Sunday, March 30, 2014

Low in the Grave He Lay

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.       Low in the grave he lay,
Jesus my Savior!
Waiting the coming day
Jesus my Lord.

                   Refrain

          Up from the grave he arose
          With a mighty triumph o’er his foes;
          He arose a victor from the dark domain,
          And he lives for ever with his saints to reign
          He arose! He arose! Hallelujah! Christ arose!

2.       Vainly they watch his bed,
Jesus my Savior!
Vainly they seal the dead,
Jesus my Lord.

3.       Death cannot keep his prey
Jesus my Savior!
He tore the bars away,
Jesus my Lord!

Post Comment

Tuesday, March 25, 2014

பாமாலை 347 - தெய்வ ஆட்டுக்குட்டியே (Dix)

பாமாலை 347 - தெய்வ ஆட்டுக்குட்டியே 
Tune : Dix

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1.    தெய்வ ஆட்டுக்குட்டியே
லோகத்தாரின் மீட்பரே
உம்மால் மீட்கப்பட்ட நான்
தேவரீர்க்கு அடியான்
நீர் என் கோட்டை தஞ்சமாம்
ஆர் என் வாழ்வை நீக்கலாம்?

2.    உம்மைப் பற்றும் நேசத்தை,
உம்மில் வைக்கும் பக்தியை
பேயும், கெட்ட லோகமும்
மூர்க்கமாய் விரோதிக்கும்;
இன்பம் துன்பம் நித்தமே
கண்ணியாக நிற்குமே.

3.    கர்த்தரே, என் உள்ளத்தில்
அருள் தந்தென் மனதில்
அந்தகாரம் நீங்கிட,
அன்பின் தீபம் ஸ்வாலிக்க,
ஆவியின் நல் ஈவையும்
பூர்த்தியாக அளியும்.

4.    எந்த நாழிகையிலே
நீர் வந்தாலும் இயேசுவே,
உம்மையே நான் சந்திக்க
கண்ணால் கண்டு களிக்க,
நான் விழித்திருக்கவே
நித்தம் ஏவிவாருமே.

Post Comment

Thursday, March 20, 2014

பாமாலை 131 - வாழ்க பாக்கிய காலை (Hermas)

பாமாலை 131 - வாழ்க பாக்கிய காலை 
Welcome Happy Morning
Tune : Hermas


SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano

*******************





1.    "வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார்
இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்;
மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம்
உம்மை சிஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும்.

         ”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார்
          இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்;

2.    துளிர் காலம் பூண்டு பூமி மகிழ்ந்தே
மீளும் ராயர் பின்செல் நற்பேறெனவே;
பசும் புல் வயல் பூவும் துளிர் இலையும்
துக்கம் அற்றார், வெற்றி கொண்டார் என்குதே.

3.    மாதங்கள் தொடர்பும், நாட்கள் நீடிப்பும்,
ஓடும் நிமிஷமும் உம்மை வாழ்த்துதே,
காலை ஒளியும், விண், வயல் கடலும்
இருள் வென்ற வேந்தே, உம்மைப் போற்றுதே.

4.    நீர் எம் மீட்பர், கர்த்தர், ஜீவன் சுகமாம்
நீர் பிதாவின் திவ்விய ஏக சுதனம்
நரர் சுபாவம் போக்க கிருபை பூண்டீர்
மாந்தர் மீட்படைய மானிடன் ஆனீர்.

5.    ஜீவ காரணர் நீர் சாவுக்குட்பட்டீர்
மீட்பின் பலம் காட்ட பாதாளம் சென்றீர்;
‘இன்று மூன்றாம் நாளில் எழுந்திருப்பேன்’
என்று சொன்ன வாக்கை நின்று காருமேன்.

6.    பேயால் கட்டுண்டோரின் சிறை நீக்குமே,
வீழ்ந்தோர் யார்க்கும் புனர் ஜீவன் தாருமே;
மாந்தர் யார்க்கும் ஜோதி முகம் காட்டுமே
உமதொளி தந்து எம்மைக் காருமே.

Post Comment

Wednesday, March 19, 2014

பாமாலை 337 - உம்மை ராஜா விசுவாச

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

SATB with Descant

Descant only


1. உம்மை ராஜா விசுவாச
பக்தியாய்ப் பணிகிறேன்
தாழ்மையோடும் கண்ணீரோடும்
தேவரீரை அண்டினேன்
நீர் மண்ணான பாண்டமான
என்னை அன்பாய்ப் பாருமேன்.

2. என்னைச் சுத்த சீர்ப்படுத்த
அருள் செய்யும், கர்த்தரே;
என்னைச் சொந்த ஆடாய்க் கொண்ட
மேய்ப்பரான உம்மையே
சேர்வேனாக, நீர் அன்பாக
என்னைப் பாரும், இயேசுவே.

3. தயவோடே நீர் உம்மோடே
ஐக்கியமாம் எல்லாருக்கும்
ஈவதான இன்பமான
அருள் என்மேல் வரவும்;
யாவும் நீரே, தேவரீரே
என்னைப் பார்த்து ரட்சியும்.

4. ஆ, என் ஞானப் பொழுதான
தெய்வ ஆட்டுக்குட்டியே
எனதாவி உம்மைத் தாவி
தேடும், மணவாளனே;
பட்சத்தோடும் தயவோடும்
என்னைப் பாரும், மீட்பரே.

5. ஏங்கலோடும் பணிவோடும்
என்னுடைய ஆத்துமம்,
வாயும் நெஞ்சும் கூவிக் கெஞ்சும்
சத்தம் கேட்டென் சஞ்சலம்
தீர்ப்பீராக; நீர் அன்பாக
என்னைப் பார்த்தால் பாக்கியம்.

6. உலகத்துப் பொய்ச் சம்பத்து
மாயையும் சிங்காரமும்
ஆன நல்ல செல்வம் அல்ல,
நெஞ்சை அவை வாதிக்கும்;
மெய் வாழ்வான நீர் அன்பான
பார்வை தந்து ரட்சியும்.

Post Comment

Saturday, March 15, 2014

பாமாலை 376 - பாவ சஞ்சலத்தை

இப் பாடலை இயற்றியவர் ஜோசப் ஸ்கிரீவன். 1819 ம் ஆண்டு அயர்லாந்தில் சீப்பாட்ரிக் என்னும் இடத்தில் பிறந்தார். திருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அவருக்கு  திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மணநாளுக்கு முன்தினம் மணப்பெண் குதிரையில் ஏறி ஒரு ஆற்றைக் கடக்க முயன்றபோது தவறி விழுந்து ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதை ஆற்றின் மறுகரையில் நின்று பார்த்துக்கொண்டு உதவிச் செய்யக் கூடாமல் திகைத்து நின்ற ஸ்கிரீவன் மிகவும் வேதனைப்பட்டார். அதனால் அவர் மனநிலையும் பாதிக்கப்பட்டது. இத்துயரத்தை மறக்க 1845ல் தமது 25 ஆம் வயதில் கனடா சென்றார்.

ஆண்டுகள் உருண்டோடின. ஸ்கிரீவன் "பிளைமவுத் சகோதரர்" என்ற சீர்திருத்த சபையில் சேர்ந்தார். அச்சமயம் ஒரு பெண்ணை மணக்க விரும்பினார். மணநாளும் குறிக்கப்பட்டது. திருமணத்துக்கு முன் அந்த சபையில் சேர விரும்பிய அவளுக்கு ஒரு ஏரியில் ஞானஸ்நானம் கொடுத்தனர். தண்ணீர் மிகவும் குளிர்ந்திருந்ததால் ஜலதோஷம் பிடித்தது. அதைத் தொடர்ந்து அதிக காய்ச்சல் வந்தது அவள் மரித்துப் போனாள்.

இத்திருமணத்தின் மூலமாவது தன் மகன் சந்தோஷ வாழ்வு பெறுவான் என்று நம்பியிருந்த ஸ்கிரீவனின் தாயார் தாங்கமுடியாத துயரத்துக்குள்ளானார். தனது வேதனையின் மத்தியிலும் தன்னை நினைத்து வருந்தும் தாயை ஆறுதல் படுத்த ஸ்கிரீவன் 1855ஆம் ஆண்டு இந்த அருமையான பாடலை எழுதினார்.

இப்பாடலுக்கு ஸ்கிரீவன்  கொடுத்த தலைப்பு "இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்" என்பதே. அவரை பராமரிக்க வந்த நண்பர் இப்பாடலின் கைப்பிரதியைப் பார்த்தார். அதைப்பார்த்து மனம் நெகிழ்ந்தவராக ஆச்சரியத்துடன் இப்பாடலை இயற்றியது யார்? என்று  கேட்டார்.  அதற்கு ஸ்கிரீவன் "நானும் ஆண்டவரும் சேர்ந்து இயற்றினோம்" என்று தாழ்மையாய் பதிலளித்தார்.

இவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரால் இயற்றப்பட்ட இப்பாடல் சாங்கியின் முதல் தர நற்செய்தி பாடல் தொகுப்பில் இடம்பெற்றது. உலகமெங்கும் பல உயிர்மீட்சி கூட்டங்களிலும், ஜெபக் கூட்டங்களிலும்  இன்றும் பாடப்பட்டு வருகின்றது. பாமர மக்களும் எளிதில் புரிந்துக்கொள்ளும் இப்பாடல் உலகிலுள்ள 4,00,000 கிறிஸ்தவ பாடல்களில் மிகவும் விரும்பி பாடப்படும் பாடல் என புகழப்பட்டது.

இப்பாடலுக்கு ஜெர்மனியில் உள்ள வழக்கறிஞர் சார்லஸ் கான்வர்ஸ் அருமையான ராகம் கொடுத்தார்.


ஸ்கிரீவன் தன் வாழ்வின் கடைசி நாட்களை சுகவீனம்,  வறுமை, மற்றும் மனவியாகுலத்துடன் கழித்தார். இறுதியில் 1886ம் ஆண்டு  தமது 66 வது வயதில் "நைஸ்லேக்" என்னும் ஊரில் ஒரு சிற்றாற்றில் தவறி விழுந்து மரித்தார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1.            பாவ சஞ்சலத்தை நீக்க
பிராண நண்பர்தான் உண்டே!
பாவ பாரம் தீர்ந்து போக
மீட்பர் பாதம் தஞ்சமே;
சால துக்க துன்பத்தாலே
நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும்
ஊக்கமான ஜெபத்தால்.

2.    கஷ்ட நஷ்டம் உண்டானாலும்
இயேசுவண்டை சேருவோம்;
மோச நாசம் நேரிட்டாலும்
ஜெப தூபம் காட்டுவோம்;
நீக்குவாரே நெஞ்சின் நோவை
பலவீனம் தாங்குவார்;
நீக்குவாரே மனச் சோர்பை,
தீய குணம் மாற்றுவார்.

3.    பலவீனமானபோதும்
கிருபாசனம் உண்டே;
பந்து ஜனம் சாகும்போதும்
புகலிடம் இதுவே;
ஒப்பில்லாத பிராண நேசா!
உம்மை நம்பி நேசிப்போம்.
அளவற்ற அருள் நாதா!
உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

What a Friend we have in Jesus

Post Comment

Thursday, March 13, 2014

பாமாலை 333 - இயேசுவே கல்வாரியில்

பாமாலை 333 - இயேசுவே கல்வாரியில்
Jesus keep me near the Cross

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1. இயேசுவே! கல்வாரியில்
என்னை வைத்துக்கொள்ளும்;
பாவம் போக்கும் ரத்தமாம்
திவ்விய ஊற்றைக் காட்டும்.

மீட்பரே! மீட்பரே!
எந்தன் மேன்மை நீரே;
விண்ணில் வாழுமளவும்
நன்மை செய்குவீரே.

2. பாவியேன் கல்வாரியில்
ரட்சிப்பைப் பெற்றேனே;
ஞான ஜோதி தோன்றவும்
கண்டு பூரித்தேனே.

3. ரட்சகா! கல்வாரியின்
காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க
என்னை ஆள்வீராக.

4. இன்னமும் கல்வாரியில்
ஆவலாய் நிற்பேனே;
பின்பு மோட்ச லோகத்தில்
என்றும் வாழுவேனே.

Post Comment

Wednesday, March 12, 2014

பாமாலை 328 - அஞ்சாதிரு என் நெஞ்சமே (Innsbruck)

பாமாலை 328 - அஞ்சாதிரு என் நெஞ்சமே
Tune : Innsbruck


SATB


Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            அஞ்சாதிரு என் நெஞ்சமே
உன் கர்த்தர் துன்ப நாளிலே
கண் பார்ப்போம் என்கிறார்
இக்கட்டில் திகையாதிரு
தகுந்த துணை உனக்கு
தப்பாமல் செய்குவார்.

2.    தாவீதும் யோபும் யோசேப்பும்
அநேக நீதிமான்களும்
உன்னிலும் வெகுவாய்
கஸ்தி அடைந்தும், பக்தியில்
வேரூன்றி ஏற்ற வேளையில்
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்.

3.    கருத்தாய் தெய்வ தயவை
எப்போதும் நம்பும் பிள்ளையை
சகாயர் மறவார்;
மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்
இரக்கமான கரத்தால்
அணைத்து பாலிப்பார்.

4.    என் நெஞ்சமே மகிழ்ந்திரு
பேய், லோகம் துன்பம் உனக்கு
பொல்லாப்புச் செய்யாதே
இம்மானுவேல் உன் கன்மலை
அவர்மேல் வைத்த நம்பிக்கை
அபத்தம் ஆகாதே.

Post Comment

Tuesday, March 11, 2014

பாமாலை 327 - வாழ்நாளில் யாது (Wiltshire)

பாமாலை 327 - வாழ்நாளில் யாது 
Through all the changing scenes of life
Tune : Wiltshire

SATB

Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano



1.            வாழ்நாளில் யாது நேரிட்டும்,
எவ்வின்ப துன்பத்தில்
நான் போற்றுவேன் என் ஸ்வாமியை
சிந்தித்து ஆன்மாவில்.

2.    சேர்ந்தே ஒன்றாய் நாம் போற்றுவோம்
அவர் மா நாமமே
என் தீங்கில் கேட்டார் வேண்டலே
தந்தார் சகாயமே.

3.    சன்மார்க்கர் ஸ்தலம் சூந்துமே
விண் சேனை காத்திடும்
கர்த்தாவைச் சாரும் யாவர்க்கும்
சகாயம் கிட்டிடும்.

4.    அவர் மா அன்பை ருசிப்பின்
பக்தர் நீர் காண்பீராம்
பக்தரே பக்தர் மட்டுமே
மெய்ப் பேறு பெற்றோராம்.

5.    கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்
அச்சம் வேறில்லையே
களித்தவரைச் சேவிப்பின்
ஈவார் உம் தேவையே.

6.    நாம் போற்றும் ஸ்வாமியாம் பிதா
குமாரன் ஆவிக்கே
ஆதியில் போலும் எப்போதும்
மகிமை யாவுமே.

Post Comment

Sunday, March 9, 2014

பாமாலை 187 - உம் அருள் பெற-St. Mary

பாமாலை 187 - உம் அருள் பெற
I am not worthy Holy Lord
Tune : St. Mary

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano









































1. உம் அருள் பெற, இயேசுவே,
நான் பாத்திரன் அல்லேன்;
என்றாலும் தாசன் பேரிலே
கடாக்ஷம் வையுமேன்.

2. நீர் எனக்குள் பிரவேசிக்க
நான் தக்கோன் அல்லவே
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க
நிமித்தம் இல்லையே.

3. ஆனாலும் வாரும் தயவாய்,
மா நேச ரக்ஷகா;
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய்
என் பாவ நாசகா.

4. நற்கருணையாம் பந்திக்கும்
அபாத்திரன் ஆயினேன்
நற் சீரைத் தந்து என்னையும்
கண்ணோக்கிப் பாருமேன்.

5. தெய்வீக பான போஜனம்
அன்பாக ஈகிறீர்;
மெய்யான திவ்விய அமிர்தம்
உட்கொள்ளச் செய்கிறீர்.

6. என் பக்தி, ஜீவன் இதினால்
நீர் விர்த்தியாக்குமேன்;
உந்தன் சரீரம் இரத்தத்தால்
சுத்தாங்கம் பண்ணுமேன்.

7. என் ஆவி, தேகம், செல்வமும்
நான் தத்தம் செய்கிறேன்;
ஆ இயேசுவே, சமஸ்தமும்
பிரதிஷ்டை செய்கிறேன்.

Post Comment

Friday, March 7, 2014

பாமாலை 324 - பாதை காட்டும் மா யெகோவா

பாமாலை 324 - பாதை காட்டும், மா யெகோவா
(Guide me, O Thou great Jehovah)

‘உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்’ – சங்கீதம் 73:24

இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்தினின்று விடுதலையடைந்து, நாற்பது ஆண்டுகளாகப் பாலைவனத்தில் பிரயாணம் செய்து, இறுதியில் கானான் தேசத்தையடைந்தனர்.  பாதை தெரியாத பாலைவனத்தில் அவர்களுக்கு வழி காட்டியது, பகலில் மேக ஸ்தம்பமும், இரவில் தீப ஸ்தம்பமுமே. வழியில் அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கடவுளே ஆச்சரியமானவிதமாக அளித்தார்.  நாமும் நமது சொற்பக் காலப் பூலோக வாழ்க்கையில், பாலைவனத்தில் வழி தெரியாது அலைந்து தெரியும் பரதேசிகள் போலவே இருக்கிறோம்.  கடவுளின் வழிகாட்டுதலை நாம் பின்பற்றினால் இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்து கானான் தேசத்தையடைந்ததுபோல, சாவின் அந்தகாரமாகிய யோர்தானைப் பத்திரமாகக் கடந்து, பரம கானானை அடையலாம்.

William Williams
(Credits : Wikipedia)
இப்பாடலை எழுதிய வில்லியம்ஸ் போதகர் (William Williams) மெதடிஸ்டு சபையைச் சேர்ந்தவர். அவர் 1717ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 11ம் தேதி உவேல்ஸ் நாட்டில் (Welsh) கார்மார்தென்ஷயர் (Carmarthenshire) என்னுமிடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் John Williams மற்றும் Dorothy Williams ஆவர். இவரது தந்தை விவசாயத் தொழில் செய்து வந்தவர். இளமைக் கல்வியை முடித்தபின், இவர் வைத்தியத் தொழிலுக்காகப் பயில ஆரம்பித்தார்.  ஆனால் சிறிது காலத்தில் அதைவிட்டு, குருத்துவ ஊழியத்தில் ஈடுபட்டு, 1740ல் டீக்கனாக அபிஷேகம் பெற்று, மூன்று ஆண்டுகள் குருத்துவ ஊழியம் செய்தார்.  சுவிசேஷப் பிரபல்லியத்தில் மிக்க ஆர்வமுடையவராதலால், சபை ஊழியத்தை விட்டு, தனியாக ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.  தமது ஊழியத்தின் ஆரம்பத்தில் அவர் வெஸ்லியின் கொள்கைகளை ஆதரித்து, இறுதியில் கால்வினிஸ்டு மெதடிஸ்டு குழுவினரைப் பின்பற்றினார். தமது தனி ஊழியத்தில், நாற்பது ஆண்டுகளுக்குள் அவர் தொண்ணூற்று ஆயிரம் மைல்கள் பிரயாணம் செய்தார்.

1785-ஆம் ஆண்டு, ஹண்டிங்டன் (Huntingdon) சீமாட்டியாகிய செலீனா அம்மையார் (Selina), பக்தியுள்ள வாலிபரைக் குருத்துவ ஊழியத்துக்காகப் பயிற்றுவிக்க, தென்வேல்ஸ் நாட்டில் ஒரு வேத சாஸ்திரப் பயிற்சிக் கல்லூரி ஆரம்பித்தார்.  கல்லூரியின் ஆரம்ப விழாவில் பாடப்படுவதற்காக ஒரு புதிய பாடலை எழுதித் தருமாறு, ‘வேல்ஸ் நாட்டு இனிய பாடகர்’ (Sweet Singer of Wales) என்றழைக்கப்பட்ட வில்லியம்ஸ் போதகரை ஹண்டிங்டன் சீமாட்டியார் கேட்டார்.  ஆகவே போதகர், ‘பாதை காட்டும் மா யெகோவா’ என்னும் பாடலை எழுதி, அதற்கேற்ற ஒரு ராகமும் அமைத்து, விழாவில் தமது வாத்தியக் குழுவினருடன் முதல்முறையாகப் பாடினார்.  முதலில் இப்பாடல் வெல்ஷ் மொழியில் எழுதப்பட்டு, பின்னர் ஆங்கிலத்திலும், இப்போது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பாடப்பட்டு வருகிறது.  இப்பாடல் பல்வேறு ராகங்களில் பாடப்பட்டு வந்தாலும், ‘CWM Rhondda’ என்னும் வேல்ஸ் நாட்டு ராகமே அதற்கு மிகப் பொருத்தமானதென்று கருதப்படுகிறது.


வில்லியம்ஸ் போதகர் வெல்ஷ் மொழியில் எண்ணூற்றுக்கும் அதிகமான பாடல்களும், ஆங்கிலத்தில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களும் எழுதியுள்ளார்.  அவர் எழுதிய வேறு பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.  அவர் 1791ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி உவேல்ஸ் நாட்டில் பான்டிஸெலின் என்னுமிடத்தில் தமது 74ம் வயதில் காலமானார்.
Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            பாதை காட்டும், மாயெகோவா,
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன்,
இவ்வுலோகம் காடுதான்;
வானாகாரம்
தந்து என்னைப் போஷியும்.

2.    ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை
நீர் திறந்து தாருமேன்;
தீப மேக ஸ்தம்பம் காட்டும்
வழியில் நடத்துமேன்;
வல்ல மீட்பர்!
என்னைத் தாங்கும், இயேசுவே.

3.    சாவின் அந்தகாரம் வந்து
என்னை மூடும் நேரத்தில்
சாவின் மேலும் வெற்றி தந்து,
என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்
கீத வாழ்த்தல்
உமக்கென்றும் பாடுவேன்.

Post Comment

Thursday, March 6, 2014

பாமாலை 323 - காரிருளில் என் நேச

’பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு முன்வெளிச்சங்காட்ட அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்’. யாத்திராகமம் 13:21

     சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் சிக்காகோ நகரில் நடந்த மத ஆராய்ச்சி மாநாட்டில் (Parliament of Religions) எல்லா மதத்தினரும் பாடக்கூடிய ஒரு பாடலைத் தேர்ந்தெடுக்க முயன்று, கடைசியில், ‘காரிருளில் என் நேச தீபமே’ என்னும் பாடலைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் அதைப் பாடி வந்தனர்.

     இப்பாடலை எழுதியவர் ஜான் ஹென்ரி நியூமென் என்னும் ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்.  அவர் 1801ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 21ம் தேதி லண்டன் மாநகரில் ஒரு செல்வந்தரான வங்கி முதலாளியின் புதல்வராகப் பிறந்தார்.  அவரது பெற்றோர் அவரைச் சட்டப்படிப்புக்கு அனுப்ப விரும்பினர்.  ஆனால் அவரோ ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரித்துவக் கல்லூரியில் குருத்துவ ஊழியத்திற்காகப் பயின்று, 1824ம் ஆண்டு தூய க்ளெமென்ட் ஆலயத்தின் குருவாக அபிஷேகம் பெற்றார்.  சில ஆண்டுகளுக்குப்பின் 1828ம் ஆண்டு தூய க்ளெமென்ட் ஆலயத்தின் தலைமை குருவாக (Vicar) நியமனம் பெற்றார்.  ஆரம்பத்தில் அவர் ஆங்கிலச் சபையைச் சேர்ந்திருந்தாலும், காலக் கிரமத்தில் ரோமச் சபையில் விருப்பமுடியவராகக் காணப்பட்டார். 1841ல் ஆங்கிலத் திருச்சபையைக் குறித்த ஒரு வெளியீட்டை அவர் பிரசுரிக்கவே, அதைக் குறித்து கடுமையான அபிப்பிராய பேதம் உண்டானதால், தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பின்னர் 1845ல் அவர் ரோமன் கத்தோலிக்கச் சபையைச் சேர்ந்து, 1879ல் கார்டினல் என்னும் உயர்பதவியையும் பெற்றார்.

     1833ம் ஆண்டு நியூமென் இத்தாலி நாட்டுக்குச்சென்று, அங்கு நோய்வாய்ப்பட்டு, சுகமடைந்தபின், இங்கிலாந்துக்குத் திரும்ப உத்தேசித்து, ஆரஞ்சுப்பழங்களை ஏற்றிச்சென்ற ஒரு பாய்மரக் கப்பலில் பிரயாணமானார்.  சரியான திசையில் காற்று வீசாததால் மத்தியதரைக் கடலில் கார்சிக்கா, சார்டினியா தீவுகளுக்கிடையிலுள்ள போனிபேஸியோ ஜலசந்தியில் ஒரு வாரம் காத்திருக்க நேரிட்டது.  இவ்வாரத்தை அவர் ஆங்கிலக்கவிகள் எழுதுவதில் கழித்தார்.  இவ்விதமாக 1833ம் ஆண்டு, ஜூன் மாதம் 16ம் தேதி எழுதப்பட்ட மூன்று கவிகளே, உலகமெங்கும் பாடப்பட்டு வருகிற ‘காரிருளில் என் நேச தீபமே’ என்னும் பாடலாகத் திகழ்கின்றது.

     ஆங்கிலச் சபையை விட்டு ரோமச்சபையைச் சேருமுன் அவருக்கிருந்த மனப்போராட்டத்தின்போது இதை எழுதியதாகப் பலர் கருதுகின்றனர்.  ஆனால் இது தவறு; ஏனெனில் இப்பாடலை எழுதிய பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவர் சபை மாறினார்.  அவர் நேசித்து வந்த திருச்சபையைக் குறித்து அவருக்கிருந்த மன வருத்தமும், தன் சுய தேசத்தையும் தன் இனத்தவரையும் சேரவேண்டும் என்ற ஆவலும், அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் அவருக்கிருந்த வேதனையும் பெலவீனமுமே இப்பாடலை எழுதுவதற்குத் தன்னைத் தூண்டிய காரணங்கள் என அவரே கூறியுள்ளார்.  தான் ஒரு ஊழியம் செய்யவேண்டியவர் என நம்பினார்.  ஆனால் அவ்வூழியத்தை எங்கே, எவ்விதம் செய்வது என்று தெரியாமல், தெய்வ நடத்துதலுக்காக இந்த ஜெபப் பாடலை எழுதினார். இரவில் தீபஸ்தம்பமும், பகலில் மேகஸ்தம்பமும் இஸ்ரவேலரை வாக்குப்பண்ணப்பட்ட நாட்டுக்கு வழி நடத்தியதை அவர் எண்ணியிருக்கலாம்.

     இப்பாடலின் கடைசி வரியில், ‘மறைந்துபோன நேசரை’ (Angel faces) என்பதைக் குறித்து பலவிதமான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.  ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பத்தில் பிரகாசித்த விசுவாசம், நம்பிக்கை முதலிய ஒளிக்கதிர்கள், பின்னால் மங்கி, தூரமாகச் சென்றதைக் குறிக்கும் என்பர் சிலர்.  ரட்சிப்பின் பிள்ளைகளுக்கு பயன்படுமாறு கடவுள் அனுப்பும் வழிகாட்டிகளைக் குறிக்கும் என்பர் சிலர்.  இன்னும் சிலர், பூலோக வாழ்க்கையில் நம்மோடிருந்து, நமக்கு முன்னால் சென்ற சிநேகிதரைக் குறிக்கும் என்பர்.  இப்பாடலை எழுதி சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், இதை எழுதிய கார்டினல் நியூமெனைக் கேட்டபோது, ‘எதை மனதில் கொண்டு எழுதினேன் என்று எனக்கு ஞாபகமில்லை’ எனக் கூறினார்.  ஆகையால் இது மறைபொருளாகவே இருக்கிறது.  ஆயினும் இப்பாடல் உலகப் பிரகாரமாகவும், ஆத்துமப் பிரகாரமாகவும், மனம் அலசடிப்பட்டுக்கொண்டிருக்கும் வேளைகளில், கிறிஸ்தவர்களுக்கும், இதர மதத்தினர் பலருக்கும், ஆறுதலும், நம்பிக்கையும் அளிக்கும் ஒரு பாடல் என ஐயமின்றிக் கூறலாம்.

     கார்டினல் நியூமென் 1890ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 11ம் தேதி பர்மிங்ஹாம் நகரில், தமது 90ம் வயதில் காலமானார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            காரிருளில், என் நேச தீபமே,
நடத்துமேன்
வேறொளியில்லை, வீடும் தூரமே,
நடத்துமேன்
நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்;
ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்.

2.    என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ;
முன்னாளிலே;
ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ
நடத்துமே;
உல்லாசம் நாடினேன், திகிலிலும்
வீம்புகொண்டேன், அன்பாக
மன்னியும்.

3.    இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்;
இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர்
நடத்திடும்;
உதய நேரம் வர, களிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்.

Lead Kindly Light

Post Comment

Wednesday, March 5, 2014

பாமாலை 317 - இயேசுவே நீர்தாம் (Arnstadt)

 Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.  இயேசுவே நீர்தாம்
ஜீவ நாள் எல்லாம்
மோட்சத்துக்கு சேருமட்டும்
கைதந்தெங்களை நடத்தும்!
நீர் முன்னாலே போம்,
உம்மோடேகுவோம்.
 
2.  தீங்கு மிஞ்சினால்
எங்களை அன்பால்
கலங்காதபடி காரும்
நிலை நிற்கும் வரம் தாரும்
இங்கே சிலுவை,
அங்கே மகிமை.
 
3.  சொந்த கிலேசமும்
நேசர் துன்பமும்
நெஞ்சை வாதித்தால், அன்பாக
பொறுமை அளிப்பீராக;
ஜீவ கிரீடத்தை
நோக்க நீர் துணை.
 
4.  நீர் இவ்வுலகில்
கஷ்ட வழியில்
எங்களை நடத்தினாலும்
ஆதரியும்; நாங்கள் மாளும்
போதும்மிடமே
சேரும், நேசரே.

Post Comment

Tuesday, March 4, 2014

பாமாலை 315 - அன்போடு எம்மை

பாமாலை 315 – அன்போடு எம்மைப் போஷிக்கும்
(O God of Bethel)

‘நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து… உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை’ ஆதி 28 : 15

Philip Doddridge
பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் இங்கிலாந்தின் நார்த்தம்ப்டன் நகரில் ஒரு சபை ஆளுகைச் சபையில் (Congregational Church) பிலிப்பு டாட்ரிஜ் (Philip Doddridge) என்னும் போதகர் இருபத்திரெண்டு ஆண்டுகளாக திருப்பணியாற்றி வந்தார்.  ஆலய ஆராதனைகளில் அவர் அருளுரை ஆற்றியபின், அருளுரையின் பொருளைக் குறித்த ஒரு பாடலை வாசிப்பது வழக்கம்.  சபை மக்களில் பெரும்பாலோர் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாயிருந்தபடியால், அவர் அப்பாடலை வரி வரியாக வாசித்து, சபையாரையும் வரி வரியாகச் சொல்ல வைத்தார்.  இப்பாடல்களில் மிகுதியானவை அவராலே எழுதப்பட்டவை.  சபையாரில் எழுத வாசிக்கத் தெரிந்த ஒருவர் இப்பாடல்களை உடனே எழுதி வைத்திருந்தார்.  இவ்விதமாக அவர் சுமார் ஐநூறு பாடல்கள் எழுதியிருந்தார்.

ஓர் ஓய்வுநாளில் போதகர் ஆதி 28: 20-22 வசனங்களில் அருளுரையாற்றினார்.  இது, யாக்கோபு, தன் தகப்பன் வீட்டிலிருந்து தனிமையாகப் பிரயாணம் செய்யும்போது பெத்தேலில் இராத்தங்கி, கடவுளைத் தரிசனமாகக் கண்டதையும், கடவுளோடு அவன் பண்ணின பொருத்தனையையும் குறித்தது.  பிரசங்கம் முடிந்தபின், ஏற்கெனவே அவர் எழுதிவைத்திருந்த, ‘அன்போடு எம்மைப் போஷிக்கும் பெத்தேலின் தெய்வமே’ என்னும் பாடலை சபையாருக்குப் போதித்தார்.  சபையாரும் அதை மனப்பாடம் பண்ணி, பக்திவிநயத்துடன் பாடினர்.  அந்நாள் முதல் இப்பாடல், தெய்வ நடத்துதலுக்காக வேண்டிக்கொள்ளும் ஒரு பாடலாகப் பயன்பட்டு வருகிறது.  இப்பாடலுக்கு வில்சன் என்பவர் எழுதிய Martyrdom என்னும் ராகம் மிகப்பொருத்தமானது.  டாட்ரிஜ் போதகர் எழுதிய இப்பாடல், அவர் இறந்து முப்பது ஆண்டுகளுக்குப்பின், 1781ல் ஜான் லோகன் என்பவரால் சிறிதளவு மாற்றி எழுதப்பட்டது.

இப்பாடலை எழுதிய பிலிப்பு டாட்ரிஜ் என்பவர் 1702ம் ஆண்டு, ஜூன் மாதம் 26ம் தேதி லண்டன் மாநகரில் தமது பெற்றோருக்கு இருபதாவது குழந்தையாகப் பிறந்தார்.  இவரது தந்தை ஒரு வியாபாரி, பாட்டனார் பொகீமிய லுத்தரன் சபையில் போதகர்.  அவரது தாயார் சிறந்த கிறிஸ்தவ பக்தியுள்ளவராதலால், மகன் இளவயதிலிருந்தே கிறிஸ்தவ பக்தியில் வளர்க்கப்பட்டார்.  ஆனால் இளவயதிலேயே பெற்றோரையிழந்து அனாதையானார்.  அவரை ஆங்கிலச்சபைப் போதகராகப் பயிற்றுவிக்க பெட்போர்டு சீமாட்டி அழைத்தார்.  ஆனால் பிலிப்பு டாட்ரிஜ் அதை ஏற்றுக்கொள்ளாமல், கிப்வர்த் என்னுமிடத்திலுள்ள சபை ஆளுகை முறை (Congregational) திருமறைப் பயிற்சிக்கூடத்தை சேர்ந்து, திருமறைப் பயிற்சி பெற்று, இருபத்தொரு வயதிலேயே பிரசங்கங்கள் செய்ய ஆரம்பித்தார்.  1729ம் ஆண்டு நார்தாம்டன் நகரிலுள்ள ஒரு சபை ஆளுகைச் சபையில் போதகராக நியமனம் பெற்று, 22 ஆண்டுகள் திருப்பணியாற்றினார்  மேலும் அங்குள்ள ஒரு திருமறைப் பயிற்சிக் கூடத்தையும் மேற்பார்வையிட்டு வந்தார்.  அவரது சிறந்த வேத அறிவைப் பாராட்டி, ஆபர்டீன் பல்கலைக்கழகம் 1736ல் அவருக்குப் பண்டிதர் பட்டம் (Doctor of Divinity) வழங்கியது.  ஆத்தும வளர்ச்சியைக் குறித்து அவர் எழுதிய ஒரு நூல் ஏழு பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

அவர் 49 வயதாயிருக்கையில் அவருக்குக் காச நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  ஆகையால் சில நண்பர்களின் உதவியால் அவர் சீதோஷ்ண மாறுதலுக்காக போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்றார்.  ஆனால் வியாதி கடுமையாயிருந்ததால், 1751ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 26ம் தேதி லிஸ்பன் நகரில் தமது 49ம் வயதில் காலமானார்.

இவரால் எழுதப்பட்ட பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை:

பாமாலை 51 – நற்செய்தி! மேசியா இதோ
என் பாவம் தீர்ந்த நாளையே – s.s. 866

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.            அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்டம் இவ்வாழ்விலே.

2.    கிருபாசனமுன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;
தலைமுறையாய்த் தேவரீர்
எம் தெய்வமாயிரும்.

3.    மயங்கும் ஜீவ பாதையில்
மெய்ப்பாதை காட்டிடும்;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும்.

4.    இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாறுமளவும்
காப்பீர் உம் மறைவில்.

5.    இவ்வாறான பேர் நன்மைக்காய்
பணிந்து கெஞ்சினோம்;
நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,
சுதந்தரமுமாம்.

Post Comment