Friday, November 17, 2023

பாமாலை 408 - தந்தை சுதன் ஆவியே (Litany)

பாமாலை 408 - தந்தை சுதன் ஆவியே
Tune : Litany
God the Father, God the Son


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1.         தந்தை சுதன் ஆவியே
ஸ்வாமியாம் திரியேகரே
வானாசனமீதுற்றே
எங்களுக்கு இரங்கும்

2.         எங்களை நீர் மீட்கவும்
ராஜாசனம் விட்டிங்கும்
வந்தீர் ஏழையாகவும்
கேளும் தூய இயேசுவே

3.         பாவிகள் விருந்தரே
பாதத்தழும் பாவிக்கே
நேச வார்த்தை சொன்னீரே
கேளும் தூய இயேசுவே

4.         சீமோன் மறுதலித்தும்
அவன் கண்ணீர் சிந்தவும்
கண்டித்தீர் நீர் நோக்கியும்
கேளும் தூய இயேசுவே

5.         வாதை சிலுவை நின்றே
"இன்று பரதீஸிலே
சேர்வாய்" என்றுரைத்தீரே
கேளும் தூய இயேசுவே

6.         நீசர் நிந்தை சகித்தீர்
பாவிக்காய் நொறுங்குண்டீர்
பாவமின்றித் தீர்ப்புற்றீர்
கேளும் தூய இயேசுவே

7.         ஆண்டீர் சிலுவையினால்
மீட்டீர் சுத்த ரத்தத்தால்
மாண்டீர் கொடும் சாவினால்
கேளும் தூய இயேசுவே

8.         தப்பிப்போனோர் மேய்ப்பரே
நோவில் ஆற்றல் செய்வோரே
ஆழ்ந்து போனோர் ஓலமே
கேளும் தூய இயேசுவே

9.         மாசில்லா உம் தூய்மையும்
எங்கள் பாவம் நீக்கவும்
மனஸ்தாபம் ஈயவும்
கெஞ்சுகின்றோம் இயேசுவே

10.       பாவத்தை அகற்றியே
திவ்விய அருள் பேணியே
உம் சமூகம்  நாடவே
கெஞ்சுகின்றோம் இயேசுவே

11.       நாங்கள் உம்மை நம்பவும்
ஆசாபாசம் நீக்கவும்
பக்தர் சாந்தர் ஆகவும்
கெஞ்சுகின்றோம் இயேசுவே

12.       பாவத்துக்கு சாகவும்
நீதிக்குப் பிழைக்கவும்
ஜீவ பாதை செல்லவும்
கெஞ்சுகின்றோம் இயேசுவே

13.       எங்கள் போர் முடியவும்
நீள் பிரயாணம் ஓயவும்
நாங்கள் இளைப்பாறவும்
கெஞ்சுகின்றோம் இயேசுவே

Post Comment

Monday, October 30, 2023

பாமாலை 409 - தந்தை சுதன் ஆவியே (Litany)

பாமாலை 409 - தந்தை சுதன் ஆவியே
God the Father, God the Son
Tune : Litany

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




1. தந்தை சுதன் ஆவியே
ஸ்வாமியாம் திரியேகரே
வானாசனமீதுற்றே
எங்களுக்கு இரங்கும்

2. நிந்தை கஸ்தி தேவரீர்
எங்கள் பொருட்டடைந்தீர்
தாசர் வேண்டுதலை நீர்
கேளும் தூய இயேசுவே

3.  சீஷர் மூவர் தூங்கவே
கெத்செமனே காவிலே
உற்ற வேதனையாலே
கேளும் தூய இயேசுவே

4.  தந்தை சித்தம் ஆகவும்
வந்த பாத்திரம் நீங்கவும்
நீர் ஜெபித்ததாலேயும்
கேளும் தூய இயேசுவே

5.  யூதாஸ் முத்தம் செய்யவே
யூதர் உம்மைக் கட்டவே
சிறைப்பட்டதாலுமே
கேளும் தூய இயேசுவே

6.  வாரால் பட்ட காயமும்
போர்த்த சிவப்பங்கியும்
முள்ளின் கிரீடமூலமும்
கேளும் தூய இயேசுவே

7.  ராஜன் உம்மைத் தள்ளியே
கள்ளன் பரபாசையே
கேட்டுக்கொண்டதாலுமே
கேளும் தூய இயேசுவே

8.  ”சிலுவையில் அறையும்”
என்று யூதர் கூவவும்
சாகச் சென்றதாலேயும்
கேளும் தூய இயேசுவே

9.  நீர் சுமந்த குரூசாலே
நீர் குடிக்கும்படிக்கே
தந்த காடியாலுமே
கேளும் தூய இயேசுவே

10.  கால் கரத்தில் ஆணியும்
காட்டும் மேல் விலாசமும்
காரிருள் நிமித்தமும்
கேளும் தூய இயேசுவே

11.  ஆடை சீட்டுப் போட்டதால்
சாவின் வாதை பார்க்குங்கால்
யூதர் செய்த நிந்தையால்
கேளும் தூய இயேசுவே

12.  சொன்ன ஏழு வார்த்தையால்
சோர்ந்து தலை சாய்த்ததால்
உந்தன் பிரேதச் சேமத்தால்
கேளும் தூய இயேசுவே

13.  சோதனை நெருக்கத்தில்
நாங்கள் தொய்ந்து போகையில்
உந்தன் சாவின் வன்மையில்
காரும் தூய இயேசுவே

14.  உம் சிலுவைப் பொருட்டே
யாவும் நஷ்டம் எனவே
நாங்கள் எண்ணும்படிக்கே
காரும் தூய இயேசுவே

15.  நாங்கள் உம்மைப் பற்றியே
சாவின் நோவைக் கடந்தே
உம் சமூகம் சேரவே
காரும் தூய இயேசுவே
**************************












 

Post Comment

Thursday, October 19, 2023

இயேசுவின் பின்னே (I have decided)

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் 
I have decided to follow Jesus

‘I Have Decided to Follow Jesus’ is a Christian hymn originating from India. The lyrics are based on the last words of a man in Garo, Assam. 

About 150 years ago, there was a great revival in Wales. As a result of this, many missionaries came to north-east India to spread the Gospel. The region known as Assam was comprised of hundreds of tribes who were primitive and aggressive head-hunters

Into these hostile and aggressive communities, came a group of missionaries from the American Baptist Missions spreading the message of love, peace and hope in Jesus Christ. Naturally, they were not welcomed. One missionary succeeded in converting a man, his wife, and two children. This man’s faith proved contagious and many villagers began to accept Christianity. 

Angry, the village chief summoned all the villagers. He then called the family who had first converted to renounce their faith in public or face execution. Moved by the Holy Spirit, the man said:

“I have decided to follow Jesus.”

Enraged at the refusal of the man, the chief ordered his archers to arrow down the two children. As both boys lay twitching on the floor, the chief asked, “Will you deny your faith? You have lost both your children. You will lose your wife too.”


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



***************************************************************

1.  இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன்

பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்

2.  உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே 

3.  கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம்

4.  என் மீட்பர் பாதை 
என்றும் பின் செல்வேன் 



Post Comment

Monday, October 2, 2023

பாமாலை 223 - கர்த்தா உம் மாட்சி கரத்தால் (St. Matthew)

பாமாலை 223 - கர்த்தா உம் மாட்சி கரத்தால் 
Thine Arm O Lord in days of old
Tune : St. Matthew

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

*********

1. கர்த்தா உம் மாட்சி கரத்தால்
நோய் சாவும் நீங்கிற்றே
சுத்தாங்க சுகம் ஜீவனும்
உம் வார்த்தை நல்கிற்றே
அந்தகர் ஊமை செவிடர்
நிர்ப்பந்தராம் குஷ்டர்,
நொந்த பல்வேறு ரோகஸ்தர்
நாடோறும் வந்தனர்.

2. மா வல்ல கரம் தொடவே
ஆரோக்கியம் பெற்றனர்
பார்வை நற்செவி பேச்சுமே
பெற்றே திரும்பினர்;
மா வல்ல நாதா, இன்றுமே
மறுகும் ரோகியும்
சாவோரும் தங்கும் சாலையில்
ஆரோக்கியம் அளியும்.

3. ஆரோக்கிய ஜீவ நாதரே
நீரே எம் மீட்பராய்
ஆரோக்கியம் ஜீவன் சீருமே
அருளும் தயவாய்;
சரீரம் நற்சீர் நிறைந்து
உம் மக்கள் யாவரும்
சன்மார்க்க ஞானம் உள்ளோராய்
உம்மைத் துதிக்கவும்.



Post Comment

Monday, September 18, 2023

பாமாலை 357 - தெய்வ சமாதான (SS 652)

பாமாலை 357 - தெய்வ சமாதான
Like a river glorious

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1. தெய்வ சமாதான
இன்ப நதியே
மா பிரவாகமான
வெள்ளம் போலவே
நிறைவாகப் பாயும்
ஓய்வில்லாமலும்
ஓட ஆழமாயும்
நித்தம் பெருகும்

அருள்நாதர் மீதில்
சார்ந்து சுகிப்பேன்
நித்தம் இளைப்பாறல்
பெற்று வாழுவேன்

2. கையின் நிழலாலே
என்னை மறைத்தார்
சத்துரு பயத்தாலே
கலங்க விடார்
சஞ்சலம் வராமல்
அங்கே காக்கிறார்
ஏங்கித் தியங்காமல்
தங்கச் செய்கிறார்

3. சூரிய ஜோதியாலே
நிழல் சாயையும்
காணப்பட்டாற் போலே
துன்பம் துக்கமும்
ஒப்பில்லா பேரன்பாம்
சூரிய சாயையே
அதால் வாழ்நாள் எல்லாம்
சோரமாட்டேனே

Post Comment

Friday, August 25, 2023

கீர்த்தனை 371 - இறைவனின் பணியில் இன்றைய உலகில்

Rev. Dr. Gnanavaram

Rev. Dr. Thomas Thangaraj


இறைவனின் பணியில்
இன்றைய உலகில்
இறைமக்கள் நாமே
இணைந்திடுவோமே 
 
1. வறுமையின் பிடியில் வாழ்ந்திடும் மனிதர்
வளம் பெற உழைப்போம் வழிகாட்டிடுவோம்
பொறுமையின் வழியில் பிறர்துயர் களைந்தே
புதியதோர் வாழ்வு புலர்ந்திட முனைவோம்
 
2. சமயங்கள் பலவாய் இருந்திடும் உலகில்
சாந்தமாய்ப் பிறரை ஏற்றுமே வாழ்வோம்
இமயமாய் பிரிவினை எழுந்திடும் வேளை
ஏசுவின் பெயரில் இணைந்திட முயல்வோம்
 
3.  சாதியின் கொடுமை ஒழிந்திட உழைப்போம்
சமத்துவ நெறியில் இணைந்துமே வாழ்வோம்
பாதி மனிதராய் ஒடுக்கப்பட்டோரின்
பாடுகள் நீங்க போராடிடுவோம்

 












































































































































Post Comment

Wednesday, August 2, 2023

வேதத்தை நேசி (Cling to the Bible)

வேதத்தை நேசி 
Cling to the Bible
SS 263

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


*******************************************************



1. வேதத்தை நேசி அது பெலன் தரும்
விலையுள்ள அது புனிதமாம்
தூங்கும் ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கும்
மரித்தோர் ஜீவன் பெறல் நிச்சயம்

வேதத்தை நேசி வேதத்தை நேசி 
        வேதத்தை நேசி மீட்பர் தாங்குவார்

2. வேதத்தை நேசி விலைபெற்ற செல்வம்
மானிடர்க்கு நித்ய ஜீவன் தரும்
உலகோர் அளவிட இயலாது
ஆத்மா அருள் பெற வேதம் நேசி

3. கால்களுக்குத் தீபம் பாதைக்கு ஒளி
விழும் வாலிபர்க்கு அது வழி
கெட்டுப்போன மாந்தர்க்கு நம்பிக்கையாம்
முதியவர் தாங்கும் கோல் வேதமே

4. வேதத்தை நேசி அது உன் மகிழ்ச்சி
வேதம் ஆத்மாவைப் பெலப்படுத்தும்
ஆவியில் தேறவும் சாவை வெல்லவும்
சத்திய வேதம் வழி காட்டிடும்

Post Comment

பாமாலை 176 - சீர் ஆவியால் (Byzantium)

பாமாலை 176 - சீர் ஆவியால் 
Tune : Byzantium


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

***************************************************************

*************************************************************


1. சீர் ஆவியால் இரக்கமாய்
உண்டான வேதமே,
ஒப்பற்ற ஞானமுள்ளதாய்
நமக்குண்டாயிற்றே.

2. அதில் பிறக்கும் போதனை
விளக்கைப்போலவே,
நற்கதி சேரும் மார்க்கத்தை
விளக்கிக் காட்டுமே.

3. இருள் நிறைந்த பூமியில்
அதே என் வெளிச்சம்
பரத்தை நோக்கிப் போகையில்
அதே நட்சத்திரம்.

4. கர்த்தாவின் அருளால் அதே
மகா ஈவாயிற்று
அதைக்குறித்தென் நெஞ்சமே
சந்தோஷமாயிரு.




Post Comment

Tuesday, August 1, 2023

கீர்த்தனை 388 - இறையடி தினம் வரும் அடியவராய்

 கீர்த்தனை 388 - இறையடி தினம் வரும் அடியவராய்



இறையடி தினம் வரும் அடியவராய்
மறை பயில்வது தரும் நிறை மகிழ்வே
இறையியல் அறிவதில் துணிபவராய்
குறையற செயல்படல் இறை பணியே

1. அன்புடன் அறிவும் அமைந்திருந்தால்
ஆண்டவர் பணியதில் வளர்ந்திடலாம்
துன்புறும் நேரமும் துதியிருந்தால்
தூயனின் சேவையில் துணிந்திடலாம்

2. உணர்வுடன் உண்மையும் இணைந்திருந்தால்
உண்மையில் உணர்வுகள் உயர்வடையும்
உணர்ந்துமே மனுவெலாம் ஒருங்கிணைந்தால்
உலகினில் ஓரிறை அரசமையும்

3. சொல்லுடன் செயலும் சேர்ந்திருந்தால்
சொல்லிடும் செய்தியில் மெருகமையும்
வல்லவர் இயேசுவின் வழிநடந்தால்
வல்லமை வாழ்வெல்லாம் வந்தமையும்
***********************************************************



Post Comment

Sunday, July 16, 2023

பாமாலை 186 - ஆத்துமாவே உன்னை ஜோடி (St. Raphael)

பாமாலை 186 - ஆத்துமாவே உன்னை ஜோடி
Tune : St. Raphael


SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. ஆத்துமாவே உன்னை ஜோடி
தோஷம் யாவையும் விடு
மீட்பரண்டை சேர ஓடி
நன்றாய் ஜாக்கிரதைப்படு
கர்த்தர் உன்னை
பந்திக்கு அழைக்கிறார்

2. இந்தப் போஜனத்தின் மேலே
வாஞ்சையாய் இருக்கிறேன்
உம்மையே இம்மானுவேலே
பக்தியாய் உட்கொள்ளுவேன்
தேவரீரே
ஜீவ அப்பமானவர்

3. மாசில்லாத ரத்தத்தாலே
என்னை அன்பாய் ரட்சித்தீர்
அதை நீர் இரக்கத்தாலே
எனக்கென்றும் ஈகிறீர்
இந்தப் பானம்
என்னை நித்தம் காக்கவே

4. உம்முடைய சாவின் லாபம்
மாட்சிமை மிகுந்தது
என்னிடத்திலுள்ள சாபம்
உம்மால்தானே நீங்கிற்று
அப்பமாக
உம்மை நான் அருந்தவே.

Post Comment

Tuesday, June 27, 2023

பாமாலை 32 - நாம் நித்திரை செய்து (Hursley)

பாமாலை 32 - நாம் நித்திரை செய்து
New every morning is the love
Tune : Hursley

SATB with Descant

SATB

Descant

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    நாம் நித்திரை செய்து விழித்தோம்
நற்சுகம் பலம் அடைந்தோம்
நாள்தோறும் தெய்வ அன்பையே
உணர்ந்து ஸ்துதி செய்வோமே.

2.    தீங்கை விலக்கிப் பாவத்தை
மன்னித்து, மோட்ச நம்பிக்கை
மென்மேலும் ஓங்க நாதனார்
கடாட்சம் செய்து காக்கிறார்.

3.    அன்றன்று வரும் வேலையை
நாம் செய்கின்ற பணிவிடை
என்றெண்ணியே, ஒவ்வொன்றையும்
படைப்போம் பலியாகவும்.

4.    நம்மை வெறுத்து, கர்த்தரின்
சமீபம் சேர விரும்பின்,
அன்றாடக கடமையும்
ஓர் ஏதுவாக விளங்கும்.

5.    ஜெபிக்கும் வண்ணம் உய்யவும்,
கர்த்தாவே, பலம் ஈந்திடும்;
உம்மண்டை நாங்கள் வாழவும்
தகுந்தோர் ஆக்கியருளும்.


Post Comment

Monday, June 26, 2023

நான் பிரமித்து நின்று பேரன்பின்

நான் பிரமித்து நின்று பேரன்பின்
I stand all bewildered with wonder

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1. நான் பிரமித்து நின்று பேரன்பின்
ப்ரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
என் உள்ளத்தில் மெய் சமாதானம்
சம்பூரணமாய் அடைந்தேன்

மா தூய உதிரத்தால்
என் பாவம் நீங்கக் கண்டேன்
இயேசையரின் இரட்சிப்பினால்
நான் ஆறுதல் கண்டடைந்தேன் 

2. முன்னாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் ப்ரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கின போதோ
என் மீட்பரால் அருள் பெற்றேன் 

3. தம் கரத்தை என் மீதில் வைத்து
‘நீ சொஸ்தமாவாய்‘ என்றனர்
நான் அவரின் வஸ்திரம் தொட
ஆரோக்கியம் அருளினர் 

4. எந்நேரமும் புண்ணிய நாதர்
என் பக்கத்தில் விளங்குவார்
தம் முகத்தின் அருள் ப்ரகாசம்
என் பேரிலே வீச செய்வார் 



Post Comment

பாமாலை 189 - என் மீட்பர் (Hesperus)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.  என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே
உம் பாதத்தண்டை நிற்கிறேன்
திக்கற்ற பிள்ளை கெஞ்சவே
தள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன்.
 
2.  என் கிரியைகள் எம்மாத்திரம்?
பிரயாசை எல்லாம் விருதா
உம்மாலேயே மெய்ப் பாக்கியம்
உண்டாகும் நேச ரட்சகா.
 
3.  உந்தன் சரீரம் ரத்தமும்
மெய்ப் பொருள் என்று அறிவேன்
உட்கொண்டன்பாய் அருந்தவும்
நான் பரவசமாகுவேன்.
 
4.  மாசற்ற திரு ரத்தத்தை
கொண்டென்னைச் சுத்திகரியும்
மா திவ்விய ஜீவ அப்பத்தை
என் நெஞ்சத்தில் தந்தருளும்.
 
5.  என் நாதா உம் சரீரமே
மேலான திவ்விய போஜனம்
மாசற்ற உந்தன் ரத்தமே
மெய்யான பான பாக்கியம்.

Post Comment

Sunday, June 18, 2023

பாமாலை 250 - யாரினும் மேலான அன்பர் (Ar Hyd Y Nos)

பாமாலை 250 - யாரினும் மேலான அன்பர் 
One there is above all others
Tune : Ar Hyd Y Nos

John Newton
இப்பாடலை எழுதியவர் ஜான் நியூட்டன் (John Newton).  இவரது காலம் 1725-1807. ஜான் ஏழு வயதாய் இருக்கும்போது அவரின் தாயார் மரித்துப்போக, தன் தந்தையுடன் கப்பல் பணியாளனாகத் தன் வாழ்வைத் தொடர்ந்து வந்தார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைகள் விற்கும் கப்பல்களில் மாலுமியாகவும், கப்பற் தலைவனாகவும் பணியாற்றிய நியூட்டன், பின்னர் இறைப்பணிக்கென்று தம்மை ஒப்புவித்து, இங்கிலாந்தின் Anglican திருச்சபையின் போதகராக அபிஷேகம் பெற்றார்.  

பாடல்கள் எழுதுவதில் மிகுந்த புலமை பெற்றிருந்த ஜான் நியூட்டன் தம் இறைப்பணிக்காலத்தில் ”One there is, above all others” உள்ளிட்ட ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார்.  அவற்றுள் ‘Amazing Grace’ எனும் மிகப் பிரபலமான ஆங்கிலப்பாடலும் ஒன்றாகும்.  “யாரினும் மேலான அன்பர்’ எனும் இப்பாடல் நம் பாமாலை புத்தகத்தில் ‘வாலிபர் பாக்கள்’ எனும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. யாரிலும் மேலான அன்பர்
மா நேசரே;
தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர்
மா நேசரே;
மற்ற நேசர் விட்டுப் போவார்,
நேசித்தாலுங் கோபம் கொள்வார்
இயேசுவோ என்றென்றும் விடார்,
மா நேசரே!

2. என்னைத் தேடிச் சுத்தஞ் செய்தார்
மா நேசரே!
பற்றிக் கொண்ட என்னை விடார்,
மா நேசரே;
இன்றும் என்றும் பாதுகாப்பார்,
பற்றினோரை மீட்டுக் கொள்வார்,
துன்ப நாளில் தேற்றல் செய்வார்,
மா நேசரே!

3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு
மா நேசரை;
என்றுமே விடாமல் எண்ணு
மா நேசரை;
எந்தத் துன்பம் வந்தும், நில்லு;
நேரே மோட்ச பாதை செல்லு
இயேசுவாலே யாவும் வெல்லு,
மா நேசரே!

4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம்,
மா நேசரே!
சோர்வுற்றாலும் வீரங்கொள்வோம்;
மா நேசரே!
கொண்ட நோக்கம் சித்தி செய்வார்,
நம்மை அவர் சேர்த்துக் கொள்வார்
மோட்ச நன்மை யாவும் ஈவார்;
மா நேசரே!

Post Comment

Friday, May 19, 2023

பாமாலை 274 – ஊதும் தெய்வாவியை (Franconia)

பாமாலை 274 – ஊதும் தெய்வாவியை 
Breathe in me Breath of God
Tune : Franconia


’சுவாசம்’ அல்லது ‘ஜீவசுவாசம்’ எனும் வார்த்தை கிறிஸ்தவ வாழ்வில் எப்போதும் ஒரு முக்கிய அங்கம்வகித்து வந்திருக்கிறது. ஆதியிலே “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” என்று ஆதியாகமம் 2:7ல் நாம் வாசிக்கிறோம். தேவன் தம் படைப்பின் கிரியைகளில் விளங்கப்பண்ணினதில் மகா அதிசயமான ஒன்று இந்த ‘ஜீவசுவாசம்’.
‘ஜீவசுவாசம்’ அல்லது ‘சுவாசம்’ என்பது ’பரிசுத்த ஆவியானவரை’க் குறிக்கும் சொல்லாகவும் விளங்கிவந்திருக்கிறது. ”பரிசுத்த ஆவியானவர்” “சுவாசம்” எனும் இரு சொற்களையும் குறிப்பிட, கிரேக்க மொழியில் ‘pneuma’ என்ற ஒரே சொல்லும், லத்தீன் மொழியில் ‘spiritus’ என்ற ஒரே சொல்லும் உபயோகிக்கப்படுகிறது.


பரிசுத்த ஆவியானவரை தம் படைப்பாகிய மனிதனுள் ஆண்டவர் ஜீவசுவாசமாக ஊதி உயிர்ப்பூட்டிய நிகழ்வின் அற்புதத்தை எட்வின் ஹேட்ச் (Edwin Hatch - 1835-89) எனும் போதகர், ’ஊதும் தெய்வாவியை’ எனும் இந்த அழகிய பாடலாக உருவாக்கினார். 1878’ம் ஆண்டு வெளியான ‘Between Doubt and Prayer’ எனும் ஒரு துண்டுப் பிரசுரத்தில் இப்பாடல் முதன்முதலில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.


Edwin Hatch 
ஆண்டவரைப் பற்றி அறிந்திராத பெற்றோருக்குப் பிறந்த எட்வின், தம் பள்ளிப்படிப்பை பர்மிங்ஹாமில் உள்ள எட்வர்ட் பள்ளியிலும் (King Edward School, Birmingham) தம் கல்லூரிப் படிப்பை ஆக்ஸ்ஃபோர்டிலும் (Pembroke College, Oxford) முடித்தார். கல்லூரிக் காலத்தில் எட்வினின் நண்பர்கள் ஓவியம், கவிதைகள் என்று ஆர்வம் நிறைந்தவர்களாய் இருந்தபோது அவர்களுடன் எட்வினும் நிறைய விமர்சனங்கள் (Reviews), நாளிதழ் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் காட்டினார். கல்லூரிப் படிப்பு முடிந்து அவருடைய நண்பர்கள் கலை மற்றும் இலக்கியத் துறையில் ஆர்வம்கொண்டு செல்ல, எட்வின் Church of England’ல் போதகராக அபிஷேகம் பெற்று, லண்டனின் கிழக்குப் பகுதியில் இருந்த தேவாலயம் ஒன்றில் ஆயராகப் பணி செய்யத் துவங்கினார்.


பின்னர் 1859 முதல் 1867வரை கனடாவின் Trinity College’ல் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர், 1867ல் இங்கிலாந்துக்குத் திரும்பி, Oxford St. Mary’s Hall’ன் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். மேலும் Rector of Purleigh in Essex, University Reader in Ecclesiastical History என்று கல்வித்துறையின் பல்வேறு உயர் பதவிகளைக் கண்டார். இத்தனை பெரும்பதவிகள் வகித்தும், எட்வின், மிகவும் எளிமையான, பக்திநிறைந்த ஒரு மனிதராகத் திகழ்ந்தார்.


பதிவு தகவல்கள் : The Daily Telegraph ’Book of Hymns’ by Ian Bradley



SATB


Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.    ஊதும் தெய்வாவியை
புத்துயிர் நிரம்ப
நாதா என் வாஞ்சை செய்கையில்
உம்மைப் போல் ஆகிட

2.    ஊதும் தெய்வாவியை
தூய்மையால் நிரம்ப
உம்மில் ஒன்றாகி யாவையும்
சகிக்க செய்திட

3.    ஊதும் தெய்வாவியை
முற்றும் ஆட்கொள்ளுவீர்
தீதான தேகம் மனத்தில்
வானாக்னி மூட்டுவீர்

4.    ஊதும் தெய்வாவியை
சாகேன் நான் என்றுமாய்
சதாவாய் வாழ்வேன் உம்மோடு
பூரண ஜீவியாய்

Post Comment

Tuesday, May 2, 2023

பாமாலை 82 - இம்மட்டும் தெய்வ கிருபை (Luther)

பாமாலை 82 - இம்மட்டும் தெய்வ கிருபை 
Tune : Luther

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    இம்மட்டும் தெய்வ கிருபை
அடியேனை ரட்சித்து
இக்கட்டிலும் என் ஜீவனை
அன்பாய்ப் பராமரித்து
மாதயவாய் நடத்திற்று
இம்மட்டும் ஸ்வாமி எனக்கு
சகாயம் செய்து வாரார்.

2.    என் ஜீவனுள்ள நாளெல்லாம்
நான் கண்ட உண்மைக்காக
கர்த்தாவுக் கெனதுண்மையாம்
துதியுண்டாவதாக
அதிசய அன்புடனே
சகாயம் செய்தீர் என்பதே
என் மனமும் என் வாக்கும்.

3.    இனியும் உமதுண்மையில்
சகாயம் செய்து வாரும்
என் இயேசுவின் காயங்களில்
முடிய என்னைக் காரும்
கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்
எக்காலமும் எவ்விடமும்
என்னை ரட்சிக்க, ஆமேன்.

Post Comment

Tuesday, April 18, 2023

பாமாலை 78 - ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் (Nettleton)

பாமாலை 78 - ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் 
Tune : Nettleton

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்,
அடியேனைக் காத்தீரே;
மீண்டும் என்னை உமக்கேற்ற
சேவை செய்யக் கொள்வீரே;
என் இதயம் மனம் செயல்
யாவும் உம்மைத் துதிக்கும்;
ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்!
அடியேனை ஆட்கொள்ளும்.
 
2.    இவ்வுலக வாழ்நாள் எல்லாம்
நான் உமக்காய் வாழவும்,
அன்பு, தியாகம், அருள், பக்தி
அனைத்தும் பெற்றோங்கவும்,
பாவ அழுக்கெல்லாம் நீக்கி
தூய பாதை செல்லவும்,
ஆண்டவா, உம் அருள் தாரும்,
அடியேனை ஆட்கொள்ளும்.
 
3.    வியாதி, துக்கம், தொல்லை வந்தால்
உம்மை நோக்கிக் கெஞ்சுவேன்;
உம் ப்ரசன்னம் எனக்கின்பம்
சாவுக்கும் நான் அஞ்சிடேன்;
துன்பத்தில் என் நண்பர் நீரே
இன்பம் ஈபவர் நீரே;
ஆண்டவா, நீர்தாம் என் தஞ்சம்,
அடியேனை ஆட்கொள்ளும்.
 
4.    மூவராம் திரியேகர்க்கென்றும்,
மாட்சி மேன்மை மகிமை;
விண்ணில் தூதர் தூயர் கூட்டம்
அவர் நாமம் துதிக்கும்;
மண்ணில் மாந்தர் கூட்டம் யாவும்
அவர் பாதம் போற்றவும்,
ஆண்டவா, உம் அருள் தாரும்,
அடியாரை ஆட்கொள்ளும்.

Post Comment

பாமாலை 91 - இஸ்திரீயின் வித்தவர்க்கு (Melton)

பாமாலை 91 - இஸ்திரீயின் வித்தவர்க்கு
Tune : Melton


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.  இஸ்திரீயின் வித்தவர்க்கு
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
கர்த்தராம் இம்மானுவேலே
ஓசன்னா.

2.    அதிசயமானவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்
ஆலோசனைக் கர்த்தாவுக்கு
ஓசன்னா.

3.    வல்ல ஆண்டவருக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
நித்திய பிதாவுக்கென்றும்
ஓசன்னா.

4.    சாந்த பிரபு ஆண்டவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்
சாலேம் ராஜா இயேசுவுக்கு
ஓசன்னா.

5.    விடி வெள்ளி, ஈசாய் வேரே,
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
கன்னிமரி மைந்தருக்கு
ஓசன்னா.

6.    தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா முழக்குவோம்
உன்னதம் முழங்குமெங்கள்
ஓசன்னா.

7.    அல்பா ஒமேகாவுக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
ஆதியந்தமில்லாதோர்க்கு
ஓசன்னா.

8.    தூதர், தூயர், மாசில்லாத
பாலர் யாரும் பாடிடும்
ஓசன்னாவோடெங்கள் நித்திய
ஓசன்னா.

Post Comment

Tuesday, April 11, 2023

பாமாலை 94 - தயாள இயேசு தேவரீர் (Truro)

பாமாலை 94 - தயாள இயேசு தேவரீர் 
Ride on ! ride on in Majesty!
Tune : Truro

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  தயாள இயேசு தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வெள்ளோலை தூவிக் கூட்டத்தார்
ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார்.

2.    தாழ்வாய் மரிக்க, தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
மரணம் வெல்லும் வீரரே
உம் வெற்றி தோன்றுகின்றதே.

3.    விண்ணோர்கள் நோக்க தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
வியப்புற்றே அம்மோக்ஷத்தார்
அடுக்கும் பலி பார்க்கிறார்.

4.    வெம் போர் முடிக்க தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
தம் ஆசனத்தில் ராயனார்
சுதனை எதிர்பார்க்கிறார்.

5.    தாழ்வாய் மரிக்க தேவரீர்
மாண்பாய்ப் பவனி போகிறீர்
நோ தாங்கத் தலை சாயுமே!
பின் மேன்மை பெற்று ஆளுமே.


Post Comment