Wednesday, February 22, 2023

நல்ல செய்தி இயேசுவை (SS 1079)

நல்ல செய்தி இயேசுவை (SS 1079)
We Have Heard the Joyful Sound

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



************************


1. நல்ல செய்தி இயேசுவை!
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
நம்பி வந்து அவரை
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
எந்த பாவியாயினும்
தள்ளமாட்டேன் என்கிறார்
துரோகம் செய்த போதிலும்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்

2. எங்கும் செய்தி சொல்லுவோம்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
தேசா தேசம் கூறுவோம்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
எந்த நாடு தீவிலும்
இயேசு காத்து நிற்கிறார்
மூடன் நீசன் ஆயினும்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்

3. இன்னும் கேள்! மா நேசராம்
இயேசுவே காக்கிறார்!
நம்பும் பக்தரையெல்லாம்
இயேசுவே காக்கிறார்!
சற்றும் தவறாமலும்
கையில் ஏந்திக் கொள்ளுவார்
கேடுபாடில்லாமலும்
இயேசுவே காக்கிறார்!

4. சுவிசேஷம் இதுவே!
காக்கிறார்! காக்கிறார்!
பாவம் நீக்கிப் பின்னுமே
காக்கிறார்! காக்கிறார்!
மோட்சம் சேருமளவும்
தாங்கிக் கொண்டே இருப்பார்
தீமையைச் செய்யாமலும்
காக்கிறார்! காக்கிறார்

Post Comment

Tuesday, February 21, 2023

பாவ தோஷம் நீக்கிட (SS 874)

பாவ தோஷம் நீக்கிட 
What can wash away my sins?
(SS 874)


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1. பாவ தோஷம் நீக்கிட

மீட்பர் இயேசு ரத்தம்தானே
தீய குணம் மாற்றிட
மீட்பர் இயேசு ரத்தம்தானே

மெய்யாம் ஜீவ நதி
பாவம் போக்கும் நதி
நதி வேறறியேன்
மீட்பர் இயேசு ரத்தம்தானே

2. என்னை சுத்தமாக்கிட
மீட்பர் இயேசு ரத்தம்தானே
மன்னிப்பை நான் பெற்றிட
மீட்பர் இயேசு ரத்தம்தானே

3. வேறே ரட்சிப்பில்லையே
மீட்பர் இயேசு ரத்தம்தானே
புண்ய க்ரியை செல்லாதே
மீட்பர் இயேசு ரத்தம்தானே

4. மோட்ச மார்க்கம் இதுவே
மீட்பர் இயேசு ரத்தம்தானே
ஏக சுத்த தீர்த்தமே 
மீட்பர் இயேசு ரத்தம்தானே

Post Comment

பாமாலை 304 - சுத்த இருதயத்தை நீர் (Hamburg)

பாமாலை 304 - சுத்த இருதயத்தை நீர்
Cor Mundum Crea In Me
Tune : Hamburg

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







1.  சுத்த இருதயத்தை நீர்,
கர்த்தாவே, என்னில் சிஷ்டியும்,
திட ஆவியை, தேவரீர்,
என் உள்ளத்தில் புதுப்பியும்.

2.  ஆ, உம்முடைய முகத்தை
விட்டென்னை நீர் தள்ளாமலும்,
என்னிடத்தில் தெய்வாவியை
பேர்த் தெடுக்காமலுமிரும்.

3.  மீண்டும் உமதிரட்சிப்பின்
சந்தோஷத்தைத் தந்தருளும்,
இனிப் புதிய ஆவியின்
உற்சாகம் என்னைத் தாங்கவும்.

Post Comment

Sunday, February 19, 2023

பாமாலை 34 - இவ்வந்தி நேரத்தில் (Montgomery)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1. இவ்வந்தி நேரத்தில் எங்கே
போய்த் தங்குவீர் என் இயேசுவே
என் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும்
மா பாக்கியத்தை அருளும்.

2. ஆ, நேசரே நீர் அடியேன்
விண்ணப்பத்துக்கிணங்குமேன்
என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர்
ஒருவரே என்றறிவீர்.

3. பொழுது சாய்ந்துபோயிற்று
இரா நெருங்கி வந்தது
மெய்ப்பொழுதே, இராவிலும்
இவ்வேழையை விடாதேயும்.

4. ஆ, என்னைப் பாவ ராத்திரி
பிடித்துக் கெடுக்காதினி
நீர் ஒளி வீசியருளும்
ரட்சிப்பின் பாதை காண்பியும்.

5. நீர் என் கடை இக்கட்டிலும்
என்னோடிருந்து ரட்சியும்
உம்மைப் பிடித்துப் பற்றினேன்
நீர் போய்விடீர் என்றறிவேன்.


Post Comment

Monday, February 13, 2023

பாமாலை 89 - என் நெஞ்சம் நொந்து (New Britain)

பாமாலை 89 - என் நெஞ்சம் நொந்து 
When wounded sore the stricken heart
Tune : New Britain


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.            என் நெஞ்சம் நொந்து காயத்தால்
அவஸ்தைப்படவே,
குத்துண்ட மீட்பர் கரத்தால்
அக்காயம் ஆறுமே.

2.    தீராத துக்கம் மிஞ்சியே
நான் கண்ணீர் விடினும்
நோவுற்ற இயேசு நெஞ்சமே
மெய் ஆறுதல் தரும்.

3.    என் மனஸ்தாபத் தபசால்
நீங்காத கறையும்
வடிந்த இயேசு ரத்தத்தால்
நிவிர்த்தியாகிடும்.

4.    என் மீட்பர் கரத்தால் சுகம்,
செந்நீரால் தூய்மையாம்
என் இன்பதுன்பம் அந்நெஞ்சம்
அன்பாய் உணருமாம்.

5.    அக்கரம் நீட்டும், இயேசுவே
அவ்வூற்றைத் திறவும்;
குத்துண்ட உந்தன் பக்கமே
என்றன் அடைக்கலம்.

Post Comment

Tuesday, February 7, 2023

பாமாலை 298 - ஆராய்ந்து பாரும் (Dundee)

பாமாலை 298 - ஆராய்ந்து பாரும் கர்த்தரே
Search me O God my actions try
Tune : Dundee


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.         ஆராய்ந்து பாரும், கர்த்தரே;
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும்.
 
2.         ஆராயும் எந்தன் உள்ளத்தை,
நீர் சோதித்தறிவீர்;
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்
 
3.         ஆராயும் சுடரொளியால்
துராசை தோன்றவும்;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும்.
 
4.         ஆராயும் சிந்தை, யோசனை
எவ்வகை நோக்கமும்
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்.
 
5.         ஆராயும் மறைவிடத்தை
உம் தூயக் கண்ணினால்;
அரோசிப்பேன் என் பாவத்தை
உம் பேரருளினால்.
 
6.         இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன்;
உம் சரணார விந்தத்தில்
பணிந்து போற்றுவேன்.

Post Comment

Friday, February 3, 2023

செல்வோம் யாம் கோயிலுக்கு

செல்வோம் யாம் கோயிலுக்கு

Again the Lord's own Day is here

SATB

Soprano


 Alto


 Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1.    செல்வோம் யாம் கோயிலுக்கு
ஓய்வு நாட்கள்தோறுமே
துதி செய்வோம் யாம் நன்றாய்
ஓய்வுநாட்கள் தோறுமே
பாரும் நேச தெய்வமே
எங்கள் ஜெபம் கேளுமே
எங்கள் நெஞ்சம் ஆற்றுமே
ஓய்வுநாட்கள் தோறுமே

2.    வேலையை யாம் விடுவோம்
ஓய்வுநாட்கள் தோறுமே
உம்மையே யாம் வாழ்த்துவோம்
ஓய்வுநாட்கள் தோறுமே
ஆசாபாசம் நீக்குவீர்
மனம் வசம் ஆக்குவீர்
உமதருள் ஊற்றுவீர்
ஓய்வுநாட்கள் தோறுமே

3.    தேவ வாக்கை யாம் கேட்போம்
ஓய்வுநாட்கள் தோறுமே
அதை சித்தியாக்குமே
ஓய்வுநாட்கள் தோறுமே
போகும் இடம் வருவீர்
அங்கு எம்மில் தங்குவீர்
ஆசீர்வாதம் தருவீர்
ஓய்வுநாட்கள் தோறுமே





Post Comment

வேலை நாள் ஆறும் சென்று

வேலைநாள் ஆறும் சென்று ஓய்வுநாள்

Again the day returns of the Holy rest

 

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1.    வேலை நாள் ஆறும் சென்று ஓய்வு நாள்
ஆரம்பமாயிற்றே என் நெஞ்சமே
பேராசீர் நாளாம் இதில் ஓய்ந்திட
எழுந்திடாயோ? ஆ! என் நெஞ்சமே

2.    ஆதி ஆறு நாள் அகிலத்தையும்
அண்ட சராசரம் அனைத்தையும்
ஆண்டவன் ஆக்கி ஏழாம் நாளையே
ஓய்ந்தாசரித்தார் நினை நெஞ்சமே

3.    சீனாய் மலை மேல் கர்த்தர் கற்பித்தார்
பூதலம் உற்றபோதும் ஓய்ந்தார் காண்
தீர்க்கர் பிதாக்கள் வேத பக்தர்கள்
ஓய்ந்தார் இந்நாளே ஆதி முதலாய்

4.    தெய்வாசீர்வாதம் வாய்ந்த ஓய்வு நாள்
படைப்பு மணம் கமழ் ஓய்வுநாள்
இம்மை மறுமை மாறா ஓய்வுநாள்
மெய் இஸ்ரவேலர் சபை கூடும் நாள்

5.    லௌகீக வேலை தொழில் அகற்றி
தெய்வ முகம் திரும்பு நெஞ்சமே
மாணடி வீழ்ந்து நாமம் போற்றியே
ஜெபித்துத் தேடு அவர் ஆசியை


Post Comment

Thursday, February 2, 2023

பாமாலை 44 - உன்னதமான கர்த்தரே (Angels)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1.    உன்னதமான கர்த்தரே
இவ்வோய்வு நாளைத் தந்தீரே
இதற்காய் உம்மைப் போற்றுவோம்
சந்தோஷமாய் ஆராதிப்போம்.

2.    விஸ்தாரமான லோகத்தை
படைத்த கர்த்தா, எங்களை
இந்நாள்வரைக்கும் தேவரீர்
அன்பாய் விசாரித்துவந்தீர்

3.    எல்லாரும் உமதாளுகை
பேரன்பு, ஞானம், வல்லமை
மற்றெந்த மாட்சிமையையும்
அறிந்து உணரச் செய்யும்.

4.    உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே
நீர் எங்கள் ஆத்துமாவிலே
தரித்து, எந்த நன்மைக்கும்
நீர் எங்களை உயிர்ப்பியும்.

5.    தெய்வாவியே, நல் அறிவும்
மெய் நம்பிக்கையும் நேசமும்
சபையிலே மென்மேலுமே
வளர்ந்துவரச் செய்யுமே.

Post Comment