Friday, May 22, 2020

பாமாலை 240 - என்னிடத்தில் பாலர் யாரும் (Alleluya)

பாமாலை 240 – என்னிடத்தில் பாலர் யாரும்
Tune: Alleluya

Meter: 8, 7, 8, 7, D

Samuel Sebastian Wesley
இப்பாடலை எழுதியவர் யார் என்ற தகவல் இல்லை.  பாடலுக்கான Alleluya எனும் இந்த ராகத்தை இயற்றியவர் சாமுவேல் வெஸ்லி (Samuel Wesley). இவரது காலை 1810-1876.  இங்கிலாந்தில் பிறந்த இவர் Chapel Royal பாடகர் குழுவில் இருந்து பின்னர் ஆர்கன் இசைப்பதில் தேர்ச்சி பெற்று இசைக்கத் துவங்கினார்.  சாமுவேல் தனது தந்தை Charles Wesley அவர்களிடமிருந்து ஆர்கன் இசைக்கப் பயின்று அவரிடமிருந்தே பாடல்கள் இயற்றவும் கற்றுக்கொண்டார்.  இங்கிலாந்தின் பல்வேறு தேவாலயங்களில் ஆரகினிஸ்டாகப் பணிபுரிந்த சாமுவேல், ஆலயப் பாடகர் குழுவின் பாடும் திறனையும், பாடல்களின் தரத்தையும் மேம்படுத்தும் ஊழியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, அதைக் குறித்த தனது ஆய்வு முடிவுகளை ”A Few Words on Cathedral Music and the Music System of the Church” என்ற புத்தகமாக வெளியிட்டார். இது தவிர இன்னும் பல்வேறு பாடல் தொகுப்புகளில் ஈடுபட்ட சாமுவேல் தன் வாழ்நாளில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1. “என்னிடத்தில் பாலர் யாரும்
வரவேண்டும்” என்கிறார்;
“இப்பேர்ப்பட்டவர் எல்லாரும்
வான ராஜ்யம் அடைவார்”,
என்று சொல்லி, நேசக் கையில்
இயேசு ஏந்தி அணைத்தார்;
பாலர் அவரை உள்ளத்தில்
அன்பாய் எண்ணிப் போற்றுவார்

2. “தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா! மா ஸ்தோத்திரம்!
என்று பாடி, சீயோனுக்கு
நேரே சென்ற சமயம்
வாழ்த்தல் செய்தவண்ணம் நாமும்
வாழ்த்திப் பாடி, பக்தியாய்
இயேசுவை வணங்கி, என்றும்
ஸ்தோத்தரிப்போம் ஏகமாய்.

3. பாலனாய்ப் பிறந்த மீட்பர்
ராஜாவாக வருவார்
கூட வரும் தெய்வ தூதர்
மேகமீது தோன்றுவார்;
நல்லோர், தீயோர் இயேசுவாலே
தீர்ப்படையும் நேரத்தில்
பாலர் போன்ற குணத்தாரே
வாழ்வடைவார் மோட்சத்தில்.

Post Comment

No comments:

Post a Comment