Wednesday, October 28, 2015

பாமாலை 54 - வாசல்களை உயர்த்துங்கள்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    வாசல்களை உயர்த்துங்கள்
மகா கர்த்தாவை வாழ்த்துங்கள்
ராஜாதி ராஜா வருவார்,
பெரிய தெய்வ மைந்தனார்.
உலகத்தைச் சிருஷ்டித்து
ரட்சித்த தேவரீருக்கு
துதி, தயாபரா
ஆலோசனைக் கர்த்தா.

2.    அவர் மா சாந்தமானவர்,
சகாயர் நீதியுற்றவர்,
ராஜாவின் முடி சுத்தமே,
அவர் செங்கோல் இரக்கமே;
இக்கட்டை நீக்கினார் அன்பாய்
புகழ்ந்து பாடுங்கள் ஒன்றாய்
துதி, மா கர்த்தரே,
பலத்த மீட்பரே.

3.    இக்கர்த்தர் உட்பிரவேசிக்கும்
போதெந்த ஊரும் தேசமும்
களிக்கும், எங்கள் இதயம்
அடைவதும் மெய்ப் பாக்கியம்
அவர் சந்தோஷப் பொழுதே.
மகிழ்ச்சியை அளிப்பாரே;
ஆ, தேற்றும் உமக்கே
புகழ்ச்சி, கர்த்தரே.

4.    வாசல்களை உயர்த்துங்கள்
நெஞ்சை அலங்கரியுங்கள்
பக்தியின் குருத்தோலையும்
மகிழ்ச்சியின் கிளைகளும்
தெளியுங்கள், ராஜா வாறார்,
உங்களையும் இரட்சிப்பார்
கர்த்தாவுக் கென்றைக்கும்
புகழ்ச்சி துதியும்.

5.    என்னண்டை இயேசு, வாருமேன்,
என் வாசலைத் திறக்கிறேன்
அருள் புரியும் தேவரீர்
என் நெஞ்சில் தங்கக்கடவீர்
மோட்ச வழியைக் காண்பிக்கும்
நல் ஆவியைத் தந்தருளும்
என்றைக்கும் உமக்கே
புகழ்ச்சி, கர்த்தரே.

Post Comment

Sunday, October 25, 2015

பாமாலை 23 - தொழுவோம் பரனை

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano




1.    தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன்
விழுவோம் அவர் முன் மாட்சி போற்றி
பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும்
மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி.

2.    வைப்போம் அவர் பாதம் கவலை பாரத்தை
எப்பாரம் தாங்கும் திரு உள்ளமே
ஈவார் நம் வேண்டலை ஆற்றுவார் துக்கத்தை
ஜீவ பாதை காப்பார் உத்தமமாய்.

3.    படைக்கும் காணிக்கை மா அற்பமாயினும்,
அடையோமே பயம் ஆராதிக்க;
சத்தியம் அன்பு மேலாம் காணிக்கையாகும்
அத்தனைப் பக்தியாய் பூஜித்திட.

4.    பயம் நடுக்கத்துடன் படைத்திடினும்
தயவாய் ஏற்பார் நம் காணிக்கையே
மாலையின் கண்ணீர்தான், காலையில் களிப்பாம்
மலைவு போம், நிற்கும் நம்பிக்கையே.

5.    தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன்,
விழுவோம் அவர்முன் மாட்சி போற்றி;
பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும்
மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி.

Post Comment

Saturday, October 24, 2015

பாமாலை 216 - ஏதேனில் ஆதி மணம் (Tune 2)

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.            ஏதேனில் ஆதி மணம்
உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம்
மாறாதிருக்குமே.

2.    இப்போதும் பக்தியுள்ளோர்
விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னமாவார்
மும்முறை வாழ்த்துண்டாம்.

3.    ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே
இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணை
கொடுக்க வாருமே.

4.    இரு தன்மையும் சேர்ந்த
கன்னியின் மைந்தனே
இவர்கள் இரு கையும்
இணைக்க வாருமே.

5.    மெய் மணவாளனான
தெய்வ குமாரர்க்கே
சபையாம் மனையாளை
ஜோடிக்கும் ஆவியே.

6.    நீரும் இந்நேரம் வந்து
இவ்விரு பேரையும்
இணைத்து, அன்பாய் வாழ்த்தி
மெய்ப் பாக்கியம் ஈந்திடும்.

7.    கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்
எத்தீங்கில் நின்றும் காத்து
பேர் வாழ்வு ஈந்திடும்.

Post Comment

வான தூதர் சேனை போற்றும்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.    வானதூதர் சேனை போற்றும் யேகோவா
மங்களம் மீதோங்க ஆசி கூறுமேன்
ஞான மணவாளன் இயேசு நாதனை
நாமும் வாழ்த்தி பாடுவோம் எந்நாளுமே

     வாழ்த்திப் பாடுவோம்
     நம் இராஜன் நேசர் இயேசுவை
     வாழ்த்திப் பாடுவோம்
     இம்மன்றல் என்றும் ஓங்கவே.

2.    தூதர்சேனை கீதம் பாட ஏதேனில்
ஆதாமோடு ஏவாள் மாதை ஒன்றாக்கி
ஆதி மன்றலாட்டி ஆசி கூறினார்
இந்த மன்றலர்க்கும் ஆசி கூறுவார்.

3.    வாழ்க பெற்றோர் உற்றோர் அன்பு நேசரும்
வாழ்க தம்பதிகள் நெடுங்காலமாய்
வாழ்க __(மணமகன்)__, __(மணமகள்)__ எந்நாளும்
வாழ்க தேவ தயவோடு க்ஷேமமாய்.

Post Comment

Friday, October 23, 2015

ஆ நல்ல சோபனம்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    ஆ, நல்ல சோபனம்
அன்பாக இயேசுவும்
ஆசீர்வதித்து மகிழும்
கானாக் கலியாணம். 

2.    நேசர் தாமே பக்கம்
நின்றாசீர்வதிக்கும்
மணவாளன் மணமகள்
மா பாக்கியராவர்.

3.    அன்றும்மைக் காணவும்
ஆறு ஜாடித் தண்ணீர்
அற்புத ரசமாகவும்
ஆண்டவா நீர் செய்தீர்.

4.    நீரே எங்கள் நேசம்
நித்திய ஜீவன் தாரும்
என்றும் தங்கும் மெய் பாக்கியம்
இன்றே ஈய வாரும்

5.    ஏதேன் மணமக்கள்
ஏற்ற ஆசீர்வாதம்
இயேசு இவர் பக்கம் நின்று
ஊற்றும் இவர் மீது.

6.    என்றும் காத்தருளும்
ஒன்றாய் இணைத்தோனே
என்றும் சிலுவையாசனம்
முன் கெஞ்சி நிற்கிறோம். ஆமென்.

Post Comment