Showing posts with label சகல பரிசுத்தவான்களின் திருநாள். Show all posts
Showing posts with label சகல பரிசுத்தவான்களின் திருநாள். Show all posts

Tuesday, May 5, 2015

பாமாலை 165 - தூயர் வீரர் திருநாளை (Langdale)

பாமாலை 165 - தூயர் வீரர் திருநாளை 
Blessed feasts of blessed Martyrs
Tune : Langdale

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano

1.    தூய வீரர் திருநாளை
பக்தி பரவசமாய்
ஆண்டுதோறும் வந்திப்போமே
எதிர்நோக்கி ஆவலாய்.

2.    தெய்வ வாழ்க்கைக்கேற்றாற் போலும்
வல்ல வீர செயல்கள்
செய்தார் என்றும் வாழ்த்துவோமே
பாடுவோம் தீங்கீதங்கள்.

3.    விசுவாசம் மா நம்பிக்கை
ஓங்கி உம்மை நேசித்தார்
மாட்சியோடும் வெற்றியோடும்
தூயர் வீரர் ஆயினார்.

4.    பாரின் இன்பம் துறந்திட்டே
வீரர் செய்கை புரிந்தார்
இப்போ வானில் தூயர் கூட்டம்
தாமும் ஒன்றாய்ச் சேர்ந்திட்டார்.

5.    கிறிஸ்துவோடு பாத்தியராகி
விண்ணின் மாட்சி அடைந்தார்;
நாம் முன்னேறப் பாதம் வீழ்ந்து
பணிவாக ஜெபிப்பார்.

6.    பாரின் கஷ்ட வாழ்க்கை ஈற்றில்
மாய்க்கும் துன்பம் நீங்கிப் போம்
தந்தை வீட்டில் நாமும் சேர்ந்து
நித்திய மாட்சி கெலிப்போம்.


Post Comment

Sunday, April 26, 2015

பாமாலை 164 - ஆ பாக்கிய தெய்வ (Rest)

பாமாலை 164 - ஆ பாக்கிய தெய்வ 
The saints of God their conflict
Tune : Rest

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano


1.    ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் நீண்ட போர் முடிந்ததே;
வெற்றிகொண்டே, சர்வாயுதம்
வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்.


2.    ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
மா அலுப்பாம் பிரயாணத்தை
முடித்து, இனி அலைவும்
சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
நல் வீட்டில் இளைப்பாறுவீர்.


3.    ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;
இப்போதபாய புயலும்
உம்மைச் சேராது கிஞ்சித்தும்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இன்பத் துறையில் தங்குவீர்.


4.    ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் மேனி மண்ணில் தூங்கவே,
மாண்பாய் எழும்புமளவும்
விழித்துக் காத்துக்கொண்டிரும்;
சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்
நம் ராஜா வருவார் என்பீர்.


5.    கேளும், தூயோரின் நாதரே,
பரிந்து பேசும் மீட்பரே,
வாழ் நாள் எல்லாம், நல்லாவியே,
கடாட்சம் வைத்து ஆளுமே;
சீர் பக்தரோடு நாங்களும்
மேலோகில் சேரச் செய்திடும்.



Post Comment

Saturday, April 18, 2015

பாமாலை 163 - அநந்த கோடி கூட்டத்தார்

பாமாலை 163 – அநந்த கோடி கூட்டத்தார்

(See the shining countless throng)

SATB
Soprano
Alto
Alto with Soprano
Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano









































1. அநந்த கோடி கூட்டத்தார்
ஆனந்த கீதம் பாடியே,
பண் இசைப்பார் வெண் உடையார்
தெய்வாசனம் முன்னே.
விண்வேந்தர் தயை போக்கிற்றே
மண் மாந்தர் பாவம் நோவுமே;
மேலோகிலே நீர் நோக்குவீர்
உம் நாதர் மாட்சியே.
பாடற்ற பக்தர் சேனையே,
கேடோய்ந்து தூதரோடுமே
பண் மீட்டுவீர்; விண் நாதர்தாம்
தம் வார்த்தை நல்குவார்.

2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில்,
கோதற்ற வெண்மை அணிந்தீர்;
உம் நீதிக்காய் நம் நாதரே
பொற் கிரீடம் சூட்டுவார்;
பூலோக வாழ்வின் கண்ணீரை
மேலோகில் ஸ்வாமி நீக்கினார்;
போம் திகிலும்; உம் மீட்பரின்
நல் மார்பில் சாய்குசீர்
விண் வீட்டினில் மா பந்தியை
மாண் வேந்தரோடு அடைந்தீர்;
நீர் பெற்றீரே பேர் வாழ்வுமே
கர்த்தாவோடென்றுமே.

3. ஆ, வீரர் சூரர் சேனையே,
மா தீரச் செய்கை ஆற்றினீர்,
நீர் சகித்தீர், நீர் ஜெயித்தீர்
நீர் வாழ்க, பக்தரே!
மண் மாந்தர் கீர்த்தி இகழ்ந்தீர்,
விண் வேந்தரோடும் சிலுவை
நீர் சுமந்தீர், நீர் அறுப்பீர்
உம் கண்ணீர் பலனே.
மெய் மணவாட்டி, போற்றுவாய்!
வையகமே முழங்குவாய்!
எம் ஸ்வாமியே, என்றென்றுமே
உம் ஸ்தோத்ரம் ஏறுமே.

Post Comment

Sunday, August 10, 2014

பாமாலை 169 - வெள்ளை அங்கி தரித்து (Hollingside)

பாமாலை 169 - வெள்ளை அங்கி தரித்து
Tune : Hollingside


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano



1.    வெள்ளை அங்கி தரித்து
சுடர் ஒளியுள்ளோர் ஆர்?
ஸ்வாமியை ஆராதித்து
பூரிப்போர் களிப்போர் ஆர்?
சிலுவையை எடுத்து
இயேசுவின் நிமித்தமே
யுத்தம் பண்ணிப் பொறுத்து
நின்றோர் இவர்கள்தானே

2.    மா துன்பத்திலிருந்து
வந்து விசுவாசத்தால்
தெய்வ நீதி அணிந்து
சுத்தமானார் ஆதலால்
ஓய்வில்லாமல் கர்த்தரை
கிட்டி நின்று சேவிப்பார்
கர்த்தர் சுத்தவான்களை
சேர்த்து ஆசீர்வதிப்பார்

3.    அவர் ஜெயம் கொண்டோராம்
இனி சோதிக்கப்படார்
தீமை நீக்கித் தூயோராய்
பசி தாகம் அறியார்
மத்தியான உஷ்டணம்
இனி படமாட்டாதே
அவர்கள் மெய்ப் பாக்கியம்
வளர்ந்தோங்கும் நித்தமே

4.    தெய்வ ஆட்டுக்குட்டியும்
அவர்களைப் போஷிப்பார்
ஜீவ தருக் கனியும்
ஜீவ நீரும் அளிப்பார்
துக்கம் துன்பம் ஒழித்து
குறை யாவும் நீக்குவார்
கண்ணீரையும் துடைத்து
அன்பினால் நிரப்புவார்

Post Comment

பாமாலை 168 - வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் (Beatitudo)

பாமாலை 168 - வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் 
How bright these glorious spirits shine
Tune : Beatitudo


SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano





1.    வெள்ளங்கி பூண்டு மாட்சியாய்
நிற்கும் இப்பாக்கியர் யார்?
சதா சந்தோஷ ஸ்தலத்தை
எவ்வாறு அடைந்தார்?

2.    மிகுந்த துன்பத்தினின்றே
இவர்கள் மீண்டவர்,
தம் அங்கி கிறிஸ்து ரத்தத்தில்
தூய்மையாய்த் தோய்த்தவர்

3.    குருத்தோலை பிடித்தோராய்
விண் ஆசனமுன்னர்
செம்ஜோதியில் தம் நாதரை
இப்போது சேவிப்பர்.

4.    வெம் பசி, தாகம் வெய்யிலும்
சற்றேனும் அறியார்;
பகலோனாக ஸ்வாமிதாம்
நற்காந்தி வீசுவார்.

5.    சிங்காசனத்தின் மத்தியில்
விண் ஆட்டுக்குட்டிதாம்
மெய் அமிர்தத்தால் பக்தரை
போஷித்துக் காப்பாராம்.

6.    நல் மேய்ச்சல், ஜீவ தண்ணீர்க்கும்
அவர் நடத்துவார்;
இவர்கள் கண்ணீர் யாவையும்
கர்த்தர்தாம் துடைப்பார்.

7.    நாம் வாழ்த்தும் ஸ்வாமியாம் பிதா,
குமாரன் ஆவிக்கும்,
நீடூழி காலமாகவே
துதி உண்டாகவும்.

Post Comment

பாமாலை 167 - விஸ்வாசத்தோடு சாட்சி

பாமாலை 167 - விஸ்வாசத்தோடு சாட்சி
For all the saints who from their labours rest

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor

Tenor with Soprano

Bass

Bass with Soprano






1. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே
தம் வேலை முடித்தோர் நிமித்தமே,
கர்த்தாவே, உம்மைத் துதி செய்வோம்
அல்லேலூயா! அல்லேலூயா!

2. நீர் அவர் கோட்டை, வல் கன்மலையாம்
நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம்
நீர் காரிருளில் பரஞ்சோதியாம்,
அல்லேலூயா! அல்லேலூயா!

3. முன்நாளில் பக்தர் நற்போராடியே
வென்றார்போல் நாங்கள் வீரராகவே,
பொற்கிரீடம் பெற்றுக்கொள்வோமாகவே,
அல்லேலூயா! அல்லேலூயா!

4. இங்கே போராடி நாங்கள் களைத்தும்
உம் பக்தர் மேன்மையில் விளங்கினும்
யாவரும் உம்மில் ஓர் சபை என்றும்
அல்லேலூயா! அல்லேலூயா!

5. போர் நீண்டு மா கடூரமாகவே,
கெம்பீர கீதம் விண்ணில் கேட்குமே,
நாம் அதைக் கேட்டு, தைரியம் கொள்வோமே
அல்லேலூயா! அல்லேலூயா!

6. செவ்வானம் மேற்கில் தோன்றி ஒளிரும்
மெய் வீரருக்கு ஓய்வு வாய்த்திடும்,
சீர் பரதீசில் பாக்கியம் அமையும்
அல்லேலூயா! அல்லேலூயா!

7. மேலான பகல் பின் விடியும் பார்!
வென்றோர் கெம்பீரமாய் எழும்புவார்
மாண்புறும் ராஜா முன்னே செல்லுவார்,
அல்லேலூயா! அல்லேலூயா!

8. அநந்த கூட்டம் நாற்றிசை நின்றும் 
திரியேகருக்கு ஸ்தோத்ரம் பாடியும்
விண் மாட்சி வாசலுள் பிரவேசிக்கும்
அல்லேலூயா! அல்லேலூயா!


Post Comment

Friday, August 8, 2014

பாமாலை 166 - வான ஜோதியாய் (All saints)

பாமாலை 166 - வான ஜோதியாய் 
Who are these like stars appearing
Tune : All saints

SATB

Soprano

Alto

Alto with Soprano

Tenor
Tenor with Soprano
Bass
Bass with Soprano


1. வான ஜோதியாய் இலங்கி
மாண்பாய்ப் பொன்முடி தாங்கி
தெய்வ ஆசனமுன் நிற்பார்
மாட்சியாம் இவ்வானோர் யார்?
அல்லேலூயா! முழங்கும் 
விண்ணின் வேந்தர் துதியும்.


2. பகலோனின் ஜோதியோடு
தெய்வ நீதி அணிந்து
தூய வெண்மையான அங்கி
என்றும் தூய்மை விளங்கி
தூயோராய்த் தரித்தனர்
எங்கிருந்து வந்தனர்?


3. ஜீவ காலம் முற்றும் மீட்பர்
மேன்மைக்காய்ப் போராடினர்
லோகத்தாரின் சேர்க்கை நீக்கி
சாவு மட்டும் போராடி
போரில் முற்றும் நின்றனர்
மீட்பராலே வென்றனர்.


4. வேதனை தம் நெஞ்சைப் பீற
ஓங்கு துன்பம் சூழ்ந்திட
பணிந்து தம் தெய்வம் நோக்கி
வேண்டலோடு போராடி
இப்போ போர் முடித்திட்டார்
ஸ்வாமி கண்ணீர் நீக்கினார்.


5. சர்வ வல்லோர் சந்நிதியில்
திவ்விய ஊழியத்தினில்
நின்று, தேகம் ஆவியோடு
கட்டளை கீழ்ப்படிந்து
உன்னதத்தில் சேர்ந்திட்டார்
என்றும் தெய்வம் நோக்குவார்.

Post Comment