Friday, May 15, 2020

பாமாலை 228 - ஆ வானம் பூமி (Breslau)

பாமாலை 228 – ஆ வானம் பூமி யாவையும்
Breslau L.M.

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano







































1. , வானம் பூமி யாவையும்
அமைத்து ஆளும் கர்த்தரே,
உமது ஞானம் சத்தியம்
அளவில் அடங்காததே.

2. உமக்கு வானம் ஆசனம்,
பூதலம் பாதப்படியாம்;
எங்களுக்கு இருப்பிடம்
கிடைத்தது மா தயையாம்.

3. இவ்வீட்டில் நாங்கள் வசித்து,
பக்தியோடும்மைப் போற்றுவோம்
இடைவிடாமல் துதித்து,
கொண்டாடித் தாழ்ந்து சேவிப்போம்.

4. இங்கே இருக்கும் நாள்மட்டும்
உற்சாகத்தோடு உமக்கே
அடங்கி நாங்கள் நடக்கும்
குணத்தைத் தாரும் கர்த்தரே.

5. ஜீவன் பிரியும் நேரத்தில்
உம்மண்டை வந்து சேரவும்,
முடிவில்லாத இன்பத்தில்
நற்பங்கடையவும் செய்யும்.

6. இகத்திலும் பரத்திலும்
செங்கோல் செலுத்தும் நாதரே,
உமக்கு நித்திய காலமும்
துதி உண்டாவதாகவே!

Post Comment

No comments:

Post a Comment