Monday, March 30, 2020

பாமாலை 154 - பேயின் கோஷ்டம் (Pisgah)

பாமாலை 154 – பேயின் கோஷ்டம்
(Unto Mary, demon haunted)
Words: Jan Struther

Jan Struther
இப்பாடலை எழுதியவர் Jan Struther.  இவரது இயற்பெயர் Joyce Maxtone Graham Placzek.  இவர் 1901ம் ஆண்டு லண்டன் நகரின் Belgravia பகுதியில் பிறந்தார்.  தன் வாழ்நாளில் அநேகம் கவிதைகளையும் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் எழுதிய இவர், குறைவான பாடல்களையே எழுதியுள்ளார். 1931ம் ஆண்டு வெளியான Songs of Praise என்ற புத்தகத்தில் இவரின் 12 பாடல்கள் இடம்பெற்றன.  அவற்றுள் “பேயின் கோஷ்டம்” பாடலும் ஒன்று. இப்பாடல் பரிசுத்த மகதலேனா மரியாள் திருநாளிற்கென்று எழுதப்பட்ட ஒன்றாகும். மகதலேன மரியாள் ஆண்டவர் மேல் கொண்ட அன்பையும், சிலுவைப்பாடின்போது அவரின் தவிப்பையும் இப்பாடல் அழகாய் விளக்குகிறது.  இப்பாடல் 1931ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 


Jan Struther, Mrs. Miniver (1940) என்ற நாவலையும் எழுதியுள்ளார். இரண்டாம் உலகப்போரின்போது ஒரு இங்கிலாந்துக் குடும்பத்தின் வாழ்வியலைக் குறித்ததான இந்த நாவல், பின்னர் திரைப்படமாகவும் வெளியானது.  இரண்டாம் உலகப்போரின்போது Jan தனது பிள்ளைகளுடன் நியூயார்க் நகரத்தில் குடியேறி தன் எஞ்சிய வாழ்நாட்களை அங்கேயே கழித்தார். Jan Struther, 1953 ஆண்டு மறுமைக்குட்பட்டார்.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano







































1. பேயின் கோஷ்டம் ஊரின் தீழ்ப்பு
ராவின் கோரக் கனாவால்
மாய்ந்த பாவி மரியாளை
மீட்பர் மீட்டார், அன்பினால்.
மாதை மீட்ட நாதா, எம்மின்
பாவம் கோஷ்டம் நீக்கியே,
தீதாம் இருள் தேங்கும் நெஞ்சில்
ஞான ஜோதி தாருமே.

2. தூய்மையான மரியாளே
நாதர் பாதம் நீங்காது,
வாய்மையோடு சேவை ஆற்றி
சென்றாள் எங்கும் ஓயாது
நாதா, நாங்கள் தாழ்மையோடும்
ஊக்கத்தோடும் மகிழ்வாய்
யாதும் சேவை செய்ய உந்தன்
ஆவி தாரும் தயவாய்.

3. மீட்பர் சிலுவையில் தொங்கி
ஜீவன் விடக் கண்டனள்;
மீண்ட நாதர் பாதம் வீழ்ந்து
யார்க்கும் முன்னர் கண்டனள்;
நாதா, வாழ்வின் இன்பம் நண்பர்,
அற்றே நாங்கள் சோர்கையில்
பாதம் சேர்ந்து ஈறில்லாத
இன்பம் தாரும் நெஞ்சினில்.

Unto Mary, demon-haunted,
With unholy dreams distraught,
By her neighbours mocked and taunted,
Christ his healing wisdom brought.
Banish, Lord, our minds' confusion,
Fear and fever drive away;
Down the valleys of illusion
Spread the kindly light of day.

Mary then, with faith unswerving,
Shared her saviour's tireless days,
Thankfully her master serving,
Helping him in humble ways.
Grant, O Lord, that we may never
Grow too proud for simple things;
Let us bring to all endeavour
Hands unwearied, heart that sings.

Unto her, who saw them sunder
Valiant soul from tortured frame,
First appeared the risen wonder,
First the quickened Jesus came.
Lord, when time from us has taken
Earthly joys and earthly friends,
Let our lonely hearts awaken
To the joy that never ends.

Post Comment

Friday, March 27, 2020

பாமாலை 153 - ஓர்முறை விட்டு மும்முறை (Derry)

பாமாலை 153 – ஓர் முறை விட்டு மும்முறை
(Forsaken once, and thrice denied)
Tune : Derry
Composer : John Bacchus Dykes
Words: Cecil Frances Alexander

Rev John Bacchus Dykes
இப்பாடலின் இசையை இயற்றியவர் அருள்திரு. ஜான் டைக்ஸ் (John Bacchus Dykes).  1823ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த ஜான் தன் சிறு வயதில் பியானோ மற்றும் வயலின் வகுப்புகளுக்கு சென்று இசை பயின்று தனது பத்தாவது வயதில் St. Johns ஆலயத்தில் ஆர்கனிஸ்ட்’ஆக தன் இசைப்பணியைத் துவக்கினார். இங்கிலாந்தின் St. Catherine College’ல் தனது பட்டப்படிப்பை முடித்து, 1847ம் ஆண்டு குருத்துவப் படிப்பையும் முடித்தார்.  தொடர்ந்து 1849ல் Durham Cathedral’ல் Choir Director’ஆக அமர்த்தப்பட்ட இவர், கவனமான பாடல் பயிற்சி, இசை விழாக்கள் என்று பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை பாடகர் குழுவில் கொண்டு வந்தார். தன் வாழ்வில் முந்நூறுக்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்த இவரின் பாடல்கள் 1857ம் ஆண்டு “Congregational Hymn and Tune Book” என்ற புத்தகத்தில் முதன்முதலில் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து “Ancient and Modern” புத்தகத்திலும் இவரது பாடல்கள் பதிப்பிக்கப்பட்டன.  ஜான் 1876ம் ஆண்டு மறுமைக்குட்பட்டார்.

இப்பாடலை எழுதியவர் சிஸில் அலெக்ஸாண்டர் (Cecil Frances Alexander) அம்மையார். இவரது காலம் 1818-1895.  தன் வாழ்நாளில் ஏராளமான பாடல்களை எழுதிய இவர் ‘All things Bright and Beautiful”, “There is a Green Hill Far Away” போன்ற பாடல்களை எழுதியவர்.  “Once in Royal David’s City” என்ற புகழ்பெற்ற கிறிஸ்மஸ் பாடலையும் இவரே எழுதினார்.

சிஸில் தமது சிறுவயது முதற்கொண்டே பாடல்களை எழுதத் துவங்கினார்.  தமது 22வது வயதிலேயே அயர்லாந்தில் இவர் மிகப் புகழ்பெற்ற ஒரு கவிஞராக அறியப்பட்டு, அநேகம் பாடல் புத்தகங்களில் இவர் படைப்புகள் இடம்பெறத் துவங்கின.  சிஸில் அம்மையார் 1848ம் ஆண்டு, சிறுவர்களுக்கென்று Hymns for Little Children என்ற பாடல் தொகுப்பை வெளியிட்டார்.

பாடல்கள் எழுதுவதன் மூலம், புத்தகங்கள் வெளியிடுவதன் மூலம் கிடைத்த பணத்தை சிஸில் நிறைய சமூகப் பணிகளுக்கென செலவிட்டார்.  தனது முதலாவது பதிப்பிலிருந்து கிடைத்த பணத்தைக் கொண்டு “Derry and Raphoe Dioceson Institution for the Deaf and Dumb” என்ற அமைப்பைக் கட்டியெழுப்பி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.

எத்தனையோ நற்காரியங்களுக்கென தமது வாழ்நாளை செலவிட்ட சிஸில் அம்மையார், அவர் எழுதிய ‘All Things Bright and Beautiful” பாடலின் மூன்றாவது சரணத்தில்,

The rich man in his castle,
The poor man at his gate,
God made them high and lowly,
And ordered their estate.

என்ற வரிகளை எழுதியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.  மனிதருள் ஏற்றதாழ்வுகளை கற்பிக்கிறது என்று கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த சரணம், பிந்தைய பதிப்புகளில் நீக்கப்பட்டு பாடல் வெளியிடப்பட்டது.

சிஸில் அம்மையாரின் கணவர், அயர்லாந்தின் பேராயர் வில்லியம் (Most Rev. William Alexander) ஆவார்.  1911ம் ஆண்டு பேராயர் வில்லியம் மறைவிற்குப் பின்னர் அயர்லாந்தின் St Columb's Cathedral பேராலயத்தின் உள்ளே சிஸில் அம்மையாரின் நினைவாக, ஒரு பெரிய கண்ணாடியிலான ஜன்னல் அமைக்கப்பட்டது.  இந்த சாளரத்தில் சிஸில் எழுதிய "Once in Royal David's City", "There Is a Green Hill Far Away", மற்றும் "The Golden Gates Are Lifted Up" ஆகிய மூன்று பாடல்களைக் குறிக்கும் மூன்று விதமான விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன (Photo : Stained glass window in memory of Cecil Frances Alexander, in St Columb's Cathedral, Derry, Northern Ireland. Credits : Wikipedia).

கிறிஸ்தவச் செய்யுள்களும், பாடல்களும் எழுதுவதில் அதிகத் திறமையுள்ள இவர், மொத்தத்தில் நானூற்றுக்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்இப்பாடல்களில் அதிகமானவை சிறுவர் பாடல்களேஅவர் எழுதிய இதர பாடல்களில் நமது பாமாலை புத்தகத்தில் இருப்பவை:

·         பாமாலை 73 – ராஜன் தாவீதூரிலுள்ள
·         பாமாலை 89 – என் நெஞ்சம் நொந்து காயத்தால்
·         பாமாலை 115 – கூர் ஆணி தேகம் பாய
·         பாமாலை 119 – அருவிகள் ஆயிரமாய்
·         பாமாலை 114 - கொந்தளிக்கும் லோக வாழ்வில்
·         பாமாலை 153 – ஓர் முறை விட்டு மும்முறை
·         பாமாலை 155 – இளமை முதுமையிலும்
·         பாமாலை 202 – நான் மூவரான ஏகரை
·         பாமாலை 150 காரிருள் பாவம்

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1. ஓர் முறை விட்டு மும்முறை
சீமோன் மறுத்தும் ஆண்டவர்
என்னிலே அன்புண்டா? என்றே
உயிர்த்தபின் கேட்டனர்.

2. விஸ்வாசமின்றிக் கர்த்தரை
பன்முறை நாமும் மறுத்தோம்;
பயத்தினால் பலமுறை
நம் நேசரை விட்டோம்.

3. சீமோனோ சேவல் கூவுங்கால்
மனம் கசந்து அழுதான்
பாறை போல் நின்று பாசத்தால்
கர்த்தாவைச் சேவித்தான்.

4. அவன் போல் அச்சங் கொள்ளினும்,
நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம்;
பாவத்தால் வெட்கம் அடைந்தும்
கண்ணீர் சொரிந்திலோம்.

5. நாங்களும் உம்மை விட்டுமே
பன்முறை மறுதலித்தும்
நீர் எம்மைப் பார்த்து இயேசுவே
நெஞ்சுருகச் செய்யும்.

6. இடறும் வேளை தாங்கிடும்;
உம்மைச் சேவிக்கும் கைகளும்
உம்மை நேசிக்கும் நெஞ்சமும்
அடியார்க்கருளும்.

1.       Forsaken once, and thrice denied,
The risen Lord gave pardon free,
Stood once again at Peter's side,
And asked him, "Lov'st thou Me?"

2.       How many times with faithless word
Have we denied His holy Name,
How oft forsaken our dear Lord,
And shrunk when trial came!

3.       Saint Peter, when the cock crew clear,
Went out and wept his broken faith;
Strong as a rock through strife and fear,
He served his Lord till death.

4.       How oft his cowardice of heart
We have without his love sincere,
The sin without the sorrow's smart,
The shame without the tear!

5.       O oft forsaken, oft denied,
Forgive our shame, wash out our sin;
Look on us from Thy Father's side,
And let that sweet look win.

Post Comment

Wednesday, March 25, 2020

பாமாலை 151 - ஆறுதலின் மகனாம் (Vienna)

பாமாலை 151 – ஆறுதலின் மகனாம்
(Brightly did the Light Divine)
Tune : Vienna
Words: Henry Alford

Henry Alford
இப்பாடலை எழுதிய ஹென்றி ஆல்ஃபொர்ட் (Henry Alford) என்பவர் 1810ம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஏழாம் தேதி, இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் பிறந்தார்.  ஆரம்பக்கல்வி முடிந்தவுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், திரித்துவக்கல்லூரியில் திறமையுடன் பயின்று, உயர்பட்டங்கள் பெற்றார்.  ஆங்கிலத்திருச்சபையில் பல இடங்களில் திருப்பணியாற்றியபின், 1857 முதல் 1871 வரை கன்டர்பரி பேராலயத்தின் பிரதமகுரு (Dean) ஆகப் பணியாற்றினார்.  இச்சமயத்தில்தான் அவர், ‘ஆறுதலின் மகனாம்’ முதலிய பல பாடல்கள் எழுதினார்.  மேலும், ஐம்பது கிறிஸ்தவ நூல்களும், கிரேக்கமொழியில் புதிய ஏற்பாட்டைக்குறித்த நான்கு நூல்களும் எழுதியுள்ளார்.  சிறந்த கவித்திறனும், சங்கீதத்திறனும் ஓவியத்திறனும் பெற்றவர்.  திருமறையின் ஆழ்ந்த கருத்துகளை நன்றாகப் புரிந்துகொள்ளுவதற்கான பல விளக்க நூல்களும் எழுதினார்.  அவரது கடுமையான உழைப்பின் விளைவாக, 1870ல் அவர் உடல்நிலை மிகக்குன்றி, 1871ம் ஆண்டு, ஜனவரி மாதம் 12ம் தேதி மறுமைக்குட்பட்டார்.

அவர் எழுதிய இதர பாடல்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ‘நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை’ (பாமாலை 180) ‘மின்னும் வெண்ணங்கி பூண்டு (பாமாலை 406).

இப்பாடலின் ஆங்கில வார்த்தைகள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano









































1. 'ஆறுதலின் மகனாம்'
என்னும் நாமம் பெற்றோனாம்
பக்தன் செய்கை வாக்கிலே
திவ்விய ஒளி வீசிற்றே.

2. தெய்வ அருள் பெற்றவன்
மா சந்தோஷம் கொண்டனன்;
வார்த்தை கேட்டநேகரும்
சேர்ந்தார் கர்த்தர் அண்டையும்.

3. பவுல் பர்னபாவையும்
ஊழியத்திற்கழைத்தும்
வல்ல ஞான வரத்தை
ஈந்தீர், தூய ஆவியே.

4. கிறிஸ்து வலப் பக்கமாய்
நாங்களும் மாசற்றோராய்
நிற்க எங்கள் நெஞ்சையும்
தேவரீரே நிரப்பும்.

1. Brightly did the light divine
From his words and actions shine
From the Twelve, with love unblamed,
Son of consolation, named.

2. Full of peace and lively joy
Sped he on his high employ,
By his mild exhorting word
Adding many to the Lord.

3. Blessèd Spirit, who didst call
Barnabas and holy Paul,
And didst them with gifts endue,
Mighty words and wisdom true.

4. Grant us, Lord of life, to be
By their pattern full of Thee;
That beside them we may stand
In that day on Christ’s right hand.

Post Comment

Monday, March 23, 2020

பாமாலை 150 - காரிருள் பாவம் மூடியே (St. Philip & St. James)

பாமாலை 150 – காரிருள் பாவம் இன்றியே
(There is only one Way and only one)
Tune : St. Philip and St. James L.M.
Words: Cecil F. Alexander

Cecil Frances Alexander
இப்பாடலை இயற்றியவர் சிஸில் அலெக்ஸாண்டர் (Cecil Frances Alexander) அம்மையார். இவரது காலம் 1818-1895.  தன் வாழ்நாளில் ஏராளமான பாடல்களை எழுதிய இவர் ‘All things Bright and Beautiful”, “There is a Green Hill Far Away” போன்ற பாடல்களை எழுதியவர்.  “Once in Royal David’s City” என்ற புகழ்பெற்ற கிறிஸ்மஸ் பாடலையும் இவரே எழுதினார்.  சிஸில் தமது சிறுவயது முதற்கொண்டே பாடல்களை எழுதத் துவங்கினார்.  தமது 22வது வயதிலேயே அயர்லாந்தில் இவர் மிகப் புகழ்பெற்ற ஒரு கவிஞராக அறியப்பட்டு, அநேகம் பாடல் புத்தகங்களில் இவர் படைப்புகள் இடம்பெறத் துவங்கின.  சிஸில் அம்மையார் 1848ம் ஆண்டு, சிறுவர்களுக்கென்று Hymns for Little Children என்ற பாடல் தொகுப்பை வெளியிட்டார்.

பாடல்கள் எழுதுவதன் மூலம், புத்தகங்கள் வெளியிடுவதன் மூலம் கிடைத்த பணத்தை சிஸில் நிறைய சமூகப் பணிகளுக்கென செலவிட்டார்.  தனது முதலாவது பதிப்பிலிருந்து கிடைத்த பணத்தைக் கொண்டு “Derry and Raphoe Dioceson Institution for the Deaf and Dumb” என்ற அமைப்பைக் கட்டியெழுப்பி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.

எத்தனையோ நற்காரியங்களுக்கென தமது வாழ்நாளை செலவிட்ட சிஸில் அம்மையார், அவர் எழுதிய ‘All Things Bright and Beautiful” பாடலின் மூன்றாவது சரணத்தில்,

The rich man in his castle,
The poor man at his gate,
God made them high and lowly,
And ordered their estate.

என்ற வரிகளை எழுதியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.  மனிதருள் ஏற்றதாழ்வுகளை கற்பிக்கிறது என்று கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த சரணம், பிந்தைய பதிப்புகளில் நீக்கப்பட்டு பாடல் வெளியிடப்பட்டது.

சிஸில் அம்மையாரின் கணவர், அயர்லாந்தின் பேராயர் வில்லியம் (Most Rev. William Alexander) ஆவார்.  1911ம் ஆண்டு பேராயர் வில்லியம் மறைவிற்குப் பின்னர் அயர்லாந்தின் St Columb's Cathedral பேராலயத்தின் உள்ளே சிஸில் அம்மையாரின் நினைவாக, ஒரு பெரிய கண்ணாடியிலான ஜன்னல் அமைக்கப்பட்டது.  இந்த சாளரத்தில் சிஸில் எழுதிய "Once in Royal David's City", "There Is a Green Hill Far Away", மற்றும் "The Golden Gates Are Lifted Up" ஆகிய மூன்று பாடல்களைக் குறிக்கும் மூன்று விதமான விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.

கிறிஸ்தவச் செய்யுள்களும், பாடல்களும் எழுதுவதில் அதிகத் திறமையுள்ள சிஸில், மொத்தத்தில் நானூற்றுக்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்இப்பாடல்களில் அதிகமானவை சிறுவர் பாடல்களேஅவர் எழுதிய இதர பாடல்களில் நமது பாமாலை புத்தகத்தில் இருப்பவை:

·         பாமாலை 73 – ராஜன் தாவீதூரிலுள்ள
·         பாமாலை 89 – என் நெஞ்சம் நொந்து காயத்தால்
·         பாமாலை 115 – கூர் ஆணி தேகம் பாய
·         பாமாலை 119 – அருவிகள் ஆயிரமாய்
·         பாமாலை 114 - கொந்தளிக்கும் லோக வாழ்வில்
·         பாமாலை 153 – ஓர் முறை விட்டு மும்முறை
·         பாமாலை 155 – இளமை முதுமையிலும்
·         பாமாலை 202 – நான் மூவரான ஏகரை
·        பாமாலை 243 - நேர்த்தியானதனைத்தும் 

Unison

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano








































1. காரிருள் பாவம் இன்றியே
பகலோனாக ஸ்வாமிதாம்
பிரகாசம் வீசும் நாட்டிற்கே
ஒன்றான வழி கிறிஸ்துதாம்

2. ஒன்றான திவ்விய சத்தியத்தை
நம் மீட்பர் வந்து போதித்தார்
பக்தர்க்கொன்றான ஜீவனை
தம் ரத்தத்தால் சம்பாதித்தார்

3. முற்காலம் தூயோன் பிலிப்பு
காணாததை நாம் உணர்ந்தோம்
கிறிஸ்துவில் ஸ்வாமியைக் கண்டு
மேலான ஞானம் அடைந்தோம்

4. நற்செய்கையில் நிலைப்போர்க்கே
வாடாத கீரிடம் என்றுதான்
விஸ்வாசிகள் கைக்கொள்ளவே
யாக்கோபு பக்தன் கூறினான்

5. மெய் வழி, சத்தியம், ஜீவனும்
மாந்தர்க்காய் ஆன இயேசுவே
பிதாவின் முகம் நாங்களும்
கண்டென்றும் வாழச் செய்யுமே.


There is one way, and only one,
Out of our gloom, and sin, and care,
To that far land where shines no sun
Because the face of God is there.

There is one truth, the truth of God,
That Christ came down from Heav’n to show,
One life that His redeeming blood
Has won for all His saints below.

The lore from Philip once concealed,
We know its fullness now in Christ;
In Him the Father is revealed,
And all our longing is sufficed.

And still unwavering faith holds sure
The words that James wrote sternly down;
Except we labor and endure,
We cannot win the heavenly crown.

O way divine, through gloom and strife,
Bring us Thy Father’s face to see;
O heav’nly truth, O precious life,
At last, at last, we rest in Thee.

Post Comment