Thursday, January 30, 2020

பாமாலை 321 - என்னை விடாதேயும்

பாமாலை 321 - என்னை விடாதேயும்
Ach Gott verlass mich nich!

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1. என்னை விடாதேயும்;
கர்த்தாவே, மோட்சம் மட்டும்
உமது கைகளால்
இப்பிள்ளையை நடத்தும்
மகா இரக்கமாய்;
நீர் என் வெளிச்சமும்
என் பாதுகாப்புமே;
என்னை விடாதேயும்.

2. என்னை விடாதேயும்;
நான் பாவத்தில் விழுந்து
கெடாதபடி நீர்
ஒத்தாசையாய் இருந்து,
நீர் உமதாவியால்
என்னைத் தேற்றிடவும்,
அன்புள்ள கர்த்தரே;
என்னை விடாதேயும்.

3. என்னை விடாதேயும்
என்றும்மைக் கருத்தாக
நான் கெஞ்சிக் கேட்கிறேன்;
பிசாசு பலமாக
என்னை நெருக்கினால்
நீர் துணையாயிரும்;
என் சோதனைகளில்
என்னை விடாதேயும்.

4. என்னை விடாதேயும்;
அன்பாக என்னைப் பாரும்,
என் கையின் வேலையை
ஆசீர்வதித்து வாரும்;
நீர் கற்பித்தபடி
எல்லாம் நான் செய்யவும்,
என் வேலை வாய்க்கவும்,
என்னை விடாதேயும்.

5. என்னை விடாதேயும்;
உமக்குச் சொந்தமாகப்
பிழைத்து, என்றைக்கும்
நான் விசுவாசமாக
உம்மில் நிலைக்கவே
என்னைக் காத்தருளும்;
கடை இக்கட்டிலும்
என்னை விடாதேயும்.

Post Comment