Tuesday, July 24, 2012

பாமாலை 52-நீர் வாரும் கர்த்தாவே

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1.  நீர் வாரும் கர்த்தாவே
ராக்காலம் சென்று போம்
மா அருணோதயம் காணவே
ஆனந்தம் ஆகுவோம்.

2.  நீர் வாரும் பக்தர்கள்
களைத்துச் சோர்கின்றார்
நல்லாவி மணவாட்டியும்
நீர் வாரும் என்கிறார்

3.  நீர் வாரும் சிஷ்டியும்
தான் படும் துன்பத்தால்
ஏகோபித்தேங்கி ஆவலாய்
தவித்து நிற்பதால்

4.  நீர் வாரும் ஆண்டவா
மாற்றாரைச் சந்திப்பீர்
இருப்புக்கோலால் தண்டித்து
கீழாக்கிப் போடுவீர்

5.  நீர் வாரும் இயேசுவே
பயிர் முதிர்ந்ததே
உம் அரிவாளை நீட்டுமேன்
மா நீதிபரரே

6.  நீர் வாரும் வையத்தில்
பேர் வாழ்வை நாட்டுவீர்
பாழான பூமி முற்றிலும்
நீர் புதிதாக்குவீர்

7.  நீர் வாரும் ராஜாவே
பூலோகம் ஆளுவீர்
நீங்காத சமாதானத்தின்
செங்கோல் செலுத்துவீர்.

Post Comment

Monday, July 23, 2012

பாமாலை 210 - திருச்சபை காத்திருக்க (Everton)

பாமாலை 210 – திருச்சபை காத்திருக்க
(Lord, her watch Thy Church is keeping)
Tune: Everton

திருச்சபை காத்திருக்க’ எனும் இப்பாடல், நம் பாமாலைப் புத்தகத்தில் ‘சுவிசேஷப் பிரபல்லியம்’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலை எழுதிய ஹென்றி டௌன்டன் (Henry Downton), 1818ம் ஆண்டு இங்கிலாந்தின் ஷ்ராப்ஷெயர் (Pulverbatch, Shropshire) பகுதியில் பிறந்தார். Cambridge Trinity College’ல் BA மற்றும் MA பயின்ற இவர், 1857ம் ஆண்டு ஜெனிவாவிற்கு Chaplainஆகப் பணிபுரியச் சென்றார். தம் வாழ்நாளில் ஏராளமான பிரஞ்சு மொழி பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியில் ஈடுபட்ட இவர், "Another year, another year" "For Thy mercy, and Thy grace", " Harp awake, tell out the story" உள்ளிட்ட ஏராளமான பாடல்களை எழுதினார். Lord, her watch Thy Church is keepingஎனும் இப்பாடலை ‘Church Missionary Society”யின் ஒரு வருடாந்திர கூடுகைக்காக 1866ம் ஆண்டு எழுதினார். Ancient & Modern பாடல் புத்தகத்தின் முதலாம் பதிப்பு வெளிவந்த சில நாட்களுக்குப் பின்னர் இந்தப் பாடலை ஹென்றி பதிப்பித்தபடியால், Ancient & Modern புத்தகத்தின் முதல் பதிப்பில் இடம்பெற இயலாமல் போயிற்று. இருப்பினும் 1875ம் ஆண்டு வெளிவந்த இதன் இரண்டாம் பதிப்பில் இப்பாடல் இடம்பெற்று, இன்றளவும் உலகமெங்கும் பாடப்படுகிறது. ஹென்றி 1885ம் ஆண்டு மறுமைக்குட்பட்டார்.


Henry Thomas Smart
இப்பாடலுக்கான Everton எனும் இந்த ராகத்தை இயற்றியவர் Henry Thomas Smart.  1813ம் ஆண்டு பிறந்த இவர் தம் காலத்தின் மிகப் பிரபலமான Composer மற்றும் Organistஆக விளங்கினார்.  1879ம் ஆண்டுவரை வாழ்ந்த இவர் தம் வாழ்நாளின் கடைசி 15 வருடங்களில் பார்வைத் திறனை இழந்தார். அத்தகைய கடினமான காலகட்டத்திலும் தம் மகளிடம் இவர் இசைக்குறிப்புகளைச் சொல்ல, மகள் எழுத, இவ்வாறாகப் பாடல்களுக்கான இசையை எழுதினார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1.  திருச்சபை காத்திருக்க
எந்நாள், நாதா, வருவீர்?
எந்நாள் துக்க ரா முடிய
பகல் விடியச் செய்வீர்?
நெல் விளைந்து வாடிப்போக
அறுப்போரும் குறைந்தார்;
சாத்தான் கொள்ளை வைத்துக் கொள்ள
கிறிஸ்து வீணாயோ மாண்டார்?

2.  சிஷ்டிக்கெல்லாம் உற்ற செய்தி
கோடாகோடி கேளாரே
யார்தான் கேட்பார் சொல்வார் இன்றி?
நாதா, வார்த்தை ஈயுமே;
வார்த்தை ஈயும் சுவிசேஷ
தொனி எங்கும் ஒலித்தும்,
எல்லாத் தேசத்தாரும் திவ்விய
மீட்பைக் கேட்க செய்திடும்

3.  நீர் தெரிந்தோர் ஈறுகாலம்
ஒன்றாய் சேர்க்கப்படுவார்;
சாத்தான் கட்டப்பட்டுப் பாவம்
மாய, கிறிஸ்து ஆளுவார்;
பசி தாகம் நோவு சாவும்
கண்ணீர் யாவும் நீங்கவே
திருச்சபை காத்திருக்கும்
இயேசு ஸ்வாமி, வாருமே.

Post Comment

Sunday, July 22, 2012

பாமாலை 281 - சிலுவை மரத்திலே Tune - Wells (Bortniansky)

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. சிலுவை மரத்திலே
இயேசுவை நான் நோக்கவே
என்னைப் பார்த்தழைக்கிறார்
காயம் காட்டிச் சொல்கின்றார்
“மீட்பின் செய்கை ஆயிற்றே,
வாழ வாவேன், பாவியே”.
 
2. பாவ பலியானதால்
குத்தப்பட்டேன் ஈட்டியால்
ரத்தம் பூசப்பட்டு நீ
எனக்குன்னை ஒப்புவி
“மீட்பின் செய்கை ஆயிற்றே,
வாழ வாவேன், பாவியே”.
 
3. பான போஜனம் நானே
விருந்துண்டு வாழ்வாயே
பிதாவண்டை சேரலாம்
நேச பிள்ளை ஆகலாம்
“மீட்பின் செய்கை ஆயிற்றே,
வாழ வாவேன், பாவியே”.
 
4. சீக்கிரத்தில் வருவேன்
உன்னைச் சேர்ந்து வாழ்விப்பேன்
நித்தியானந்தம் மோட்சத்தில்
உண்டு வா என்னண்டையில்
“மீட்பின் செய்கை ஆயிற்றே,
வாழ வாவேன், பாவியே”.

Post Comment

Sunday, July 15, 2012

பாமாலை 212 - பகலோன் கதிர் (Tune - Zion's Temple)

பாமாலை 212 - பகலோன் கதிர் (Tune - Zion's Temple)

Jesus shall reign whre'er the sun


 SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1.     பகலோன் கதிர்போலுமே   
இயேசுவின் ராஜரீகமே
பூலோகத்தில் வியாபிக்கும்
நீடுழி காலம் வர்த்திக்கும்.
 
2.    பற்பல ஜாதி தேசத்தார்
அற்புத அன்பைப் போற்றுவார்
பாலரும் இன்ப ஓசையாய்
ஆராதிப்பார் சந்தோஷமாய்.
 
3.    நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே
சிரேஷ்ட பாக்கியம் தங்குமே
துன்புற்றோர் ஆறித் தேறுவார்
திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்.
 
4.    பூலோக மாந்தர் யாவரும்
வானோரின் சேனைத் திரளும்
சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்
”நீர் வாழ்க, ராயரே” என்பார்.        

Post Comment

Friday, July 13, 2012

பாமாலை 388 - எத்தனை நாவால் (Lyngham)

பாமாலை 388 – எத்தனை நாவால் பாடுவேன்
(O for a thousand tongues to sing)

’என் நாவு உமது நீதியையும், நாள் முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்’ சங் 35:28

நமது எல்லா அவயவங்களையும் கடவுள் தமது மகிமைக்காக உபயோகிப்பதற்காகவே நமக்கு அருளியிருக்கிறார்.  நமது குழந்தைகள், ‘ரெண்டு சிறு கண்கள்’ என ஆரம்பிக்கும் பாடல் ஒன்றைப் பாடுவதைக் கேட்டிருக்கிறோம்.  அதில், ‘ஓர் சின்ன நாவு அவர் சத்யம் பேச’ என்னும் ஒரு வரி உண்டு.  நமது நாவுகள் கடவுளைத் துதிப்பதற்காகவே அருளப்பட்டிருக்கின்றன.  இப்பாடலை எழுதியவர் முதல் கவியில் (ஆங்கிலத்தில்) ஆயிரம் நாவுகள் இருக்க விரும்புகிறார்.  ஆயினும், நமக்கிருக்கும் ஒரே நாவை நாம் சரியான முறையில் உபயோகிக்கிறோமா? யாக்கோபு நிருபத்தில் மூன்றாம் அதிகாரத்தில் நாவு எவ்வளவு பயங்கரமான செய்கைகளைச் செய்யக்கூடும் என விவரிக்கப்பட்டிருக்கிறது.  அது அடக்கமுடியாத ஒரு மிருகத்துக்குச் சமமானது.  ஒரே நாவினால் கடவுளைத் துதித்து, அவர் சாயலில் உண்டாக்கப்பட்ட மனிதனை சபிக்கிறோம். ‘துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது’ (யாக் 3:10). ஒருவர் ஆயிரம் நாவினால் கடவுளைத் துதிப்பதைவிட ஆயிரம் பேர் தங்கள் ஒவ்வொரு நாவினால் அவருக்கு சேவை செய்வதையே கடவுள் விரும்புகிறார்.  நியாயத்தீர்ப்பு நாளில் கடவுள் முன்னால் நிற்கும்போது, அவர் அளித்த நாவை எவ்விதம் பயன்படுத்தினோம் என்னும் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.

Charles Wesley
மெதடிஸ்டு சபையை ஸ்தாபித்த சார்ல்ஸ் வெஸ்லி (Charles Wesley) என்பவர் இரட்சிக்கப்பட்ட நாளின் முதல் ஆண்டு நிறைவு 1738ம் ஆண்டு மே மாதம், 21ம் தேதியாகும்.  இத்தினத்தின் ஞாபகார்த்தமாக ஒரு துதிப்பாடல் எழுத ஆவல்கொண்டு, பதினெட்டு கவிகளுள்ள ஒரு பாடல் எழுத ஆரம்பித்தார்.  ஆறு கவிகள் எழுதியவுடன், சில தினங்களுக்கு முன் தனது நண்பரான பீட்டர் போலர் என்பவருடன் செய்த ஒரு சம்பாஷணை அவர் ஞாபகத்துக்கு வந்தது.  இருவரும் ’கடவுளைத் துதித்தல்’ என்னும் பொருளைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘ஆயிரம் நாவுகள் எனக்கிருந்தாலும், அவை அத்தனையும் கொண்டு கடவுளையே துதிப்பேன்’ என்று பீட்டர் போலர் சொல்லியிருந்தார்.  இதை ஆதாரமாகக் கொண்டு, ‘O for a thousand tongues to sing’ என ஏழாவது கவியை ஆரம்பித்து, மீதிக் கவிகளையும் எழுதிப் பாடலை முடித்தார்.  இப்பாடலைப் பார்த்ததும், சார்ல்ஸ் வெஸ்லியின் மூத்த சகோதரனான ஜான் வெஸ்லி, முதல் ஆறு கவிகளையும் நீக்கிவிட்டு, ஏழாவது கவிமுதல், ஐந்து கவிகளை மட்டும் ஒரு பாடலாக வைத்துக்கொண்டார்.  மெதடிஸ்டு சபையின் பாட்டுப்புத்தகத்தில் இப்பாடலே முதல் பாடலாக வைக்கப்பட்டிருக்கிறது.  பல ஆண்டுகளுக்குப்பின், இப்பாடலில் சில மாற்றங்கள் செய்ய ஆரம்பித்தனர்.  இறுதியில், வெஸ்லி முதலில் எழுதிய வார்த்தைகளே வைக்கப்பட்டன.

இப்பாடலை எழுதிய சார்ல்ஸ் வெஸ்லி என்பவர், மெதடிஸ்டு சபையை ஸ்தாபித்தவரான ஜான் வெஸ்லியின் இளைய சகோதரன்.  அவர், சாமுவேல் வெஸ்லி என்னும் ஆங்கிலச் சபைப் போதகரின் பதினெட்டாவது குழந்தையாக, 1707ம் ஆண்டு டிசம்பர் மாதம், 18ம் தேதி, இங்கிலாந்தில் எப்வெர்த் குருடனையில் பிறந்தார்.  இளவயதில் வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியிலும், பின்னர் ஆக்ஸ்வர்ட் பல்கலைக்கழகத்திலும் பயின்று 1729ல் பட்டம் பெற்றார்.  கல்லூரியில் பயிலும்போது, சில மாணவர்களுடன் சேர்ந்து, ‘ஆக்ஸ்வர்ட் மெதடிஸ்டுகள்’ என்னும் ஒரு கிறிஸ்தவக் குழுவை ஆரம்பித்தார்.  இக்குழுவே பிற்காலத்தில் ‘மெதடிஸ்டு சபையாகத் தோன்றியது.  அமெரிக்காவில் ஜியார்ஜியா மாகாணத்தில் உழைத்த ஆக்ஸ்தார்ப் என்பவருக்குச் செயலாளராக வெஸ்லி இரு ஆண்டுகள் பணியாற்றியபின் இங்கிலாந்துக்குத் திரும்பி, நற்செய்திப் பணியை மேற்கொண்டார்.  ஆயினும், பாடல்கள் எழுதுவதையே தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு, 6500’க்கு அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

அவர் 1788ம் ஆண்டு, மார்ச் மாதம், 29’ம் தேதி தமது 81’வது வயதில் லண்டன் மாநகரில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    எத்தனை நாவால் பாடுவேன்
என் மீட்பர் துதியை
என் ஆண்டவர் என் ராஜனின்
மேன்மை மகிமையை.

2.    பாவிக்கு உந்தன் நாமமோ
ஆரோக்கியம் ஜீவனாம்
பயமோ துக்க துன்பமோ
ஓட்டும் இன்கீதமாம்.

3.    உமது சத்தம் கேட்குங்கால்
மரித்தோர் ஜீவிப்பார்
புலம்பல் நீங்கும் பூரிப்பால்
நிர்ப்பாக்கியர் நம்புவார்.

4.    ஊமையோர் செவிடோர்களும்
அந்தகர் ஊனரும்
உம் மீட்பர் போற்றும் கேட்டிடும்
நோக்கும் குதித்திடும்.

5.    என் ஆண்டவா என் தெய்வமே
பூலோகம் எங்கணும்
பிரஸ்தாபிக்க உம் நாமமே
பேர் அருள் ஈந்திடும்.
************************************************************************

Post Comment

Saturday, July 7, 2012

பாமாலை 295 - அருள் மாரி எங்குமாக (SS 700)

பாமாலை 295 – அருள்மாரி எங்குமாக
(Lord I hear of showers)

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார். லூக்கா 19 : 10

1861ம் ஆண்டு அயர்லாந்து நாட்டில் ஆவிக்குரிய சிறப்பு தியானக்கூட்டங்கள் நடத்தப்பட்டு அத்தேசமெங்கும் உயிர்மீட்சி அலை எதிரொலித்தது.  அந்நாட்களில் வெஸ்டன் சூப்பர்மரே என்ற கிராமத்தில் (Weston-super-Mare), ’டீச்சர்! டீச்சர்!” என்ற தன் மாணவ மாணவியரின் ஆரவார சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் எலிசபெத் காட்னர் (Elizabeth Codner)

‘என்ன ஒரே குதூகலமாயிருக்கிறீர்கள்?’

‘நாங்கள் லண்டனுக்கு விடுமுறை நாட்களைக் கழிக்கச் சென்றோமல்லவா டீச்சர்?

‘ஓ அங்கே எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்த மகிழ்ச்சியா?”

‘இல்லை டீச்சர் நாங்கள் அங்கே நடைபெற்ற தியானப் பயிற்சிக் கூட்டங்களில் கலந்துகொண்டோம்.  ஆண்டவரை எங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டோம்.  அவர் எங்கள் உள்ளத்தில் சந்தோஷத்தையும் ஆசீர்வாதமாகப் பொழிந்துவிட்டார்”.

தன்னிடம் கல்வி கற்கும் மாணவரின் ஆவிக்குரிய வாழ்க்கையைப்பற்றியும் மிகுந்த அக்கறை கொண்ட எலிசபெத் காட்னரின் காதுகளில் இச்செய்தி தேனாக ஒலித்தது.  ஆயினும், அவள் உள்ளத்தில் ஓர் ஏக்கம். ‘என்னிடம் கற்கும் மாணவர்கள் பலர் உண்டே? லண்டனுக்குச் சென்ற ஒருசில மாணவர்கள் மட்டுமே இந்த சிறந்த அனுபவத்தைப் பெற்றார்களே. மற்றெல்லா மாணவரும்கூட இதைப் பெற வேண்டுமே”.

இந்த வாஞ்சையே இப்பாடலை எழுத காட்னரைத் தூண்டியது.

‘ஆண்டவரே, உம் அருள்மாரி எங்கும் பெய்கிறதெனக் கேள்விப்படுகிறேனே. அது இங்கேயும் பொழியட்டுமே’ என்ற இப்பாடலின் வார்த்தைகள் அவளது இதய வாஞ்சையை வெளிப்படுத்துகிறது.  தன் மாணவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கென காட்னர் எழுதிய இப்பாடலை, சிறந்த நற்செய்திப் பாடகரான சாங்கி, மூடிப் பிரசங்கியாரின் கூட்டங்களில் பாடிப் பிரபலமாக்கினார்.  அக்கூட்டங்களில் இப்பாடல் அநேக ஆத்துமாக்களை ஆண்டவருக்காக ஆதாயம் செய்தது.

பல ஆண்டுகளுக்குப் பின், அருள்திரு. கனோன் ஹேய் ஐட்கென் என்ற பிரபல மிஷனரி (Canon Hay Aitken), லண்டனின் மேற்குப்பகுதியில் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தார்.  உல்லாச வாழ்க்கை நடத்தும் நாகரீக இளம்பெண்ணொருத்தி, மற்றவர்களின் வற்புறுத்தலால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டாள்.  பிரசங்கியாரின் உருக்கமான வேண்டுதல்களும், அழைப்பும், அவள் உள்ளத்தை சிறிதளவும் அசைக்கவில்லை.

(Elizabeth Codner)
செய்தி முடிந்தவுடன், ஆராதனை முடிவின் கலந்துரையாடலில் பங்கேற்க அவள் விரும்பவில்லை.  எனவே, ஆலயத்திலிருந்து வெளியேற எழுந்தாள்.  ஆனால், ஆலயம் நிரம்பி வழிந்து, நடைபாதையிலும் மக்கள் கூட்டமாக நிறைந்திருந்ததால், வாயிலை நோக்கி அவளது நடை மிகவும் மெதுவாகவே முன்னேறியது.  அதற்குள் பாடகர்குழுவினர் இப்பாடலைப் பாட ஆரம்பித்ததனர்.  மெதுவாகப் போய்க்கொண்டிருந்த அந்தப்பெண்ணை, இப்பாடல் மிகவும் கவர்ந்தது.  திரும்பத்திரும்ப வந்த “என்னையும்” என்ற வார்த்தை அவள் உள்ளத்தைத் தொட்டது.

இப்பாடல் அவளுக்குப் புதிதாக இருந்ததால், அப்பாடலின் வரிகளைத் தன் கையிலிருந்த பாடல் புத்தகத்தில் வாசித்துக்கொண்டே வந்தாள்.  ஆலய வாசலை அவள் நெருங்கும்போது பாடலின் கடைசி சரணத்தைப் பாடகர் குழுவினர் பாடினர்.  திடீரென்று பாடலில் கூறப்பட்டுள்ள காணாமற்போன நபர் தான்தானே என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் எழுந்தது.  போகும் வழியெல்லாம் அவள் வீடு செல்லும்வரை, ‘திக்கில்லா இவ்வேழையேனை, கைவிடாமல்’ என்ற வார்த்தைகள் அவள் உள்ளத்தில் தொனித்துக்கொண்டே இருந்தன.  இவ்வார்த்தைகளே, பின்னர் அவள் தனிமையில் தன் படுக்கையறையில் படுத்திருந்தபோது, அவளது தேம்பி அழும் ஜெபமாக மாறியது.

அப்போது, ‘இழந்துபோனதைத் தேடவும், ரட்சிக்கவுமே இயேசு உலகத்தில் வந்தார்’ என்கிற வேத வசனம் (லூக்கா 19:10) அவளுடைய நினைவில் தோன்றியது.  அன்றிரவு தூங்குமுன்பே அவள் இயேசுவையும், அவரது அன்பையும் ஏற்றுக்கொண்டாள். அன்றிரவே கிறிஸ்துவுக்குள் அவளது புதுவாழ்வு மலர்ந்தது.

நன்றி : ‘131 பாடல் பிறந்த கதை’, அமைதிநேர ஊழிய வெளியீடு. இப்புத்தகத்தினைப் பெற 044-22431589, 98412 82627 ஆகிய எண்களிலோ அல்லது comfortccm@gmail.com என்ற முகவரியிலேயோ தொடர்பு கொள்ளுங்கள்.


Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  அருள் மாரி எங்குமாக
பெய்ய அடியேனையும்
கர்த்தரே நீர் நேசமாக
சந்தித்தாசீர்வதியும்
என்னையும் என்னையும்
சந்தித்தாசீர்வதியும்
என்னையும் என்னையும்
சந்தித்தாசீர்வதியும்.

2.  என் பிதாவே, பாவியேனை
கைவிடாமல் நோக்குமேன்
திக்கில்லா இவ்வேழையேனை
நீர் அணைத்துக் காருமேன்
என்னையும் என்னையும்
நீர் அணைத்துக் காருமேன்
என்னையும் என்னையும்
நீர் அணைத்துக் காருமேன்

3.  இயேசுவே நீர் கைவிடாமல்
என்னைச் சேர்த்து ரட்சியும்
ரத்தத்தாலே மாசில்லாமல்
சுத்தமாக்கியருளும்
என்னையும் என்னையும்
சுத்தமாக்கியருளும்
என்னையும் என்னையும்
சுத்தமாக்கியருளும்

4.  தூய ஆவி கைவிடாமல்
என்னை ஆட்கொண்டருளும்
பாதை காட்டிக் கேடில்லாமல்
என்றும் காத்துத் தேற்றிடும்
என்னையும் என்னையும்
என்றும் காத்துத் தேற்றிடும்
என்னையும் என்னையும்
என்றும் காத்துத் தேற்றிடும்

5.  மாறா சுத்த தெய்வ அன்பும்
மீட்பர் தூய ரத்தமும்
தெய்வ ஆவி சக்திதானும்
மாண்பாய்த் தோன்ற செய்திடும்
என்னிலும் என்னிலும்
மாண்பாய்த் தோன்ற செய்திடும்
என்னிலும் என்னிலும்

மாண்பாய்த் தோன்ற செய்திடும்

Post Comment

Sunday, July 1, 2012

பாமாலை 365 - லௌகீக இன்பம்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    லௌகீக இன்பம் மேன்மையும்
இப்பரதேசிக்கு வேண்டாம்;
பரம நன்மை செல்வமும்
இங்கில்லை, யாவும் மாயையாம்!
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.

2.    லௌகீக வாழ்வு ஒழியும்;
சரீரம் அழகற்றுப்போம்;
நரர் கைவேலை அழியும்;
இவ்வுலகமும் வெந்துபோம்;
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.

3.    ஆனாலும் இயேசு ராஜியம்
அழிந்து போகமாட்டாதே;
மா நீதியாம் சிங்காசனம்
விழாமல் என்றும் நிற்குமே;
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.

4.    நான் இங்கே தங்கும் நாள் எல்லாம்
என் துன்பம் நீங்கமாட்டாதே;
பரத்தில் சேர்ந்தபின் உண்டாம்
மெய்வாழ்வு மேன்மை பூரிப்பே
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.

Post Comment