Sunday, August 31, 2014

பாமாலை 1 - ஆத்மமே உன் ஆண்டவரின் (Regent Square)

பாமாலை 1 – ஆத்மமே உன் ஆண்டவரின்
Praise my soul, the King of heaven
Tune : Regent Square

’என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்’ சங்கீதம் 30 : 12

கிறிஸ்தவர்களாகிய நாம் எப்போதும் கடவுளைத் துதிக்க ஏவப்படுகிறோம். பொதுவாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மைகளுக்காக அவரைத் துதிக்கிறோம்.  ஆனால் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லாதிருக்கும்போது அவரைத் துதிக்கிறோமா? நம்மில் அநேகருக்கு வாழ்க்கையில் கஷ்டங்களும், துன்பங்களும் அடிக்கடி நேர்ந்ததில்லை.  ஆயினும் இதை முன்னிட்டு நாம் கடவுளைத் துதிக்கிறோமா? ஆகவே எந்நிலையிலும் நாம் கடவுளைத் துதிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறவாதிருப்போமாக.  நமது ஆலய ஆராதனைகளில் முதல் பகுதி எப்போதும் தெய்வ ஸ்துதியாகவே இருக்கும்.  இப்பகுதியில் பாடப்படும் பாடல்கள், வாசிக்கப்படும் திருமறைப்பக்குதிகள், ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் எல்லாம் தெய்வ ஸ்துதியே.  நமது பாட்டுப்புத்தகங்களிலும் முதல் பகுதியில் தெய்வஸ்துதி பாடல்களே வைக்கப்பட்டிருக்கின்றன.  பாமாலையின் முதல் பாடலாகிய இப்பாடல், 103ம் சங்கீதத்தைத் தழுவி எழுதப்பட்ட ஒரு துதிப்பாடலாகும்.

Henry Francis Lyte
1834ம் ஆண்டு ஹென்ரி லைட் போதகர் (Henry Francis Lyte), இங்கிலாந்தில் ப்ரிக்ஸ்ஹம் நகரில் திருப்பணியாற்றிவந்தார்.  ப்ரிக்ஸ்ஹம் ஒரு கடற்கரைப் பட்டிணம்.  இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடிப்பவர்கள்.  இம்மக்கள் அலைமிகுந்த கடலில் அதிக தைரியத்துடனும், துணிவுடனும் தங்கள் படகுகளை ஓட்டிச்சென்று வருவர்.  போதகர் அடிக்கடி கடற்கரையில் நின்று, மீன்படகுகள் கடுமையான அலைகள் மத்தியிலும் பத்திரமாகக் கரை சேருவதைக் கவனிப்பது வழக்கம்.  எந்த ஆபத்திலும் கடவுள் ஒரு தந்தைபோல் அவர்களைப் பராமரித்து வருகிறார் என்னும் உண்மையைப் போதகர் உணர்ந்து, அவர்கள் கடவுளைத் துதித்துப் பாடுவதற்கேற்ற ஒரு பாடல் எழுத எண்ணங்கொண்டார்.  இதற்கு ஆதாரமாக அவர் 103ம் சங்கீதத்தைத் தெரிந்தெடுத்து, அதை ஒரு செய்யுளாக எழுதி இப்பாடலை உருவாக்கினார்.  எந்நிலையிலும் கடவுளின் கரம் நம்மைத் தாங்கிக்காப்பதால் நாம் அவரைத் துதித்தல் ஏற்றது என்பதை இப்பாடலின்மூலம் உணர்த்துகிறார்.  மேலும், சர்வ சிருஷ்டிகளும் கடவுளைத் துதிக்கக் கடமைப்பட்டுள்ளன என்பதை இப்பாடலின் கடைசிக்கவியில் எடுத்துரைக்கிறார்.

ஹென்ரி பிரான்ஸிஸ் லைட் போதகர் 1793ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் தேதி ஸ்காட்லாண்ட் நாட்டில் எட்னம் என்னும் கிராமத்தில் பிறந்தார்.  இளமையில் மிகவும் எளிமையான நிலைமைகளை அவர் அனுபவிக்கவேண்டியிருந்தது.  ஆரம்பக்கல்வியைப் பிறந்த ஊரிலேயே முடித்து, குருத்துவ ஊழியப் பயிற்சியை டப்ளின் நகரில் பெற்றார்.  அவரது கல்லூரி வாழ்க்கையில் ஆங்கிலச் செய்யுள்கள் எழுதுவதில் மூன்றுமுறை முதல் பரிசு பெற்றார்.  பயிற்சியை முடித்தவுடன் 1815ல் அயர்லாந்தில் வெக்ஸ்ஃபோர்ட் சபையில் போதகராக அபிஷேகம் பெற்றார்.  ஐந்து ஆண்டுகளுக்குப்பின் லிமிங்டன் சபையிலும், கடைசியாக 1823 முதல் ப்ரிக்ஸ்ஹம் என்னும் மீன்பிடிக்கும் கடற்கரைப் பட்டிணத்திலும் போதகராகப் பணியாற்றினார்.

அவர் பணியாற்ற ஆரம்பித்தபோது அவரது பணி, கடமைப் பணியாக மட்டுமே இருந்தது.  மேலும் அவரது கவித்திறன், பொதுவான விஷயங்களைக்குறித்த கவிகள் எழுதுவதிலேயே செலவிடப்பட்டது.  ஆனால் அவர் இருபத்தைந்து வயதாயிருக்கையில், அவரது நண்பரான ஒரு போதகர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.  அவரது மரணப்படுக்கையினருகில் நிற்கும்போது அவர் கூறிய இறுதிவார்த்தைகளையும், தம் பாவங்களுக்கு நிவாரணமான ஒருவர் உண்டு என்னும் அவரது நம்பிக்கையையும் கவனித்த லைட் போதகரின் வாழ்க்கையில் அன்று முதல் ஒரு புதுதிருப்பம் உண்டானது.  இதன்பின்பு அவர் எழுதிய கவிகள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியை அளிப்பதற்காக எழுதப்பட்டது.

ப்ரிக்ஸ்ஹம் நகரில் திருப்பணியாற்றும்போதுதான் அவர் ஏராளமான பாடல்கள் எழுதினார்.  1847ம் ஆண்டு அவர் 54 வயதாயிருக்கையில் காசநோயினால் பீடிக்கப்பட்டு, குளிர் காலத்தை உஷ்ணமான இத்தாலிநாட்டில் கழிக்கத் தீர்மானித்தார்.  பிரயாணத்திற்கு முன் அவர் அநேக ஆண்டுகளாக முடிக்காமல் வைத்திருந்த, ‘என்னோடிரும் மா நேச கர்த்தரே’ என்னும் பாடலையும் எழுதி முடித்தார்.  பின்பு இத்தாலி நாட்டுக்கு பயணமானார்.  வியாதி கடுமையாயிருந்தபடியால், 1847ம் ஆண்டு நவம்பர் மாதம், 20ம் தேதி, இத்தாலி நாட்டிலுள்ள நைஸ் நகரத்தில் அவர் காலமானார்.

‘ஆத்மமே உன் ஆண்டவரின்’ என்னும் பாடல் முன் கூறியபடி ப்ரிக்ஸ்ஹம் நகரிலுள்ள மீனவர்களுக்காக எழுதப்பட்டது.  லைட் போதகர் இறந்த நூற்றாண்டு தினமான 1947 நவம்பர் மாதம் 20ம் தேதி, எலிசபெத் மகாராணியாருக்கும், எடின்பரோ பிரபுவுக்கும் நடந்த திருமண ஆராதனையில் மகாராணியின் விருப்பப்படி இப்பாடல் பாடப்பட்டது.  அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை:

v  ’என்னோடிரும் மா நேச கர்த்தரே (பாமாலை 36)
v  சிலுவை சுமந்தோனாக (பாமாலை 311)

v  ஆண்டவா! மேலோகில் உம்’ (பாமாலை 220)
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    ஆத்மமே உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து
மீட்பு சுகம் ஜீவன் அருள்
பெற்றதாலே துதித்து
அல்லேலூயா என்றென்றைக்கும்
நித்திய நாதரைப் போற்று.

2.    நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய்த் துதி
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி
அல்லேலூயா, அவர் உண்மை
மா மகிமையாம், துதி.

3.    தந்தைபோல் மா தயை உள்ளோர்
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம்கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே
அல்லேலூயா, இன்னும் அவர்
அருள் விரிவானதே.

4.    என்றும் நின்றவர் சமூகம்
போற்றும் தூதர் கூட்டமே
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே
அல்லேலூயா, அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே.

Post Comment

Tuesday, August 19, 2014

பாமாலை 299 - உந்தன் சொந்தமாக்கினீர் (Newington)

பாமாலை 299 - உந்தன் சொந்தமாக்கினீர் 
Thine for ever God of Love
Tune : Newington

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.    உந்தன் சொந்தமாக்கினீர்
அடியேனை நோக்குவீர்
பாதுகாரும் இயேசுவே
என்றும் தீங்கில்லாமலே

2.    நான் உம் சொந்தம், லோகத்தில்
மோட்ச யாத்திரை செய்கையில்
ஜீவன், சத்தியம், வழியும்
நீரே, ரட்சித்தாண்டிடும்

3.    நான் உம் சொந்தம் ரட்சியும்
மட்டில்லாத பாக்கியமும்
அருள் நாதா, நல்கினீர்
இன்னமும் காப்பாற்றுவீர்.

4.    நான் உம் சொந்தம் நித்தமாய்
தாசனை நீர் சுகமாய்
தங்கச் செய்து, மேய்ப்பரே
காத்தும் மேய்த்தும் வாருமே.

5.    நான் உம் சொந்தம், தேவரீர்
வழி காட்டிப் போஷிப்பீர்
பாவம் நீங்கக் கழுவும்
ஆயுள் முற்றும் நடத்தும்.

Post Comment

பாமாலை 290 - நாங்கள் பாவப் பாரத்தால் (Aberystwyth)

பாமாலை 290 - நாங்கள் பாவப் பாரத்தால் 
Saviour When in Dust to Thee
Tune : Aberystwyth

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. நாங்கள் பாவப் பாரத்தால்
கஸ்தியுற்றுச் சோருங்கால்
தாழ்மையாக உம்மையே
நோக்கி, கண்ணீருடனே
ஊக்கத்தோடு வாஞ்சையாய்
கெஞ்சும்போது, தயவாய்
சிந்தை வைத்து, இயேசுவே
எங்கள் வேண்டல் கேளுமே.

2. மோட்சத்தை நீர் விட்டதும்,
மாந்தனாய்ப் பிறந்ததும்
ஏழையாய் வளர்ந்ததும்,
உற்ற பசி தாகமும்,
சாத்தான் வன்மை வென்றதும்
லோகம் மீட்ட நேசமும்
சிந்தை வைத்து, இயேசுவே,
எங்கள் வேண்டல் கேளுமே.

3. லாசருவின் கல்லறை
அண்டை பட்ட துக்கத்தை
சீயோன் அழிவுக்காய் நீர்
விட்ட சஞ்சலக் கண்ணீர்
யூதாஸ் துரோகி எனவும்
துக்கத்தோடுரைத்ததும்
சிந்தை வைத்து, இயேசுவே
எங்கள் வேண்டல் கேளுமே.

4. காவில் பட்ட கஸ்தியும்
ரத்த சோரி வேர்வையும்
முள்ளின் கிரீடம், நிந்தனை
ஆணி, ஈட்டி, வேதனை,
மெய்யில் ஐந்து காயமும்,
சாவின் நோவும், வாதையும்
சிந்தை வைத்து, இயேசுவே
எங்கள் வேண்டல் கேளுமே.

5. பிரேத சேமம், கல்லறை,
காத்த காவல், முத்திரை
சாவை வென்ற சத்துவம்
பரமேறும் அற்புதம்,
நம்பினோர்க்கு ரட்சிப்பை
ஈயும் அன்பின் வல்லமை
சிந்தை வைத்து, இயேசுவே,
எங்கள் வேண்டல் கேளுமே.

Post Comment

Monday, August 18, 2014

பாமாலை 278 - வாரும் தெய்வ ஆவி

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    வாரும், தெய்வ ஆவி வாரும்
எங்கள் ஆத்துமத்திலே
எங்களுக்குயிரைத் தாரும்
வாரும் சுத்த ஆவியே
உம்முடன் வெளிச்சமும்
சீரும் ஜீவனும் வரும்.

2.    எங்கள் நெஞ்சிலே நற்புத்தி
தெய்வ பயமும் வர
அதை நீர் குணப்படுத்தி
தப்பு நினைவாகிய
யாவையும் அதில் நீரே
நீக்கும், தெய்வ ஆவியே.

3.    மோட்சத்தின் வழியைக் காட்டி,
சகல தடையையும்
நீக்கி, எங்களைக் காப்பாற்றி
நல்லோராக்கியருளும்
கால் இடறிற்றேயாகில்
துக்கம் தாரும் மனதில்.

4.    நாங்கள் தெய்வ மைந்தரென்று
நீரே தீங்கு நாளிலும்
சாட்சி தந்ததிரைவென்று
நெஞ்சைத் தேற்றியருளும்
தெய்வ அன்பின் தண்டிப்பு
எங்களுக்கு நல்லது.

5.    எங்களைப் பிதாவிடத்தில்
முழுபக்தியோடேயும்
சேரப்பண்ணி, ஆத்துமத்தில்
நீரும் கூப்பிட்டேயிரும்
அப்போ கேட்டது வரும்
நம்பிக்கையும் பெருகும்.

6.    மனசெங்களில் கலங்கி
“ஸ்வாமி, எந்த மட்டுக்கும்”
என்று கெஞ்சும் போதிரங்கி
அதை ஆற்றிக்கொண்டிரும்
நிற்கவும் தரிக்கவும்
நீர் சகாயராய் இரும்.

7.    ஆ, நிலைவரத்துக்கான
சத்துவத்தின் ஆவியே
பேயின் சூதுக்கெதிரான
ஆயுதங்களை நீரே
தந்து, நாங்கள் நித்தமும்
வெல்லக் கட்டளையிடும்

8.    விசுவாசத்தை அவிக்க
சத்துருக்கள் பார்க்கவே
அதை நீர் அதிகரிக்க
செய்யும் தெய்வ ஆவியே
நாங்கள் பொய்யைப் பார்க்கிலும்
தெய்வ வாக்கை நம்பவும்.

9.    சாகும் காலம் வந்தால், நாங்கள்
நித்திய மகிழ்ச்சியாய்
வாழப்போகும் மோட்சவான்கள்
என்றப்போ விசேஷமாய்
நிச்சயத்தை நெஞ்சிலே
தாரும், நல்ல ஆவியே.

Post Comment

பாமாலை 268 - மகா அருளின் ஜோதியை (Frankfort)

பாமாலை 268 - மகா அருளின் ஜோதியை 
Tune : Frankfort

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    மகா அருளின் ஜோதியை
வீசிடும் வெள்ளி எத்தனை
பிரகாசமாய் விளங்கும்
தாவீதின் மைந்தன் இயேசுவே
நீரே என் மணவாளனே
என் பொக்கிஷம் என் பங்கும்
முற்றும் சுற்றும்
தயவாலும் உண்மையாலும்
நீர் நிறைந்தோர்
மேன்மை நாமமும் அடைந்தோர்.

2.    சிநேகமுள்ள பார்வையால்
அடியேனை நீர் நோக்கினால்
பரம் வெளிச்சம் காட்டும்
நீர் சொல்லும் இன்ப சொற்களும்
தரும் சரீரம் ரத்தமும்
என் ஆத்துமத்தை ஆற்றும்
தேற, சேர
கிட்டும் என்னை நற்றிடனைத்
தந்தே தேற்றும்
அன்புமாய் அரவணையும்.

3.    பிதாவே நீர் அநாதியில்
என் பேரிலே குமாரனில்
சிநேகம் வைத்த கர்த்தா;
குமாரன் என்னைத் தமக்கே
மனைவி என்றன்புடனே
தெரிந்து கொண்ட பர்த்தா
மெத்த கெட்ட
பாவியான என்னைவான
கர்த்தர்தாமே
நோக்கினதிரக்கமாமே.

4.    கிண்ணரம், யாழும் வீணையும்
சங்கீத வாத்தியங்களும்
களிப்பாய்த் தொனிக்கட்டும்
அன்புள்ள இயேசுவுடனே
நான் என்றென்றைக்கும் வாழ்வதே
என் ஆவியை எழுப்பும்
ஆடி, பாடி,
கிறிஸ்துதாமே நேசராமே
என்று ஓதும்
சந்தம் இன்பமே எப்போதும்.

5.    மகிழ்வேன் என் சிநேகிதர்
அல்பா ஒமேகா என்பவர்,
என் நேசர் ஆதியந்தம்
இனி மோட்சானந்தத்திலே
நான் அவரண்டை சேர்வேனே
என் பாக்கியம் அநந்தம்
ஆமேன், ஆமேன்,
வா, ரட்சிப்போ, வா கெலிப்போ
உனக்காக
வாஞ்சிப்பேன் நான் சேர்வாயாக.
 

Post Comment

பாமாலை 242 - நான் தூதனாக வேண்டும் (Ellacombe)

பாமாலை 242 – நான் தூதனாக வேண்டும்
(I want to be an angel)

“அக்கா.. நானும் ஆண்டவருக்குப் பணி செய்யும் தூதனாக மாறவேண்டும்!” என உற்சாகத்துடன் கூச்சலிட்டாள் ஒரு அழகிய சிறுபெண்.  ஞாயிறு பள்ளியின் வகுப்பு நேரத்தில், தேவதூதர்களைப் பற்றி வேதபாடம் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த ஆசிரியை சிட்னி.பி.கில் (Sidney P. Gill) மகிழ்வுடன் சத்தமிட்ட மாணவியைப் பார்த்துப் புன்னகை செய்தாள். அவள் அமெரிக்காவிலுள்ள ஃபிலடெல்ஃபியாவிலுள்ள டாக்டர் ஜோயல் பார்க்கர் ஆலய ஞாயிறு பள்ளி ஆசிரியையாக உத்தமமாய் ஊழியம் செய்து வந்தாள்.

சில நாட்கள் சென்றபின், தேவதூதனாக மாற விரும்பிய அச்சிறுமி, வியாதிப்பட்டு மரித்துப்போனாள்.  இதைச் சற்றும் எதிர்பாராத சிட்னியின் உள்ளத்தில் அன்று அந்த மாணவி உற்சாகமாய்க் கூறிய வார்த்தைகள், மறக்க முடியாமல் தொனித்துக்கொண்டேஇருந்தன.  அச்சிறுமியின் வாஞ்சை, சிட்னியின் உள்ளத்தில் பாடலாக உருவெடுத்தது.


இப்பாடலைத் தன் ஞாயிறு பள்ளி பிள்ளைகள் பாடுவதற்கென்றே, சிட்னி எழுதினாள்.  ஆனால், நாளடைவில், பெரியவர்களும் கூட விரும்பிப் பாடும் பாடலாக அது மாறியது.  பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பல நாடுகளில் இன்றும் இப்பாடல் பாடப்பட்டு வருகிறது.

நன்றி: ’131 பாடல் பிறந்த கதை’ அமைதி நேர ஊழிய வெளியீடு.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1.    நான் தூதனாக வேண்டும்
விண் தூதரோடேயும்
பொற் கிரீடம் தலை மேலும்
நல் வீணை கையிலும்
நான் வைத்துப் பேரானந்தம்
அடைந்து வாழுவேன்;
என் மீட்பரின் சமுகம்
நான் கண்டு களிப்பேன்.

2.    அப்போது சோர்வதில்லை
கண்ணீரும் சொரியேன்
நோய், துக்கம், பாவம், தொல்லை
பயமும் அறியேன்
மாசற்ற சுத்தத்தோடும்
விண் வீட்டில் தங்குவேன்
துதிக்கும் தூதரோடும்
நான் என்றும் பாடுவேன்.

3.    பிரகாசமுள்ள தூதர்
நான் சாகும் நேரத்தில்
என்னைச் சுமந்து போவார்
என் இயேசுவண்டையில்
நான் பாவியாயிருந்தும்
என் மீட்பர் மன்னித்தார்
எண்ணில்லாச் சிறியோரும்
என்னோடு வாழுவார்.

4.    மேலான தூதரோடும்
நான் தூதன் ஆகுவேன்
பொற் கிரீடம் தலைமேலும்
தரித்து வாழுவேன்
என் மீட்பர்முன் ஆனந்தம்
நான் பெற்று வாழ்வதே
வாக்குக் கெட்டாத இன்பம்
அநந்த பாக்கியமே.

Post Comment

பாமாலை 232 - சொற்பக் காலம் பிரிந்தாலும்

பாமாலை 232 - சொற்ப காலம் பிரிந்தாலும் பார்
(God be with you till we meet again)

’நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக’ ரோமர் 16:20

பொதுவாக நாம் ஒருவரை விட்டுப் பிரியும்போது, ‘போய் வருகிறேன்’ எனக்கூறி விடைபெற்றுக்கொள்கிறோம்.  ஆங்கிலத்தில் ‘Good-bye’ எனக்கூறுவது வழக்கம். இதற்கு, ‘God be with you’ (கடவுள் நம்மோடு இருப்பாராக) என்பது பொருள்.  கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளிலும், மற்றும் வழிபாடுகளிலும், முடிவில் ஆசீர்வாத ஜெபம் கூறப்படுகிறது.  இவ்வாசீர்வாதத்தின் முக்கிய அம்சம் ‘கடவுள் உங்களோடு இருப்பாராக’ என்பதே.

Jeremiah Eames Rankin
1882ம் ஆண்டு, அமெரிக்காவில் நியூ இங்கிலாந்து மாகாணத்தில் சபை ஆளுகைச் சபைப் போதகராயிருந்த ஜெரிமையா ராங்கின் (Jeremiah Eames Rankin), என்பவர், தமது சபை மக்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியும்போது, ‘Good-bye’ என்று சொல்வதை, தங்கள் விசுவாசத்துக்கு முரண்பாடாக இல்லாத ஒரு பாடலாக எழுத ஆவல்கொண்டு, ‘God be with you till we meet again’ என்னும் பாடலை எழுதினார்.  தங்களுக்கு அருமையானவர்கள் பயணம் செல்லும்போது, ‘நாம் மீண்டும் சந்திக்கும்வரை கடவுள் உம்மோடு இருப்பாராக’ என வாழ்த்துவது, கிறிஸ்தவக் கொள்கைக்குப் பொருத்தமான பிரிவு உபசாரம் என ராங்கின் போதகர் கருதினார்.

இப்பாடலை எழுதியபின் ராங்கின் போதகர், புகழ்பெற்ற ஒரு சங்கீத நிபுணரையும், அதிக சங்கீத அனுபவமில்லாத வில்லியம் டோமர் (William Tomer) என்பவரையும் அழைத்து, இப்பாடலுக்கு ஓர் ராகம் அமைக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.  அவர்கள் எழுதிய ராகங்களில், வில்லியம் டோமர் எழுதிய ராகமே சிறந்ததாகக் காணப்பட்டதால், அதையே இப்பாடலின் ராகமாக வைத்துக்கொண்டார்.  இப்பாடல், எல்லா கிறிஸ்தவப் பிரிவு உபசாரங்களிலும் பாடப்பட்டு வருகிறது, இதன் பல்லவியில், ‘Till we meet at Jesus’ feet’ என்றிருப்பது, திரும்பவும் இவ்வுலகில் சந்திப்பது நிச்சயமல்ல’ என்னும் கருத்தைக் கொடுப்பதால் பிரிவு உபசாரத்துக்கு இது ஏற்றதல்ல எனச் சிலர் ஆட்சேபித்தனர்.  ராங்கின் போதகர் இப்பல்லவியை எழுதவில்லை என்றும், ராகம் அமைத்தவரே அதைச் சேர்த்துக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஆதலால் சிலர் இப்பாடலைப் பல்லவி இல்லாமல் பாடுகின்றனர்.  இப்பாடல் கிறிஸ்தவ உலகில் வெகுவாகப் பாராட்டப்படுவதற்குக் காரணம் டோமர் அமைத்த ராகமே எனக்கூறலாம்.

இப்பாடலை எழுதிய ஜெரிமையா ராங்கின் என்பவர் 1828ம் ஆண்டு, அமெரிக்காவில் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில், தார்ண்டன் நகரில் பிறந்தார் (Thornton, New Hampshire).  ஆரம்பக் கல்வியை அவ்வூரிலேயே முடித்து, அவரது பெற்றோர் அவரைத் திருப்பணிக்காக அர்ப்பணித்ததால், மாசாசூசட்ஸ் மாகாணத்திலுள்ள அண்டோவர் நகரில் (Andover, Massachusetts) திருமறைப் பயிற்சி நிலையத்துக்கு அவர் அனுப்பப்பட்டார்.  இங்கு திருமறைப் பயிற்சியை முடித்தபின், அவர் சபை ஆளுகை முறைச் சபையைச் சேர்ந்து, ஆயர் பட்டம் பெற்று, அநேக சபைகளில் பணியாற்றி, 1889ம் ஆண்டு, ஹவ்வார்டு பல்கலைக்கழகத்தின் தலைவரானார் (President of Howard University in Washington, D.C.).  அருளுரையாற்றுவதில் மிகத் திறமை வாய்ந்தவராதலால், அவர் பணியாற்றிய ஆலயங்களில் திரளான மக்கள் கூடி வந்தனர்.  மாலை வேளைகளில் அவர் திறந்தவெளிச் சுவிசேஷக் கூட்டங்களை நடத்தினார். மேலும் அவர் பல கிறிஸ்தவச் செய்யுள்கள் எழுதியதுடன், சுவிசேஷப் பாடல்கள் அடங்கிய பாட்டு புத்தகங்களும் இயற்றினார்.


ஜெரிமையா ராங்கின் போதகர் 1904ம் ஆண்டு, தமது 76வது வயதில் மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    சொற்பக் காலம் பிரிந்தாலும் பார்
பின்பு ஏகசபையாக
கூடுவோம் ஆனந்தமாக;
அது மட்டும் கர்த்தர் தாங்குவார்.

     கூடுவோம் கூடுவோம்
     இயேசுவோடு வாழுவோம்
     கூடுவோம் கூடுவோம்
     அது மட்டும் கர்த்தர் தாங்குவார்.

2.    அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
மிக்க ஞானத்தால் நடத்தி
மோசமின்றியும் காப்பாற்றி
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்

3.    அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
சிறகாலே மூடிக் காத்து
மன்னா தந்து போஷிப்பித்து
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்

4.    அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
துன்பம் துக்கம் நேரிட்டாலே
கையில் ஏந்தி அன்பினாலே
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்

5.    அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
ஜெயக் கொடி பறந்தாடும்
சாவும் தோற்றுப் பறந்தோடும்
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.

God be with you till we meet again

Post Comment

Friday, August 15, 2014

பாமாலை 209 - கிறிஸ்து எம் ராயரே (St. Cecilia)

கிறிஸ்து எம் ராயரே
Thy Kingdom come O God
Tune : St. Cecelia

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

 


1. கிறிஸ்து எம் ராயரே,
வந்தாளுகை செய்யும்
வெம் பாவம் நீங்கவே
செங்கோலைச் செலுத்தும்.

2. விரோதம் நீங்கியே
விண்போல மண்ணிலும்
தூய்மையும் அன்புமே
எப்போது செழிக்கும்?

3. உம் வாக்குக்கேற்றதாய்
வீண் போரும் பகையும்
சீர் கேடும் முற்றுமாய்
எப்போது ஒழியும்?

4. எழும்பும், கர்த்தாவே,
வல்லராய் வாருமேன்,
தாசர் தவித்தோமே,
வந்தாற்றித் தேற்றுமேன்.

5. உம் மார்க்கம் நாமமும்
பலர் பழிக்கின்றார்
துர் கிரியை பலரும்
நாணாமல் செய்கின்றார்.

6. தேசங்கள் யாவிலும்
மெய் பக்தி மங்கிற்றே
விண் ஜோதி வீசிடும்
மா விடி வெள்ளியே.

Post Comment

Thursday, August 14, 2014

பாமாலை 208 - காரிருளால் மூடப்பட்ட (Dismissal)

பாமாலை 208 - காரிருளால் மூடப்பட்ட 
Tune : Dismissal


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    காரிருளால் மூடப்பட்ட
பர்வதங்கள் மேலே பார்;
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜோதி தோன்றச் செய்கிறார்
அதற்காக அதற்காக
நெஞ்சமே, மகிழ்ச்சி கொள்.

2.    அதைத் தேசத்தார் எல்லாரும்
காணச் செய்யும் கர்த்தரே,
அந்தகாரமுள்ள யாரும்
அதால் சீராவார்களே
நீர் சகித்த நீர் சகித்த
சாவின் பலன் அதுவே

3.    இப்போ லட்ச லட்சமான
பேர்கள் அருள் பெற்றது
உம்முடைய உண்மையான
அன்பினாலே ஆயிற்று
அதற்காக அதற்காக
உமக்கே மா ஸ்தோத்திரம்.

Post Comment

பாமாலை 203 - அதோ ஓர் ஜீவ வாசலே

பாமாலை 203 - அதோ ஓர் ஜீவ வாசலே
There is a gate that stands ajar

SATB


Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    அதோ! ஓர் ஜீவ வாசலே!
அவ்வாசலில் ஓர் ஜோதி
எப்போதும் வீசுகின்றதே,
மங்காத அருள்ஜோதி,
 
ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!
அவ்வாசல் திறவுண்டதே!
பாரேன்! பாரேன்!
பார்! திறவுண்டதே.
 
2.    அவ்வாசலுள் பிரவேசிப்போர்
கண்டடைவார் மெய்வாழ்வும்
கீழோர், மேலோர், இல்லோர், உள்ளோர்
எத்தேச ஜாதியாரும்.
 
3.    அஞ்சாமல் அண்டிச் சேருவோம்
அவ்வாசலில் உட்செல்வோம்
எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்
கர்த்தாவைத் துதிசெய்வோம்.

Post Comment

Sunday, August 10, 2014

பாமாலை 192 - தற்பரா தயாபரா (Picardy)

Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano










































1.    தற்பரா தயாபரா நின்
தக்ஷணை கைப்பற்றினோம்
பொற்பரா, நினைப் புகழ்ந்து
போற்றினோம் பொன் நாமமே
அற்புதம், அடைக்கலம் நீ
ஆதரித்தனுப்புவாய்.

2.    நாவினால் நமஸ்கரித்து,
நாதா நினைப் பாடினோம்
பாவியான பாதகரைப்
பார்த்திபா கடாக்ஷித்தே
ஆவியால் நிரப்பி எம்மை
ஆசீர்வதித்தருள்வாய்.

3.    நின் சரீரத்தால் எம் மாம்சம்
நீதியாக்கப் பெற்றதே
மன்னவா, எம்மாசும் நீக்கி
மாட்சி முகம் காட்டுவை
கன்னலன்ன அன்பின் ஆசி
கர்த்தனே, விளம்புவாய்.

4.    தந்தை முகம் என்றும் காணும்
மைந்தன் இயேசு நாதனே,
மந்தையாயெமை மதித்த
மாசில் மணி மேசியா
விந்தை முகம் காட்டினை நீ
வீழ்ந்துனைப் பணிவோமே.

Post Comment

பாமாலை 169 - வெள்ளை அங்கி தரித்து (Hollingside)

பாமாலை 169 - வெள்ளை அங்கி தரித்து
Tune : Hollingside


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    வெள்ளை அங்கி தரித்து
சுடர் ஒளியுள்ளோர் ஆர்?
ஸ்வாமியை ஆராதித்து
பூரிப்போர் களிப்போர் ஆர்?
சிலுவையை எடுத்து
இயேசுவின் நிமித்தமே
யுத்தம் பண்ணிப் பொறுத்து
நின்றோர் இவர்கள்தானே

2.    மா துன்பத்திலிருந்து
வந்து விசுவாசத்தால்
தெய்வ நீதி அணிந்து
சுத்தமானார் ஆதலால்
ஓய்வில்லாமல் கர்த்தரை
கிட்டி நின்று சேவிப்பார்
கர்த்தர் சுத்தவான்களை
சேர்த்து ஆசீர்வதிப்பார்

3.    அவர் ஜெயம் கொண்டோராம்
இனி சோதிக்கப்படார்
தீமை நீக்கித் தூயோராய்
பசி தாகம் அறியார்
மத்தியான உஷ்டணம்
இனி படமாட்டாதே
அவர்கள் மெய்ப் பாக்கியம்
வளர்ந்தோங்கும் நித்தமே

4.    தெய்வ ஆட்டுக்குட்டியும்
அவர்களைப் போஷிப்பார்
ஜீவ தருக் கனியும்
ஜீவ நீரும் அளிப்பார்
துக்கம் துன்பம் ஒழித்து
குறை யாவும் நீக்குவார்
கண்ணீரையும் துடைத்து
அன்பினால் நிரப்புவார்

Post Comment

பாமாலை 168 - வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் (Beatitudo)

பாமாலை 168 - வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் 
How bright these glorious spirits shine
Tune : Beatitudo


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1.    வெள்ளங்கி பூண்டு மாட்சியாய்
நிற்கும் இப்பாக்கியர் யார்?
சதா சந்தோஷ ஸ்தலத்தை
எவ்வாறு அடைந்தார்?

2.    மிகுந்த துன்பத்தினின்றே
இவர்கள் மீண்டவர்,
தம் அங்கி கிறிஸ்து ரத்தத்தில்
தூய்மையாய்த் தோய்த்தவர்

3.    குருத்தோலை பிடித்தோராய்
விண் ஆசனமுன்னர்
செம்ஜோதியில் தம் நாதரை
இப்போது சேவிப்பர்.

4.    வெம் பசி, தாகம் வெய்யிலும்
சற்றேனும் அறியார்;
பகலோனாக ஸ்வாமிதாம்
நற்காந்தி வீசுவார்.

5.    சிங்காசனத்தின் மத்தியில்
விண் ஆட்டுக்குட்டிதாம்
மெய் அமிர்தத்தால் பக்தரை
போஷித்துக் காப்பாராம்.

6.    நல் மேய்ச்சல், ஜீவ தண்ணீர்க்கும்
அவர் நடத்துவார்;
இவர்கள் கண்ணீர் யாவையும்
கர்த்தர்தாம் துடைப்பார்.

7.    நாம் வாழ்த்தும் ஸ்வாமியாம் பிதா,
குமாரன் ஆவிக்கும்,
நீடூழி காலமாகவே
துதி உண்டாகவும்.

Post Comment

பாமாலை 167 - விஸ்வாசத்தோடு சாட்சி

பாமாலை 167 - விஸ்வாசத்தோடு சாட்சி
For all the saints who from their labours rest

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano






1. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே
தம் வேலை முடித்தோர் நிமித்தமே,
கர்த்தாவே, உம்மைத் துதி செய்வோம்
அல்லேலூயா! அல்லேலூயா!

2. நீர் அவர் கோட்டை, வல் கன்மலையாம்
நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம்
நீர் காரிருளில் பரஞ்சோதியாம்,
அல்லேலூயா! அல்லேலூயா!

3. முன்நாளில் பக்தர் நற்போராடியே
வென்றார்போல் நாங்கள் வீரராகவே,
பொற்கிரீடம் பெற்றுக்கொள்வோமாகவே,
அல்லேலூயா! அல்லேலூயா!

4. இங்கே போராடி நாங்கள் களைத்தும்
உம் பக்தர் மேன்மையில் விளங்கினும்
யாவரும் உம்மில் ஓர் சபை என்றும்
அல்லேலூயா! அல்லேலூயா!

5. போர் நீண்டு மா கடூரமாகவே,
கெம்பீர கீதம் விண்ணில் கேட்குமே,
நாம் அதைக் கேட்டு, தைரியம் கொள்வோமே
அல்லேலூயா! அல்லேலூயா!

6. செவ்வானம் மேற்கில் தோன்றி ஒளிரும்
மெய் வீரருக்கு ஓய்வு வாய்த்திடும்,
சீர் பரதீசில் பாக்கியம் அமையும்
அல்லேலூயா! அல்லேலூயா!

7. மேலான பகல் பின் விடியும் பார்!
வென்றோர் கெம்பீரமாய் எழும்புவார்
மாண்புறும் ராஜா முன்னே செல்லுவார்,
அல்லேலூயா! அல்லேலூயா!

8. அநந்த கூட்டம் நாற்றிசை நின்றும் 
திரியேகருக்கு ஸ்தோத்ரம் பாடியும்
விண் மாட்சி வாசலுள் பிரவேசிக்கும்
அல்லேலூயா! அல்லேலூயா!


Post Comment