Showing posts with label ஞானஸ்நானம். Show all posts
Showing posts with label ஞானஸ்நானம். Show all posts

Tuesday, April 14, 2020

பாமாலை 178 - இயேசு சுவாமி உம்மண்டை

பாமாலை 178 – இயேசு ஸ்வாமி, உம்மண்டை
(Liebster Jesu wir sind hief deinem)
Words: Benjamin Schmolck
Meter : 7,8,7,8,8,8
Bavarian 106

Benjamin Schmolck
நம் ‘கிறிஸ்து சபை பாமாலை’ புத்தகத்தின் 178ம் பாடலான ‘இயேசு ஸ்வாமி உம்மண்டை” எனும் இப்பாடல், ‘ஞானஸ்நானம்” என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள மூன்று பாடல்களுள் முதலாவது பாடலாகும்.  இப்பாடலை எழுதிய, பெஞ்சமின் ஷ்மாஹ் (Benjamin Schmolck) என்பவர் லுத்தரன் திருச்சபையின் போதகர் ஆவார். இவர் 1672ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி போலந்து தேசத்தின் Brauchitschdorf என்னும் இடத்தில் பிறந்தார்.  Leipzig பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பை முடித்த பெஞ்சமின், தொடர்ந்து தமது ஆயர் படிப்பையும் முடித்த இவர் 1701ம் ஆண்டு குருவானவராக அபிஷேகம் செய்யப்பட்டு தமது ஆயர் பணியைத் துவக்கினார்.  ஜெர்மன் மொழியில் பாடல்கள் எழுதுவதில் தேர்ச்சி பெற்றிருந்த பெஞ்சமின், அவரது காலத்தில் மிகச்சிறந்த பாடலாசிரியராகவும் அறியப்பட்டிருந்தார்.

பெஞ்சமின் எழுதிய ‘இயேசு ஸ்வாமி உம்மண்டை” எனும் இப்பாடலின் ஜெர்மானிய மூல வடிவத்தில் 7 சரணங்கள் இடம்பெற்றன. நமது ’கிறிஸ்து சபை பாமாலை’ புத்தகத்தில் இப்பாடலின் 6 சரணங்கள் தரப்பட்டுள்ளன.  இப்பாடலின் 7ம் சரணமாகக் கருதப்படும்,

”தெய்வ நாமங் கூடிய
இம்முழுக்கின் பலத்தாலே
பேயின் விஷமாகிய
பாவ ரோகமும் அத்தாலே
வந்த சாவும் நீங்கலாக
இது குணமாவதாக”.

எனும் சரணம் நம் லுத்ரன் திருச்சபை பாடல் புத்தகத்தின் (சுவிசேஷ லுத்தரன் ஞானப்பாட்டுகள், Fabricus Hymnal & Worship Book, Tamil Evangelical Lutheran Church, Tranquebar House, Tiruchirappalli வெளியீடு) 20வது பதிப்பில், 116ம் பாடலாக இடம்பெற்றுள்ளது.  இப்புத்தகத்தில் இந்த மேற்கண்ட சரணம், ஐந்தாவது சரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.


இப்பாடலின் 17ம் நூற்றாண்டின் Composer’ஆன Johann Rudolf Ahle இயற்றிய ராகத்தில் பாடப்படுகிறது.
Unison
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano








































1. இயேசு ஸ்வாமி, உம்மண்டை
சிறு பிள்ளைகளும் வர
வேண்டுமென்றீர், மோட்சத்தை
இச்சிறியருக்கும் தர
சித்தமானதால், இப்பிள்ளை
தாமதிக்க நியாயம் இல்லை.

2. நீர்தாம்; மீண்டும் ஒருவன்
தண்ணீராலும் ஆவியாலும்
பிறவாவிட்டால், அவன்
மோட்சத்தில் எவ்விதத்தாலும்
உட்பிரவேசிக்கக் கூடாது
என்றுரைத்தது தப்பாது.

3. ஆகையாலே உமது
கட்டளைக்குக் கீழடங்கி
வந்தோம், இந்தப் பிள்ளைக்கு
தயவைக் காண்பித்திரங்கி,
நாம் உன்நேசரென்று சொல்லும்
இதை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்.

4. ஜென்ம பாவியாகிய
இதைக் கழுவி மன்னியும்;
நீர் இதற்குப் புதிய
வஸ்திரத்தைத் தரிப்பியும்;
கர்த்தரே, நீர் இதை முற்றும்
நன்றாய் உமக்குட்படுத்தும்.

5. கூட்டிக்கொள்ளும், சிரசே;
மேய்ப்பரே, இவ்வாட்டைச்சேரும்;
உயிர்ப்பியும், ஜீவனே;
ஸ்வாமி, பேயின் நாற்றைப்பேரும்;
நேசரே, நற்கொடியாக
இதும்மில் தரிப்பதாக.

6. எங்கள் அன்பின் வேண்டலை,
 ஸ்வாமி, அன்பாய்க் கேட்பீராக;
 நாங்கள் வேண்டிக்கொள்வதை
 இப்பிள்ளைக்குச் செய்வீராக;
 நீரே இதின் நாமத்தையும்
 மீட்புக்கென்றெழுதி வையும்.

**7. தெய்வ நாமங் கூடிய
இம்முழுக்கின் பலத்தாலே
பேயின் விஷமாகிய
பாவ ரோகமும் அத்தாலே
வந்த சாவும் நீங்கலாக
இது குணமாவதாக.

**(5th Stanza in Lutheran Hymnal)

Post Comment

Friday, August 10, 2018

பாமாலை 180 - நீ குரூசில் மாண்ட (St Stephen)

பாமாலை 180 - நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை
(In token that thou shalt not fear)
Tune : St Stephen

Henry Alford
இப்பாடலை எழுதிய ஹென்றி ஆல்ஃபோர்ட் 1810ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த இவர், 1833ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஆம்ப்ட்டன் (Ampton) என்ற கிராமத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் ஆயராகத் தம் ஊழிய வாழ்வைத் துவக்கினார்.  ஏறக்குறைய 38 ஆண்டுகள் தம் ஊழியத்தைத் தொடர்ந்த இவர், தம் ஊழியக்காலத்தில் ஏராளமான பாடல்களை இயற்றியது மட்டுமல்லாமல், பல்வேறு மொழிகளிலிருந்து பாடல்களை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யும் பணியையும் ஆர்வத்துடன் செய்தார்.  அப்படி இவர் தொகுத்த பாடல்களின் பட்டியல் நெடியது. “In token that thou shalt not fear’ எனும் இப்பாடலை அவர் எச்சூழலில் எழுதினார் என்பது குறித்த தகவல்கள் இல்லை. இப்பாடல் வில்லியம் ஜோன்ஸ் (William Jones) என்பவர் எழுதிய St.Stephen எனும் ராகத்தில் அமையப்பெற்றுள்ளது.
SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano




1.  நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை
அறிக்கை பண்ணவும்
அஞ்சாவண்ணம், உன்நெற்றிமேல்
சிலுவை வரைந்தோம்

2.  கிறிஸ்துவின் மாண்பைக் கூறவே
வெட்காதபடிக்கும்
அவரின் நிந்தைக் குறிப்பை
உன்பேரில் தீட்டினோம்

3.  நீ கிறிஸ்துவின் செங்கொடிக்கீழ்
துணிந்து நிற்கவும்
சாமட்டும் நற்போராட்டத்தை
நடத்தும் படிக்கும்

4.  நீ கிறிஸ்து சென்ற பாதையில்
நேராகச் செல்லவும்
நிந்தை எண்ணாமல் சிலுவை
சகித்தீடேறவும்

5.  கிறிஸ்துவின் அடையாளத்தை
சபைமுன்னே பெற்றாய்
நீ அவர் குருசைச் சுமந்தால்
பொற்கீரிடம் பூணுவாய்

1.         In token that thou shalt not fear
Christ crucified to own,
We print the cross upon thee here,
And stamp thee His alone.

2.         In token that thou shalt not blush
To glory in His Name,
We blazon here upon thy front
His glory and His shame.

3.         In token that thou shalt not flinch
Christ's quarrel to maintain,
But 'neath His banner manfully
Firm at thy post remain.

4.         In token that thou too shalt tread
The path He travell'd by,
Endure the cross, despise the shame,
And sit thee down on high;

5.         Thus outwardly and visibly
We seal thee for His own:
And may the brow that wears His cross

Hereafter share His crown.

Since I could not find a Choir' version of the hymn ”In token that thou shalt not fear” in YouTube, I've posted below the hymn "In Christ There is no East or West" which has been sung in the same tune, "St. Stephen".

Tune : St. Stephen (Hymn : In Christ There is no East or West)

Post Comment

Sunday, May 25, 2014

பாமாலை 181 - யோர்தான் விட்டேறி (Matyrdom)

பாமாலை 181 - யோர்தான் விட்டேறி 
The Son of Man from Jordan rose
Tune : Matyrdom


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            யோர்தான் விட்டேறி, மனுஷ
குமாரன் ஜெபித்தார்;
வானின்றப்போதிறங்கின
புறா உருக் கண்டார்.
 
2.            நல்லாவி அபிஷேகமாய்
அவர்மேல் தங்கினார்
என் நேச மைந்தன்என்பதாய்
பிதா விளம்பினார்.
 
3.            அவ்வாறு, ஸ்நானத்தால் புது
பிறப்பை அடைந்தார்
மெய்த் தெய்வ புத்திரர் என்று
விஸ்வாசத்தால் காண்பார்.
 
4.            கபடில்லாப் புறாத் தன்மை
தரிக்கப்படுவார்
நல்லாவி தங்கள் உள்ளத்தை
நடத்தப் பெறுவார்.
 
5.            உம் ரத்த ஊற்றால் பாவத்தை
நீக்கின கிறிஸ்துவே
தூய்மையோரான தாசரை
தற்காத்துக் கொள்ளுமே.
 
6.            சீர்கெட்ட, லோகம் மீட்டோரே,
பிதா, ஆவியையும்
உம்மோடு ஏகராகவே
என்றென்றும் துதிப்போம்.


Post Comment

Saturday, May 24, 2014

பாமாலை 179 - தம்மண்டை வந்த (Alstone)

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1. தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்,
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்.

2. குழந்தைகளுக்காகவும்
மரித்துயிர்த்த ஆண்டவர்
சிறந்த நன்மை வரமும்
தரக் காருணியமுள்ளவர்.

3. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்.

Post Comment