பாமாலை 225 – களித்துப்
பாடு
(Nun preiset
alle)
Bavarian 132
5, 6, 5, 6, 9,
10
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano
1.
களித்துப் பாடு
தெய்வ இரக்கத்தை
நன்றாய்க் கொண்டாடு,
மெய்ச்சபையே; உன்னை
வரவழைத்துத் தயவாக
தேடினோர் அன்பைத் துதிப்பாயாக
2.
கர்த்தர் பலத்த
கையினால் ஆளுவர்,
புகழப்பட
அவரே தக்கவர்;
விண் சேனை பக்திப் பணிவாக
அவரைச் சூழ்ந்து துதிப்பதாக
3.
நிர்பந்தமான
அஞ்ஞானக் கூட்டமே,
வெளிச்சம் காண
விழிக்க வேண்டுமே;
உம் மீட்பராலே எந்தத் தீங்கும்
பாவத்தின் தோஷமும் எல்லாம் நீங்கும்
4.
ஆகாரம் தாறார்,
தகப்பன் வண்ணமாய்
காப்பாற்றி வாறார்;
தினமும் திரளாய்
அவர் கை எவ்விடத்திலேயும்
பூரணமான இரக்கம் செய்யும்.
5.
மெய்க் கூட்டத்தாரே,
கர்த்தரைப் பாடுங்கள்;
பூலோகத்தாரே,
துதிக்க வாருங்கள்
இங்கினிப் பயமே இராது;
கிறிஸ்துவின் சபையே, போற்றிப் பாடு
No comments:
Post a Comment