய்விவாகத்தை
(Herr gott der du den ebestand)

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




1. பிதாவே, மெய் விவாகத்தை
கற்பித்துக் காத்து வந்தீர்;
நீர் அதினாலே மாந்தரை
இணைத்து வாழ்வைத் தந்தீர்;
அதற்கெப்போதும் கனமும்
மிகுந்த ஆசீர்வாதமும்
நீர்தாமே வரப்பண்ணும்.

2. நன்னாளிலும் துன்னாளிலும்
மனம் பொருந்தச் செய்யும்;
இவர்கள் இரு பேரையும்
அன்பில் நிலைக்கப்பண்ணும்;
உம்மை முன்னிட்டு ஏதெதை
செய்வார்களோ, நீரே அதை
நன்றாக வாய்க்கப்பண்ணும்.

3. ஆ ஜீவ ஊற்றாம் இயேசுவே,
நீர் ஜீவன் ஈகிறீரே;
ஆத்துமத்தையும் நித்தமே
நீர் தேற்றி நிற்கிறீரே;
ஆ, ஞான மணவாளனே
என்றைக்கும் அடியாருக்கே
குறைச்சல் ஒன்றும் இல்லை.



Post Comment

No comments:

Post a Comment