Showing posts with label திடப்படுத்தல். Show all posts
Showing posts with label திடப்படுத்தல். Show all posts

Thursday, July 4, 2013

பாமாலை 182 - இளைஞர் நேசா அன்பரே (Hesperus)

பாமாலை 182 - இளைஞர் நேசா அன்பரே 
Just as I am Thine own to be
Tune : Hesperus

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  இளைஞர் நேசா, அன்பரே,
அடியேனை உம் சொந்தமாய்
படைத்திட சமூலமாய்,
ஆண்டவா, கர்த்தாநான் வந்தேன்.
 
2.  இளமைக் காலை என்னையே
படைப்பேன் வாக்குப்படியே,
பின்வையேன் ஒன்றும்இப்போதே
பூரண ஆவலாய் வந்தேன்.
 
3.  ஒளியில் என்றும் ஜீவிப்பேன்
நீதிக்காய் என்றும் உழைப்பேன்
முழுபலத்தால் சேவிப்பேன்
உம்மண்டை ஆதலால் வந்தேன்.
 
4.  சிறியேன் திடகாத்திரன்;
சத்தியம், நீதி, உமக்காய்
ஜீவிப்பேன் நல்லுத்தமனாய்;
ஜீவாதிபதி - நான் வந்தேன்.
 
5.  பொன், புகழ், சித்தி, இன்பமும்
மேன்மையாய்த் தோன்றும்ஆயினும்
விஸ்வாசமே மேல் நாட்டமாய்
ஜீவநாள் முற்றிலும்வந்தேன்.
 
6.  உமக்காய் மேன்மை யடைய,
ஜெயித்து கிரீடம் சூடிட,
பணிந்தும் பாதம் படைக்க,
ஆண்டவா, கர்த்தாநான் வந்தேன்.

Post Comment

Wednesday, May 15, 2013

பாமாலை 183 - எப்போதும் இயேசுநாதா (Day of Rest)

பாமாலை 183 - எப்போதும் இயேசுநாதா 
O Jesus, I have promised
Tune : Day of Rest

SATB

 Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. எப்போதும், இயேசு நாதா,
உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்குக் கொடுத்தேன்;
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
அப்போது அஞ்சிடேன்;
முன்சென்று பாதை காட்டும்,
நான் வழி தவறேன்.

2. பூலோக இன்பம், செல்வம்
வீண் ஆசாபாசத்தால்
என் ஆத்துமா மயங்காமல்
தெய்வீக பலத்தால்
நீர் துணைநின்று தாங்கும்,
என் அருள் நாயகா;
தீங்கணுகாமல் காரும்,
மா வல்ல ரட்சகா.

3. ஆங்காரம் சுய சித்தம்
தகாத சிந்தையால்
மா கலக்கம் உண்டாகி 
நான் தடுமாறினால்,
நீர் பேசும், அருள் நாதா,
கொந்தளிப்படங்கும்;
உம் நேச சத்தம் கேட்டு
என் ஆவி மகிழும்.

4. ”பின்பற்றினால் விண் வீட்டில்
பேரின்பம் பெறுவீர்”,
என்றே உம் சீஷர் நோக்கி
நீர் வாக்கு அளித்தீர்;
அவ்வருள் வாக்கை நம்பி
இவ்வேழை அடியேன்,
“இதோ, பின்செல்வேன்,” என்று
பிரதிக்னை பண்ணினேன்.

5. ஓயாமல் பெலன் தாரும்
உம்மடிச்சுவட்டில்
கால் வைத்து நடந்தேகி
நான் யாத்திரை செய்கையில்
நீர் வழி காட்டி, என்னை
கைதாங்கி வருவீர்;
அப்பாலே மோட்ச வீட்டில்
பேர் வாழ்வை அருள்வீர்.

Post Comment