SS 866 – என் பாவம் தீர்ந்த
நாளையே
(O Happy Day)
Philip Doddridge |
‘என் பாவம் தீர்ந்த
நாளையே’ பாடலை எழுதியவர் ஃபிலிப் டாரிட்ஜ் [Philip Doddridge (1702-1751)]. 20 சகோதரர்களுள்
ஒருவராக ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்த ஃபிலிப், இங்கிலாந்தின் பாரம்பரியத் திருச்சபைகளின்பால்
ஈர்ப்பற்று, சுயாதீனத் திருச்சபைகளில் ஊழியம் செய்து வந்தார். சமூகத்தில் ஒடுக்கப்பட்டோரிடையே ஊழியம் செய்வதில்
ஆர்வம் கொண்டிருந்த ஃபிலிப், தம் வாழ்நாளில் சற்றேறக்குறைய 400 பாடல்களையும் எழுதியுள்ளார்.
தான் சிறுவயதில் கடவுளோடே செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூறும் விதமாக ‘என் பாவம்
தீர்ந்த நாளையே’ எனும் இப்பாடலை ஃபிலிப் எழுதியிருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள்
தெரிவிக்கின்றனர். இப்பாடல் பெரும்பாலும் ஞானஸ்நான
ஆராதனைகளிலும், திடப்படுத்தல் ஆராதனைகளிலும், ஆண்டவரோடு நாம் கொள்ளும் உடன்படிக்கையின்
அடையாளமாகப் பாடப்படுகிறது.
UnisonSoprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1. என் பாவம் தீர்ந்த நாளையே
அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்
இன்பநாள்!
இன்பநாள்!
என்
பாவம் தீர்ந்துபோன நாள்!
பேரன்பர்
என்னை ரட்சித்தார்
சீராக்கி
இன்பம் நல்கினார்
இன்பநாள்!
இன்பநாள்!
என்
பாவம் தீர்ந்துபோன நாள்!
2. இம்மானுவேல் இப்பாவியைத்
தம் சொந்தமாக்கிக் கொண்டனர்.
சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்
தந்தென்னை அன்பாய்ச் சேர்த்தனர்.
3. என் உள்ளமே, உன் மீட்பரை
என்றைக்கும் சார்ந்து வாழுவாய்.
ஆருயிர் தந்த நாதரை
ஓர்காலும் விட்டு நீங்கிடாய்.
4. ஆட்கொண்ட நாதா! எந்தனை
நாடோறும் தத்தஞ் செய்குவேன்
பின் மோட்ச வீட்டில் பேரன்பை
இன்னோசையாலே பாடுவேன்.
1. O happy day that fixed my choice
On
Thee, my Savior and my God!
Well
may this glowing heart rejoice,
And
tell its raptures all abroad.
Chorus:
Happy
day, happy day,
When
Jesus washed my sins away!
He
taught me how to watch and pray,
And
live rejoicing ev'ry day;
Happy
day, happy day,
When
Jesus washed my sins away.
2. 'Tis done– the great transaction's done;
I
am my Lord's, and He is mine;
He
drew me and I followed on,
Rejoicing
in the call divine. [Chorus]
3. Now rest, my long divided heart,
Fixed
on this blissful center, rest;
Here
have I found a nobler part,
Here
heav'nly pleasures fill my breast. [Chorus]
4. High heav'n that hears the solemn vow,
That
vow renewed shall daily hear;
Till
in life's latest hour I bow,
And
bless, in death, a bond so dear. [Chorus]
No comments:
Post a Comment